2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
இன்னும் உங்களுக்கு நம்ம பொண்ணு மேல வருத்தம் போகவில்லையா, இப்படியே எத்தனை நாளைக்கு இருப்போம், கொஞ்சம் மனசு இறங்கி வாருங்கள் என ராணி தன் கணவர் சுந்தரிடம் கேட்டாள்.
அவள் செய்தது சாதாரண காரியமாடி, படிக்கிற வயதில் காதல் கல்யாணம் என நம் இரண்டு பேரையும் ஏமாற்றி விட்டா உன்னுடைய பொண்ணு என்றான் சுந்தர்.
அது என்ன என்னுடைய பொண்ணு, நம்ம பொண்ணு என்று சொல்லுங்கள்.
அவள் எனக்கு மகளே கிடையாது.
அவள் செய்தது தவறுதான், அறியாமல் செய்த தவறு தானே, மன்னித்து விடுங்கள்.
உனக்கு தேவை என்றால் நீ போய் பார்த்து விட்டு வா, ஆனால் திரும்ப இங்கே வந்து விடாதே, அப்படியே உன்னுடைய பெண் வீட்டிலேயே இருந்துக்கோ என்று கண்டிப்பாக சொல்லிவிட்டு வெளியே கிளம்பி சென்றார் சுந்தர்.
ராணி, சுந்தர் தம்பதிகளில் ஒரே பெண் இளவரசி. மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது தன்னுடைய சக மாணவனை காதலர் தினத்தன்று மாலை மாற்றிக் மோதிரம் மாற்றிக் கொண்டார்கள்.
இந்த விஷயத்தை தன்னுடைய பெற்றோருக்கு தெரியப்படுத்தாமல் ஆறு மாதமாக ஏமாற்றியதை தாங்கிக் கொள்ள முடியவில்லை சுந்தருக்கு. இந்த ஆறு மாதத்தில் பலமுறை போய் மகளைப் பார்ப்பது மகள் வீட்டுக்கு வருவதுமாக இருந்த போதிலும் திருமணத்தை மறைத்தது ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இதே போல் எவ்வளவு விஷயங்களை நம்மிடம் ஏமாற்றி இருப்பாள் என்று சுந்தர் புலம்பிக்கொண்டிருந்தார்.
ஒருமுறை மருத்துவக் கல்லூரியில் மகள் இளவரசியை பார்க்க சென்ற போது அவள் கோவா சென்றதாக தகவல் கிடைத்தது.
யாருடன் சென்று இருக்கிறாள் என்று கேட்ட போது தான் அவள் தன்னுடைய சக தோழனை திருமணம் செய்து கொண்டதும், அவனுடன் சேர்ந்து போய் இருப்பதாக தகவல் கிடைத்தது.
மனவேதனையுடன் வீட்டிற்கு ராணியும் சுந்தரும் வந்தார்கள். அன்றாடம் தன் மகள் இளவரசியிடம் செல்போனில் உரையாடும் சுந்தர் இரண்டு மூன்று நாட்களாக அழைக்கவில்லை.
மகள் இளவரசி அம்மா, அப்பாவின் செல்போனுக்கு அழைத்தும் இரண்டு பேரும் எடுக்கவில்லை. கோவாவில் இருந்து கல்லூரிக்கு திரும்பிய பிறகு தான் தன்னுடைய அம்மா அப்பா வந்து போன விஷயம் இளவரசிக்கு தெரிய வந்தது.
தன் காதல் கணவனை அழைத்துக் கொண்டு தன்னுடைய அம்மா அப்பாவை பார்க்க சென்றாள் இளவரசி. அப்பா உன்னுடைய முகத்தை பார்க்க விரும்பவில்லை எனவும், உன்னை தலை முழுகி விட்டோம் என்றும் இங்கே இனிமேல் வராதே என்று தன் மகள் இளவரசியிடம் தாய் ராணி சொன்னாள். அதன் பிறகு இரண்டு குடும்பமும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவில்லை.
காலங்கள் உருண்டோடியது. இளவரசியும், அவளது கணவரும் எம்.எஸ் முடித்து தனியாக இருவரும் மருத்துவம் பார்ப்பதாக கேள்விப்பட்டார்கள்.
உறவினர் மூலமாக இளவரசி ஐந்து மாதம் கர்ப்பமாக இருக்கிறாள் என்பது தெரிய வந்தது. அதற்காக பழையவற்றை மறந்து மகளை பார்க்க கணவனை அழைத்துக் கொண்டிருந்தாள் மனைவி ராணி.
நீங்கள் வரவில்லை என்றால் பரவாயில்லை, நான் என்னுடைய மகளை பார்க்கத்தான் போகிறேன் என் சொல்லிவிட்டு மகளைப் பார்க்க கிளம்பிக் கொண்டிருந்தாள்.
வெளியே சென்ற சுந்தர் தன்னுடைய மகளுக்கு பிடித்ததை எல்லாம் சாப்பிடுவதற்கு பை நிறைய வாங்கி வந்திருப்பதை பார்த்து மனைவி ராணி மனதுக்குள்ள மகளின் மீது இவ்வளவு ஆசையை வைத்துக்கொண்டு என்னமா நம்மிடம் நடிக்கிறார் என நினைத்தவாறு தன் கணவனிடம் எதைப் பற்றியும் கேட்காமல் மகளை பார்க்க கிளம்பினாள் ராணி.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings