2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“ஹாய் குட்டி, வெல்கம் டு ஹோம்” என்று பாட்டி விமலியை வரவேற்றாள்.
“ஹாய் கிரான்மா” என்று கையை ஆட்டினாள் விமலி சிறிது சோர்வாக.
“ஏண்டா கண்ணு முகம் டல்லா இருக்கு? காலேஜ்ல உங்க டீச்சர் உன்னை திட்டிட்டாளா?”
“திட்டியிருந்தாக் கூட சந்தோஷமா தான் இருந்திருக்கும். பாடத்தை நடத்தி ரொம்ப போர் அடிக்கிறா பாட்டி” என்றாள் விமலி சலிப்புடன்.
அதைக் கேட்டு சிரித்த கமலி பாட்டி, “சரி சரி… கை கால் முகம் எல்லாம் அலம்பிண்டு வா.. உனக்காக ஒரு ஸ்வீட் பண்ணி வச்சிருக்கேன் அதை சாப்பிட்டால் உனக்கு சந்தோஷமாயிடும் யூடியூப்ல பார்த்தேன், ட்ரை பண்ணி பார்க்கலாம்னு பண்ணிணேன். சாப்பிட்டு சொல்லு எப்படி இருக்குன்னு” என்றாள் பாட்டி முகம் முழுக்க பெருமிதம் பொங்க.
“ஓ… அப்போ எக்ஸ்பிரிமெண்ட் எலி, நான்தானா உனக்கு?” என்றாள் விமலி கிண்டலாக.
அவளை முறைத்தபடி “அதெல்லாம் ஒன்னும் இல்ல நான் ஒரு வாய் எடுத்து போட்டுட்டேன். நல்லாத்தான் இருக்கு” என்ற பாட்டி, “சொல்ல மறந்துட்டேனே, உனக்கு காலைல ஒரு பார்சல் வந்தது. என்ன ஆர்டர் பண்ணின? என்று கேட்டாள்.
“ஓ…வந்துடுத்தா…?” என்று முகம் முழுக்க புன்னகைக்க “இரு இரு….காமிக்கறேன்” என்று துள்ளிக் குதித்தபடி பார்சலைப் பிரித்தாள். ஆர்வத்துடன் உள்ளேயிருந்து ஒரு ஜீன்ஸ் பேன்ட் எடுத்தாள்.
“ஓ…ஜீன்ஸ் பேன்டு”..என்று புன்னகைத்த பாட்டியின் முகம்
விமலி அந்த உடையை பிரித்து தன் இடுப்பிலிருந்து கால் வரை வைத்து அளவு பார்த்ததை கண்டு,” அய்யய்யோ…இது என்ன இப்படி முழங்கால் பகுதியில இத்தனை கிழிசல்? எப்படி ஏமாத்துறான் பாரு…காசை வாங்கிண்டு. முதல்ல திருப்பி அனுப்பு. இந்த ஊர்ல இல்லாத கடையா?. நேர்ல போய் வாங்கிண்டாத்தான் நல்லது. ஆன்லைன்ல எல்லாம் இப்படித்தான்” என்று விடாமல் பேசிய பாட்டியிடம்,
“பாட்டி,” இரு இரு… இது ஃபேஷன் பாட்டி இப்படி போட்டுகிறது தான் இப்பொழுது ட்ரெண்ட். இது கிழிசல் கிடையாது டிசைன். என்றாள் விமலி சிரித்துக்கொண்டே.
“என்னது கிழிசல் தான் டிசைனா.? பிச்சைக்காரா மாதிரி போட்டுகிறது தான் டிரெண்டா. நன்னாத்தான் இருக்கு. கலிகாலத்துல இப்படியா எல்லாரும் பைத்தியமா ஆகணும். அட, கஷ்டமே” இவாளுக்கெல்லாம் ஏன் இப்படி எல்லாம் புத்தி போறதோ தெரியலையே? என்று தலையில் கை வைத்த பாட்டி, திடீரென்று நினைத்துக் கொண்டவளாக “ஏண்டிம்மா, இந்த மாதிரி புடவைக்கும் வந்திருக்கா என்ன? ஏன்னா, நான் டிரெண்டியா வர்ற புடவையை தான் வாங்கி கட்டிப்பேன். கிழிசப் புடவை தான் பேஷன்னு சொல்லாத வரைக்கும் க்ஷேமம்.” என்று கவலையாகினாள்.
“இல்ல பாட்டி இந்த மாதிரி ஃபேஷன் ட்ரெண்ட் எல்லாம் எங்களுக்கு தான். சின்ன வயசுக்காராளுக்குதான். உன்ன மாதிரி வயசானவங்கலுக்கெல்லாம் அதெல்லாம் வராது பாட்டி கவலைப்படாத” என்று விமலி சொன்னவுடன் தான் நிம்மதி பெருமூச்சு விட்டாள் கமலி பாட்டி.
“அது சரி…இந்த கிழிச பேன்ட் டுக்கு மேட்சிங்கா சட்டையும் கிழிசல் போட்டுக்கணுமா?” என்று பயந்த விழிகளுடன் கேட்டாள் பாட்டி.
“அப்படி ஒண்ணும் இதுவரைக்கும் வரல. எதிர்காலத்துல எதிர்பார்க்கலாம்” என்றாள் விமலி.
“ஆக மொத்தத்துல பின்னோக்கி போயிண்டு இருக்கேள்”.என்றாள் பாட்டி
“என்ன சொல்ற..? புரியல” என்றாள் புருவத்தை சுருக்கி பாட்டி செய்த இனிப்பை வாயில் போட்டபடி.
“காட்டுல வாழ்ந்த மனிதர்கள் மாதிரி..னு சொன்னேன்.”
“ஏன்? ராஜா,ராணி காலத்துல ரவிக்கையே போட்டுக்க மாட்டாளே..அது உனக்கு நன்னாருக்கோ?” என்று விமலி ஆவேசமானாள்.
“ஆனா அது வித்தியாசமா இருக்காது..ஏன்னா அதுக்கு பதிலா நகை போட்டுப்பா. எங்க பாட்டியும் ரவிக்கைப் போட்டுக்க மாட்டாள். அதனால அவா வெளியே வரவும் மாட்டாள். போடாம இருக்கறதுக்கும் இப்படி கிழிசல் போட்டுக்கறதுக்கும் வித்தியாசம் இருக்கு” என்று பாட்டி தன் வாதத்தை ஏற்றினாள்.
“அது மாதிரி ஒண்ணும் இது கிடையாது. இதுல கொஞ்சமா முழங்கால் தெரியும். அவ்வளவுதான். நீ இப்படி யோசிச்சு பாரு. நிறைய தெரியற மாதிரி போடறதை விட கொஞ்சம் அங்கங்கே தெரியற மாதிரி போட்டா ஒண்ணும் தப்பில்ல” என்று விமலி கண்முழியை உருட்டி, கையை ஆட்டி ஆட்டி அபிநயம் பிடித்தாள்.
“இந்த காலத்து குழந்தைகள் கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா? எப்படியோ போங்க.” என்று பாட்டி பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு எழுந்தாள்.
“எனிவே…இந்த ஸ்வீட் ரொம்ப நன்னா இருக்கு. இனிமேல் புதுசா ட்ரை பண்றேன்னு என் பல்லை பதம் பார்க்காத” என்ற விமலியை பொய்யாய் முறைத்தாள் பாட்டி.
(லூட்டி தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings