2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
இந்த முறையானது வெற்றி பெறுவாயா?
இல்லா இதுவும் ஒன்று,ரெண்டு மார்க்கில் போயிருச்சுன்னு…. சொல்லியா? என்று நக்கலா கேட்டாள் “சுதா”
அதற்கு பதில் பேசாது யோசித்துப்படியே தனியறைக்குள் நுழைந்து தலையில் கை வைத்த படியே “ வழக்கமான பேசும் வரிகளை உடைத்து எறிய வேண்டும்”…..
இரவுபகல் பாராது கண் விழித்து படித்துக் கொண்டிருந்தான் “விஜய்”….
இருந்தாலும்,மனதில் சிறு தடுமாற்றம் எல்லாம் புத்தங்களை புரட்டிய பின்பு ஒரு சில கேள்விகளை ஞாபகப்படுத்தினால் படித்து போல ஞாபகம் இருக்கிறது….
ஆனால், நினைவுக்கு வரவில்லை… மதிய உணவு ஜீரணமாவதற்குள் படித்த எல்லாமே மறந்தது போல ஒரு எண்ணம் விஜய்…..
மனத்திற்குள் ஆயிரம் மனக்கணக்குகள் ஓடிய பரீட்சை தவிர்த்து பாஸ் பண்ணி விட வேண்டும் என்ற மனப்போராட்டம் ஒரு புறம்…
இருக்காத பின்னா! விஜய்யின் அப்பவோ, ஒரு கணக்கு வாத்தியார், அம்மாவோ ஒரு அரசு வழக்கறிஞர், அது மட்டுமா அவனுடைய அக்காவோ தற்போது குரூப் 2 எக்ஸமில் பாஸ் பண்ணி ரெவன்யூ இன்ஸ்பெக்டரா வேலை பார்க்குறா?…..
ஆனா, நம்ம விஜய் நான்கு வருடமா அரசு வேலைக்கு படித்துக் கொண்டே தான் இருக்கிருக்கிறனே தவிர பாஸ் பண்ண மாட்டிங்கிறான்…..
என்று அடிக்கடி அவர்களின் குடும்பத்தார் அவை வசைப்பாடுவதும் இயல்பான ஒன்றாகவே இருந்து வருகிறது…..
அதனால் தான் என்னவோ அவனும் இந்த வருடமாவது நம்ம கண்டிப்பாக வேலைக்கு போயே தீர வேண்டும் என்ற முடிவில் கஷ்டப்பட்டு படித்துக் கொண்டிருக்கிறான்….
வேலை கிடைக்கிறதுக்கும் ஒரு அதிஷ்டம் வேண்ணும் அது அவனுக்கு மிக மிக குறைவா தான் இருக்கும் போல, சின்ன வயதிலிருந்தே
அவனுக்கு நினைச்சா படிப்பு கிடைக்கலா?
நினைச்சா மார்க் கிடைக்கலா?
ஆனா, அந்த அதிஷ்டம் அவனோடு அக்காவுக்கு நிறையவே இருக்கு அதான் அவா இவ்வளவு சந்தேஷமா இருக்கிறாள்….
என்று விமலா புலம்பிக் கொண்டிருந்தாள்….
இதை எதையும் காதில் வாங்காது விஜய் மூன்று நாட்களுக்கு முன்னாடி படித்த கணிதச்சூத்திரத்தை நினைவுப்படுத்தி பழைய கேள்வி ஒன்றிக்கு விடையை போட முயற்சி செய்து கொண்டிருந்தான்….
விஜய்யின் முகம் சற்று நேரத்தில் மலர்ந்தது….. ஏன்னென்றால் அதிகப்படியான தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்வி ஆனால் சரியா படிக்கமா போனதால் வருடம் வருடம் தவறாக அடித்து விட்டு வருவேன்….
ஆனால் இந்த முறை சரியாக அடித்து விடுவோம்….. என்று தனக்குள்ளேயே முணுமுணுத்து கொண்டான்….
இரவில் டிபன் செய்து முடித்து விட்டு விஜய் சாப்பிட அழைத்தாள் விமலா….
கதவை திறக்கவில்லை…. விஜய்
ஒரு வேளை ரொம்ப தீவிரமா படிக்கிறனோ? அப்படி இருந்தாலும் சாப்பாட்டை மறக்க மாட்டனே …..
“சுதா” படித்த களைப்பில் தூங்கி இருப்பான் அம்மா….
சரி…. அவனுக்கு டிபனை எடுத்து வைத்து விட்டு நம்ம மிஞ்சம் இருக்கிறதா சாப்பிட்டுவோம்…..
எப்படியாவது கொஞ்சம் நேரம் கழித்து வந்து சாப்பிட்டுவான்…..
என்று கொண்டு மூவரும் சாப்பிட்டு முடித்தனர்….. பிறகு அவர்கள் அறைக்கு சென்று தூங்க சென்றனர்…..
அனைவரும் அயர்ந்து உறங்கிய போதுஆ விமலா மட்டும் தூக்கம் கலைந்தது…. “அய்யோ” , விஜய் சாப்பிட்டனா என்ன பார்க்கமாலே தூங்கிட்டோம் நடுராத்திரி 2 மணிக்கு எழுந்து விஜய்யின் அறைக்கு சென்றாள்….
அப்போது அவன் தூங்காது படித்துக் கொண்டிருந்தான்…. அதை பார்த்த விமலாவிற்கு மனம் கேட்கவில்லை நாளைக்கு சீக்கிரம் எக்ஸமுக்கு போகணும் விஜய்….
படித்தது போதும் சற்று தூங்கு என்றாள்…. விஜய் அதெல்லாம் முடியாது இந்த எக்ஸம் எழுதி முடிச்சு தூங்கிக்கிறே அம்மா….
இந்த முறை எப்படியாவது பாஸ் பண்ணி வேலைக்கு போயிறனும்மா….
அதெல்லாம் கண்டிப்பாக வேலைக்கு போயிவா விஜய்… கொஞ்சம் நேரமாச்சு தூங்கி “விஜய்” ,தேர்வு எழுதும் போது ரொம்ப களைப்பா இருக்கும் சொன்ன கேளுப்பா என்றாள்…..
முடியவே முடியாது என மறுத்து விட்டு படித்தான்…. பிறகு சரி….. நீ கேட்க மட்டா உனக்கு டீ போட்டு வந்து கொடுக்கிறேன்… அதா குடிச்சுட்டு அப்புறமா நல்ல படிப்பா? என்றாள்….
சரி…..அம்மா….
அதிகாலையில் விடிந்ததும் தேர்விற்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்து கொண்டு புறப்பட்டான்…..விஜய்….
விமலா சீக்கரமாகவே சமையலை முடித்து விட்டு அவனுக்கு பரிமாறினாள்…..
வழக்கம் போல சுதா தம்பியை நக்கல் செய்து கொண்டிருந்தாள்…..
அதை எதையும் காதில் வாங்காது எக்ஸமிற்கு சென்டருக்கு புறப்பட்டான் விஜய்…..
பார்த்த பத்திரமா போயிட்டு வா ….. அனைத்து கேள்விகளை ஒரு முறைக்கு இரு முறை படித்து விட்டு விடையை தேர்வு செய்ய வேண்டுமென பழக்கம் போல பல அட்வைஸ்களை வாரி வழங்கினாள் விமலா….
தலையை….. தலையை ….. ஆட்டி விட்டு கிளம்பினான் விஜய்….
தேர்வறைக்குள் நுழைந்து நுழைவுச்சீட்டை கட்டி விட்டு தனக்குரிய இருக்கையில் அமர்ந்தான் விஜய்….
கேள்வித்தாள் கொடுத்துடன் அனைத்தும் கேள்விகளுக்கும் படித்து விட்டு விடையை தேர்வு செய்ய ஆரம்பித்தான்…..
சில மணி நேரங்கள் கழித்ததும் தேர்வு முடிந்தது…. அங்குள்ள ஒரு பஸ் ஸ்டாண்டில் நின்று பஸ்ஸில் ஏறி வீட்டுக்கு வந்தான் விஜய்…..
விமலாவும், சுதாவும் கேள்வித்தாள்களை வாங்கி பார்க்க ஆரம்பித்தார்கள்…. நல்ல ஈஸியா வந்திருக்கு என்றார்கள்…..
பதில் பேசாது அமைதியாக உட்கார்ந்து இருந்தான்…. என்னடா இந்த தடவையும் நல்ல எழுதமா விட்டயா? என கேள்விகள் அடுக்கி கொண்டே இருந்தாள் சுதா…..
சரி….. விடு அவனே பரீட்சை எழுதி ரொம்ப களைப்பா வந்திருப்பான் …. நேத்து நைட்டு முழுவதும் தூங்கலா போய் தூங்கட்டும்…..
நீ போய் தூங்கு நாளைக்கு பேசிக்கலாம் …..
விஜய்யும் அவனோட அறைக்கு சென்று தூங்க ஆரம்பித்தான்…. அப்போது அவனுக்கு மேல் அவனுடைய மனச்சாட்சி இந்த முறையாவது பாஸ் பண்ணிருவியா விஜய் …. இல்லை மாட்டியா?
என ஒரு கேள்வி தோன்றி மறைந்தது…. இருந்தாலும் அதை பெரிது படுத்தாது தூங்க ஆரம்பித்தான்…..
மறுநாள் காலையில் தொலைக்காட்சி நேற்று எழுதிய குரூப் 2 தேர்விற்கான முடிவு இன்னும் இரண்டு மாதத்திற்குள் வெளியிடப்படும்…. என்ற செய்தி ஓடிக் கொண்டிருந்தது…..
அதை பார்த்தும் பார்க்காது போல விஜய் அவனுடைய அன்றாட வேலைகளை செய்து கொண்டிருந்தான்….
விமலா வீட்டு வேலைகளை முடித்து அலுவலகத்திற்கு கிளம்பினான் சுதாவும், சேகரும் அவர்களுடைய பணிக்கு கிளம்பி சென்றனர்….
இப்படியே சில மாதங்கள் கழிந்தன…..
அன்று வழக்கம் போல சனிக்கிழமை பார்க்க வேண்டிய வேலைகளைப் பார்த்து கொண்டிருந்தான் விஜய்…..
சுதாவிற்கோ, அன்று விடுமுறையாக இருந்தது….. விமலாவும் அலுவலக வேலைகளை சீக்கிரமா பார்த்து விட்டு மதியமே வீடு திரும்பினாள்…. அன்று அனைவரின் செல் போனிற்கும் குறு செய்தி ஒன்று தென்பட்டதை பார்த்தனர்….
அதில் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே எழுதிய குரூப் 2 தேர்விற்கு ரிசல்ட் இன்று வெளியிடப்படுகிறது என்று வந்திருந்தது….
விஜய் பதட்டத்தோடு இருந்தான்….
சுதவோ, அவனோடு கேள்வித்தாளில் உள்ள தேர்வு எண்ணை எடுத்து போட்டு பார்த்தாள்…..
அதில் விஜய் முதலிடத்தில் தேர்வாகி இருந்தான்….. அப்போது சுதாவிற்கே பேரதிர்ச்சி இருந்தது அவளே 45 இடத்தில் தான் இருந்தாள் ஆனா விஜய்யோ முதலிடம் கண்டிப்பாக அவனுக்கு வேலை கிடைத்து விடும்…..
விஜய் போல தொடர்ந்து படித்தால் “வெற்றி நிச்சயம்” ,அனைவரின் வாழ்க்கையிலும் என்றான் சேகர்….
பிறகு குடும்பத்தினர் அனைவரும் அவனைப் பாராட்டினார்…..
சில மாதங்கள் கழித்து அவனும் ரெவன்யூ இன்ஸ்பெக்டரா பணியில் சேர்ந்தான்….
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings