வணக்கம்,
2022ம் ஆண்டு எல்லா விதத்திலும் மறக்க முடியாத ஒரு ஆண்டு என்றால் அது மிகையில்லை. 2022ன் குறிப்பிடத்தக்க சில நிகழ்வுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறோம்.
சர்வதேச சிறுகதைப் போட்டி
ஜனவரி 2022ல், சஹானா இணைய இதழின் முதல் சிறுகதைப் போட்டி முடிவுகள் வெளியிடப்பட்டதும், அதன் பின் சர்வதேச அளவில் இன்னும் நிறைய எழுத்தாளர்களையும் வாசகர்களையும் நம் இதழ் சென்றடைந்ததும் நீங்கள் அறிந்ததே. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் “காவேரியின் கைபேசி” என்ற சிறுகதைத் தொகுப்பாக, பெங்களூரு தமிழ் சங்கத்தின் உலக சாதனை நிகழ்வில் வெளியிடப்பட்டது.
Saayal Awards 2022
மார்ச் 2022ல், கோவையை சேர்ந்த “Saayal” அமைப்பினர் வழங்கிய “A Women of Pride Award 2022” விருது, மறக்க முடியாத ஒரு கௌரவமாய் அமைந்தது.
உலக சாதனை நிகழ்வில் நம் பங்களிப்பு
ஆகஸ்ட் 2022ல், நம் ஸ்ரீ ரேணுகா பதிப்பக வடிவமைப்பில், பெங்களூரு தமிழ் சங்கத்தில் நடந்த உலக சாதனை நிகழ்வில் 63 புத்தகங்கள் வெளியிடப்பட்டது.
பெங்களூர் தமிழ் சங்க விருது
அதே பெங்களூரு தமிழ் சங்க நிகழ்வில், “பேராற்றல் பெண்மணி விருது” பெற்றது, முக்கிய அங்கீகாரம்.
சிறப்பு விருந்தினர் அழைப்பு
அக்டோபர் 2022ல் கோவை “வசந்த வாசல் கவி மன்றத்தின்” திங்கள் அமர்வில் சிறப்பு விருந்தினராய் அழைக்கப்பட்டு, இலக்கிய ஆர்வலர்கள் முன் உரையாற்றியது மறக்க முடியாத ஒரு அனுபவம்.
2022ல் 80 புத்தகங்கள் வெளியீடு
பெங்களூரு நிகழ்வில் வெளியிடப்பட்ட 60+ புத்தகங்கள் தவிர, ஓசூர் புத்தக கண்காட்சி வெளியீட்டிற்கு 6 புத்தகங்கள், தனிப்பட்ட எழுத்தாளர்களின் வெளியீடாக 6 புத்தகங்கள், சிங்கப்பூரை சேர்ந்த எழுத்தாளர் வித்யா அருண் எழுதிய ஒரு சிறுகதைத் தொகுப்பு, கம்போடியா தமிழ் சங்கத்தில் நடந்த தமிழ் மாநாட்டில் எழுத்தாளர் ஓசூர் மணிமேகலை அவர்களின் எழுத்தில் ஒரு சிறுவர் நூல் என, இந்த வருடத்தில் கிட்டத்தட்ட 80 புத்தகங்கள் நம் ஸ்ரீ ரேணுகா பதிப்பகத்தின் வடிவமைப்பில் ISBN எண்ணுடன் வெளியிடப்பட்டது என்பதை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி. தங்கள் நூலை வெளியிட நம் பதிப்பகத்தை தேர்ந்தெடுத்த எழுத்தாளர் பெருமக்கள் அனைவருக்கும் நன்றிகள் மற்றும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
2022ன் எழுத்துப் போட்டிகள்
நம் சஹானா இணைய இதழில் வழக்கம் போல் ஒவ்வொரு மாதமும் சிறந்த படைப்பு போட்டி நடத்தி பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டது. அது தவிர, அறிவியல் புனைவு சிறுகதைப் போட்டி, தீபாவளி சிறப்புப் போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட சில பரிசுகள், இதோ உங்கள் பார்வைக்கு… இது தவிர நிறைய புத்தக பரிசுகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இது எல்லாம் என் உழைப்பில் மட்டுமே சாத்தியமானது என கூற இயலாது, கூட்டு முயற்சி என்பதே உண்மை. பல எழுத்தாளர்கள், வாசகர்கள், இலக்கிய அமைப்புகள், அச்சகங்கள், ஊடகங்கள் என அனைவரின் பங்கும் இதில் உள்ளது. அதற்கு எல்லாருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.
சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட ஒரு உடல்நல குறைபாடு காரணமாய், தற்போது வேலைகளில் சற்றே சுணக்க நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் பூர்ண நலம் பெற்று முன் போல் செயல்படுவேன் என நம்புகிறேன்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வரும் 2023ம் ஆண்டு நம் அனைவருக்கும் சிறந்த ஒரு ஆண்டாக, மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் நிறைந்த ஒரு ஆண்டாக அமைய வாழ்த்துகிறோம். நன்றி
என்றும் நட்புடன்,
ஆசிரியர் – சஹானா இணைய இதழ் – contest@sahanamag.com
நிறுவனர் – ஸ்ரீ ரேணுகா பதிப்பகம் – srirenugapathippagam@gmail.com
வாழ்த்துகள் வாழ்க வளர்க