in ,

கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 15) – ஜெயலக்ஷ்மி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6    பகுதி 7    பகுதி 8 பகுதி 9   பகுதி 10  பகுதி 11   பகுதி 12   பகுதி 13   பகுதி 14

ஸோ… இந்தம்மா அந்தப் பொண்ணுங்களோட அம்மா இல்ல. அதான் ஃபுரூப் இல்ல. மேலும் அந்தப் பொண்ணு என்ன அம்மாட்ட விட வேண்டாம், பாட்டிட்ட விடுங்கன்னு சொல்றப்பவே ஒரு வெறி தெரிஞ்சது, அதோட கண்ல.“

“இந்த மொபைல்ல இருக்கிற டிடெய்ல்ஸ் எல்லாத்தையும் ரெகார்ட் பண்ணுங்க“  என்றார் கோட்டாட்சியர்.

காவல் ஆய்வாளர் ஜண்டாவின் அலைபேசியில் இருந்தவற்றை தனது அலைபேசியில் பதிவு செய்தார். சிலவற்றை நித்யாவின் அலைபேசியிலும் பதிவு செய்தனர்.

“இதெல்லாம் இருக்கட்டும் மேடம்.  இந்த மொபைல ஸீஸ் பண்ணனும் மேடம். எஸ்.ஓ.பி. (கொத்தடிமை தொழிலாளரை மீட்பதற்கான நிலையான  இயக்கச் செயல்முறை)ல, டிக்கெட்ஸ், மொபைல், ரிசிப்ட்ஸ் உட்பட எல்லா ஆவணங்களையும் ஸீஸ் பண்ணனும்னு தெளிவா சொல்லிருக்கே“ என்றாள் நித்யா. கொத்தடிமை தொழிலாளர் ‘எஸ்.ஓ.பி.’யை எடுத்தும் காட்டினாள்.

ஸீஸ் பண்ணுங்க” என்றார் கோட்டாட்சியர், காவல் ஆய்வாளரை பார்த்து “நீங்க கம்ளைண்டு கொடுங்க. அப்புறமா ஸீஸ் பன்றேன். நான் சும்மா பாதுகாப்புக்குதான் வந்தேன்“ என்றார் ஆய்வாளர்.

“அப்படி இல்ல. நீங்களும் ரெஸ்க்யூ டீம்ல ஒரு மெம்பர்தான் கம்ப்ளயிண்ட் யார் வேணா கொடுக்கலாம்.  பாதிக்கப்பட்ட பொண்ணு பார்க்ல வச்சு உங்ககிட்ட சொன்னதையே, நீங்க கம்ப்ளயிண்ட்டா பதிவு பண்ணிருக்கணும். கம்ப்ளயிண்ட் எழுதிதான் கொடுக்கனுங்கிறது கிடையாது.  ‘ஓரல் கம்ப்ளயிண்டும் கம்ப்ளயிண்ட் தான்’. நீங்க மகஜர் எழுதி ஸீஸ் பண்ணனும். அரெஸ்டும் பண்ணனும்“ என்றாள் நித்யா.

“இல்ல, ஹண்ட்ரட் கால்ஸ நாங்க பதிவு பண்றது கிடையாது. நீங்க கம்ப்ளயிண்ட் கொடுத்தா நான் ஸீஸ் பண்றேன்“ என்றவாறே ஆய்வர் அலைபேசியை ஜண்டாவிடம் கொடுத்துவிட்டு, எழுந்து புறப்பட்டார்.

பிரபலத்தின் வீட்டிற்கு சென்று வந்த அன்றிலிருந்தே ஆய்வாளரின் பேச்சுக்கள் தலைகீழாக மாறியிருந்தது. ‘வளர்க்கத்தானே செய்கிறார், பாவம்… என்கிற ரீதியில்!‘

“அப்படின்னா ஆர்.டி.ஓ.தான் சப்-டிவிசனல் மேஜிஸ்ட்ரேட்ங்கற முறையில பாண்டட் லேபர்க்கு அத்தாரிட்டி. நீங்க கம்ப்ளயிண்ட் கொடுங்க மேடம்.  அரெஸ்ட் அண்ட் ஸீஸ் பண்ணட்டும்“ என்றாள் நித்யா.

வட்டாட்சியர் கோட்டாட்சியரின் காதில் ஏதோ சொல்ல அவர், “கலெக்டர் மேடம்கிட்ட கேட்டுட்டு கொடுக்கிறேன்“ என்றார்.

சர்வதேச பயங்கரவாதியின் பெயரைப் பார்த்ததிலிருந்து எல்லோருக்கும் பீதி கிளம்பிவிட்டது போல.

அப்போது இரவு பதினொரு மணி ஆகிவிட்டதால், நித்யாவாலும் “உடனே கேளுங்க” என்று கூற முடியவில்லை.

காவல் ஆய்வாளர் புறப்பட்டு போய்க்கொண்டே இருந்தார். ஜண்டாவும் கூட்டாளிகளும் இடத்தைக் காலி செய்து விட்டனர்.

வேறு வழியின்றி நித்யா தனது ஆய்வாளர் சேகருடன்  கீழிறங்கினாள்.  சேகருக்கு அலைபேசியில் வீடியோ அழைப்பு வந்தது.

“முக்கியமான என்கொயரில இருந்தேன். இதோ, மேடம் கூடத்தான் இருக்கேன் பாரு” என்று அலைபேசியை நித்யா பக்கம் திரும்பினார்.

“ஹலோ மேடம் எப்படி இருக்கீங்க?” என்று கேட்டாள் நித்யா.

“நல்லா இருக்கேன் மேடம். நீங்க எப்படி இருக்கீங்க? ஸாரி மேடம்“ என்றார் சேகரின் மனைவி“.

“மேடத்த வண்டில ஏத்திவிட்டுட்டு பேசறேன்“ என்றவாறு அலைபேசியை அணைத்தார்.

“என்ன சேகர், வீடியோ கால்ல வர்றாங்க? “ என்று கேட்டாள் நித்யா.

“ரெண்டு தடவ கால் அட்டெண்ட் பண்லன்னா, இப்படிதான் வீடியோ கால்ல வந்துருவாங்க“ என்றார் சேகர்.

“ஏன் அவ்வளவு சந்தேகமா?  அவங்க சந்தேகப்படற அளவு எதாவது சேட்ட பண்றீங்களா?“ என்று கேட்டாள் நித்யா சிரித்தவாறே.

“அ…தெல்லாம் ஒ…ண்ணுமில்ல மேடம்“ என்றார்.

“சரி! சரி! ஒழுங்கா வீடு போய் சேருங்க“ என்று கூறிவிட்டுக் கிளம்பினாள்.

அன்று இரவே மேற்படி விவரங்களை தெரிவித்து ’இந்த வழக்கைத் தீர விசாரித்தால் மிகப்பெரிய குற்றங்கள் வெளிவரக்கூடும்’ என அறிக்கை தயார் செய்தாள் நித்யா. மறுநாள் காலை முதல் வேளையாக அதை மாவட்ட ஆட்சியருக்கும், தொழிலாளர் ஆணையருக்கும் அனுப்பி வைத்தாள்.

கோட்டாட்சியரை தொடர்புகொண்டு “கம்ப்ளயிண்ட் கொடுத்திட்டீங்களா மேடம்?“ என்று கேட்டாள்.

“இல்லம்மா! “ என்றார் அவர்.

“நான் கலெக்டருக்கும், எங்க கமிஷனருக்கும் ரிப்போர்ட் அனுப்பிட்டேன்“ என்றாள் நித்யா.

“அது… அட்வான்ஸ் வாங்கிருக்காங்கனு ப்ரூவ் பண்ண முடியாதே! நம்மகிட்ட எவிடன்ஸ் எதுவும் இல்லையே. அதனால, எப்படி பாண்டட் லேபர்னு சொல்ல முடியும்? ஆனா, அந்தம்மா அந்தப் பசங்களோட அம்மா மாதிரியே தெரியல. பிரபலத்தோட அம்மா வீட்லருக்கிற அந்த பொண்ண மிரட்ற வாய்ஸ் கூட, இந்தம்மா வாய்ஸ் மாதிரி தான் இருக்கு.  இந்தம்மா குழந்தைகள கடத்திட்டு வந்து விக்கற மாதிரி தான் தெரியுது“ என்றார் கோட்டாட்சியர்.

“அப்படி இருந்தாக் கூட டிராஃபிக்கிங் அண்ட் ஃபோர்ஸ்டு லேபர் இருக்கே மேடம். மேலும், அந்தப் பொண்ணுங்க அட்வான்ஸ் கொடுக்கப்பட்ருக்குன்னு சொன்னாங்கல்ல. எவ்வளவுனு தான் சரியா தெரியல.  நாம ப்ரூவ் பண்ணனும்னு அவசியம் இல்ல மேடம். கம்ப்ளயிண்ட், அரெஸ்ட் அதுக்கப்புறம் இன்வெஸ்டிகேஷன்ல தெரியப் போகுது. அப்படியே இல்லாட்டியும் ‘பர்டன் ஆஃப் ப்ரூஃப்’ அக்யூஸ்ட்டோடது மேடம். அட்வான்ஸ் இல்லாட்டியும், அந்தம்மா தேவைப்படறப்போ பணம் வாங்கிருக்கேன்னு சொல்லிருக்கு. இந்தக் குழந்தைகளோட ‘ஃப்ரீடம் ஆஃப் மூவ்மெண்ட்’ கம்ப்ளீட்டா கட் ஆயிருக்கு. மினிமம் வேஜஸ் கொடுக்கல, ’ஃபார் அதர் எகனாமிக் கன்சிடரேஷன்ஸ்’. இது போதுமே, மேடம். அவங்க பாண்டட் லேபர் தாங்கறதுக்கு! சொல்லப் போனா ரைட் டு எஜூகேஷன் கூட பாதிக்கப்பட்டிருக்கு“ என்றாள் நித்யா.

“சரிதான். நான் ரிப்போர்ட் அனுப்பிடறேன். வாங்க ரெண்டு பேருமே கலெக்டர பார்த்து பேசுவோம். எதுக்கும் உங்க ரிப்போர்ட் காப்பிய எனக்கு அனுப்புங்க“ என்றார் கோட்டாட்சியர்.

“சரிங்க மேடம் இப்பவே அனுப்பறேன்.  வாங்க கலெக்டர பார்க்கலாம்“ என்றாள் நித்யா.

“நான் போகும்போது சொல்றேன்“ என்றார் கேட்டாட்சியர்.

தனது அறிக்கையை உடனடியாக கோட்டாட்சியருக்கு அனுப்பினாள் நித்யா. ஆனால், அதன் பின்னர் கோட்டாட்சியரிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. தனக்குத் தெரிந்த ஓய்வுபெற்ற காவல்துறை கூடுதல் இயக்குநர் ஒருவரைத் தொடர்பு கொண்டாள் நித்யா.  மேற்படி விவரங்களைச் சுருக்கமாக விவரித்துவிட்டு, “இண்டியா ஃபுல்லா இருக்ற பெரிய நெட்வொர்க்கா இருக்கும் போல சார். பிரபலத்தோட அம்மா அனுப்பிருந்த அந்த போக்ஸோ கேசஸோட டீடெயில்ஸும் வேணும் சார்“ என்றாள்.

“நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதிங்க. நீங்க சொல்றதெல்லாம் கரெக்ட்தான், ஆனா அந்த இண்டர்நேஷ்னல் தாதா பேரக் கேட்டா, ஆனானப்பட்ட ரௌடினு சொல்லப்படற அரசியல் தலைவர் மகனே, வாய பொத்திட்டு உட்கார்ந்த சம்பவம்லாம் இருக்கு.  அவன அரெஸ்ட் பண்ண மும்பை போலிஸாலயே முடியல. போலீஸ அவன் படுத்தின பாடே மிகப் பெரும்பாடு. உங்க பாதுகாப்பும் முக்கியம். கொஞ்சம் அமைதியா இருக்றது நல்லது“ என்றார்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 17) – ரேவதி பாலாஜி

    முள் பாதை (அத்தியாயம் 6) – பாலாஜி ராம்