எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
‘எனது கம்பெனி திருபெரும்புதூரில், வீடு மதுரவாயல்’ . ‘வாரம் ஒரு முறை ஷிப்ட் மாறும்’. “இந்த வாரம் எனக்கு இரவு ஷிப்ட், இரவு ஷிப்ட் 10.00 மணிக்கு முடியும், ஷிப்ட் முடிந்து வீட்டுக்கு வர சுமார் 11.30 மணி ஆகி விடும்”. “இன்றைக்கு ஒரு மணி நேரம் ஓவர் டைம் வேலை பார்க்க வேண்டி வந்ததால், வேலையை முடித்து விட்டு 11.05 மணிக்கு கிளம்பினேன்”.
பூந்தமல்லி பைபாஸ் நெருங்கும் போது, ஒரு பெண் தூரத்தில் நின்று கொண்டு, கையை ஆட்டிக் கொண்டே, கட்டை விரலை காட்டி லிஃப்ட் கேட்டு கொண்டிருந்தாள். வயது சுமார் 30 இருக்கும். என் முன்னால் சென்ற இருவரும் வண்டியை நிறுத்தாமல் சென்றனர், பாவமாக இருந்தது. நான் என் பைக்கை நிறுத்தி வாட்சை பார்த்தேன் , மணி 11.45.
“எங்கே போகணும்?” என்றேன். “நீங்கள் எங்கே போகிறீர்கள்?” என்று அவள் என்னை கேட்க, “நான் மதுரவாயல் வரை போகிறேன்” என்றேன். “நான் நெற்குன்றம் போக வேண்டும்” என்று அவள் கூறினாள். சரி, “நான் மதுரவாயலில் இறங்கிக் கொள்கிறேன், என்று கூறி விட்டு, அவளாகவே என் வண்டியில் ஏறி பின் சீட்டில் ஒரு பக்கமாக அமர்ந்தாள். வண்டியை ஸ்டார்ட் செய்தேன். பத்து நிமிடம் ஆகியிருக்கும் , யாரோ அழுவது போல் இருந்தது. ‘ஏன் அழறீங்க.?” “இந்த நேரத்தில் இங்கே ஏன் வந்தீங்க..?” என்று திரும்பி பார்க்காமல் வண்டியை ஓட்டிக் கொண்டே கேட்டேன். பதில் இல்லை. வாட்ச்சை பார்த்தேன் , மணி 12.00. சென்னீர் குப்பம் அருகே வரும் போது மீண்டும் நான் ” ஏங்க ஏதாவது சொல்லுங்க..!” என்றேன்.
“எதை சொல்றது, நான் பிறந்த கதையா..? வளர்ந்த கதையா..? இல்ல ஒரு லாரி என் மேல மோதி அந்த இடத்திலேயே செத்து போய், ஆவியா அலையறேனே…! அதையா..? “ என்று அவள் கேட்க.. உடனே “நான் என்ன “சொன்னீங்க..? ஆவியா…!” என்று நான் திரும்பி பார்க்க, என் பின் சீட்டில் அவள் இல்லை. பயத்துடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தி, சுற்றும், முற்றும் பார்த்தேன். யாரையும் காணோம், எந்த வண்டிகளும் வரவில்லை. நான் மட்டுமே தனியாக அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது மணி 12.10.
“மீண்டும் அழுகை ஒலி என் அருகில் கேட்டது, பயத்தில் என் முகத்தில் வியர்வை அரும்பியது, பயத்தில் என் கண்கள் தன்னால் மூடிக்கொண்டது”. “நிற்பதா..? இல்ல கிளம்புவதா ..? ஒன்றும் புரியவில்லை”.
“கண்களை திறந்து என் பர்சை எடுத்தேன் , அதிலிருந்த தெய்வமான என் அம்மாவின் போட்டோவை பார்த்தேன் , அவர்கள் கிளம்பு என்று தலையை ஆட்டி சொல்வது போல் இருந்தது”. “வண்டியை ஸ்டார்ட் செய்து வீட்டிற்கு வந்து தான், வண்டியை நிறுத்தினேன்”. “வீட்டின் காலிங் பெல்லை அடிக்க, உடனே கதவைத் திறந்தாள் என் மனைவி”,. “என்னங்க இவ்வளவு நேரம்? , முகமெல்லாம் வேற வியர்த்திருக்கு..! ” என்று கேட்டாள்.
“ஓவர் டைம், அதான் லேட்” என்று வேகமாக கூறிவிட்டு, வீட்டின் உள்ளே சென்று “கை, கால்களை அலம்பிக் கொண்டு, சாமியை கும்பிட்டு விட்டு நெற்றியில் விபூதி வைத்து கொண்டு” படுக்கச் சென்றேன்.
மறுநாள் காலையில், “முந்தைய நாள் இரவு நடந்தவற்றை என் மனைவியிடம் கூற, அவள் பயந்து விட்டாள்” . ” முதல் முறையாக நேராக என் அம்மாவின் படத்தின் முன் சென்று வணங்கி, நன்றி கூறினாள், கண்ணில் நீர் மல்க”.
எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings