இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
திரும்ப அந்த வெள்ளை யூனிபார்ம் வெயிட்டர் அமைதியாக எதிரில் வந்து நின்றான். முதலில் எதிரும் புதிருமாக உக்கார்ந்திருந்த ஜோடி இடம் மாறி பக்கம் பக்கம் அமர்ந்ததை கண்டு கொள்ளாத மாதிரி நின்றான். (இந்த மாதிரி எத்தனை ஜோடிகளை நாங்க பாத்திருப்போம்ன்ற மாதிரி)
மோகனன் ”ஜஸ்ட் இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு எங்க ஆர்டரை கொண்டு வரலாம், திரும்ப கேட்க வேண்டியதில்லை”
“மேடம் யூ நீட் கேரி பேக் மேடம்?” பிளவர் பொக்கேயை பாத்த வண்ணம் கேட்டான். ஒரு நிமிஷம் கேலி செய்கிறானோ என அவன் முகத்தை பாத்தாள்.அவன் முகம் உணர்ச்சியற்று காணப் பட்டது.
“ஓகே, நாங்க போகும் போது கொண்டு வாங்க”
வெயிட்டர் சத்தமின்றி மிதந்து போனான்.
மோகனன்,”பதிலுக்காக காத்திருக்கேன்”
கொஞ்ச நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தாள் தேவிஶ்ரீ “என்னைப் பற்றி ஒன்றும் தெரியாதே உனக்கு”
“பழைய கதைகள் பற்றி கவலையில்லை”
“அப்ப சரி பழைய கதைகளை நோண்டி டார்ச்சர் பண்ண மாட்டேன்னா எனக்கு ஓகே”
இப்ப அந்த அரை அடி தூரம் போச்சு,தேவியின் இடது கையுடன் மோகனனின் வலது கை இணைந்து கொண்டது. “ஓகேனு சொன்னாப் பத்தாது, என்னை கல்யாணம் பண்ணிப்பயா”
தேவியின் கண் கலங்கியது ,”என்னை இப்படி யாரும் கேட்டதில்லை,என் ஃபார்ம் ஹவுசுக்கு வரயா, ஹோட்டல்ல ரூம் புக் பண்ணவானுதான் கேப்பாங்க, எனக்கு பிரச்சனை இல்லை அம்மாவை எதுத்துண்டு வந்துடுவேன். நீதான் தீர்மானிக்கணும் என்னை பத்தி தெரிஞ்சும் உன் குடும்பம் கிட்ட பெர்மிஷன் வாங்கி கல்யாணம் பண்ற தைரியம் இருக்கா உனக்கு”
“கண்டிப்பா எனக்கும் அம்மை மட்டும்தான், என் ஆசைக்கு தடை சொல்ல மாட்டாங்க”
இப்ப வெயிட்டர் திரும்ப வந்தான் ஒரு பெரிய டிரேயில் இரண்டு நுரை ததும்பும் காஃபி, ஒரு பீங்கான் பிளேட்டில் மசாலா கேஷ்யூ, சக்கரை பவுச்கள், ஸ்பூன்கள் சகிதம்.
சட்டென இணைந்த கைகள் பிரிந்தன, “சாரி சார், சாரி மேடம்னு” வெயிட்டர் நகர்ந்து போனான்.
அனிச்சையாக மீண்டும் கைகள் இணைந்தன.
கொஞ்ச நேரம் அமைதி, இப்ப தேவி அவன் கைகளை லேசாக அழுத்தி, ”உன்னைப் பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாதே”
“பெரிசா ஒண்ணுமில்லை பிறந்து வளந்தது பூரா ஆலப்புழா, திருவனந்தபுரத்துல பில்ம் டெக்னாலஜி டிப்ளமா. அச்சன் இறந்து 3 வருஷம் ஆச்சு. ஆலப்புழால ஒரு சின்ன வீடு, கொஞ்சம் தென்னந்தோப்பு இதுதான் சொத்து. அப்பா கவர்ன்பெண்ட் ஜாப், அதனால அம்மைக்கு பென்ஷன் வருது.”
“சரி, எனக்கு இந்த சினிமால நடிக்கறது பிடிக்கலை. கைல உள்ள ரெண்டு படம் முடிஞ்ச உடனே நடிக்க மாட்டேன். என்னை கல்யாணம் பண்ணி காப்பாத்துவயா.”
“இதென்ன கேள்வி கண்டிப்பா என் உயிரா உன்னைப் பாத்துப்பேன்”
சட்டென தேவி அவன் கழுத்தில் கரங்களை போட்டு அணைத்துக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள். குரல் கம்ம நடுங்கும் குரலில் ”எனக்கு ஆண்கள் தெரியும்,அவர்கள் தேவை பெண்ணிடம் என்ன என்று தெரியும், செக்ஸ் தெரியும் ஆனால் காதல் என்றால் என்னனு இப்பதான் லேசா தெரியுது”.
“எனக்கு உன்னைப் பாத்தவுடனேயே நீதான் என் மனைவி எனத் தீர்மானம் வந்துட்டது, பெரிய நடிகை என்னை எப்படி ஒத்துப்பானு ஒரு கணம் கூட யோசிக்கலை”
“அடேயப்பாடியோ, நான் நோ சொல்லியிருந்தா என்ன பண்ணுவயாம்”
“அப்படி ஒரு டவுட்டே வரலையே”
“நான் உன்னை விட பெரியவ, உங்க அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?”
“ஒரு சீக்ரெட் சொல்லட்டா, என் அம்மை அச்சனை விட மூணு வயசு பெரிசு”
“அப்ப உன் அம்மாதான் வீட்ல பாஸா?”
“ஏய் எதுக்கு கேக்கறே கல்யாணத்துக்கு அப்பறம் பாஸிங் பண்ணலாம்னு பாக்கறயா?”
“அது என் பர்த்ரைட், உன்னை விட சின்னவளா இருந்தாலும் நான்தான் பாஸ்”
“ஓகே பாஸ் ஐ சரண்டர்”
தேவி திரும்பவும் ஒரு தடவை அவனை ஹக் பண்ணி கன்னத்தில் முத்தமிட்டாள்.”இந்த தாடியை எடுத்துடுடா, ரொம்ப குத்துது”
“தாடி நல்லா இல்லையா?”
“அதில்லை நெருக்கமா இருக்கறப்ப தொந்தரவு”
“அப்ப எடுத்துட்டு வந்தா போச்சு”
“சீ,சீ, இப்ப வேண்டாம் நம்ம கல்யாணத்துக்கு அப்பறம் எடுத்துடு”
“அது வரை?”
“அது வரை லவ் பண்ணுவோம் ஐ மீன் நிறைய பேசுவோம், கை கோத்து ஊரை சுத்துவோம்”
“நான் உன் அம்மையை பாத்திருக்கேன், நீயும் என் அம்மையை ஒரு தடவை வந்து பாக்கணும்”
“கண்டிப்பா வரேன் நானும் என்னோட அம்மாயி அம்மாவை நோக்கணுமே”
“செரி அப்ப, இப்ப கிளம்பலாம் 500 ரூபா பில்லுக்கு ரொம்ப நேரம் உக்காந்துட்டோம்” பில் செட்டில் பண்ணிட்டு இப்ப தைரியமா கை கோர்த்து வெளியேறினார்கள்.
“டேய் தாடிப் பையா இத்தனை வருஷத்துல இன்னிக்குதான் மனசு நிறைய சந்தோஷமா இருக்கேன் தெரியுமா”
“நானும்தான்”
“போடா, காப்பி கேட்”
சோடா பாட்டில் கண்ணாடி போட்டு ஒரு ஜோல்னா பை, பைஜாமா குர்த்தாவுடன் ஹோட்டலுக்கு வெளியே காத்திருந்த தின முரசு பத்திரிகை நிருபர் முருகன் ,அன்றைய ஸ்கூப் செய்தியை சென்னை பத்திரிகை ஆபீசுக்கு அவசரமாக அனுப்பினார்.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings