2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7
பாஸ்கர் பைக்கை இங்கேயே ஓரிடத்தில் வை, நீலாங்கரை சூடாகுது இப்ப
நீ எங்கூட கார்லயே வா…நீலாங்கரை ….வி ஆர் கமிங்.
திருவள்ளூர் ஹைவேல இருந்து பூந்த மல்லி ஹைரோடில் நிதானமாய் சென்றது தினேஷின் மாருதி வேகனார். ராமாவரம் தாண்டி கிழக்கு கடற்கரை சாலையில் நீலாங்கரை நோக்கி விரைந்தது.
முதலில் நீலாங்கரை பற்றி தெரியாதவர்களுக்கு, இந்த ஏரியா ஒரு மாதிரியாக சுக வாசிகளுக்காகவே சிருஷ்டிக்கப் பட்டது.ஏராளமான கெஸ்ட் ஹவுஸ்கள், நெடிந்துயர்ந்த மதில் சுவர்களுக்குள் ஒளிந்திருக்கும் அரசியல் வாதிகளின் சொகுசு பங்களாங்கள், கேளிக்கை விடுதிகள், சினிமா நட்சத்திரங்களின் மறைவு பங்களாக்கள், மிடில் கிளாசுக்கு மேல் தட்டில் உள்ளவர்களின் லக்சரி ஃபிளாட்களுடன் நெடிந்துயர்ந்த ஹைரைஸ் பில்டிங்குகள், மீனவர்களின் சிறு வீடுகளுக்கும் கம்மி இல்லை.
சரி இப்ப தினேஷ் பாஸ்கர் சிங்கப்பூர் ஷாப்பிங் பக்கத்துல நீலாங்கரை J-8 பொலீஸ் ஸ்டேஷன்.
ஸ்டேஷன் வாசலில் காரை நிறுத்தி உள்ளே நுழைந்தார்கள் தினேஷும், பாஸ்கரும்.முன்னால் அமர்ந்திருந்த போலீஸ் ரைட்டர், ”.இன்ஸ்பெக்டர் வெளில போயிருக்காரு கம்ப்ளயின்ட்னா எங்கிட்ட எழுதிக் கொடுத்துட்டு போங்க.”
தினேஷ்,” இன்ஸ்பெக்டர் ஆரோக்யசாமியை பாக்கணும், கமிஷனர் அனுப்பியிருக்கார்””.
உடனே விரைப்பான ரைட்டர், “சார் இன்ஸ்பெக்டர் ,ஒரு பொண்ணு கேஸ் விஷயமா மர்டர் சைட்டுக்கு போயிருக்காரு வர நேரமாகுமே”.
“அப்படியா இடம் தெரியுமா உங்களுக்கு?” ,
“நேரா இதே ரோட்ல தெக்கால போனா சட்னு கண்ணாஸ்பத்திரி தெரிதா, அதை ஒட்டி ஓடற சந்துல திரும்பனா பீச்தான் நுழைஞ்சவுடனே பெரிய ஒரு வெள்ளை கலர் போட்டு மூணு நீல நச்சத்திரம் போட்டுனு நிக்குதா, அதான் ஸ்பாட், நான் பாத்தனே சின்ன குழந்தைய்யா படு பாவி எப்படி அறுக்க மனசு வந்ததோ பாவம் இப்பதான் பெரியணன் ஐயா சிடில இருந்து நிம்மதியா இருக்கலாம்னு வந்தாரா அவர் பங்களா பக்கத்திலயே அவர் நிம்மதியை கெடுக்க இந்த கலாட்டா” ,
“ஓ , அவர் பங்களா இங்கதான் இருக்குதா? “இது தினேஷ்.
“ஆமாம் சார் இந்த ஏரியால பெரிய பங்களா, அவ்ளோ பெரிய காம்பவுண்டு சுவர் பங்களாவே தெரியாது, கேட் கதவுல இருந்து பாத்தாதான் தெரியும் கவர்னரு பங்களா கணக்கா வெள்ளை வெளேர்னு”
“பாஸ்கர், முதல்ல அந்த மர்டர் ஸ்பாட் போவோம் அப்பறம் ஹாஸ்பிடலுக்கு பாண்டியை பாக்க, சலோ பீச்”
அந்த தெரு முனைலயே காரை நிறுத்தி விட்டு நடந்தார்கள்.கடலும், மணலும் கண்ல படறதுக்கு முன்னே கண்ணை இழுத்தது அந்த 10 அடி உயர மதில் சுவர்தான், இதுதான் பெரியணன் மாளிகையா இருக்கணும்.
ஐந்தே நிமிட நடையில் அந்த மூணு நட்சத்திர வெள்ளை போட் கண்ணில் பட்டது.
சுற்றி சின்ன போலீஸ் கூட்டம், வேடிக்கை பாக்க வந்தவர்களை துரத்திக் கொண்டிருந்தது.
உயரமாய் சத்யராஜ் சாயலில், ஆரோக்யசாமி சீனியர் இன்ஸ்பெக்டர் கறுத்த மீசையோட நடு நாயகமாய் எல்லோரையும் மிரட்டிக் கொண்டிருந்தார்,
தூரத்திலிருந்தே தினேஷை பார்த்து விட்ட ஆரோக்யசாமி, “ஹாய் சக்ரபர்த்தி சாகப் கைசே ஹை ஆப்?” னு கையை நீட்டிக் கொண்டு வந்தார்.
சின்ன புன்முறுவலுடன்,“ நான் நல்லா இருக்கேன், நீங்கதான் நீலங்கரையை கலக்கறீங்க போல இருக்கு”
இன்ஸ்பெக்டர்,”அதையேன் கேக்கறீங்க சார், ஒண்ணு மாத்தி ஒண்ணு பெரிய தலைவலி, இது இப்ப எல்லாத்துக்கும் கிரீடம் வச்ச மாதிரி, போய் பாருங்க என்ன சுத்தமா அறுத்துருக்கானுவனு”
பாடி சுத்தமான வெள்ளை துணியால் மூடப் பட்டிருந்தது. ஒரு அட்டென்டர் தினேஷுக்கு துணியை விலக்கி சடலத்தை காட்டினார்,
இவள் இன்னும் சிறிய பெண் மத்த இரு பெண்களுக்கு நேர்ந்த மாதிரியே பிரசெஷன் கட், தொப்புளில் இருந்து மார்பு வரை, காய்ந்து உறைந்து கருஞ்சிவப்பு கோடாய் தெரிந்தது. பச்சிளம் முகம் அதிர்ச்சி, பயத்தை காட்டியது. முகத்தை திருப்பிக் கொண்ட தினேஷ் கூட்டத்தை விட்டு விலகினார்
”என்ன ஆரோக்யசாமி அடுத்த ஏ.சி லிஸ்டல இருக்கீங்க போல?”
அவ்வளவு வாட்டசாட்டமான போலீஸ் அதிகாரி சந்தோஷம், கூச்சம் கலந்து நெளிந்தது வேடிக்கையாக இருந்தது.“ இருந்தாலும உங்களை மாதிரி கமிஷனருக்கு வேண்டிய ஆளுங்க நல்ல படியா சொன்னா அவர் என் பேரையும் கவர்ன்மென்ட்டுக்கு சிபாரிசு பண்ணலாம், பாப்போம் சார்”
தினேஷ் ,”ஆமாம் ஆரோக்யசாமி இந்தோ தெரியுதே இந்த பிரம்மாண்ட பங்களா இது தலைவர் பெரியணன் சாரோடதா?”
“ஆமாம் சார், இப்ப இங்கதான் இருக்காரு,ஆளை அனுப்பி சீக்கிரம் இடத்தை கிளியர் பண்ண சொல்லி கேட்டுக்கிட்டார், பாடியை ஜி.எச் க்கு அனுப்பிட்டு மரியாதை நிமித்தம் போய் பாக்கணும்.”
“சரி முடிச்சிட்டு வாங்க நானும் வரேன் பெரியணன் சாரை பாக்க”,அவருடைய பதிலுக்கு காத்திருக்காமல் ஓரமாய் நகர்ந்தார் தினேஷ்.
படு வேகமாய் வேலைகள் நடந்தன, லேப் டெக்னீஷியன்கள், ஃபோட்டோகிராபர், ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஒரு முடுக்கி விடப்பட்ட இயந்திரமாய் தத்தம் பணிகள் செய்ய 25 நிமிடத்தில் நீலாங்கரை பீச் பழைய நிலைக்கு பெருமூச்சுடன் திரும்பியது. அலைகள் கூட இப்ப சந்தோஷமாய் ஆர்ப்பரித்தது.
ஆரோக்யசாமி தினேஷை பாத்து,“ ஓ நீங்க இங்கேயேதான் இருக்கீங்களா? சரி சார் அப்பறம் பாப்போம், நான் பெரியணன் சாரை பாத்துட்டு லன்ச்சுக்கு போகணும், ரொம்ப லேட் ஆயிடுச்சு இப்பவே”
மெல்லிய சிரிப்புடன் தினேஷ்,” என்ன கழட்டி விடறீங்களா? உங்களுக்கும் பெரியணன் சாருக்கும் ஏதாவது டீல் இருந்தா நான் கண்டுக்க மாட்டேன், சும்மா கூட வரேன் ஆரோக்யம்”.
ஆரோக்யசாமி சங்கடத்தில் நெளிந்தார், “அதில்லை கிருஸ்த்மஸ் டைம்ல எப்பவும் ஒரு பெரிய ஸ்காட்ச் பாட்டில் கொடுப்பார், அதான் கூப்டாரு”.
தினேஷ் இயல்பாய் ஆரோக்யசாமியின் தோளில் கை போட்டுக் கொண்டார்,
“ வாங்க போலாம், நோ டென்ஷன், நான் உங்க நண்பன், ஆனா ஸ்காட்ச்ல பங்கு கேக்க மாட்டேன் சரியா” என்று உரக்க சிரித்தார்.
பாஸ்கருக்கு கண்ணாலயே செய்தி பறந்தது , வெளியே இருக்க சொல்லி.
ஆரோக்ய சாமியும், தினேஷ் சக்ரபர்த்தி அந்த மாபொரும் ராட்அயர்ன் இரும்பு கதவை நெருங்கிய உடன் கதவு தானாக திறந்தது. கேமராக்கள் கண்காணிப்பது தெரிந்தது. நீல யூனிபாரம், ஆட்டோமேடிக்ரைபிள் சகிதம் செக்யூரிடி ஆள் புன்னகை மறந்த முகத்துடன்,முன்னால் மறித்து நீலாங்கரை சீனியர் இன்ஸ்பெக்டருக்கு அனுமதி இருக்கு என்றார்.
ஆரொக்யசாமி உடனே “இவர் என் நண்பர் , டிபார்ட்மென்ட்தான், தலைவரை பாக்கணும்” என்றார்.
வாக்கி டாக்கியில் யாருடனோ சிரிப்பை மறந்த செக்யூரிடி முணு முணுக்க, கண்ணுக்கு தெரியாத ரகசிய கேமரா தினேஷை பக்கத்தில் பார்த்தது.
செக்யூரிடி வழி விட்டு, “லான்ல உள்ள இருக்கைகள்ல வெயிட் பண்ணுங்க உள்ளே கூப்பிடுவாங்க, செக்யூரிடி கேட் வழியா போங்க ஏதாவது ஆர்ம்ஸ் இருந்தா இங்கேயே விட்டுட்டு போயிடுங்க.” என்றார்.
தினேஷ் மனதில் ஓடியது திரும்ப போகும் போது அந்த ஜாலிவாலா பனியன் ஜோக் சொல்லி இந்த பகதூருக்கு சிரிப்பு வருதா பாக்கணும்.
’வாவ்’ பச்சை பச்சை பச்சையோ பச்சை லான்( புல் வெளி) பரந்து விரிந்து இருந்தது, நடுவில் மர மேசை செய்தவனின் கைத் திறமையை காட்டி அமர்ந்திருந்தது யானைக் கால்களுடன். வசதியான இருக்கைகள் சுற்றி, லானை சுற்றி சலசலத்த பூச் செடிகளோ கலகலப்பாய் சிரித்தது, இத்தனை வண்ணங்களில் ரோஜாவா, ஊட்டி மலர் கண்காட்சியில் மட்டுமே பார்க்க முடிந்த பிராமணப் பூக்கள்.
இருவரும் சவுகரியமான இருக்கைகளில் அமர்ந்தவுடன் விமானப் பணிப் பெண் போல மிதந்து வந்த பணிப் பெண் மேசையில் மணக்கும் டீ கெட்டில், கிரீம் பிஸ்கட்கள் டிரேயில் தங்கப் பூக்களுடன் பீங்கான் கோப்பைகள், சர்க்கரை குடுவை, ஸ்பூன்கள் வைத்து விட்டு தள்ளி நின்று ரசித்து பார்த்தாள்.
பின்னர் இருவரையும் பார்த்து முத்துப் பற்கள் பளிச்சிட புன்னகை, மறைந்து விட்டாள் தேவதை.
இந்த சூழ்நிலை எவ்வளவு நேரம் காக்க வைக்கப் பட்டாலும் தவறாக தோணாது.ஆனால் அடுத்த பத்தாவது நிமிடத்தில் மறுபடி மிதந்து வந்த தேவதை “ சர் இஸ் ரெடி டு சீ யூ நவ்”னு எங்களை பின்தொடர வைத்து நடந்தாள்.
நாள் பூரா பின்னால் நடக்கலாம், சங்கீத நடை. கால்பந்து மைதான ஹாலை கடந்து விஸதாரமான அறை , அறை பூராவும் பனி படர்ந்தார்போல வெண்ணிற இருக்கைகள், விரிப்புகள். நடு நாயகமான மிக பெரிய இருக்கையில் தலைவர் கம்பீரமான கான்ட்ராஸ்ட் நிற மேனியுடன் அமர்ந்திருந்தார், நெற்றி நிறைய சந்தனத்துடன்.
பின்னால் மற்றொரு பொன்னிற தேவதை அவருடைய இருக்கையை கையால் பிடித்த படி.
பெரியணன் பாதி எழுந்து இருவரையும் வரவேற்றார்.
மற்றொரு அறையிலிருந்து இரு அடியாட்கள் பிடியில் பாண்டிராஜ் தலையில் வெள்ளை கட்டுடன் கொண்டு வரப்பட்டான். தினேஷை பார்த்து விழித்த பாண்டி, “பாஸ் நீங்களும் இந்த கூட்டத்தை சேந்தவரா, எம்.ஜி.ஆர் சினிமா கிளைமாக்ஸ் பாக்கற மாதிரி இருக்கே”, தினேஷால் வெடிச் சிரிப்பை அடக்க முடியவில்லை.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings