in ,

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 52) – ரேவதி பாலாஜி

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“போய் பேசு அமுதினி”

“நீயும் வா கவி”

“இவ்ளோ தூரம் வந்துட்டேன்.. இன்னும் எங்க வர்றது போய் பேசு”

“எனக்கு ஒரு மாதிரியா இருக்கு”

“போடி போய் பேசு”

வீட்டாரால் நிச்சயம் செய்யப்படும் திருமணம் எப்படி இருக்கும் என்று பக்கத்தில் இருந்து பார்த்தேன்.

பெண் பார்க்க அத்தை வீட்டார் கோவிலுக்கு வரச் சொன்னார்கள். நாங்களும் அமுதினியை அழைத்துக் கொண்டு வந்தோம்.

முதலில் வரவில்லை என்றவள் பின் பேசிப் பார்த்து பிடிக்கவில்லை என்றால் விட்டு விடுங்கள் என்கிற நிலைக்கு வந்தாள்.

“சேலை கட்டலாம்ல”

“அப்பா நான் சும்மா பாக்க தான் வரேன்.. பார்த்து பிடிக்கலைன்னா பிடிக்கலன்னு சொல்லிடுவேன்.. அதுக்கு சுடிதார் போட்டுட்டு வந்தாலே போதும். கட்டாயப்படுத்தக் கூடாது”

இப்படி பல விதிமுறைகளை எங்களிடம் கூறிவிட்டே வர சம்மதித்தாள்.

இரு வீட்டாரும் பார்த்தோம் பேசினோம். 

என்னிடம் அத்தை வந்து பேசினார். எத்தனை மாதம் என்று கேட்டுவிட்டு உடல்நிலையைப் பற்றி விசாரித்தார். என்னை நிற்க விடாமல் அமரச் செய்து அவ்வப்போது தண்ணீர் குடிக்கச் சொல்லி பார்த்துக்கொண்டார். என்னிடம் பேசிய வரையில் எனக்கு அத்தையை பிடித்தது.

மாப்பிள்ளையையும் அமுதினியையும் தனியாக பேசிவிட்டு வரச் சொன்னார்கள்.

அவர்கள் எழுந்து போகக் கூச்சப்பட்டதால் அமுதினிக்கு துணையாக நானும் தமிழ் மாமாவிற்கு துணையாக அவர் அண்ணாவும் உடன் சென்றோம்.

சிறிது தூரம் நடந்தப் பின் நாங்கள் அவர்களை தனியாக பேசச் சொல்லி வற்புறுத்தினோம்.

அந்த நேரத்தில் நான் அவர் அண்ணாவிடம் பேசினேன்.

“அமுதினி குழந்தை மாதிரி கல்யாணம்னு சொன்னதும் பயந்துட்டா”

“கரெக்ட் தான் அவங்களுக்கு டைம் வேணும்”

“ரொம்ப நல்ல குணம்.. அமைதியான பொண்ணு தேவையில்லாம பேச மாட்டா”

“அம்மா சொன்னாங்க.. தமிழும் அப்படி தான்.. எங்க வீட்லயே அவன்தான் சைலண்ட் டைப்”

“அவளுக்கு இன்னும் பெருசா வேலை அமைல.. இப்போதான் காலேஜ் முடிச்சிருக்கா..”

“அது பரவால்ல.. மேரேஜ் அப்புறம் வேலைக்கு போறதும் போகாததும் அவங்க இஷ்டம்”

பெரிய மாமாவின் மனைவியும் அந்நேரம் எங்கள் அருகில் வந்தார்.

“அத்தை மாமாலாம் எப்படி கா.. நல்லா பாத்துப்பாங்களா?” நேரடியாகவே அவரிடம் கேட்டேன்.

“அதெல்லாம் நல்லா பாத்துப்பாங்க.. தேவையில்லாம நம்மகிட்ட அதிகம் பேச மாட்டாங்க.. மேரேஜ் அப்புறம் நாங்களும் சென்னை வந்துட்டோம்.. அப்பப்ப அவங்க ஊருக்கு வருவாங்க இல்லை நாங்க இங்க வருவோம்.. அப்பவும் நல்லா பாத்துப்பாங்க.. அம்மா வீட்ல இருந்து இதை பண்ணணும் அதை பண்ணனும்னு எதுவுமே எதிர்பார்க்க மாட்டங்க.. நம்பி குடுங்க”

அவர் இப்படி கூறியது எனக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. ஆதியும் பெரிய மாமாவிடம் பேசினார். ஆதியின் முகத்திலும் செழுமை தெரிந்தது.

அமுதினி வந்தாள்.

“அதுக்குள்ள பேசிட்டியா.. இன்னும் கொஞ்ச நேரம் பேசலாம்ல”

“என்னடி பேசுறது?”

“உனக்கு என்னென்ன கேட்கணுமோ கேக்க வேண்டியது தான”

“எனக்கு என்ன கேக்கனும்னு தெரில”

“அப்போ என்னதாண்டி பேசுனீங்க”

“எங்க ஸ்கூல் படிச்சன்னு கேட்டாரு நானும் கேட்டேன்”

“அப்புறம் என்ன பேசுனீங்க?”

“எங்க காலேஜ் படிச்சீங்கன்னு நான் கேட்டேன்”

“அப்புறம்”

“அவ்ளோதான்டி பேசுனோம்.. சாமி கும்புட்டு வந்துட்டோம்”

‘இவள வெச்சிக்கிட்டு என்னதான் பண்றதோ’ மனதிற்குள் புலம்பினேன்.

“என்னம்மா புடிச்சிருக்கா.. பூ வெச்சர்லாமா?”

மாப்பிள்ளையின் உறவுக்கார பாட்டி கேட்டார்.

“அளவு ப்ளவுஸ் அமுதினிது குடுத்து விடுங்க நிச்சய சேலை நாங்க தெச்சி வாங்கணும்”

முடிவு எடுப்பதற்குள் அவர்கள் அவசரப்படுத்தினார்கள்.

“என்னடி அளவு ப்ளவுஸ்லாம் கேக்கறாங்க.. மொதல்ல வீட்டுக்கு போலாம் வாங்க” அமுதினி பயந்து போனாள்.

“கண்ணு நீங்க பேசுனீங்கல்ல பிடிச்சிருக்கா.. நீயும் ஆதி மாப்பிள்ளையும் முடிவு பண்ணி சொல்லுங்க.. அத்தை கேக்கறாங்க” என்னருகில் வந்து கேட்டார் அப்பா.

“அப்பா வீட்டுக்குப் போய்ட்டு சொல்றோம்ன்னு சொல்லுங்க”

“எதாவது ஒரு முடிவு சொல்லணும்ல அமுதினி உனக்கு என்ன தோணுது பிடிச்சிருக்கா?”

“தெரிலப்பா.. அக்காவும் மாமாவும் என்ன சொல்றாங்க கேளுங்க”

இந்தமுறை எங்கள் கையிலேயே முடிவை விட்டு விட்டாள் அமுதினி. ஆதியும் உணர்ச்சிப் பூர்வமாய் எங்களை பார்த்தார்.

“மாமா வீட்டுக்கு போயே முடிவு பண்ணலாம்.. நாளைக்கு சொல்றோம்னு சொல்லிட்டு வாங்க.. கிளம்பலாம்” ஆதியும் ஒரே பதிலாக கூறினார். அவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பினோம்.

“கவி நீதான் அவகிட்ட பொறுமையா என்னன்னு கேட்டுட்டு சொல்லணும்”

“என்னம்மா நான் மட்டும் என்ன பண்ணுவேன்”

“எங்ககிட்ட அவ சொல்ல மாட்டிக்குறா.. நீ பேசிட்டு சொல்லு”

“மொதல்ல நீங்கல்லாம் என்ன முடிவு பண்ணிருக்கீங்க?” ஆதி கேட்டார்.

“மாப்பிள்ளை உங்களுக்கும் பொண்ணுங்களுக்கும் சம்மதம்னா பண்ணிடலாம்”

“நீங்க சொல்லுங்க மாமா”

“எனக்கு ஆரம்பத்துல இருந்தே சம்மதம் தான் மாப்பிள்ளை.. எனக்கு இந்த இடம் ரொம்ப பிடிச்சிருக்கு.. அமுதினிய தமிழ் மாப்பிள்ளைக்கு குடுத்தா அவ நல்லாருப்பா.. தெரியாத இடத்துல எங்கயாவது தூரமா தரத்துக்கு உள்ளூரு தெரிஞ்ச இடம்.. மாப்பிள்ளை நல்ல வேலைல இருக்காரு.. சென்னைல கொஞ்ச நாள் இருந்துட்டு அப்புறம் சொந்த ஊருனு சேலம் தான வரப்போறாங்க”

“உனக்கு மா”

“எனக்கும் நல்ல இடமா தான் தெரியுது.. சென்னை போய் தனியா சமாளிச்சிப்பாளான்னு ஒரு பயம் மத்தபடி எல்லாம் பிடிச்சிருக்கு”

“இப்போ யாரை கேட்டாலும் சென்னை வேலை பெங்களூரு வேலை தான் அத்தை”

“ஆமா அதுவும் சரிதான் பா”

“அப்போ எல்லோருக்கும் பிடிச்சிருக்கா.. அமுதினி என்ன நினைக்கிறான்னு கேளு கவி”

கல்யாணம் வேண்டாம் என்று சொல்பவளிடம் என்னவென்று நான் பேசுவேன். அதையும் மீறிக் கேட்டால் உங்கள் இஷ்டம் என்கிறாள். எப்படி அதை நான் முடிவாக எடுத்துக் கொள்வது. இவர்களுக்கு என்னவென்று சொல்வது?

குழப்பத்துடன் அவளிடம் பேசப் போனேன்.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 51) – ரேவதி பாலாஜி

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 53) – ரேவதி பாலாஜி