in ,

கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 7) – தி.வள்ளி, திருநெல்வேலி 

.2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6

ஈஸ்வர் எக்ஸ்போர்ட்ஸ் படு பிஸியாக இயங்கிக் கொண்டிருந்தது ..ஆதர்ஷ் சுறுசுறுப்பாக தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தான். நீரஜாவிடம் அனுப்ப வேண்டிய மெயில்.. ரிமைண்டர்.. எல்லாவற்றையும் குறிப்பெடுத்துக் கொள்ள சொன்னான் ….

“நீரஜா… இந்த மன்த் டிமாண்ட் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு….20 பர்சென்ட் எக்ஸ்போர்ட்ஸ் அதிகம் பண்ண வேண்டியிருக்கும். ஆனா இப்ப புது ஆட்களை எடுப்பது கஷ்டமான வேலை…மேனேஜர் கிட்ட கலந்து பேசுங்கள். வெளியில காண்ட்ராக்ட் கொடுத்து கொஞ்சம் வேலையை மேனேஜ் பண்ணனும் …ப்ரொடக்ஷனக் கூட்டி டிமாண்ட மீட் பண்ணலாம். “

“சார் ஒரு சஜஷன்… நீங்க தப்பா நினைச்சுக்கலைன்னா சொல்லலாமா?”

“சொல்லுங்க நீரஜா… நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு சொல்லுங்க”

“வெளி காண்ட்ராக்டில பொருளை வாங்கும் போது அவர்களுடைய குவாலிடி நம்முடையதுக்கு மேட்ச் ஆகும்னு சொல்ல முடியாது.. நாம என்னதான் குவாலிட்டி செக் பண்ணி வாங்கினாலும், அதில் கொஞ்சம் தரம் குறைய வாய்ப்பு இருக்கு .மேலும் குறிப்பிட்ட டயத்துக்குள்ள அவங்க நமக்கு செஞ்சு கொடுக்கனும்…அதை விட நம்முடைய ஸ்டாப்களையே.. யார் யார் வில்லிங்கோ ,அவங்களை ஓவர்டைம் தினமும் ஒரு மணி நேரம் கூடுதலாக வேலை பார்க்கச் சொல்லலாம். அந்த ஓவர்டைம் பார்க்கிறதுக்கு தனியா நாம அவங்களுக்கு இன்சென்டிவ் கொடுத்திடலாம்”

“நம்ம ஸ்டாப் செய்றோம்னு சொன்னா நாமளே மேனேஜ் பண்ணிடலாம்.புரோடக்ஷன் அதிகப்படுத்தினா டிமாண்ட்டை சமாளிச்சுடலாம் .இது ஒத்து வருமான்னு நான் மேனேஜர் சார் கிட்டயும் கன்சல்ட் பண்றேன்”

“குட் சஜஷன் நீரஜா! நம்ம கம்பெனி ஒர்க்கர்ஸ்க்கு எக்ஸ்ட்ரா பேமெண்ட் கிடைச்ச மாதிரியும் இருக்கும்.. நமக்கும் நம்ம கம்பெனி ப்ராடக்ட் ஒரே மாதிரி இருக்கும் ..இது எனக்கு என்னவோ நல்ல யோசனையா தோனுது. நீங்க மேனேஜர் கிட்ட கன்சல்ட் பண்ணிட்டு…யூனியன் லீடர்கிட்டயும் பேசிட்டு என்கிட்ட சொல்லுங்க …ஒத்து வந்தா பெஸ்ட் … இல்லேன்னா வேற ஏதாவது யோசிப்போம் ..”

“கண்டிப்பா சார்..நான் பேசிட்டு உங்ககிட்ட சொல்றேன்” என்ற நீரஜா மேனேஜரை பார்க்கக் கிளம்பினாள்.

ஒரு நிமிடம் தயங்கியவள் ஆதர்ஷ் அருகே வந்து ஒரு கவரை அவன் டேபிளிலில் வைத்தாள் ..பின் தயங்கியவாறே ..

“சார் ..அன்னைக்கு மால்ல வாங்கின டிரஸ்க்கு உண்டான பணம் இதுல இருக்கு …ப்ளீஸ் அக்சப்ட் பண்ணிக்கங்க ..”

“நீரஜா நீங்க இதுக்கு டெலிக்கேட்டா பீல் பண்ண வேண்டியதில்லை. நான் அன்னைக்கு வாங்கி கொடுத்தது என்னுடைய சொந்த பணத்தில் அல்ல. கம்பெனியினுடைய பணம் .முக்கியமான போஸ்ட்ல இருக்கிறவங்களுக்கு டிரஸ் அலவன்ஸ் உண்டு ..இந்த மாதிரி மீட்டிங் அட்டென்ட் பண்ணும்போது வாங்கும் டிரஸ், ஷூ எல்லாத்துக்குமே கிளைம் பண்ணிக்கலாம். அதை நீங்களும் யூஸ் பண்ணிக்கலாம். சதீஷ் சொல்லியிருப்பார்னு நினைச்சேன் …”

“ஓகே நிரஜா! அப்ப நீங்க சொன்ன மாதிரி மேனேஜர் கிட்டயும், யூனியன் லீடர் கிட்டயும் பேசிடுங்க..எப்படி ப்ரோசீட் பண்ணுறதுன்னு இன்னைக்கு டிசைட் பண்ணிடுவோம். அப்பதான் வெர்க்க ப்ரோசீட் பண்ண சவுரியமா இருக்கும் ” நீரஜா தலையசைத்து விட்டு வெளியேறினாள்.

‘இவளைப் போல ஒரு ஆள் எப்போதும் பக்கத்தில் இருந்தால், நிர்வாகம் எவ்வளவு ஈஸியா இருக்குது.பொதுவாக அழகு இருக்கும் இடத்தில் புத்திசாலித்தனம் இருக்காது.. இரண்டும் இருந்தால் பணிவு இருக்காது…ஆனால் இவள் கெட்டிக்கார ராட்சசியாக இருக்கிறாள் .. ‘ஆதர்ஷ் புன்னகைத்துக் கொண்டான்.ஒரு பொறுப்பை இவளிடம் கொடுத்தால் மறந்து விடலாம் ..நல்ல டேலண்ட் உள்ள ஸ்டாப் அமைவது மிகப்பெரிய கொடுப்பினை…பாதி டென்ஷனை குறைத்து விடுவார்கள்.

‘இவளுக்கு முன்னால் சதீஷ் தான் பி.ஏ வாக இருந்தான். அவனுக்கு பாதி விஷயம் தானாக முடிவெடுக்கத் தெரியாது. ஒவ்வொரு விஷயத்தையும் விளக்கிச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.ஒவ்வொரு முக்கியமான விஷயத்தையும் அனுப்பியாச்சா? அனுப்பியாச்சா? என்று கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.. ஆனால் நீரஜா பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு ஒரு தடவை சொன்னால் போதும் அவளே முடித்துவிட்டு முடித்ததும் ..இன்பார்ம் பண்ணி விடுகிறாள். எவ்வளவு டென்ஷன் குறைந்து விட்டது ‘.

நீரஜாவின் அப்பா அந்த கம்பெனியின் நெடுநாள் ஊழியர் அவர் விபத்தில் சிக்கி, கால் ஊனமான போது அவன் தான் உதவி செய்தான். அப்போதுதான் அவன் நீரஜாவை ஆஸ்பத்திரியில் முதல்முதலாக பார்த்தான். அந்த நாள் இன்னும் பசுமையாக அவன் மனதில் இருக்கிறது.

அவள் அண்ணன் படித்துக் கொண்டிருக்க ..இவளே அந்த குடும்பத்திற்கு பொறுப்பு என்பதை புரிந்து கொண்டான். ஆஸ்பத்திரி கவுன்டரில் அவன் பணம் கட்டியதை அறிந்து அவனிடம் வந்து மெதுவாக ..

“நாங்களே பாத்துக்குறோம். கையில பணம் இருக்கு. நான் கட்டிடறேன்..”என்றாள் தலையை குனிந்தவாறே. ஏனோ அவளுடைய மென்மையான பேச்சும், மிரட்சியான பார்வையும், அவனை..திரும்பிப் பார்க்க வைத்தது.

“இல்லைங்க இது கம்பெனி பார்மலிடி தான் .அவர் இப்ப எங்க கம்பெனில வேலை பார்க்கிற ஸ்டாப். அவருக்கு ஒரு எமர்ஜென்சின்னா அத கம்பெனி மீட் பண்ணும். இது உங்க அப்பாக்குன்னு இல்ல எல்லாருக்குமே கம்பெனி செய்றது தான்.. அதனால நீங்க டெலிகேட்டா பீல் பண்ண வேண்டாம்..” என்றான் தன்மையாக.

இன்னும் இரண்டு நாள் கழித்து திரும்ப அவரை போய் பார்க்க வேண்டும் என்று அவன் அப்பா பரமேஸ்வரன் கிளம்பியபோது…தானும் வருவதாகக் கூறினான். தான் பார்க்க நினைப்பது அவரையா… இல்லை அவர் பெண்ணையா என்ற கேள்வி அவனுக்குள் ..ஏனோ அவளைப் பார்க்கும் ஆவல் அவனுள் எழ திரும்ப அப்பாவுடன் மருத்துவமனைக்குப் போனான்.

 அப்போதுதான் அவருடைய குடும்ப சூழல் தெரிந்தது. இவர் சம்பளத்திலே குடும்பம் நடந்து கொண்டிருந்தது .நீரஜாவின் அண்ணன் படித்து கொண்டே ஏதோ வேலை பார்த்து பணம் கொடுத்துக் கொண்டிருந்தான். பெரியவர் குமாரவேல் சம்பளமும், அவர் மகனும் சம்பளமும் குடும்பத்திற்கு வருமானம். அவருடைய நான்கு பிள்ளைகளில் 2 பிள்ளைகள் படித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது.

 அந்த குடும்பத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது ஆதர்ஷ்க்கு ..உடனே அப்பாவிடம்,

“அப்பா அவர் பாவம் ..அவருடைய குடும்பத்திற்கு ஏதாவது செய்யனும் .அவர் பொண்ணு படிச்சு முடிச்சுட்டு வேலை தேடிகிட்டு இருக்காங்க… அவங்களுக்கு நம்ம கம்பெனில ஏதாவது வேலை போட்டுக் கொடுத்தா.. அது அவங்க குடும்பத்துக்கு பெரிய உதவியா இருக்கும் ..”

எல்லோர் முன்னாலேயும் மகன் இப்படிக் கேட்பான் என்று பரமேஸ்வரன் எதிர்பார்க்கவில்லை. “உன்னுடைய இஷ்டம்.. உதவி செய்யனும்னு நினைக்கிறே.. நல்ல விஷயம் தான். அவரும் இந்த கம்பெனிக்கு வளர்ச்சிக்கு எவ்வளவோ செய்திருக்காரு.. அதனால அவளுக்கு அக்கவுண்ட் செக்சன்லே வேல போட்டுக் கொடு…உன்னுடைய நேரடி பார்வையில வச்சுக்கோ.. அவ கொஞ்சம் வேல கத்துக்கிட்டா பிறகு புரடக்க்ஷன் டிபார்ட்மெண்ட்ல போடலாம் .”என்றார்

கொடுத்த வேலையை நீரஜா கவனமாக செய்து நல்ல பெயர் வாங்கினாள்..அடுத்தடுத்து அவளுடைய திறமையையும், பொறுப்பையும் பார்த்து பதவி உயர்வு கிடைக்க .. கம்பெனியில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, இன்று அவனுடைய பர்சனல் செகரட்டரியாக ஒரு குறுகிய காலத்திற்குள் பதவி உயர்வு பெற்றாள். ..

பரமேஸ்வரனுக்கு அவ்வளவாக அது திருப்தி அளிக்கவில்லை என்றாலும் …அவளுடைய திறமையையும் கெட்டிக்காரத்தனத்தையும் கேள்விப்பட்டு, முக்கியமான பொறுப்பில் அவள் இருந்தால் தன் மகனுக்கு உதவியாக இருக்கும் என்று அரை மனதுடன் சம்மதித்தார்.

ஆதர்ஷ் பெண்களை பார்த்து சலனப்படும் டைப் இல்லை ..அவன் நட்புக்காக பல பெரிய இடத்து பெண்கள் ஏங்கிக் கொண்டிருந்தனர் ..தன் பின்னால் வரத்துடிக்கும் பெண்களைவிட..தன்னை பார்த்து மிரண்டு விலகிச்செல்லும் நீரஜா அவன் மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்தினாள்.

அவளுடைய கண்ணியமும், புத்திசாலித்தனமும் கண்ணை பார்த்து பேசும் நேர்மையும், அவன் மனதில் அவளுக்கொரு இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ப்யூன் ராமசாமிக்கு ,நீரஜாவின் வளர்ச்சி அவள் பேரில் ஒரு மரியாதையையும், அன்பையும் கொடுத்தது.அவள் அப்பா குமாரவேல் அந்த கம்பெனிக்கு உழைத்தது அவருக்கு தெரியும்.. குமாரவேல் மகள் என்பதால் அவர் மனதில் நீரஜா மேல் ஒரு பாசம் .அதே நேரம் பெரியவர் பரமேஸ்வரனைப் பற்றியும் தெரியும் என்பதால் மனதில் ஒரு சஞ்சலமும் இருந்தது .அதனாலேயே அவர் அலுவலகத்தில் இவர்களை இணைத்து பேசுவதைக் கேட்டால் அவ்வப்போது அதட்டி அதை அமுக்கி விடுவார் ..

அவர் நல்லது செய்ய நினைத்தாலும் விதி அவளுக்கு எதிராக சதி செய்தால்…அவர்தான் பாவம் என்ன செய்வார்

(அலை வீசும்  🐬)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பார்க்கர் பேனாவும் பாரத்வாஜ கோத்திரமும் (பகுதி 5) – வைஷ்ணவி

    உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 21) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை