எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ரகு : டேய் குமார், இன்னிக்கு மேட்ச் இருக்கா..? இல்லையா..?
முரளி : ஏண்டா அப்படி கேட்கறே?
ரகு : “பின்ன என்னடா..? காலைல சரியா 6.00 மணிக்கு 2 டீமும் கிரவுண்டில் இருக்க வேண்டும், என்று தானே நாம் அனைவரும் சேர்ந்து பேசி ஒப்புக் கொண்டோம்… ஐம்பதாயிரம் பெட் கட்டி விளையாடப் போறோம்னு எல்லாருக்கும் தெரியும். நம்ம ஆளூங்களையும் காணோம், எதிர் டீமில கூட ஒருத்தனையும் காணோம்…
குமார் : அதாண்ட எனக்கும் புரியல..
ரகு : டேய் குமார் நீ தானே..? நம்ம டீமுக்கு கேப்டன், அந்த SK ஸ்டார் டீம் கேப்டன் ஸ்ரீகாந்துக்கு நீயே போன் போட்டு கேளு..
குமார் : ஹலோ ஸ்ரீ காந்த், நான் லயன்ஸ் டீம் கேப்டன் குமார் பேசறேன், இன்னிக்கு மேட்ச் இருக்கே..! மறந்துட்டீங்களா..?, 6.00 மணிக்கு கிரவுண்டில் இருப்பேன்னு சொன்னீங்க , மணி 7.00 ஆகுது, உங்க டீமிலிருந்து ஒருத்தரும் வரலையே..
ஸ்ரீ காந்த் : சாரி குமார், இன்னிக்கு எங்க டீம் பிளேயர், பாஸ்ட் பவுலர் ஒருத்தரோட அப்பா தவறிட்டாரு, அதனால் தான் வரல.. நாம இன்னொரு நாள் மேட்ச் வைத்து கொள்ளலாம் என்றான்.
ரகு : குமார், என்ன சொன்னார்? ஸ்ரீ காந்த்
குமார்: அவங்க டீம் பாஸ்ட் பவுலர் ரோட அப்பா தவறிட்டாராம்.. அதனால் தான் யாரும் வரலையாம், மேட்ச்சை இன்னொரு நாள் வச்சிக்கலாம்ன்னு சொல்லி போனை ஆஃப் பண்ணிட்டாரு … என்ன செய்யலாம்..?
ரகு : யாருடைய அப்பான்னு பேர் ஏதாவது சொன்னாரா…?
குமார் : இல்லையே..! நானும் கேட்கல..
ரகு : எனக்கு தெரிஞ்சு, அவங்க டீமில பாஸ்ட் பவுலர் யாரும் கிடையாதே…!
முரளி : டேய் அவங்க ஏதோ பொய் சொல்றாங்கன்னு நினைக்கிறேன்..!
அப்படி இருந்தா,அவங்க தானே நமக்கு போன் போட்டு சொல்லியிருக்கணும் நம்மை மேட்சுக்கு வாங்கன்னு 6 மாசம அவங்க தானே கேட்டுன்னு இருந்தாங்க.. இப்ப என்ன தீடிர்னு….!
ரகு : குமாரு, நம்ம ஆளுங்க இன்னும் 3 பேர் தான் வரல, ராகவன், வெங்கட், ராமு. அவங்களுக்கு போன் போட்டு உடனே இங்க வரச்சொல்லு.
குமார்: ராகவனுக்கு போன் போட switched off என்று வந்தது. வெங்கட்டுக்கும் ராமுவுக்கும் போன் போட்டால் not reachable என்று வந்தது.
குமார் : டேய் வாங்கடா வீட்டுக்கு போகலாம் என்றான்.
முரளி : இல்லடா, எனக்கு ஏதோ தப்பா படுது. வெங்கட் , ராமு, , இரண்டு பேரும் தான் நம்ம டீமில பாஸ்ட் பவுலர், தவிர ராகவன் ஸ்பின் பவுலர்.
ரகு : முரளி.. நீ என்ன சொல்ல வர்றே..?
முரளி : குமாரு, மத்த எல்லோரையும் வீட்டுக்கு போக சொல்லு. நாம மூணு பேரும் ஒரு இடத்துக்கு போறோம்.
முரளி : குமாரு நீ என் பைக்கில் வா, ரகு நீ என் வண்டியை ஃபாலோ பண்ணிட்டு வா..
குமார் : எங்கே போறோம்..?
முரளி : சொல்றேன், வண்டில ஏறு..
ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு..
முரளி : குமாரு, இங்க தான் நான் சொன்ன இடம், கீழே இறங்கு..
குமார் : என்னடா இங்கே..? எவ்வளவு பெரிய கிரவுண்டு, கூட்டம் வேற அதிகமா இருக்கு.. ஏதோ..? மேட்ச் நடக்கிற மாதிரி தெரியுது..!
ரகு : டேய் இங்க பாருங்கடா.. இது நம்ம வெங்கட் பைக் , இது ராகவனோட கைனடிக் நோவா ..
முரளி : நான் நினைச்சது சரியா போச்சு..!
குமார் : என்ன நினைச்சே..? முரளி..
முரளி : டேய் குமாரு, SK ஸ்டார் டீம் கேப்டன் ஸ்ரீ காந்த் பெரிய பணக்கார வீட்டு பையன். போன வாரம் என்னை ஒரு டீம்ல விளையாட கூப்பிட்டாங்க. ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் ரூபாய், அது இல்லாம நான் எடுக்கற ஒவ்வொரு ரன்னுக்கும் ரூ.100/- மற்றும் நான் எடுக்கும் ஒவ்வொரு விக்கட்டுக்கும் தனியா ரூ.2000/- என சொன்னார்கள். டீம் பெயர் என்ன? என்று கேட்டேன் அதெல்லாம் சொல்ல முடியாது. நாளைக்கு காலைல 5.00 மணிக்கு உங்க வீட்டுக்கு கார் வந்து அழைத்துச் செல்லும், வரீங்களா என்று போன்ல தான் கேட்டாங்க, மேட்ச் எந்த ஊர்லன்னு? கேட்டேன், இந்த பிளே கிரவுண்டில் தான்னு சொன்னாங்க. நான் எனக்கு உடம்பு சரியில்லை, அதானால வர இயலாதுன்னு சொல்லிட்டேன். அதான் எனக்கு சந்தேகம் வந்தது. நம்ம டீமில இருக்கிற மூணு பேரும் பணத்துக்கு ஆசைப்பட்டு இந்த டீமில் சேர்ந்து விளையாட வந்திருக்காணுங்க . வா உள்ளே போய் பார்க்கலாம்.
ரகு : முரளி, நீ சொன்னது சரிதான். அங்கே பாரு…. SK star captain Srikanth wicket keeping ல் நிற்கிறாரு, நம்ம வெங்கட், ராமு, ராகவன் மூன்று பேரும் பீல்டிங்கல நிக்கறாங்க..
குமார் : டேய் நல்ல வேளைடா, தப்பிச்சேன். இவனுங்க பேட்டிங், பௌலிங்கை, நம்பி தான் ஐம்பதாயிரம் ரூபாய் பெட் கட்டினேன்.
முரளி : எப்பவுமே பணத்துக்கு ஆசைப்பட்டு விளையாடற இவனுங்கள நம்ம டீமிலிருந்து தூக்கிடுவோம் குமாரு.. இல்லன்னா நம்ம டீமில இருந்து கொண்டே, நாளைக்கு வேற டீமோடு மேட்ச் நடக்கும் போது, நம்ம எதிர் டீம் கிட்ட பணத்தை வாங்கி கொண்டு, நமக்கு சரியா விளையாட மாட்டானுங்க. எதிரியை கூட நம்பலாம், ஆனால் நம்ம கூடவே இருக்கும் துரோகிகளை, மன்னிக்கவோ, நம்மோடு வச்சுக்கவோ, கூடவே… கூடாது.
ரகு : ஆமாம் குமார், முரளி சொல்வது தான் சரி. எப்பவுமே, நமக்கு மிகவும் நம்பிக்கையான ஆளை வச்சி தான் மேட்ச் பிக்சிங் பண்ணனும்.
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு“
என்பது திருக்குறள்.
எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings