2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“டேய்…நட்பு…என்னடா நாலஞ்சு நாளா ட்விட்டர் பக்கமே ஆள காணோம்? ஃபேஸ்புக்லயும் ஃபேஸக் காட்டல? இன்ஸ்டாகிராம்…ல…ஷார்ட்ஸ் போடல,எங்கடா போய் தொலைஞ்ச”
“இல்லடா,அது ஒரு மேட்டர்ரா நண்பு. மனசு மாட்டிக்கிச்சு. ஒரே குழப்பம் .அதனாலதான் லீவு விட்டுட்டேன் எல்லாத்துக்கும்”.
“அடேய்..,உன்னை குழப்பறதுக்குத்தான் நான் ஒருத்தன் இருக்கேனே. வேறு யாரு உன்ன குழப்பினது?”
“அது ஒன்னும் இல்லடா ரன் (ராமச்சந்திரன் என்ற பெயரை சுருக்கி….. ரன் என்று கூப்பிடுகிறான்.குழம்பாதீர்கள்.)
“அது…. ஒரு… பொண்ணு மேல… மனசு மாட்டிக்கிருச்சுடா…” தடுமாறியபடி பேசினான்.
“அப்டியா? மன்”( மணிவண்ணன்)
அது மனசு இப்படித்தான். திடீர்னு ஒரு நாள் மாட்டும். அதுக்கெல்லாம் நீ குழப்பிக்காதே.
ஓகே, யார் அந்த தேவதை சொல்லு …மா…”
“யூடியூப்…ல தான் பார்த்தேன்.செம க்யூட்.பாடும் பறவை.என்..ன்..ன்..ன..ன வாய்ஸ். தேன்குரல் தான் போ.மொதல்ல வாய்சுக்குத் தான் அடிமையானேன். .இப்ப..இப்ப” வெட்கப்படும் குரலில் அவங்களுக்கே “என்றான் மன்.
“சரி..சரி சரி நெளியாத.
டேய் நமக்குள்ள எவ்ளோ பொருத்தம் பாரு.நம்மரெண்டு பேருக்கும் புடிச்ச லவ்வர்ஸ்சும் பாடகியாக இருக்காங்களே! என்ன ஒரு ஒற்றுமை பாரு.” என்ற ரன் பதறி “டேய் …..நம்ம ரெண்டு பேரும் பாக்குறது. ஒரே ஆளா இருக்குமோ? அதுக்கு சான்ஸ் இருக்கு இல்ல. சரி சரி ,இரு நான் லவ் பண்ற பொண்ண யாருன்னு இமேஜ் அனுப்புறேன்.”
ரன் அனுப்பிய சில நிமிடங்களில், மன் ஓ….என கத்தும் இமோஜி ஸ்டிக்கரை அனுப்பினான்.
“நம்ம ரெண்டு பேரும் ஒரே மாதிரி சிந்திக்கிறோம். அத ஒத்துக்கிறேன். அதுக்காக நான் லவ் பண்ற பொண்ண நீயும் லவ் பண்றது என்னால ஏத்துக்க முடியாது…நெ….வ…ர்”
என்று கண்களை விரித்து, முழித்து கோபக் கனலாக முகம் சிவந்து பற்களை கடித்தான் மன், வீடியோ கால் செய்து.
“சரிடா அதுக்கு ஏன்டா இப்படி பயமுறுத்துற? மூஞ்சியை நார்மலாக்கு” என்றான் ரன்.
“அது எப்படி ? நான் லவ் பண்ற பொண்ண நீ எப்படி லவ் பண்ணலாம் ?- மன்.
“அடேய் இது தற்செயலா நடந்திருச்சு நீ லவ் பண்ற பொண்ணு..ன்னு எனக்கு தெரியாது.சரி, இப்ப என்ன செய்யலாம்? அதை முதல்ல பார்ப்போம் வா.”என்று சமாதானப்படுத்தினான் ரன்.
“அதான் நான் சொல்லிட்டேனே நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் நீ விட்டு விலகி போ” என்றான் மன், கைகளை உயர்த்தி தலையை தாழ்த்தி.
“அதுக்கு எதுக்கு டயலாக் விடுற ஆனா ஒன்னு சொல்றேன். இதை நாம ரெண்டு பேரும் முடிவு எடுக்கக் கூடாது. நாம லவ் பண்றோமே அந்த பொண்ணு தான் முடிவு எடுக்கணும், நம்ம ரெண்டு பேர்ல ஒருத்தரை செலக்ட் பண்றது அவளோட உரிமை அதை நீ முதலில் புரிஞ்சுக்கோ.”என்று சமாதானப்படுத்த முயன்றான் ரன்.
ம்….நீ சொல்றதும் சரிதான். எனக்கு நம்பிக்கையிருக்கு.ஏன்னா, அவ எனக்காகப் பிறந்தவ…ஆளாகி வளர்ந்தவ…பாட்டாக இசைத்தவ…என மன் எழுத்துக்களை அனுப்ப.,
“டேய், என்னடா சொல்ற?” என்று முழிக்கும் ஈமோஜியை போட்டான் ரன்.
“கவித…கவித….அதெல்லாம் உண்மையான காதலுக்குத் தான் வரும்.உனக்கெங்க வரப் போகுது…ம்…ஹூம்..” என்று நக்கலடித்தான் மன்.
“போதும், நிறுத்து உன் பினாத்தலை.என்னோட லெவலே வேற.காத்திரு”.என்று எழுதிவிட்டு சாட்டிலிருந்து வெளியேறினான் ரன்.
இரண்டு நாள் கழித்து, ரன் அனுப்பிய படத்தை கோபப் பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்த மன், “எப்படிடா?”எனக் கேட்டான் சாட்டில்.
“அதான் சொன்னேனே, என் லெவலே வேறன்னு.” என்றான் ரன்.
“நேர்ல பார்த்திட்டியா? ப்ரபோஸ் பண்ணிட்டியா ? அவ ஒத்துக்கிட்டாளா? லவ் பண்றேன்னு சொல்லிட்டாளா? எப்படி? எப்படி? எப்ப பார்த்த..? எங்க பார்த்த? ஏன் என்கிட்ட சொல்லல? நம்ம ரெண்டு பேரும் தானே ப்ரொபோஸ் பண்ணனும்.அப்புறம் தானே அவ முடிவெடுக்கணும். அது எப்படி என்ன பாக்காம உன்னை செலக்ட் பண்ணலாம்.?என்று விடாமல் சாட் செய்தவனுக்கு எந்த பதிலும் ரன் கொடுக்கவில்லை.
மீண்டும் உற்றுப் பார்த்தான் புகைப்படத்தை.. அதில் ராமச்சந்திரனும், பாடகி சினியும் அருகருகே நின்று கொண்டு சிரித்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஏதோ ஒன்று இடிப்பது போல் அவனுக்கு தோன்றியது ரன்னின் முகத்தை ஜூம் செய்து பார்த்தான் கண்டுபிடித்து விட்டான். அது ராமச்சந்திரனின் முகம் தான் ஆனால் உடல் அவனோடது அல்ல என்று.ஃபிராடு..ஃபிராடு..என்றுகொட்டை எழுத்தில் எழுதி அனுப்பினான்.
மறுநாள் அதிகாலையிலேயே வீடியோ கால் செய்தான் ரன். “எப்படிடா கண்டுபிடிச்ச? என்றான் சிரித்துக் கொண்டே.
“அதான் அஞ்சு வருஷமா உன் கூட ஃபிரண்டா இருக்கேனே.எனக்கு தெரியாதா?”உன் லெவல் என்னன்னு.? என்றான் எகத்தாளச் சிரிப்புடன்.
“அது சரி, இது என்ன காலங்காத்தால ஃபுல் மேக்கப் போட பாத்ரூம்ல நின்னுகிட்டு இருக்க பிரஷ் வச்சுக்கிட்டு?என்றான் ஆச்சர்ய கண்களுடன்.
‘பாத்ரூம் டு பெட்ரூம்’ அப்படிங்கற டைட்டில்ல இன்னைக்கு ஃபுல் டே. வீடியோ எடுத்து youtube ல அப்லோட் பண்ண போறேன். எப்படியும் மில்லியன் வ்யூஸ் போகும். அவ என் சானலை சப்ஸ்கிரைப் செஞ்சு பார்ப்பா.
என்னோட ஒர்க் அவுட் ..ல அவ இம்ப்ரஸ் ஆகிடுவா.” என்றான் மன் முகத்தை ஆக்ஷன் ஹீரோவாக வைத்துக்கொண்டு.
“பார்க்கலைன்னா? “என்று கொக்கி போட்டான் ரன்.
“ஒன் டே மில்லியன் வியூஸ் என்றால் என்னை கண்டிப்பா நியூஸ் நைன்-ல இருந்து பேட்டி எடுப்பாங்க .அதை கண்டிப்பா அவ பார்ப்பா. அதை எல்லாத்தையும் facebook இன்ஸ்டாகிராம் ட்விட்டர் எல்லாத்திலும் போடுவேன்.ஏதாவது ஒன்னுல என்னை அவ ஃபாலோ பண்ணுவா. எப்படி? என்னோட ஐடியா ? என்று காலர் இல்லாத பனியன் கழுத்தை தூக்கி விட்டுக் கொண்டான் மன்.
“ஐடியா என்னவோ நல்லாத்தான் இருக்கு பாக்கலாம். இப் யு டோன்ட் மைன்ட், நானும் இதே ஐடியாவை ஃபாலோ பண்ணலாமா? “என்றான் கெஞ்சும் பாவனையில் ரன்.
“பண்ணித்தொலை”என்றான் மன்.
மணிவண்ணனின் ஐடியா வெற்றி பெற்றது டூ மில்லியன் வியூஸில் பத்தாயிரம்
சப்ஸ்க்ரைபில் அவளும் ஒருவள் ஆனாள்.
பேஸ்புக்கில் பாலோ செய்தாள். இருவரும் சாட் செய்ய ஆரம்பித்தனர்.
நாகரீகமாக ஆரம்பித்த பேச்சு(சாட்) நட்பாகி, உரிமையாகி காதல் என்ற வார்த்தையில் வந்து நின்றது.
உன் இசையுடன் என்னையும் காதலிப்பாயா உன் வாழ்வில்…? என்று மன் கேட்ட
கேள்விக்கு, “யோசிக்கணும்”
என்று பதில் வந்தது.
“காத்திருக்கிறேன்”என்றான்.
நான் சொன்னது. நீ தான் யோசிக்கணும்..னு”என்று பதிலளித்தாள்.
குழம்பினான். நேரில் சந்திக்க இடம் சொன்னாள்.
“டே… ரன்…சக்ஸஸ்….என்றுஎல்லாவற்றையும் சொன்னான்
மன், ரன்-னிடம்
“ஒருவேளை அவளுக்கு எதாவது வியாதி இருக்குமோ?
அதான் நீ யோசிக்கணும்…னு சொன்னாளோ?” என்றான் ரன்.
“உன்னோட தோல்வியில என்னை பயமுறுத்ததாத” என்றான் மன்.
“நான் இன்னும் ப்ரபோஸ் பண்ணவேயில்ல. அதுக்குள்ள
நீ எப்படி முடிவு பண்ணலாம்?அதனால, நீ போகும்போது நானும் வரேன். உனக்கு செட் ஆகலைன்னா நான் ட்ரை பண்றேன்.என்றான் கெஞ்சலாக ரன்.
“சரி.. வா…”என்று மன் அவனை அழைத்துச் சென்றான்.
மரங்கள் நிறைந்த பகுதியில் ஒரு மரத்திற்குப் பின்னால்
நின்றுகொண்டு மணிவண்ணனும், சினியும்பேசிக்கொண்டிருந்ததைவயிற்றுப் புகைச்சலுடன் பார்த்தான் ராமச்சந்திரன்.
அவள் ஏதோ சொல்ல சொல்லமன் தலையை ஆட்டி, ஆட்டி
மறுப்பு தெரிவித்தபடி திடீரென ஓட்டமாக ஓடி வந்தான்.
“என்னடா…?உனக்கு ஒத்து வரலியா ?நான் போய் ப்ரபோஸ் பண்ணவா?”என்றான்.
“அதுக்கு நீ முதல்ல யோசிக்கணும்”
“எதுக்குடா…? “
“அ…து…சினி…இல்லடா…சிவன்”
மன் சொன்னதும் ஐயயோ…என்றபடி மன்-ஐ இழுத்து கொண்டு ரன் எடுத்தான் ரன்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings