2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“அம்மா, பாப்பா இன்னும் வீட்டுக்கு வரலீங்களே” என்றாள் அஞ்சலி வீட்டு வேலைக்காரி, வள்ளி.
“ஒரு நிமிஷம் இரு வள்ளி, நான் திரும்ப கால் பண்றேன்” என்று கூறிவிட்டு ஷாலினிக்கு அழைப்பு விடுத்தாள். தாங்கள் தொடர்பு கொள்ளும் நபர் தங்கள் அழைப்பை ஏற்கும் நிலையில் இல்லை என்றது பதிவு செய்யப்பட்ட பெண்ணின் குரல்.
அஞ்சலியின் இதயத்துடிப்பு 100ஐத் தொட்டது. பள்ளி வாகன ஓட்டுநரை அழைத்தாள். “அண்ணா, நான் ஷாலினி அம்மா பேசறேன். பாப்பா வேன்ல வரலியா, அண்ணா?”
“இல்லைங்க மேடம். எல்லா ஸ்டூடண்ட்ஸூம் சீக்கிரமே வந்துட்டாங்க. நான் அதுக்கப்புறமும் பத்து நிமிஷம் வெய்ட் பண்ணி பாத்தேன். ஸ்பெஷல் கிளாஸ் இருக்கும்னு நினைச்சி வந்துட்டேம்மா”
பள்ளியின் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு, ‘சிறப்பு வகுப்புகள் ஏதேனும் நடைபெறுகிறதா’ என விசாரித்தாள்.
“அப்படி எதுவும் இல்ல மேடம். இன்ஃபாக்ட் மண்டே எக்ஸாம்ங்கறதால இன்னிக்கு சீக்கிரமே வைண்ட் அப் பண்ணிட்டாங்க, எனிவே ஐ வில் ஆஸ்க் டூ செக் த க்ளாஸ் ரூம். பிளீஸ் பி ஆன் லைன்” என்றாள் வரவேற்பாளினி.
அஞ்சலியின் இதயத்துடிப்பு 110, 120, …150 என ஏறியது. இதயத்தில் சுருக் சுருக் என்று ஊசி வைத்து குத்துவது போல் இருந்தது. மார்பு வேகவேகமாக ஏறி இறங்கியது.
வரவேற்பாளினி யாரையோ வகுப்பிற்கு அனுப்பிப் பார்த்து விட்டு, “ஸாரி மேடம். நோபடி இஸ் தேர்” என்றாள்.
அஞ்சலியின் இதயத்துடிப்பு 180க்கு எகிறியது. அலைபேசியைக் கையில் பிடிக்க முடியாதவாறு கைகள் நடுங்கின. மயக்கம் வருவதுபோலிருந்தது.
“கடவுளே என் பொண்ணக் காப்பாத்துங்க” என்று மனசுக்குள் கதற ஆரம்பித்தாள். தன் கணவனின் நெருங்கிய நண்பர் ஒருவர் காவல்துறையில் இருப்பது நினைவுக்கு வர அவரை அழைத்து, படபடவென விஷயத்தைக் கூறினாள்.
“பதட்டப்படாதீங்க, பொறுமையா சொல்லுங்க. ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு ஏதாவது போறதாச் சொன்னாளா?”
“நான் அதுக்கெல்லாம் அலவ் பண்றதில்ல, சார்”
“வேன் டிரைவர் ஏன் ஏத்தாம வந்தாரு? இப்படி அடிக்கடி தனியா வருவாளா?”
“சில நேரம் ஸ்பெஷல் கிளாஸ் இருந்தா, முடிச்சிட்டு ஆட்டோல வருவா. பட், ஆட்டோல வறதுனா என்கிட்ட கால் பண்ணி சொல்லிட்டுதான் புக் பண்ணுவா. ஜிபே பண்ணச் சொல்லுவா. ஏன்னா நான் அவ கைல தேவையில்லாம காசெல்லாம் கொடுக்கறதில்ல. அவளும் வச்சிக்க மாட்டா. எப்பவாது ஏதாவது தேவைனு கொடுத்தாலும், மீதிப் பணத்த உடனே திருப்பிக் கொடுத்திடுவா. அதுமட்டுமில்ல, தனியா ஆட்டோல வந்தா, ஏறினவுடனே லைவ் லொகேஷன் எனக்கு ஸேர் பண்ணுவா”
“சரி, அவ நம்பர ஸேர் பண்ணுங்க. ட்ரேஸ் பண்ணச் சொல்றேன்”.
“ஓ.கே. ஸார். தேங்க் யூ!” என்று சொல்லி உடனடியாக ஷாலினியின் நம்பரை அனுப்பினாள்.
அடுத்த நிமிடம் அவள் அலைபேசிக்கு ஏதோ ஒரு தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.“ஹலோ!” “ஹலோ! ஷாலினி இங்கதான் இருக்கா. வந்து கூட்டிட்டுப் போறீங்களா?” என்றது ஒரு ஆண் குரல்.
“யார் நீ? எங்கருந்து பேசற?”.
“அவசரப்படாதீங்க. நான் யாருன்னு இன்னும் கொஞ்ச நேரத்துல பாக்கத்தான போறீங்க! இதுவரை ஷாலினிக்கு ஒண்ணும் ஆகல. இனியும் ஆகாம இருக்கணும்னா, அது உங்க கைலதான் இருக்கு”.
“யார் நீ? என்ன வேணும் உனக்கு?”
“அவசரப்படாதீங்கனு சொன்னேன்ல. எல்லாம் சொல்றேன். சமத்தா நான் சொல்ற இடத்துக்கு வாங்க. அமைதியா நான் சொன்னத அப்டியே ஃபாலோ பண்ணிணீங்கன்னா, எல்லாரும் ஸேஃப். உங்க மொபைலயும் நான் வாட்ச் பண்ணிட்டுத்தான் இருப்பேன். நீங்க யாருக்கு கால் பண்ணாலும், மெசேஜ் போட்டாலும் எனக்குத் தெரியும். அப்புறம் உங்க பொண்ண நீங்க எப்பவும் பார்க்க முடியாது”.
அப்போது வள்ளியின் அழைப்பு வர, “ஏதோ வள்ளி காலிங்னு உங்க ஃபோன்ல வருதே, யாரது?”அசந்து போனாள், அஞ்சலி.
“என் ஃபோன்ல வரது உனக்கெப்படி தெரியும்?”
“உங்க ஆஃபீஸ்ல உங்க நம்பர் வாங்கினேன். ‘ஃப்ரம் ஸ்கூல்’னு “டு அலவ் யுவர் வார்டு டு பார்டிசிபேட் இன் த க்விஸ், ப்ளீஸ் டச் த லிங்க்”னு ஒரு லிங்க் அனுப்பினேன். அவசரப்பட்டு சரியா பாக்காம, டச் பண்ணதும் இல்லாம, ஓ.கே. வேற கொடுத்தீங்க. நௌ ஐ கேன் வாட்ச் யுவர் மொபைல் அட் எனி டைம், பேபி! எந்தக் கால் வந்தாலும் எடுக்கக் கூடாது. ட்வெண்டி மினிட்ஸ்ல நான் சொல்ற லொகேஷனுக்கு வந்திடணும். ஃபோன ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடுங்க, பாக்கலாம்” சொன்ன இடத்திற்குப் போய் வாசலில் நின்று, மிளகு தெளிப்பானை கையில் எடுத்துக் கொண்டு காலிங் பெல்லை அழுத்தினாள்.
கதவு திறக்கவும் ‘சர்’ரென தெளிப்பானை அடிக்க, ஓங்கி பின்புறமிருந்து பிடறியில் ‘சட்’டென அடிவிழ அறைக்குள் போய் ‘பொத்’தென விழுந்தாள். நிமிர்ந்து பார்த்தால் கைகளும் வாயும் கட்டப்பட்ட நிலையில் ஷாலினி… நாலு தடியன்கள்.
“இந்தாடா நீ ஆசப்பட்ட ஹாட் ஐடெம்! அநுபவி ராஜா! அநுபவி!” என்றான் ஒருவன்.
“என்னப் பார்க்கணும்னு துடிச்சல்ல, நல்லாப் பாரு! நமக்குள்ள எல்லாம் முடிஞ்சப்புறம் அந்த வீடியோவ அனுப்பறேன். ரசிச்சு பாரு, பேபி” என்று அஞ்சலியின் அருகில் குனிந்தான். ஓங்கி இரண்டு கால்களுக்கிடையில் ஒரு உதை விட்டாள். இரண்டு கைகளால் பொத்திக்கொண்டு ஆவென அலறினான். இன்னொருவன் ஓடிவந்து அவள் தொடையில் ஓங்கி மிதித்தான். ஒருவன் தலை முடியைப்பிடித்து தூக்கி தரையில் நச்சென்று மோதினான். ஷாலினியின் கண்களில் தாரைதாரையாக கண்ணீர் ஊத்திற்று.
கதவு படபடவென தட்டப்பட ஒருவன் “போலீஸ்” என்று கத்த ஐந்து தடியன்களும் பதறியடித்து பின்புறம் ஓட எத்தனிக்க பின்புறமும் சுற்றி வளைத்திருந்த போலீஸ் அவர்களைக் கைது செய்தது.
கட்டவிழ்க்கப்பட்ட ஷாலினி ஓடிவந்து அம்மாவின் காலில் விழுந்து, “என்ன மன்னிச்சிடும்மா“ என்று கதறினாள். அஞ்சலி அவளைத் தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டாள்.மெதுவாக எப்படி நடந்தது என்று கேட்க ஷாலினி சொல்ல ஆரம்பித்தாள்.
ஆன்லைன் வகுப்பிற்காக ஷாலினி அலைபேசியில் பார்த்துக் கொண்டிருந்தபோது “பிரபல நடிகர் திடீர் மரணம். மேலும் தெரிந்துகொள்ள இன்ஸ்டாகிராம் ஆப்பை இன்ஸ்டால் செய்யவும்“ என்று இடைபட்ட செய்தியைப் பார்த்து ஆவலுற்று நிறுவினாள்.
தோழியோடு சேர்ந்து அதைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அதிலிருந்த டெக்கி என்பவனின் அடையாளத்தைப் பார்த்து “ஐ இது எங்க ஊர்க்கார அண்ணா. செம இன்டெலிஜெண்ட். அவங்கட்ட சேட் பண்ணலாண்டி“ என்று, இவள் வேண்டாம் என்று சொல்லச் சொல்ல, அவனுக்கு “ஹை“ என அனுப்பினாள். பதில் வர பேச்சுக்கள் தொடர்ந்தது. அந்த மாயவலை சுற்றி இறுக்கியது.
“மொபைலயே பாத்துட்ருக்காத, புக்கெடுத்து படி” என்ற அம்மாவின் வார்த்தைகள் காதில் ஏறவில்லை. தேர்வுகள் நெருங்க, நெருங்க பயம் வந்து தொற்றிக் கொண்டது. “அம்மா! இந்த ப்ராப்ளம் புரியல. சால்வ் பண்ண ஹெல்ப் பண்ணும்மா” என்றாள்.
“ஆரம்பத்லருந்தே அன்னன்னைக்கு பாடத்த அன்னன்னைக்கே படின்னு சொன்னா கேக்காம மொபைலயே நோண்டிட்டிருந்த. இப்ப காலங்கார்த்தால ஆஃபிஸ் போற நேரத்ல உயிர எடுக்காத” என்றவாறு வேகமாக போய்விட்டாள் அஞ்சலி.
அழுகை முட்டிக்கொண்டு வந்தபோது அந்த டெக்கியிடமிருந்து செய்தி வந்தது.இவள் அவனிடம் புலம்ப, “டோண்ட் வொரி பேப். ஒரு ஹாஃப் அன் அவர் வா. எல்லாப் ப்ராப்ளத்தையும் ஈஸியா சால்வ் பண்ண சொல்லித் தர்றேன்” என்றான்.
“ஹாஃப் அன் அவர் ல முடியுமா?”
“எஸ் பேப். வந்து பார்!”.
“பட் அம்மா எங்கயும் விடமாட்டாங்களே!”
“சொல்லாத. ஸ்கூல் முடிஞ்சவுடனே கூப்டுக்கறேன். அம்மா வரதுக்குள்ள கொண்டு விட்டுட்றேன்” அன்று சீக்கிரம் பள்ளி விட்டதும் பள்ளி வாசலில் காத்திருந்து பைக்கில் ஏற்றிக் கொண்டான்.
அந்த வீட்டு வாசலுக்கு வந்தபோது,”வெளியவே உட்காந்துக்கலாமே?” என்றாள்.
“எங்க தெருவுலயா?… உள்ள வா!” “இந்தா ஜுஸ் குடி!”
“நோ… வேண்டாம்”
“என்ன சந்தேகமா? எக்ஸேஞ்ச் பண்ணிக்கலாம்” என்று சொல்லி, அவளுக்கு வைத்திருந்த ஜுஸை யதார்த்தமாக அவள் மேல் தட்டிவிட்டான்.
“ஓ… ஸாரி பேப்! ரெஸ்ட் ரூம்ல போய் க்ளீன் பண்ணிட்டு வா. இந்தா டவல், என் ஷர்ட். இத போட்டுக்க”.
குளியலறைக்குச் சென்றவள் பல்ப்… கண்ணாடி… என உற்றுப் பார்த்தபோது ஸ்க்ரூவில் காமரா இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து வேகமாய் கதவைத் திறந்து வெளியேறினாள். படாரென கன்னத்தில் அறைவிழ சுருண்டு விழுந்தாள்.
“ஏண்டி, பெரிய இன்டெலிஜெண்ட்னு நெனப்பா? ஜுஸ் கொடுத்தா குடிக்கமாட்டேங்கற, கேமரா செக் பண்ற!” நிமிர்ந்து பார்த்தால் கூட நான்கு தடியன்கள். இவளைக் கட்டிப்போட்டு விட்டு ,”டி.பி.ல இவ கூட இருக்காளே இவ அம்மா, அவ செம ஹாட் மச்சி. அவள வர வை”.
“அதெல்லாம் அல்ரெடி பிளான்ட் டா. அவ மொபைல் கூட நம்ம கன்ட்ரோல்தான். இப்ப வர வைக்கிறேன்” என்று அஞ்சலி எண்ணை அழைத்தான்.
மீண்டும்…”புக்க படினு நீங்க சொன்னத கேக்காம இந்த வலையில சிக்கி, உங்களையும் கஷ்டப்படுத்திட்டேம்மா… சாரிம்மா” என்று கதறினாள் ஷாலினி.
“விடும்மா… உன் நம்பர ட்ரேஸ் பண்ணி இங்க வந்ததால தான், நெறய பொண்ணுங்கள சீரழிச்சு பிளாக் மெய்ல் பண்ண இந்த கும்பல் ஆதாரங்களோட மாட்டிக்கிச்சு” என்ற இன்ஸ்பெக்டரின், கையில் ஹார்ட் டிஸ்க், மொபைல்கள்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings