2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
நிழல்யுத்தம்
காபி எடுத்துக் கொண்டு வந்த ராணி “அவன் எங்கே போகிறான்?“ என்றவள் வேகமாக வாசலுக்கு வந்து “அரசு, நீ எங்கேயும் போக வேண்டாம். உனக்கு என்ன வேண்டும் சொல். நான் தருகிறேன்.” என்றாள்.
“அம்மா நான் சொல்கிறபடி இந்த வீட்டில் எதுவும் நடக்கப் போவதில்லை. நீங்கள் வழியை விடுங்கள்.” அம்மாவின் கையைத் தட்டி விட்டு வெளியே நடந்தான் அரசு.
“அரசு… நீ போகாதே. அம்மா ரொம்பா தவித்துப் போவாள். உன் வழிக்கே நான் வருகிறேன். வீட்டிற்குள் வா.” என்ற படி அவனருகில் வந்தா ஜே.கே.
ஒரு நிமிடம் நின்று தந்தையை நின்று பார்த்த தமிழரசு, ”இந்த யுத்தம் ஆரம்பித்து ஒரு வருடமாகி விட்டது அப்பா. நான் கல்லூரி முடிநத்தவுடன் உங்களிடம் கேட்டேன். அன்று நீங்கள் தனித்துச் செயல்பட அனுமதித்திருந்தால் நான் இன்று ஒரு அஸ்திவாரமாவது அமைத்திருப்பேன். இப்படியே நீங்கள் உங்கள் பிஸினஸ் சாம்ராஜ்யத்திற்குள் இழுத்துப் போட்டு விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறீர்கள்.”
“ஒன்று உங்களுக்குத் தெரியுமா? நான் எங்கே போனாலும் ஜே.கே. அங்கீகாரம் என்னைத் துரத்துகிறது. ஜே.கே.சாரின் மகன் என்பதால் பல சலுகைகள் எதிர்பார்க்காமலே மடியில் வந்து விழுகிறது. எனக்காக என்று விருத்தியடையச் செய்த உங்கள் வியாபார சாம்ராஜ்யத்தை நீங்களே கட்டிக் கொண்டு கொண்டாடுங்கள். நான் தமிழரசாக அடையாளப்பட வேண்டும். அதற்கு எனக்குள்ள அத்தனையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்.” என்றான் அரசு.
“தனியாகப் போனால் செத்துப் போவாய் அரசு. அப்பாவிடம் சவால் விட்டு வந்தோமே.. இனி எந்த முகத்தோடு போவோம் என்று வருந்தியே காணமல் போய் விடுவாய். உனக்காக நான் வளர்த்து வைத்திருக்கின்ற சாம்ராஜ்யத்தை விரிவாக்கு. ஜெயக்குமாரின் பெயரைத் தகர்த்தெரிந்துவிட்டு புதிய சாதனைகளை செய்து காட்டு. எந்த நாடுகளிலெல்லாம் இன்றும் உன் தந்தையால் காலடி வைக்க முடிய வில்லையோ, அங்கே போய் கொடி நாட்டு. அதை விட்டுவிட்டு ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறாய் என்றுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.” சிரித்துக் கொண்டே சொன்னார் ஜே.கே.
“அந்த மாதிரி எதுவும் வேண்டாம். நான் தனியாக என் காலில் நிற்க வேண்டும்.”
“சும்மா கதை விடாதே அரசு! நீ ரோட்டிலே போய் பிச்சை எடுத்தால் கூட ஒரு நாளைக்கு அம்பது ரூபாய் சம்பாதிக்க முடியாத நிலைதான் இன்று.”
“நான் ஏன் பிச்சை எடுக்க வேண்டும். என் தந்தை பெரிய கோடீஸ்வரர். மும்பை பெரும் புள்ளிகளில் ஒருவர். அவரிடம் இல்லாத பணமா? ஒரு பத்துகோடி ரூபாயை வாங்குக் கொண்டு போய் பிஸினஸ் பண்ணப் போகிறேன்.”
“அப்படி வா அரசு வழிக்கு! நீயோ உன் காலிலே நின்று தமிழரசின் பெயர் நிலைக்க வேண்டும். அந்தப் பெயரின் விரிவில்தான் உன் உயரம் இருக்கிறது என்று கருதுகிறாய். அதற்கு என் அஸ்திவாரம் எதற்கு? நீ உன் காலில் நிற்க விரும்புகிறாய். போ… போய் நில். என்னிடமுருந்து ஒரு சல்லிக்காசு கூட எடுக்காமல் எதிர்பார்க்காமல் போய் சம்பாதித்து உன் பெயரை நிலை நிறுத்து.” தன் அஸ்திரத்தை உபயோகித்தார் ஜே.கே.
“இப்படி வெளியே நின்று பேசிக் கொண்டு விவாதம் பண்ணிக் கொண்டிருக்கப் போகிறீர்களா? உள்ளே வந்து அமர்ந்து கொண்டு பேசலாமே” பதட்டமாகச் சொன்னாள் அம்மா.
“இப்போது தான் சூடு பிடித்திருக்கிறது. வாங்க அப்பா உள்ளே போய் அமர்ந்து தர்க்கம் பண்ணாலாம்” என்று அரசு உள்ளே வர, பின்னாலே ஜே.கே.வும் உள்ளே வந்தார்.
“அம்மா டிபன் என்னது?” என்றான் அரசு.
“பக்கோடாவும் லட்டும் இருக்கிறது. காபியை சூடாக்கித் தருகிறேன்.”
“அரசு தனியாக நிற்க விரும்பி பிடிவாதம் பண்ணிய பிறகு இங்கே பச்சைத் தண்ணீர் குடிப்பது கூட தவறுதான் என்று புரியவில்லையா?“ ஜே.கே. உண்மைகளை உணர்த்த விரும்பினார்.
“அதுவும் சரிதான். இப்போது என்னைத் தனியாய் என் காலில் நிற்க அனுமதிக்கிறீர்கள் அப்படித்தானே.”
“இவ்வளவு பிடிவாதமாக இருக்கும் என் மகனை விட்டுப் பிடிப்பதுதான் நல்லது என்று நினைக்கிறேன். ஒன்று மட்டும் சொல்கிறேன் அரசு. இரண்டு நாளிலே அல்லது நாளைக்கே நீ வீடு திரும்பவேண்டிய இக்கட்டான நிலைவரும். அப்போது தன்மானம் எல்லாவற்றையும் கழற்றிப் போட்டு விட்டு வா. நீ எப்போதும் இந்த வீட்டுப் பிள்ளை. என் மகன் காபி சாப்பிடு.” என்றார் உள்ளுக்குள்ளே சிரித்துக் கொண்டு.
“இந்தா.. பசியாய் இருப்பாய் டிபன் சாப்பிடு” என்றாள் அம்மா.
“அப்புறம் சாப்பிடுகிறேன்.” என்று அம்மாவிடம் சொன்னவன் “அப்பா உங்கள் வருமானத்தில் வந்த டிபன், காபி நீங்களே சாப்பிடுங்கள். எனக்கு உங்கள் வருமானத்தில் ஒரு தம்படி கூட தேவையில்லை.” என்றவன் கையில் அணிந்திருந்த பிரேஸ்லெட், விரல்களில் கிடந்த வைர மோதிரங்கள், கழுத்தில் கிடந்த செயின், பாக்கெட்டிலிருந்த செல்போன் எல்லவற்றையும் எடுத்து மேஜையில் வைத்து விட்டு, ”மோட்டார் பைக், கார் இரண்டுமே நிற்கிறது. உடுத்த உடையோடு போகிறேன். முடிந்தால் புதிய துணி வாங்கியதும் இந்த உடைகளையும் அனுப்பி வைக்கிறேன்.” என்றவாறு கிளம்பினான்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings