in ,

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 27) – ரேவதி பாலாஜி

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“எப்படி இருக்க கவியினியாள்?”

“நல்லா இருக்கேன். குட்டி என்ன சொல்றா ராதா”

“அவனுக்கென்ன உதைக்க பழகிட்டான். அடி உதை தான் வயத்துக்குள்ள எனக்கு”

ராதா அப்படி கூறியதும் அந்த இன்பத்தை அனுபவிக்க காத்திருந்த எனக்கும் ஆசையாக இருந்தது. வயிற்றில் கை வைத்து தடவிக் கொடுத்தேன்.

“நீ சொன்ன ஜெயகாந்தன் புக் போட்டுட்டோம். வேறென்ன போட்றது”

“சுந்தர காண்டம்”

“படிச்சிட்டேன்டி.. போன மாசம் தான். நீயும் படி” ராதாவும் புத்தக விரும்பி கர்ப்பத்திற்கு முன்னும் அவள் புத்தகம் படிப்பதை வழக்கமாக வைத்திருந்தாள். அவளிடம் நானும் புத்தக அறிவுரை வாங்கியுள்ளேன்.

“எண்ணங்கள்னு ஒரு புக் இருக்கு.. நம்ம மனசுக்கு எவ்ளோ சக்தி இருக்கு. எண்ணங்கள் எப்படியெல்லாம் மாற்றம் பண்ணுதுனு ரொம்ப நல்லா எழுதிருப்பாங்க.. அதை ட்ரை பண்ணி பாரு”

“ஹான் ஓகே டி.. அப்புறம்”

“கதைகள் படி.. நீதி கதைகள் அப்படி”

“சாணக்யா புக் போட்டோம். ஆனா ரொம்ப அறிவுரை சொல்ற மாதிரியும் இருக்கு.. நீதி கதைகள் மாதிரி வேற எதாவது போடறேன்”

“பாரு டி.. அப்புறம் வாழ்க்கை வரலாறு படிக்கலாம்”

“லீடர்ஸ் அப்படி சொல்றியா”

“எப்படி வேணா இருக்கலாம்.. அப்துல்கலாம், விவேகானந்தர், இல்லை உனக்கு பிடிச்ச யாராவது ஒரு பர்சன்.. அவங்க லைப்ல எவ்ளோ கஷ்டங்களை தாண்டி வந்துருப்பாங்க.. அது இந்த டைம்ல படிக்க நல்லாருக்கும் நினைக்கிறேன்”

“கண்டிப்பா பாக்கறேன்.. வேற நாவல் மாதிரி சொல்லு”

“வைரமுத்து நாவல் கூட நல்லாருக்கும்.. ஆனா கள்ளிக்காட்டு இதிகாசம் சோகமான எண்டிங்.. கருவாச்சி காவியமும் கஷ்டமா இருக்கும். தண்ணீர் தேசம் நல்லாருக்கும் அனுபவிச்சு படிக்கலாம் நிறைய இடத்துல”

“அப்படியா..”

“ஆமா.. நல்ல நாவல் இருக்கு.. கொஞ்சம் லவ் கலந்து காமெடி கலந்து கூட படிக்கலாம்ல”

“லவ் புக் வேணாம்னு செல்வா சொல்றான்”

“ஹாஹா.. சரி நானும் பாத்துட்டு சொல்றேன்”

“புக்லாம் படிச்சிட்டு தான் இருந்தேன். வேலைக்கு போனதுல இருந்து கொஞ்சம் புக் ரீடிங் கொறஞ்சிடுச்சி கவி”

“ஆமா.. எனக்கும் அதே தான். நிறைய நல்ல நாவல்கள் இருக்கு.. படிக்கணும்.. டெலிவரி அப்புறம்”

“படிப்போம்”

“டெய்லி பேப்பர்ல கூட வரும்ல பெண்கள் மலர் அதெல்லாம் கூட நிறைய நல்ல விஷயம் இருக்கு. அதெல்லாம் கூட படிக்கலாம். குட்டி குட்டி கதை இருக்கும்”

“நல்லாருக்கும் படிப்பேன் நானும்.. நிறைய டிப்ஸ் குறிப்பு கூட இருக்கும்”

“குட்டி குட்டி கேம்லாம் இருக்கும் அதும் நல்லாருக்கும்”

“பொன்னியின் செல்வன் மாதிரி வரலாற்று நாவல் எதாவது சொல்லேன் கவி”

“வேல்பாரி நல்லாருக்கும். ஆனா எனக்கு என்னவோ அந்த புக் படிச்சி முடிக்க முடில.. ரெண்டு மூணு டைம் ஸ்டார்ட் பண்ணேன் முடில. வேள்பாரி குணங்கள் ஆச்சர்யமா இருக்கும். ரம்மியமான நிறைய வார்த்தைகள் இருக்கும். பேரே நல்லாருக்கும். பாரியோட மனைவி பேரு ஆதினி, மகள்கள் அங்கவை, சங்கவை. ரொம்ப உருக்கமான அழகான காலச் சூழல் கொண்ட நாவல். ஆனால் காதல் காமம் இருக்கும்”

“அப்படியா.. மத்த புக் படிச்சிட்டு இத பாக்கறேன்.. இல்லனா கூட டெலிவரி அப்புறம் படிக்கிறேன்”

“கடவுள் சார்ந்த புத்தகங்கள் கூட படிக்கலாம் ராதா. திருவாசகம், நாயன்மார்கள் கதைகள்”

“என்ன ஆன்மீகத்துக்குள்ள போய்ட்ட கவியினியாள்”

“அதெல்லாம் வேற உணர்வு. மனசு ரொம்ப சந்தோசமா இருக்கும்.. பூசலார் தெரியுமா.. சிவனுக்கு கோயில் கட்ட நினைச்சு அவர்கிட்ட காசு இல்லாததால மனசுலயே கோவில் கட்டி கும்பாபிஷேகம் பன்றாரு.. அதுக்கு சிவன் வருவாரு. அதே மாதிரி கண்ணப்பர் சிவன் கண்ல இருந்து இரத்தம் வருதுன்னு தன் ரெண்டு கண்களையும் பெயர்த்து சிவனுக்கு கொடுத்தவர். இந்த கதைகள்லாம் படிக்கும் போது ஒருவித ஞானம் வரும். எத்தனையோ கதைகள் கண்ல இருந்து கண்ணீர் வர வெச்சிருக்கு”

“நீ சொல்றத கேக்கவே நல்லாருக்கு. மனசு லேசாகுது. பாக்கறேன் இந்த கதைகள. நீ இவ்ளோ ரசிச்சு சொல்றதுல ஒரு புக் எனக்கும் நியாபகம் வருது”

“என்ன ராதா”

“உடையார்”

“நாவலா”

“ஆமா.. பாலகுமாரன் எழுதுனது.. பொன்னியின் செல்வன் தொடர்ச்சி மாதிரி இருக்கும். கதை என்னன்னா ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவில்ல எப்படி கட்டுனாரு. அதான் கதை”

“கோவில் கட்ற கதையா”

“ஆமா.. ஆனால் அந்த நாவல் படிக்கும்போது அந்த காலத்துக்கே போயிடுவோம். ஆறு பாகம். ரொம்ப அழகா ஆழமா ஒவ்வொன்னும் விவரிச்சிருப்பாரு. எப்படி கோவில் உருவாச்சு.. யாரு கட்டுனா.. எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு கட்டுனாங்க.. சிவன் பத்தின ஆன்மீக விஷயங்கள் கூட இருக்கும். நீ சொல்ற ஞானம் தர கதைகள் குட்டி குட்டியா வரும். நல்லாருக்கும் எல்லாம் கலந்த உணர்வும் வரும். எல்லாத்தையும் தாண்டி உனக்கு இது பிடிக்கும். நல்ல புக் படிச்சி பாரு”

“நான் மாசமாகறதுக்கு முன்னாடி கடைசியா போன கோவில் தஞ்சை பெரிய கோவில். அங்க போய்ட்டு வந்து ஒரு வாரத்துலயே டெஸ்ட் பண்ணேன். பாசிட்டிவ்.. இப்போ அந்த கோவில் எப்படி கட்டுனாங்கன்னு படிக்கப் போறேன். சூப்பர்ல”

“அதிசயமா இருக்குல்ல.. ஒன்னோட ஒன்னு கனெக்ட் ஆகுதுல கவி”

“ஆமா ராதா”

“நீ ப்ரெக்னன்சி புக் எதாவது படிச்சியா கவி.. இல்லை கிளாஸ் எதாவது அட்டென்ட் பண்ணியா”

“இல்லையே.. கிளாஸ்சும் அட்டென்ட் பண்ணல.. புக்கும் படிக்கல”

“நான் புக் படிச்சேன். எல்லாம் நமக்கு தெரிஞ்ச விஷயம் தான் இருந்தது. ஒன்னு ரெண்டு விஷயம் புதுசா இருந்தது. வேணுனா ட்ரை பண்ணி பாரு”

“ரெண்டு மூணு மாசம் கழிச்சி படிக்கிறேன்”

“தோன்றப்ப படி.. கிளாஸ் அட்டென்ட் பண்ணேன். அதுவும் நமக்கு தெரிஞ்சது தான். இந்த டைம்ல ஹாப்பியா இருக்கணும். நிறைய கத்துக்கணும். பேபி கிட்ட பேசணும். ஸ்ட்ரெஸ் ஆகக் கூடாது அதெல்லாம் சொன்னாங்க.. அப்புறம் ஹெல்த்தியா சாப்பிடணும்னு சொல்லுவாங்க ஆனால் அவங்க சொல்ற பழம் காய்லாம் இங்க விளையாததா இருக்கும். நமக்கு நம்ம ஊர் உணவே சிறந்தது. குங்குமப் பூக் கூட நம்மை உணவு இல்லை. அதால பேபி கலரும் ஆகாது. ஸ்ட்ரென்த்காக தான். அதுவும் நம்மை சாப்பாட்டுலயே கிடைக்கும் கவி”

“கரெக்ட்டா சொல்ற ராதா”

“டெலிவரி பத்தின அறிவு ரொம்ப முக்கியமாம். அந்த கிளாஸ் அட்டென்ட் பண்ணலாம்” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அங்கே யாரோ வருவது போல் சத்தம் கேட்டது.

“கெஸ்ட் வந்துருக்காங்க கவி.. கூப்பட்றேன் இரு” என்றவள் இணைப்பைத் துண்டித்தாள்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். கர்ப்பத்தை பற்றியும் புத்தகங்களை பற்றியும் பேசவா விஷயங்கள் இல்லை. அள்ள அள்ள வியக்கத்தக்க பல அதிசயங்களை தன்னுள் புதைத்து வைத்திருக்கின்றதே இரண்டும். அவ்வளவு சீக்கிரம் இரண்டையும் பற்றி பேசி தீர்த்து விட முடியுமா என்ன!

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 26) – ரேவதி பாலாஜி

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 28) – ரேவதி பாலாஜி