in ,

மும்பை (திகில்) பயணம் (சிறுகதை) – வேலூர். D. சீனிவாசன்

ழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

இருளாக இருந்த அந்த இடத்தில், இருண்ட ஒரு வீட்டின் முன் கார் வந்து நின்றது. பௌர்ணமி நிலவின் ஒளியில் அந்த வீட்டின் வெளிப்புறம் மட்டும் அழகானதாய் தெரிந்தது. திடிரென்று அந்த வீட்டின் உள்ளே இருந்த விளக்குள் தன்னால் ஒளிர்ந்தது, கூடவே பாத்திரங்கள் உருண்டு ஓடும் சத்தமும் கேட்டது. அதனை கண்ட காரினுள் இருந்தவர்கள், ஒரு வித பயத்துடன் ‘காரை விட்டு இறங்கலாமா…? வேண்டாமா..?’ என்று யோசித்துக் கொண்டே, காரின் கதவைத் திறந்து ஒரு காலை கீழே வைத்த மறுநொடி, ஒளிர்ந்த விளக்குகள் அணைந்தன.

‘மறுபடியும் காலை காரினுள் வைத்துக் கொண்டு, காரின் கதவுகளை திறந்த நிலையில் வைத்தபடியே சுற்றும், முற்றும் பார்த்தனர் காரில் இருந்த ரகு, ஆதி, கிஷோர் மற்றும் அசோக் என்ற நால்வரும்’.

‘நரிகள் ஊளையிடும் சத்தம் மெல்லியதாக காதில் விழ’, “ரகு ஏதோ சத்தம் கேட்கதே..!” என்று அசோக் கேட்க,

“சத்தமா..? “இல்லையே”என மூவரும் கூறினர்.

“யாரையுமே காணோம்.. நாம மட்டும் தான் இங்கே இருக்கிறோமா?” என்று பயத்துடன் கேட்டான் அசோக்.

“இது என்ன T.Nagar ரங்கநாதன் தெருவா?கூட்டம் , கூட்டமாக ஜனங்கள் இருக்க?”, என்று கேட்டான் ரகு கிண்டலாக .

“இது எந்த இடம்?” என்றான் கிஷோர்.

ஆதி சிரித்துக்கொண்டே, “யார்டா இவன்?, மும்பைக்கு கார்ல போனா ஜாலியாக இருக்கும்னு நீ தானே சொன்னே.. மும்பைக்கு மேப் பார்த்துக் கொண்டு ஒழுங்காக தான் வந்து கொண்டிருந்தோம். வழியில் டீ சாப்பிடலாம் என்று இறங்கி பேசாம டீயை குடிச்சோமா, வந்தோமான்னு, இல்லாம, டீ கடைக்காரர் கிட்ட உனக்கு தெரிந்த இந்தியிலே மும்பை செல்ல short cut வழி இருக்கா? என கேட்க, அவன் ஒன்னு சொல்ல, நீ ஒன்னு புரிஞ்சிக்கிண்ணு வண்டியை ஓட்டி வந்து, எங்களை இங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கே..! இப்ப வந்து, இது எந்த இடம்ன்னு? எங்களை பார்த்து கேட்கறே” என்ற ஆதி, மேப்ல பாருடா என்றான்.

கிஷோர் போனை எடுத்து பார்க்க..! “டேய்…..சிக்னலே இல்லடா..!” என்று கூற,

என்ன..? “சிக்னலே.. இல்லையா…?” என கேட்டுக் கொண்டே, மற்ற மூவரும் தங்களின் போனை எடுத்து பார்த்து ஆமாண்டா..! என்றனர்.

“டேய், காரை விட்டு இறங்கி பார்க்கலாம்..” என்று கூறி விட்டு ரகு கார் கதவை திறந்து காலை கீழே வைத்த மறுநொடி, வீட்டினுள் விளக்குகள் ஒளிர்ந்தன.

அதை பார்த்த கிஷோர் “டேய் ரகு உள்ளே வாடா” என்றான்.

“நாம டீ சாப்பிடும் போது மணி 8.00, இப்ப மணி 12.00, 4 மணி நேரமா உட்கார்ந்து கொண்டு வந்தது எனக்கு வயிறு கனமா இருக்கு. நடப்பது, நடக்கட்டும் எனக்கு பயமில்லை, நான் அங்கே போய் பிஸ் பண்ணிட்டு வந்திர்றேன்” என்று கூறிக்கொண்டே சென்றான் ரகு .

“இவன், எங்கே போறான் ?” என்று கேட்டான் அசோக்.

திரும்பி வந்தான் ரகு. அப்போதும் வீட்டினுள் விளக்குகள் ஒளிர்ந்து கொண்டே தான் இருந்தது. “டேய் இறங்குங்கடா.. உள்ளே போய் பார்க்கலாம்” என்றான் ரகு தைரியமாக.

“டேய் வேணாம்டா… பயமாயிருக்கு, இன்னும் ஒரு ஐந்து மணி நேரம் கார்லேயே தூங்கிடலாம், பொழுது விடிந்ததும், நாம வந்த வழியே திரும்பி போயிடலாம். எங்க சிக்னல் வருதோ, அங்கிருந்து மேப்பை பார்த்து மெயின் ரோடு போயிடலாம்” என்றான் கிஷோர்.

“ஆமாண்டா, அதான்டா correct. வாடா வந்து வண்டிலே ஏறு, என்றனர் மற்ற இருவரும்”. ரகு காருக்குள் ஏறி அசோக் பக்கத்தில் வந்து அமர்ந்தான்.

அசோக் பயத்துடன் வீட்டையே பார்த்து கொண்டிருந்தான். மற்ற மூவரும் கால்களை நீட்டிக்கொண்டு உறங்க ஆரம்பித்தனர். அப்போது ஒரு உருவம் வீட்டினுள் இருந்து நகர்ந்து சென்றது. வீட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடியின் திரைச்சீலைக்கு பின்புறம் பெண் உருவம் ஒன்று வந்து நின்றது. அசோக் தன் கண்களை கசக்கி கொண்டு, மீண்டும், மீண்டும் உற்று பார்க்க, அந்த உருவம் அவனை அழைத்தது.

கார் கதவை திறந்து கீழே இறங்கினான். வீட்டை நோக்கி நடந்தான். அந்த உருவம் அவனை பார்த்து வா, வா என்றது. மெல்ல, மெல்ல நடந்தான். வீட்டை நெருங்கியவுடன் வீட்டை  அண்ணாந்து பார்த்தான். பின் திரும்பி பார்த்தான்.

தான் வந்த கார் வெகு தூரத்தில் இருப்பதை பார்த்து விட்டு, ‘வெகுதூரம் வந்து விட்டோமோ..? நாம் காரிலிருந்து பார்க்கும்போது வீடு அருகில் தானே இருந்தது’, என யோசித்துக் கொண்டே, அந்த வீட்டின் வாசற்படியில் ஒரு காலை வைத்தவுடன், வீட்டினுள் விளக்குகள்‌ அணைந்தன. முன்னால் ஒரு கால், பின்னால் ஒரு கால் என அப்படியே அசையாமல் நின்றான். சற்று பயம் வந்தது. வீட்டின் கதவுகள் தானாகவே திறந்து, விளக்குகளும் ஒளிர, அடுத்த காலை எடுத்து வைத்து உள்ளே சென்றான்.

உள்ளே சென்றதும், கதவுகள் தானாகவே கீச் என்ற சத்தத்துடன் மூடிக் கொண்டன. திரும்பி பார்த்தான். பயத்தில் வியர்வை அரும்பியது. ஏதோ கருகி போன துர்நாற்றம் அடித்தது. ‘பலர் அங்கு இருப்பதை போலவும், நடமாடுவதை போலவும் உணர்ந்தான்’. கொஞ்சம் பயம் குறைந்தது.

“யாராவது இங்க இருக்கீங்களா..?” என்றான் சத்தமாக..! பதில் இல்லை.

‘இங்கு இருப்பவர்களுக்கு தமிழ் தெரியாதே, நான் ஒரு மடையன்’ என்று தலையில் தட்டிக் கொண்டு,”anybody here…?” என்றான் ஆங்கிலத்தில், அதற்கும் பதில் இல்லை.

‘ஒருவேளை, இந்தி பேசுவபர்கள் இருப்பார்களோ..?’, நமக்கு தெரிந்த இந்தியிலே கேட்டு பார்க்கலாம் என்று “யஹான் கிசி கூ பீ” என கேட்டான் . பதில் இல்லை.

‘மராத்தி ஆட்களா இருக்குமோ?’ என்று எண்ணி, தன் மும்பை நண்பன் வீட்டில் பேசியது நினைவுக்கு வர “யாத்தீ கோனி ஹை” என்றான், அதற்கும் பதில் இல்லை.

சிரிப்புடன், சலங்கை ஒலி கேட்டது. அந்த ஒலி தன்னிடம் நெருங்கி வருவது போல் இருந்தது. எதிரில் அந்த உருவம் வந்து நின்றது. அசோக்கை பளார் என்று கன்னத்தில் அறைந்தது. சற்று தலை சுற்றியது அவனுக்கு. சுதாரித்துக் கொண்டு, அவன் தன் கையை வேகமாக ஓங்கி அந்த உருவத்தின் கன்னத்தில் அறைந்தான்.

அலறிக் கொண்டு எழுந்தான் ரகு. அவன் கன்னம் வீங்கியது. மற்ற மூவரும், ரகுவின் அலறலை கேட்டு எழுந்திருக்க, ரகு, அசோக்கை பார்த்து, “ஏண்டா என்னை அடிச்சே..? அதுவும் இப்படியா..? கன்னம் வீங்குகிற அளவுக்கு…!” என்று கேட்டான் .

மற்ற இருவரும் “என்னடா நடந்தது..?” என்று கேட்க..

“நான் எங்கடா உன்னை அடிச்சேன்? அந்த உருவம் என்னை அடிச்சிது, நான் அதை திருப்பி அடிச்சேன், அவ்வளவு” தான் என்றான் அசோக்.

“உருவமா….?” என்றனர் பயத்துடன் மூவரும் ஒரே நேரத்தில்.

அப்ப “நான் அடித்தது உன்னையா..? அந்த உருவத்தை இல்லையா..?” என்று அசோக் கேட்க..

“டேய் அசோக் உனக்கு என்னடா ஆச்சு?” என்று கிஷோர் கேட்டான்.

அசோக் தான் காரில் அமர்ந்திருப்பதை அப்போது தான் கவனித்தான்.

சொல்றேண்டா.. “நீங்க மூணு பேரும் நல்லா தூங்கிட்டீங்க..! நான் அந்த வீட்டையே பார்த்து கொண்டிருந்தேனா.., அப்போ, ஒரு உருவம் அதோ அந்த கண்ணாடி ஜன்னலில் நின்று கொண்டு என்னை பார்த்து வா, வா என்றது. நான் காரின் கதவை திறந்து கொண்டு இறங்கினேன். மீண்டும் வா.., வா.. என்று கூப்பிட்டது. அந்த வீட்டுக் கிட்ட போய் திரும்பி பார்க்கிறேன்!, நம்ம கார் ரொம்ப தூரத்தில் நிக்குது..!

என்னடா? நாம பார்க்கும்போது காருக்கு எதிரில் தானே வீடு இருந்தது, இப்ப எப்படின்னு..? யோசனை பண்ணி கொண்டு, வீட்டு வாசற்படியில ஒரு காலை வைக்கிறேன்,  லைட் ஆஃப் ஆயிடுச்சு.!. அப்படியே அசையாம நின்னேனா..! திடீர்னு  அந்த வீட்டு கதவுகள் தானாகவே திறந்து, லைட்டெல்லாம் ஆன் ஆயிடுச்சு.  

அந்த வீட்டின் உள்ளே போய் பார்த்தா,  பெரிய, பெரிய அலங்கார விளக்குகள் இருந்தது. வீட்டிலே  நிறைய பேர் இருக்கற மாதிரி தெரிஞ்சுது. யாராவது இருக்கீங்களான்னு “தமிழில கேட்டேன் ?”. பதிலே காணோம். யோசித்து பார்த்தேன்,  அவங்களுக்கு தமிழ் தெரியாதேன்னுட்டு “Anybody here?” ன்னு இங்கிலிஷ்ல கேட்டேன், அதுக்கும் பதில் இல்லை.

அப்புறம் இந்தியில “யஹான் கிசி கூ பீ ?”ன்னு கேட்டேன். பதிலே இல்லை, மறுபடியும் மராத்தியில கேட்டேன்  “யாத்தீ கோனி ஹை? “ன்னு அதுக்கும் பதில் வரல.. என்ன பண்ணலாம்ன்னு யோசனை பண்றேன்,  அப்ப பெண் உருவம்  ஒன்னு சிரிச்சிக்கினே  சலங்கை சத்தத்தோட என் எதிரில் வந்து நின்னு, என் கன்னத்தில பளார்ன்னு ஒரு அறை விட்டது, அப்படியே ஆடி போயிட்டேன். அப்பறமா ஒரு வழியா சமாளிச்சுகின்னு, நான் அந்த உருவத்தோட கன்னத்திலே திருப்பி ஓங்கி ஒரு அறை கொடுத்தேன் பாரு..” என்று முடித்தான் அசோக்.

“அடப்பாவி,  கார்ல உட்கார்ந்துக்கினு,  கனவு  கண்டதை,  என்னவோ உண்மையிலேயே நடந்தது மாதிரி என்னவா கதை விடுறான் பாருங்கடா”  என்றான் கிஷோர்.

அனைவரும் ஒரு வித பயத்துடன், சிரித்துக்கொண்டே., பொழுதே விடிஞ்சு போச்சுடா..! என்றனர்.

ஆமாண்டா, “சரி, சரி.. கிளம்புவோம்” என்றான் ரகு, அசோக்கை முறைத்த படியே,  அடிபட்ட தன் கன்னத்தை தடவி கொண்டு.

அப்போது அங்கு வந்த  பெரியவர் ஒருவர் “தம்பி நீங்கல்லாம் யாரு?  இங்க என்ன பண்றீங்க?” என்று அவர் இந்தியில் கேட்க,

‘நால்வரும் அவர் கேட்பது என்னவென்று புரியாமல் தலையை சொறிய’,

“டேய் இருடா language translator app முலமா அவர் என்ன கேட்கிறார்ன்னு பார்ப்போம்” என்று கூறி விட்டு, ஆதி தன் போனில் translator app ஐ open செய்ய முயல,

டேய், “இங்க சிக்னல் கிடைக்காதேடா..!” என்று ரகு கூற,

“சிக்னல் இருக்குடா” என்று  கூறி விட்டு, பெரியவரைப் பார்த்து  நீங்க பேசுங்க என்று சைகை மூலம் அவருக்கு புரிய வைத்து பேச சொன்னான் ஆதி. அதை புரிந்து கொண்டு பேசினார் பெரியவர்.  

அவர்  ஆதி போனின் ஒரு பக்கம்  அவர் இந்தியில் பேச, ஆதியின் பக்கம் தமிழில் வார்த்தைகள் பதிவாகியது. அதாவது இந்த வீட்டில் 7 பேர் இருந்தார்களாம், ஒரு நாள் ராத்திரி அந்த ஏழு பேர்ல ஒருத்தருக்கு கரண்ட் ஷாக் அடித்து கீழே விழ, அவரை காப்பாற்ற வேண்டி, ஒருவருக்கு பின் ஒருவராக சென்று தொட்டு கொண்டே ,  அனைவருக்கும் கரண்ட்  ஷாக் பலமாக அடிக்க, ஏழு பேரும் செத்து போயிட்டாங்களாம்,  அவங்க உடம்பெல்லம் கருகி போய்ச்சாம்.  

அதனால் ராத்திரியில் லைட் தானாகவே,  ஏரியுமாம், தானாகவே ஆஃப் ஆயிடுமாம். அந்த ஏழு பேர் ஆவியும்  இந்த வீட்டில ராத்திரி நேரத்தில இந்த பக்கம் போறவங்க, வரவங்கள பார்த்து வா,  வான்னு கூப்பிடுமாம். விஷயம் தெரிந்த  இந்த ஊர்ல இருக்கிற யாரும், இரவில  இந்த பக்கம் வர மாட்டாங்களாம்,  நீங்கல்லாம் யாரு? வீட்டின் உள்ளே போகாதீங்க..!!,  போனா எல்லோரும் செத்துடுவீங்க….! ” ன்னு  அந்த போனில் தமிழில் வார்த்தைகள் வர, அதை படித்துக் கொண்டே வந்த நால்வருக்கும் வியர்த்தது.

டேய் “நான் சொன்னேன் இல்ல, அந்த வீட்டின் உள்ளே கருகின  நாத்தம் வந்ததுன்னு”  என்றான் அசோக்.

” ரகு பேச்சை கேட்டு நாம உள்ளே போயிருந்தோம், அவ்வளவுதான்,  எல்லோரும் செத்து போயிருப்போம், நல்ல வேளை உள்ளே போகல, அதனால  தப்பிச்சோம்” என்றான் ஆதி.

பெரியவருக்கு நன்றி  என கூறி விட்டு,  “மேப்பை பார்த்து மும்பை நோக்கி கிளம்புவோம்” என்றான் கிஷோர்.

ழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இக்காலத்து வாழ்க்கை முறையை குறிப்பிடும் சில வரிகள் – அகிலா சிவராமன்

    இருள் விலகி இன்னல் தீராதோ (புதுக்கவிதை) – இரஜகை நிலவன்