2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7
ஆதர்ஷ் கம்பெனிக்கு கிளம்பிக் கொண்டிருந்தான். அத்தை சாரதாவும், மாயாவும் வருவதைப் பார்த்தான். மரியாதைக்காக. நின்று அத்தையிடம், “என்னத்தை நல்லா இருக்கீங்களா? உங்களை பார்த்து நாளாச்சு…உடம்பு எப்படி இருக்கு? கால் வலி இப்ப பரவாயில்லையா? டாக்டர்கிட்ட ரெகுலரா போறீங்களா?”
“உடம்பு பரவாயில்லப்பா.. கால் வலி அப்பப்ப கொஞ்சம் பாடாப்படுத்துது.. எப்ப முடியுதோ அப்ப அண்ணிய பார்க்க வருவேன். நீ கம்பெனி போயிட்டுறதால உன்ன தான் பார்க்க முடியல .. அண்ணி கிட்ட கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்துட்டுப் போவேன். எனக்கு அதிகம் அலைய முடியலப்பா ஆனா மாயா தினம் வந்துடுவா.. அத்தையை பார்க்காம அவளால ஒரு நாள் கூட இருக்க முடியாது ..அண்ணியும் அவ தினமும் வந்துட்டு போறது அவங்களுக்கு சந்தோசமா இருக்குதுன்னு சொல்லுறாங்க. அதுனால போயிட்டு வான்னு அனுப்பி வைப்பேன் “
“பாரு…இந்த டப்பால பால்கோவா கிளறி கொண்டு வந்திருக்கேன் .ஆதர்ஷ்கு பால்கோவான்னா ரொம்ப பிடிக்கும். அதுவும் நான் செய்த பால்கோவா அவனுக்கு ரொம்பவே பிடிக்கும். ஒரு கிண்ணத்தில் போட்டு எடுத்துட்டு வந்து ஆதர்ஷ்கு கொடு” என்று டப்பாவை பாருவிடம் கொடுத்தாள்.
“நீங்க செய்ற பால்கோவா எனக்கு ரொம்ப பிடிக்கும் அத்தை.. ஆனால் எதுக்கு சிரமப்படறீங்க இப்பதான் எல்லாம் கடையிலேயே கிடைக்குதே..”
“என்ன கடையில கிடைச்சாலும், நாம செய்த மாதிரி வருமாப் பா ..நீ சாப்பிட்டுப் பாரு… அப்புறம் புல் டப்பாவையும் காலி பண்ணிட்டுவ “என்றாள் சிரித்துக்கொண்டே.”எங்க அத்தை உங்க கூட மாயா வந்துகிட்டிருந்தா ..ஆள காணோம்”
“தோட்டத்துல ஏதோ அவள் வைச்ச ரோஜா செடி பூ பூத்திருக்காம்..அதைப் பார்த்து ரசிச்சுகிட்டிருக்கா…இன்னும் விளையாட்டு பிள்ளையாத்தான் இருக்கா.கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல …”
“யாருக்கு பொறுப்பில்லை.. எதற்கு பொறுப்பில்லை.. என்னை பொறுப்பில்லை என்று கூறும் தாய்குலமே! அதற்கு சரியான காரணத்தை கூறாவிட்டால் இப்பொழுது தாங்கள் நாடு கடத்தப்படுவீர்கள்.இது இந்த இளவரசியின் கட்டளை என் கட்டளையே சாசனம். ..”
“ஏய் லூசு ..இந்த மாதிரி பேசிகிட்டிருந்தா ஒன்ன தான் முதல்ல நாடு கடத்தனும்…”
“என் அருமை இளவரசே! உங்களை கவனிக்கவில்லை. மன்னிக்கவும்..என் அருமை அத்தானின் வாயிலிருந்து. இப்படி ஒரு வார்த்தை வரலாமா? இதைக் கேட்கவா நான் ஓடோடி வந்தேன்.. உங்கள் அன்பு மொழியில் பாச மழையில் நனைந்து.. நீச்சலடிக்க ஓடி வந்த என்னை இப்படி ஒரு மொழி பேசி கொல்லுகிறீர்களே..இது தங்களுக்கு தகுமா இளவரசே”
“யேய் லூசு மாயா…இப்படி பேசிக்கிட்டே இருந்தா நாங்க பேசுற தமிழ் எங்களுக்கு சுத்தமா மறந்து போயிடும் .இப்படி வெட்டியா சுத்திக்கிட்டு இல்லாம..ஏதாவது ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸ் ஜாயின் பண்ணி படிக்கலாம்ல..டிகிரி முடிச்சு ஆறு மாசமாச்சு இன்னும் சும்மா சுத்திகிட்டிருக்கே…உனக்கு இன்ட்ரஸ்ட் இருந்தா நம்ம கம்பெனியிலேயே வேலை பார்க்கலாம்.. அப்ப கம்ப்யூட்டர் கோர்ஸ் ஹெல்ப்புல்லா இருக்கும்.”
“மை டியர் அத்தான்.. நமக்கு அதெல்லாம் செட் ஆவாது.. நான் வேணும்னா… அத்தைக்கு உதவியா வீட்டுப் பொறுப்பை பாத்துக்குறேன்… இல்ல பாருவுக்கு உதவியா சமையல்ல அசிஸ்ட் பண்றேன். இந்த கம்பெனி வேலையெல்லாம் நமக்கு செட்டாகாது ..”
அப்போது அங்கே வந்த ருக்மணிதேவி..”.சாரதா வா வா ..எப்ப வந்த ..மாயா உன் கூட வந்திருக்காளா? அந்த வாயாடியோட குரல் ரூம் வரைக்கும் கேட்குது”
“அத்தை உங்கள் செல்ல மருமகளை எல்லோரும் சேர்ந்து கலாய்க்கிறார்கள் என்னவென்று விசாரணை செய்யுங்கள் ..”
“ஏண்டி நீ தான் கலாட்ட பண்ணுவே.. உன்னை யாருடீ கலாட்டா பண்ண போறா..நீ ஒன்னு செய் காய்கறி வாங்கனும்னு பாரு மார்க்கெட்டுக்கு கெளம்பிகிட்டு இருக்கா… நீங்க ரெண்டு பேரும் காரில் போய் கொஞ்சம் காய்கறி, பழங்கள் வீட்டுக்கு தேவையான சாமான் எல்லாம் வாங்கிட்டு வாங்க ..”
“சாரதா உனக்கு ஏதும் வேணும்னாலும் சொல்லிவிடு..அவங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்கிட்டு வந்துடுவாங்க ..
“எனக்கு பெருசா வேண்டியது ஒன்னும் இல்ல அண்ணி.. அவங்க போய்ட்டு வரட்டும்” என்றாள் சாரதா ..
“பாரு கிளம்பறதுக்கு முன்னாடி சாரதாவுக்கு டிபனும், காபியும் எடுத்துட்டு வா… ரூம்க்கு கொண்டு வந்துடு” என்றாள். சற்று நேரத்தில் ஆதர்ஷ் கம்பெனிக்கு கிளம்பிப் போய்விட பாருவும் , மாயாவும் மார்க்கெட்டுக்கு கிளம்பிப் போனார்கள் ..
“சாரதா.. உன் கிட்ட தனியா பேசணும்னு ரொம்ப நாளா நினைச்சுட்டு இருக்கேன் ..அதனாலதான் மாயாவை பாரு கூட வெளியில அனுப்பினேன். ரொம்ப நாளா என் மனசை ஒரு விஷயம் உறுத்திக்கிட்டிருக்கு ..அத உன் கிட்ட சொன்னா தான் நிம்மதி ..”
“சொல்லுங்க அண்ணி..”
“சாரதா.. நான் சொல்றத சரியா புரிஞ்சுக்கோ! மாயாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவ தினமும் இங்க வந்துட்டு போறது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? பாலைவனத்தில் பூக்கின்ற பூ மாதிரி அவ… என்னுடைய இந்த வறண்ட வாழ்க்கையில ஆதர்ஷ் மட்டும்தான் எனக்கு பிடிப்பு.. அதைத்தாண்டி மாயா தான் என்னுடைய உலகத்தை சந்தோஷமா வச்சுக்கறா. ஒரு விஷயம் எனக்கு உறுத்துது.
மாயா எப்பவுமே அத்தானை பத்திதான் பேசிட்டிருப்பா.. அவளுக்கு ஆதர்ஷ ரொம்ப பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன். அவ மனசுல என்ன இருக்குன்னு தெரியல.. அவ ஆதர்ஷ கல்யாணம் பண்ணிக்கிற முறைதான்.. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.. அவளுக்கு உரிமையும் இருக்கு. ஆனா உனக்கு தான் உங்க அண்ணனைப் பத்தி நல்லாத் தெரியுமே! அவர் புடிச்ச முயலுக்கு மூன்று கால்னு சொல்வாரு.. பணம், அந்தஸ்து, அவர் கண்ணை மறைக்குது.
அவர் ஆதர்ஷுக்கு அவரோட பிரண்டோட பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு நெனச்சிருக்காரு. அவர் இவரோட பிசினஸ் பார்ட்னர்.. ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்தா பிசினஸ் உலகில் தன் மகன் கொடிகட்டி பறக்க முடியும்னு நினைக்கிறாரு.
ஆதர்ஷே நெனச்சா கூட அவங்கப்பாவுக்கு எதிராகப் பேச முடியாது. அவர் நெனச்சா நெனச்சதுதான்..அவருடைய பிடிவாதம் உனக்கு நல்லா தெரியும்.. உன் விஷயத்தில் நடந்ததே நம்மளால மறக்க முடியாது ..மாயாவுக்கு அந்த மாதிரி எதுவும் நடக்கக்கூடாது .அவ நல்லா இருக்கனும். எங்கேயாவது நிம்மதியா சந்தோஷமா இருக்கனும். “
“உண்மைதான் அண்ணி.. உங்களுடைய பயம் எனக்கு புரியுது. நீங்க சொல்றத நான் தப்பா எடுத்துக்க மாட்டேன். நீங்க மாயா மேல உள்ள அக்கறையில் தான் சொல்றீங்க. நான் நிச்சயம் இது பத்தி மாயாகிட்ட பேசுறேன். அப்படி ஒரு நினைப்பு இருந்தால் அதை உடனடியாக விட்டுட சொல்றேன்”
“ரொம்ப நன்றி சாரதா.. நீ என்ன புரிஞ்சுகிட்ட ..இதை எப்படி உன்கிட்ட சொல்றதுன்னு தயக்கமாயிருந்தது. மாயாகிட்ட இத நேரடியா சொல்ல எனக்கு தைரியம் வரல ..கள்ளம் கபடம் இல்லாத பொண்ணு.. அவ இந்த வீட்டுக்கு மருமகளா வர்றதுக்கு எனக்கு குடுத்து வைக்கல”
“அப்படியெல்லாம் சொல்லாதீங்க அண்ணி! நீங்க எனக்கு எவ்வளவோ ஆதரவாய் இருந்திருக்கீங்க. நான் இன்னைக்கு நல்லபடியா இருக்கேன்னா அதுக்கு காரணம் நீங்க தான். நிச்சயம் நீங்க வருத்தப்படுற மாதிரி எதுவும் நடக்காமல் நான் பார்த்துக்கிறேன் ..”
“அது மட்டும் பத்தாது சாரதா.. மாயாவுக்கும் கல்யாண வயசு வந்துருச்சு.. சீக்கிரம் ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து ஆதர்ஷ்கு முன்னாடி அவளுக்கு கல்யாணத்தை முடிச்சிடுவோம். நம்ம தரகர் மாணிக்கவேலுவ உன் வீட்டுக்கு வரச்சொல்றேன். அவர் வரும்போது சொல்லு நானும் உன் வீட்டுக்கு வர்றேன். நம்ம பேசி அவர்கிட்ட நல்ல மாப்பிள்ளையா பார்க்கச் சொல்லுவோம்..”
“அண்ணி.. அண்ணன் எதுவும் தப்பா நினைப்பாறா?”
“அவருக்கு உன் பேர்லயோ.. மாயா பேர்லயோ பெரிசா என்ன அக்கறை இருக்கு? அவருக்கு அவர் காரியம் தான் பெரிசு.. நாம ஒரு மாப்பிள்ளையை பார்த்து முடிவு பண்ணிட்டு பிறகு அவர் கிட்ட.. அவங்க கேட்டு வந்த மாதிரி சொல்லிக்கலாம் “
“சரி அண்ணி நீங்க சொல்ற மாதிரியே செஞ்சிடலாம்.. நான் மாயா வந்ததும் கிளம்புறேன் “
” நித்தம் நித்தம் நெல்லுச் சோறு..
நெய் மணக்கும் கத்திரிக்கா..
நேத்து வச்ச மீன் குழம்பு
என்ன மயக்குதடி..
பாரு என்ன மயக்குதடி “
“சின்னம்மா அது நேத்து வச்ச மீன் குழம்பு இல்ல இன்னைக்கு வச்ச மீன் குழம்பு..”
“என்னங்கடி அதுக்குள்ள போயிட்டு வந்துடீங்களா மார்க்கெட்டுக்கு? “என்றாள் சாரதா.
“ஆமாம்மா போயிட்டு வந்துட்டோம்.. அம்மா மீன் குழம்பு வாசம் மூக்கைத் துளைக்குது…இன்னைக்கு நாம அத்தை வீட்ல சாப்பிட்டுட்டு போவோம் ..”என்றாள் ஆசையாக மாயா.
“இன்னொரு நாள் வருவோம்.. இப்ப வீட்டுக்கு கிளம்பலாம்” என்றாள் சாரதா ..
“அவள் ஆசைப்படுறால்ல சாரதா.. இங்கேயே சாப்பிட்டுட்டு போங்க” என்றாள் ருக்மணிதேவி.
“இல்லை அண்ணி நாங்க கிளம்புறோம் ..அண்ணா இப்ப வந்துடுவார் ..வந்தா நான் கேட்டேன்னு சொல்லுங்க.. வந்து போனத சொல்லுங்க” என்று கிளம்பினாள்.
“அம்மா நீங்க பால்கோவா கொண்டுவந்த டப்பா கழுவி வச்சிருக்கேன்” என்று பாரு நீட்ட ..
“டீ பார்வதி! அந்த டப்பாவில் கொஞ்சம் மீன் குழம்பு ஊத்தி சாரதாகிட்ட கொடு! மாயா வீட்டுல போயாவது சாப்பிடுவா” என்றாள் வாஞ்சையோடு ..
“போயிட்டு வரேன் அண்ணி! “சாரதா கிளம்பினாள். மனம் கனக்க ..இதை வளர விட கூடாது மாயாவிடம் சீக்கிரம் பேச வேண்டும் என்று மனதிற்குள் முடிவு பண்ணியவளாக ..
” ஐயய்யோ ஐயய்யோ பிடிச்சிருக்கு..
எனக்கும் உன்னை பிடிச்சிருக்கு …
உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு …
உன் துடுக்குத்தனம் தான் புடிச்சிருக்கு…”
“ஏண்டி சும்மாவே வர மாட்டியா? எப்ப பாத்தாலும் பாடிக்கிட்டு..சித்த நேரம் சும்மா இரு ” என்றாள் எரிச்சலோடு .
“ஐயோ அம்மா.. அம்மா.. மீன் குழம்புல உள்ள மீனைப் பார்த்து பாடுறேன். உனக்கு எங்க வலிக்குது? மீனே கம்முன்னு குளம்புள்ள பேசாம இருக்குது… நீ ஏன் கோபப்படுற?” என்று,கலகலவென சிரித்தாள்…சோழியைப் புரட்டிப் போட்டது போல. அந்த கள்ளம் கபடமில்லாத பெண் மனதில் என்ன இருக்கிறது? காலம் தான் பதில் சொல்லும் “
(அலை வீசும் 🐬)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings