in , ,

விசித்திர உலகம் (பகுதி 12) – சுஶ்ரீ

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

விசாகப்பட்டிணம், ஜீவன், தேவிஶ்ரீன் ‘மா இண்டி கோடலு’ விறுவிறுப்பாய் படமாகியது. நாயுடுகாரு தேவிஶ்ரீயை சரியாக பயன்படுத்திக் கொண்டாரா, இல்லை தேவிஶ்ரீன் தாயார், விரைவாக சொத்து சேர்த்தாரா என்பது அவர்களுக்குதான் தெரியும். இந்த தீபாவளிக்கு ‘மா இன்டி கோடலு’ திரைக்கு வர மும்மரமாக தயாராகிக் கொண்டிருந்தது. படப்பிடிப்பு ராஜஸ்தானின் கோட்டைகளில் படமாக்கப் பட்டது. ஜெய்பூரில் அந்த மேஜிக் நடந்தே விட்டது. ஒரு வேளை நாயுடுகாரு, தேவிஶ்ரீன் தாயார் படக்குழுவோடு ராஜஸ்தான் வந்திருந்தால் காலத்தின் கோலம் வேறு மாதிரி இருந்திருக்கலாம்.

ஆந்திராவின் குண்டூர் பக்கத்தில் மூணரை ஏக்கர் நிலத்தில் மாமரங்களோடு விலைக்கு வந்தது,தேவிஶ்ரீன் தாயார் அதை விலைக்கு வாங்கி ரிஜிஸ்டர் செய்யும் தீவிரத்தால், தேவிஶ்ரீயுடன் படப்பிடிப்புக்கு ராஜஸ்தான் செல்ல இயலவில்லை. நாயுடுகாரு தன் டிரைவர் ஒரு விபத்தை ஏற்படுத்தி அதில் ஒரு 16 வயது சிறுவன் சைக்கிளில் காருடன் மோதியதால் ,வழக்கு ஹைதரபாத் கோர்ட்டில்.

சிறுவன் கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் சீரியசாக இருப்பதால், நாயுடுகாரு ஹைதராபாத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் ராஜஸ்தான் படப்பிடிப்புக்கு போக இயலவில்லை. இவைகள்தான் தெய்வத்தின் திருவிளையாட்டு. எப்போதும் தாயார், இல்லை நாயுடுருகாரு, ரூபன் இவர்கள் கட்டுப்பாட்டிலயே இருந்தால் தேவிஶ்ரீன் மனம் கூண்டுப் பறவையாக இருந்தது.

இந்த ராஜஸ்தானில் 15 நாள் படப்பிடிப்பில், சுதந்திர மூச்சு விட முடிந்தது, தனக்கு பிடித்த சாகலேட் ஐஸ்கிரீம் தினமும் சாப்பிட்டாள், தயிர்சாதம், பாசந்தி, ஸ்வீட் லஸ்ஸி சாப்பிட முடிந்தது.

இது போக ரொமாண்டிக் லொகேஷனில் படம் செய்த போது அந்த மலையாள உதவி டைரக்டரின் வலையில் விழுந்தாள். மோகனன் ஒரு கம்பீரமான ஆண்மை ததும்பும் இளைஞன்.தேவிஶ்ரீன் அழகில் மயங்கினான்.அவள் தங்கியிருந்த ஸ்டார் ஹோட்டலின் லாபியில், ரெஸ்டாரண்டில், காபி ஷாப் வாசலில் பொறுமையாக காத்திருந்தான்.

ரெண்டு நாளாக ஷூட்டிங் நேரம் போக மீதி நேரங்களில் மோகனன் தொடர்ந்து கண்களில் படுவதை கவனித்தாள் தேவிஶ்ரீ, மூன்றாவது நாள் காபி ஷாப் போன போது வாசலில் அனிச்சையாக அவனைத் தேடி கண்களை ஓட்டினாள்.காபி ஷாப்பை ஒட்டிய ஸ்விமிங் பூலில் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்த வண்ணம் அவள் பார்வையை சந்தித்த மோகனன் கையை உயர்த்தினான்.

ஒரு சிறு புன்னகை முகத்திலாட கையசைத்து வாவென்று கை காட்டினாள். அருகில் வந்த மோகனனை “என்ன 3 நாளா சுத்தி சுத்தி வரே,வா காபி சாப்பிடலாம்”

பதில் ஒன்றும் சொல்லாம மோகனன் இணைந்து நடந்தான். இவர்கள் வருகையை உள்ளே இருந்தவர்கள் ஒரு ஆர்வத்துடன் பார்த்தனர்.

ஒரு மூலையில் இருட்டான சவுகரிய சோஃபாவில் அமர்ந்தனர் இருவரும். தேவிஶ்ரீ, ”சொல்லு மூணு நாளா ஏன் சுத்தி சுத்தி வரே”

வெள்ளை உடை வெயிட்டர் “ யுவர் ஆர்டர் சார்”

மோகனன் “டூ பிளாட் ஒயிட், ஒன் பிளேட் மசாலா காஜு, அரை மணி நேரத்துக்கு அப்பறம், இஸ் இட் ஓகே வித்யூ தேவி?”

தேவிஶ்ரீ ஒரு குறு நகையுடன் , “ஆஸ் யூ விஷ்”

வெயிட்டர் போனவுடன், ”இப்ப சொல்லு பதில், பேர் சொல்லி வேற கூப்பிடறே”

“வித் யுவர் பெர்மிஷன், ஷல் ஐ கால்யூ தேவி”

கலகலவென சிரித்த தேவிஶ்ரீ, “ஏற்கனவே அதான் பண்றே, எதுக்கு வெட்டி டிராமா”

“ஆமாம் இல்லை இந்த 4 நாளா உனக்கு லவ் சீன் பிராம்ப்ட் பண்ணி பண்ணி உன் மேல ஒரு இது வந்துட்டது”

“எதுவாம்”

“உண்மைலயே தெரியாதா”

“ம்ஹூம், தெரியாமதானே கேக்கறேன்.”

 “அதுதான் ஒரு எலிஜிபிள் பேச்சுலருக்கு ஒரு அழகான பெண்ணை பாத்தா வரது”

“நேரா பேசற பழக்கம் கிடையாதா, உன் வயசு என்ன? இதுக்கு முன்னால யாராவது கேர்ல் பிரண்ட் உண்டா?”

“நான் டிகிரி முடிச்சு நேரா சினிமா லைனுக்கு வந்துட்டேன். எனக்கு வயசு 23. நோ எனக்கு பெண்கள்னா கூச்சம், உன் கிட்டதான் இப்ப பேசறேன்”

“சரி என்னைப் பத்தி சொல்றேன், நான் உன்னை விட பெரியவ, நான் வர்ஜின் இல்லை”

“அந்த தமிழ் நடிகர், ரூபன்தானே?”

“ஆமாம் அவனும்தான், ஆனா இப்ப பிரேக் அப் ஆயிடுச்சு”

“கொஞ்சம் இங்கேயே உக்காந்திரு தேவி இதோ வரேன்”

“என்ன ஒன் பாத்ரூமா?”

 புன்னகையுடன்,” இரு வரேன், ஒரு சின்ன வேலை”

தேவிஶ்ரீ தனக்குள் சிரித்துக் கொண்டாள், இந்த பையனுக்குதான் எவ்வளவு கூச்சம், இண்டஸ்ட்ரியில் சான்ஸ் வேணும்னா கண்ட பசங்கள்லாம் படுக்க வருவயானு தைரியமா கேக்கறானுக.

ஐந்தே நிமிஷத்தில் மோகனன் திரும்பி வந்தான், கை நிறைய ஒரு பல வண்ண பொக்கேயுடன்.நேரே வந்து அந்த பொக்கேயை தேவிஶ்ரீன் கையில் கொடுத்து “வில் யூ பி மை பெட்டர் ஹாப்”னு கேட்டான்.

முதல் முறையாக ஒரு முழு ஆண் பிள்ளையை மோகனனில் பார்த்தாள் தேவி. மனம் நிறைந்த புன்னகையுடன் மலர்க் கொத்தை வாங்கிக் கொண்டாள்.

ஆர்வத்துடன் அவள் முகத்தையே பார்த்த வண்ணம் நின்று கொண்டே இருந்தான்.

அவனை நிமிர்ந்து பாத்த தேவி சற்றே நகர்ந்து தன் பக்கத்தில் இடம் கொடுத்தாள்.

தயக்கத்துடன் அருகே அமர்ந்தான் அரையடி இடைவெளி விட்டு.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விசித்திர உலகம் (பகுதி 11) – சுஶ்ரீ

    விசித்திர உலகம் (பகுதி 13) – சுஶ்ரீ