in ,

மனிதம் (சிறுகதை) – பூமணி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

“ஐயா சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு, ஏதாவது சாப்பாடு கொடுங்க” என்று தன் தட்டை நீட்டினான் பிச்சைக்காரன்.

“உனக்கு வேற வேலை இல்லை, எப்போ பார்த்தாலும் கடைகிட்ட வந்து தொல்லை பண்ற. ஏ ! கைகால் நல்லாத்தானே இருக்கு அப்புறம் என்னையா உனக்கு” என்றான் முனுசாமி.

பிச்சைக்காரனின் கால்சட்டை, பரட்டை தலையும், பல நாட்கள் குளிக்காத இருந்ததால் அவன் மீது நாற்றம் வருவதை தாங்காமல் அவனிடமிருந்து அனைவரும் தள்ளி நின்றனர்.

பிச்சைக்காரனுக்கு பசி வயிற்றை கிள்ளியது. எச்சியை விழுங்கிய போது வயிற்றில் சுருள் என்று சத்தம் கேட்டது. பிச்சைக்காரன் பசி மயக்கத்தோடு அந்த கடையின் வாசலிலே அன்று இரவு அப்படியே உறங்கி விட்டேன்.

காலையில் கடை திறக்க வந்த முனுசாமி பிச்சைக்காரனை பார்த்து காலையிலே கடை முன் படுத்து இருக்குற, பசி மயக்கத்தில் இருந்தவனின் செவியில் விழ சிறிது நேரம் ஆனது.

அதற்குள் முனுசாமி அந்த பிச்சைக்காரனை தன் காலினால் எட்டி உதைத்தான். பாவம் பசிமயக்கத்தில் நினைவிழுந்த பிச்சைக்காரனின் துணியில் முடித்து வைத்திருந்த சில்லறைகள் நாலாப்புறமும் சிதறியது. சிதறிய சில்லறையை அவசரமாக பொறுக்கி எடுத்து தன் துணியில் மீண்டும் முடித்து வைத்து கொண்டான்.

பின்பு, அந்த இடத்தில் இருந்து தன் மங்கிய பார்வையால் பார்க்கும் போது சிறிது தூரத்தில் பேருந்து நிலையம் ஒன்று தென்பட்டது. பிச்சைக்காரன் மெல்ல நடந்து அந்த பேருந்து நிலையத்திற்கு சென்றான்.

“அம்மா !அம்மா ! சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு” என்று தன் கைகளை ஏந்தினான் பிச்சைக்காரன்.

அவன் இருக்கும் இடத்தை விட்டு அனைவரும் தள்ளி சென்றனர். அந்த பிச்சைக்காரனின் தோற்றம் அருவருப்பை ஏற்படுத்தியது. பசி மயக்கத்தில் அவனால் நெடுநேரம் வெயிலில் நிற்க முடியவில்லை மீண்டும் தன் துணிமூட்டை வைத்திருந்த இடத்திற்கு சென்றான்.

அவன் முடித்து வைத்திருந்த சில்லறையை பிரித்து எண்ணி பார்த்த போது ஐந்து ரூபாய் மட்டுமே இருந்தது. உடனே, பிச்சைக்காரன் இந்த ஐந்து ரூபாய் வைத்து நம்மால் தண்ணீர் கூட வாங்க முடியாது. அட கடவுளே! இந்த பிச்சைக்காரனுக்கு இப்படி ஒரு நிலைமை என்று தன் கன்னத்தில் கை வைத்ததும் அவனைறியாமள் அவன் வைத்திருந்த சில்லறையின் மீது கண்ணீர் துளிர்த்தது.

அவன் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில் குப்பைத்தொட்டியில் ஒரு இலையில் தயிர் சாதம் யாரோ போட்டு சென்றுள்ளது கண்ணிற்கு தெரிந்தது. அதை பார்த்ததும் மங்கிய பார்வை தெளிவானது, கால்கள் விரைவாக நடந்து அங்கு சென்றது.

குப்பைத்தொட்டியின் நாற்றம் அவன் உடம்பில் வரும் நாற்றத்தினால் அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. அவனது கைகள் பரபரத்தது உடனே ! தன் கையை சாதத்தில் நுழைத்து ஒரு கை அள்ளி வாயில் போட்டான். சுவையறியாத அவனது நாக்கு குப்பைத் தொட்டியின் சாதத்தை ருசித்தது. அவன் கையிலிருந்து சிதறிய பருக்கைகளை நாவில் எச்சில் வழிய நாய் ஒன்று சுவைத்து சாப்பிட்டு கொண்டிருந்தது.

அந்த நாய் தன் வாலை குழைத்து கொண்டு அவனை சுற்றி வந்தது. அதை பார்த்த பிச்சைக்காரன் தான் ருசித்து சாப்பிட்ட தயிர் சாதத்தை எடுத்து அந்த நாயின் எதிரில் வைத்தான். தயிர் சாதத்தை சாப்பிட்டு கொண்டிருந்த அந்த நாயின் முகத்தை உற்று பார்த்து தன் பசியை மறந்தான் பிச்சைக்காரன்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மயக்கமா? கலக்கமா? (சிறுகதை) – கவிஞர் இரஜகை நிலவன் மும்பை

    மாமனோட மனசு (சிறுகதை) – முகில் தினகரன், கோவை