இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
துள்ளிக் குதிக்காத குறையா திரும்பி ஓடின அமலா, தன் தோழிகளை பாத்து ”ஏய் லூஸ் பக்கிங்களா வினீத்குமார் வர ஒத்துக்கிட்டாண்டி”
சமோசாவும் வாயுமா இருந்த அனைவரும் கோரசாக, ”அப்பழியா, கங்ளாசுளேசன்டி” ன்னார்கள்.
அடுத்து பட்டிமன்ற பேச்சாளர் ஶ்ரீரங்கனும் வந்து சிறப்புரையாற்ற ஒப்புக் கொண்டார். கவர்ச்சியான அழைப்பு பத்திரிக்கைகள் அடிக்கப் பட்டன. கல்லூரி சார்பில் ஒரு ஆண் அட்மின் ஆபீசர் வினீத்தை நேரில் சந்தித்து பத்திரிக்கை கொடுத்து விட்டு வந்தார். வினீத் தன் தாயாரையும் அழைத்துக் கொண்டு விழாவுக்கு வருவதாக வாக்களித்தான். ஶ்ரீரங்கனும் முறையாக அழைக்கப்பட்டார்.
ராஜமாணிக்கத்தின் கை வண்ணத்தில் “சினம்” நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து முடியும் தருவாயில் இருந்தது. தீபாவளிக்கு கண்டிப்பாய் தணிக்கை முடிந்து வந்து விடும் என அருணாசலம் செட்டியாருக்கு உறுதி அளிக்கப்பட்டது.
செட்டியாரும் படத்துக்காக சுணக்கமில்லாமல் பணம் செலவு செய்தார். நெதர்லாண்ட் படப்பிடிப்பு ரஷ் பாத்து செட்டியாருக்கு பெரும் நம்பிக்கை வந்தது. வெளிப்படையாக டைரக்டர் ராஜமாணிக்கத்தை தாராளமாக பாராட்டினார்.படப்பிடிப்பு பூராவுமாக முடிந்து எடிட்டிங், டப்பிங் வேலைகள் துரிதமாக நடந்து வந்தன.
விழுப்புரம் அரசு பெண்கள் கல்லூரி கல்சுரல் விழா பத்திரிக்கை கண்ணில்பட்டது வினீத்துக்கு. இன்னும் மூன்று நாட்கள் இருக்கு. அந்த பெண் அமலாவின் முகம் கண் முன்னே வந்தது. சினிமா இண்டஸ்ட்ரீயில் எத்தனையோ பெண்கள் கண்ணில் பட்டிருந்தாலும், இந்த அமலா எப்படி கவர்கிறாள்.ஒன்றும் புரியவில்லை
அம்மாவிடம் நீ தனியா வீட்ல கஷ்டப்படறயேம்மா’ன்னான்.
அம்மாவாச்சே பையனை தெரியாதா, யாருடா பொண்ணுன்னா. அம்மாவிடம் அமலாவை பத்தி சொன்னான். வெள்ளிக்கிழமை விழுப்புரம் போறப்ப உன்னையும் கூட்டிட்டு போறேன் அவங்க குடும்பத்தார்கிட்ட பேசும்மா’ன்னான்.
வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குதான் கல்லூரி விழா. காலை ஒன்பது மணிக்கே வினீத்குமாரும், அவன் தாயாரும் தங்கள் சின்ன காரில் விழுப்புரம் பறப்பட்டனர். டிரவர் ஷண்முகம்தான் காரை ஓட்டி வந்தான். மதியம் 12.45 மணிக்கு விழுப்புரம். நேரே அந்த ராசி கல்யாண மண்டபத்தை அடைந்தார்கள், அங்கே கல்பேஷை சந்தித்தான் வினீத். கல்பேஷுக்கு ஆச்சர்யம் ஒரு ஹீரோ நடிகன் தன்னை தேடி வந்ததில்.
வினீத் தயங்காமல், தான் அவனுடைய தங்கையை விரும்புவதை சொன்னான், பெண் கேக்க தன் தாயாரையும் அழைத்து வந்திருப்பதை தெரிவித்தான். கல்பேஷ் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. உடனே தன் தந்தைக்கு தொலை பேசினான். கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி நடத்தி வரும் தாமோதரனுக்கும் அதிர்ச்சி.
“சரி வீட்டுக்கு ரெண்டு பேரையும் கூட்டிட்டு வா நான் உடனே வீட்டுக்கு போய், அம்மாவை, அமலாவை தயாராகச் சொல்றேன்”
வினீத்திடம், “அப்பா உங்களை வீட்டுக்கு கூட்டிட்டு வரச் சொன்னார்”
போகும் போதே வழியில் ஒரு ரெஸ்டாரண்டில் காபி சாப்பிட்டு விட்டு பிரெஷ்அப் ஆனவுடன் அவுட்ஸ்கர்ட்டில் இருந்த அந்த அடக்கமான பங்களா வாசலில் கார் நின்றது. தாமோதரன் வெளியே வந்து வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். அவருடைய மனைவியும், வினீத்தையும் அவன் தாயாரையும் வரவேற்று ஹாலில் வசதியான இருக்கைகளில் அமர வைக்கப்பட்டனர்.
உள்ளே அமலா தன் அறையில் இன்னும் இந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அவளால் நம்பவே முடியலை, திரும்ப கண்ணாடியை பார்த்துக் கொண்டாள், அப்படி ஒண்ணும் நாம் அவ்வளவு அழகில்லையே என்னை ஏன் தேர்ந்தெடுத்தான் இந்த வினீத்.
அம்மாவோ அப்பாவோ கூப்பிடும் வரை வெளியே போகக் கூடாதுனு தன் அறையிலேயே இருந்தாள். அம்மா உள்ளே வந்து, “ஏய் அம்மு இந்த பலகாரத் தட்டை போய் ஹாலில் அவர்களுக்கு கொடுத்துட்டு அந்த அம்மா கால்ல விழுந்து நமஸ்காரம் பண்ணு”
அமலாவுக்கு அதிர்ச்சி இன்னும் நீங்கலை. வழக்கம் இல்லாத பட்டுப்புடவை கட்டில் சற்றே தடுமாறி ஹாலுக்கு வந்தாள்.
வினீத்தை நிமிர்ந்து பாக்க தைரியமில்லை. சென்டர் டேபிளில் பலகாரத் தட்டை வைத்து விட்டு வினீத்தின் தாயார் காலில் விழுந்தாள்.
அவள் தோளைத் தொட்டு வினீத்தோட அம்மா பக்கத்தில் அமர வைத்துக் கொண்டாள். அழகும் அடக்கமும் நிறைந்த அமலாவை மிக பிடித்து விட்டது அவருக்கு.
தாமோதரன் அமலாவை பாத்து, ”அம்மு வினீத்துக்கு வீட்டை சுத்திக் காட்டு”
தயக்கத்துடன் அமலா எழுந்தாள், வெட்கம் மேலிட வினீத்தை பார்த்தாள். வினீத் எழுந்து அவளுடன் நடந்தான். தாமோதரனும், அவர் மனைவியும் ஜோடிப் பொருத்தம் பாத்து ரசித்தனர்.
இது எங்க பூஜை ரூம், இது என் பேரண்ட்ஸ் ரூம், இந்தப் பக்கம் சமையலறை, பின்னால கிணறு தோட்டம் ஒப்பித்தாள் அமலா.
சட்டென அவள் கையை பிடித்த வினீத், ”வீடு காட்டுன்னா கைட் வேலை இல்லை. நமக்கு தனியா பேச கொடுக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பம்., இப்ப சொல்லு என்னை பிடிச்சிருக்கா”
“போங்க பிடிக்கலைன்னா இப்படி, உங்க கூட நடக்க மாட்டேன்.”
“குட், இது ஒரு ரிசர்வேஷன் மாதிரிதான், தீபாவளிக்கு என் ரெண்டாவது படம் வருது அதுக்கப்பறம் கல்யாணத்துக்கு தேதி வச்சிக்கலாம் சரியா”
“எனக்கும் ஒண்ணும் அவசரமில்லை இதெல்லாம் அப்பா கிட்ட பேசிக்கங்க”
“சரி வா போகலாம்”
“மாடில என் ரூம், அண்ணன் ரூம் கெஸ்ட் ரூம் இருக்கு பாக்க வேண்டாமா”
“வேண்டாம், அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம், இப்ப எனக்கு பசிக்குது”
“அச்சோ லன்ச்சே சாப்பிடலையா”
“ஆமாம் நேரே மெட்ராஸ்ல இருந்து வரோம் காலைல டிபன் சாப்பிட்டது, அம்மாக்கு பசிக்கும், சுகர் வேற இருக்கு”
“வாங்க போலாம் சாப்பிட”
“அம்மா லன்ச் வைம்மா டேபிள்ல, சாப்பிடலையாம் இன்னும்”
கல்யாணத்துக்கு முன்னால பெண் வீட்டில் சாப்பிட மாட்டோம் என்ற பார்மாலிடி பார்க்காமல் சாப்பிட்டார்கள்.
அமலா 4 மணிக்கு கல்லூரி போயிட்டா கல்சுரல் விழாவுக்கு.
வினீத், அவன் தாயார், அமலாவோட தாயார், தகப்பனார், சகோதரன் அனைவரும் தாமோதரனின் பெரிய காரில் 4.50 வாக்கில் கல்லூரி புறப்பட்டார்கள் பேசிக் கொண்டே தீபாவளிக்கு அப்பறம் கல்யாணப் பேச்சு என தீர்மானம் செய்தனர். வினீத்தை அனைவருக்கும் பிடித்தது.
சரியாக ஐந்து மணிக்கு கல்லூரி விழாவில் கலந்து கொண்ட வினீத் நேரத்தில் சென்னை திரும்பணும்னு 15 நிமிடத்தில் கிளம்பி விட்டான். அமலா கண்ணினாலயே விடை கொடுத்தாள்.
காரில் சென்னை திரும்பும் போது வினீத், ”அம்மா எப்படிம்மா பொண்ணு ஓகேயா”
“பத்தரைமாத்து தங்கம்டா என் மருமக”
வினீத் சந்தோஷமாய் சிரித்தான்.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings