எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“குமாரு, நீ என்ன பண்றே.., இன்னிக்கு சாயங்காலமே, பசங்களையும் உன் மனைவியையும் அழைச்சிட்டு வந்து துணி எடுத்துக்கோ, என் மத்த இரண்டு கடையிலும் என் பசங்க இருப்பாங்க..அவங்க கிட்டேயும் சொல்லிடறேன். அங்கேயும் போய் பாரு .. எங்க பிடிக்குதோ அங்கேஎடுத்துக்கோ.. உன்னையும் அவங்களுக்கு தெரியும். சரியா..?” உனக்கு பணம் வந்தா கூட, மொத்தமாக தர வேண்டாம்..! நாலு தடவையா கொடு.. ஒன்னும் அவசரம் இல்ல. பணம் வரலேனனா…எங்கேயும் வட்டிக்கு கடன் வாங்கி கொண்டு வந்து கொடுக்காதே”, என்றார் ரகுமான் பாய்.
“சரி பாய் நீங்க சொன்ன மாதிரியே செய்யறேன்” என்று கூறி விட்டு அன்று மாலை மாறி, மாறி மூன்று கடைகளிலும் டிரஸ் எடுத்தோம் .எனக்கு எடுக்க வில்லை.
அவர் மகன், என்ன குமார்? உங்களுக்கு எடுக்கலையா? என்றார்
இல்ல பாய், நான் அடுத்த மாதம் எடுத்துக் கொள்கிறேன்” என்றேன்.
“எங்க வாப்பா அப்பவே சொன்னாரு..!, நீங்க உங்களுக்கு எடுத்துக்க மாட்டீங்க என்று, எடுத்துக்கோ குமாரு, பணத்தை பற்றி கவலைப்படாதே, வாப்பா சொல்லியிருக்காரு.. பத்தாயிரத்துக்கு கேட்டாலும் கொடுக்கச் சொல்லியிருக்காரு, மொத்தம் நாலாயிரம் தான் ஆகியிருக்கு, உங்களுக்கு ஒரு வேஷ்டி, ஒரு ஷர்ட் எடுத்தா கூட 3 கடையிலும் சேர்த்து மொத்தம் ஒரு 4800 /- தான் ஆகும்” என்றார் ரகுமான் பாய் மகன் கரீம் பாய்.
அப்பாவை போலவே மகனும் ரொம்ப நல்லவனாக இருக்கிறார் போல என்று நினைத்தேன்.
“சரி பாய் ஒரு வேஷ்டி, ஒரு ஷர்ட் கொடுங்கள்” என்றேன். மொத்தம் 4800/- ஆனது.
நீங்க 4500/- ஐ கணக்கில் வச்சிகிங்கோ போதும் என்றார் கரீம் பாய்.
“என்னங்க வாங்கறேதே கடன்ல, இதுல தள்ளுபடி வேறாயா…!?” என்றேன்.
“இல்ல குமாரு, வாப்பாகிட்ட இப்ப போனில் பேசும் போது சொன்னேன், மொத்தம் 4800/- ன்னு” அவர் தான் சொன்னாரு, மொத்தம் 4500/- மட்டும் போதும்னு உங்ககிட்ட சொல்ல சொன்னாரு என்றார் கரீம் பாய்’.
எனக்கும் என் மனைவிக்கும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை..!
“கொஞ்சம் இருங்க வர்றேன், என்று கூறி விட்டு பத்து நிமிடம் கழித்து ஒரு பெரிய Sweet Box ம், ஒரு கட்டை பையில் நிறைய பட்டாஸ் இருந்தது, அதையும் கொடுத்தார்.
கரீம் பாய் இது எதற்கு? என்றேன்.
வாப்பா தான் உங்களுக்கு வாங்கி கொடுக்க சொன்னார் என்றார்.
“இது எவ்வளவு ..? “ என்றேன்.
“நீங்க என் வாப்பா கிட்ட கேட்டுக்கோங்க” என்றார் கரீம் பாய்.
‘என் மனைவிக்கும், பசங்களுக்கும் ஒரே சந்தோஷம்’
மறுநாள் ரகுமான் பாயை பார்த்து, பட்டாஸ் மற்றும் sweet Box எவ்வளவு என்று கேட்டேன்” . ‘
அவர் சிரித்துக் கொண்டே, என் தோளில் தட்டி கொடுத்து, அது இந்த ரகுமான் பாயின் தீபாவளி பரிசு, பணம் எதுவும் வேண்டாம்” என்றார்.
உண்மையில் நான் காலையில் வணங்கிய கணேசன், ரகுமான் மற்றும் கரீம் பாய் ரூபத்தில் வந்து என் குடும்பத்திற்கு இன்ப தீபாவளியை தந்து விட்டார் போல ரகுமான் பாய் கூறியது போல மதம் வேறாக இருந்தாலும் ‘மனிதநேயம் ‘ நல்லவர்களிடத்தில் என்றும் இருக்கிறது”
தீபாவளியை குடும்பத்துடன் சந்தோஷமாக கொண்டாடினோம் ரகுமான் பாய் தயவால்.
பின்னர் அடுத்த வாரம் ஒரு நாள் ஒரு பள்ளியிலிருந்து, அந்த பள்ளி மாணவர்களுக்கு ஷூ சப்ளை செய்ய ஒரு பெரிய ஆர்டர் கிடைத்தது.
அவர்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, வரும் கல்வியாண்டில் 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் கால் அளவுகளுக்கேற்ப கறுப்பு கலர் மற்றும் வெள்ளை கலர் ஷூக்கள் 2500 மற்றும் சாக்ஸ்கள் வேண்டும் என்று மாணவர்களின் கால் அளவை கொடுத்து 3 மாத காலத்தில் தர வேண்டும் என்று கூறி கொட்டேஷன் கேட்டனர். மாதிரி ஷூ ஒன்றையும் தந்தனர்.
இரண்டு நாட்களில் கணக்கு போட்டு பார்த்து தருவதாக கூறினேன். 1 அந்த பள்ளி என் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடம் என்பதை பிறகு தான் கவனித்தேன். உடனே இந்த வருடம் என் பிள்ளைகளுக்கு நான் எவ்வளவு செலுத்தியுள்ளேன் என்று பணம் செலுத்திய ரசீதை தேடி கண்டுபிடித்து பார்த்ததில் ஒரு கறுப்பு கலர் ஷூரூ.350/- என்றும் வெள்ளை கலர் ஷூ 300/- சாக்ஸ் ரூ.100/- என இருந்தது.
நான் கொள்முதல் செய்யும் இடத்தில் மாதிரி ஷூவை காண்பித்து விவரங்களை கூறி விலை கேட்க, கறுப்பு கலர் 150/- வெள்ளை கலர் 125/- சாக்ஸ் ரூ 50/- என்று அவர்கள் ஒரு விலை கூறினார்கள்.
மொத்தம் ரூ.16,25,000/-ஆகிறது. நான் என்னுடய லாபத்தை சேர்த்து கணக்கு போட்டு பார்த்தால் எனக்கு ரூ.9,25,000 லாபம் வருகிறது ஆனால் இவ்வளவு பணத்திற்கும் எங்கே போவது..? என்ற யோசனையில் ஆழ்ந்தேன்.
ரகுமான் பாயிடம் சென்று ஆர்டரின் விவரங்களை கூறி யோசனை கேட்க, மறுநாள் காலை அவர் வீட்டிற்கு போனேன்.
“என்ன காலைல வீட்டிற்கே வந்தீட்டீங்க..? பணம் கொடுக்கவா..?” என்று சிரித்தபடியே கேட்டார்.
“இல்ல.. பாய்”, என்று கூறி விட்டு விவரங்களை கூறினேன்.
“நல்ல ஆர்டர் குமார், விட்டுடாதே..! எப்படியாவது இந்த முறை வாங்கிட்டின்னா..!உன் தரமும், விலையும் நல்லா இருந்ததுன்னு வச்சிக்கோ, வருஷா, வருஷம் உன்னை தேடி வந்து ஆர்டர் தருவாங்க” என்றார் ரகுமான் பாய்”.
“எல்லாம் சரி பாய், 16 இலட்சத்திற்கு நான் எங்கே போவேன்?”. நாம கொடுக்கிற விலைக்கு ஆர்டர் கொடுத்தாங்கன்னா..?, 9 இலட்சம் வரைக்கும் லாபம் வரும், அதனால மூலதனத்துக்கு ஏதாவது வழி கேட்டு தான் உங்கிட்ட வந்திருக்கேன்” என்றேன்
“இதுக்காக வழியில்லை..! என்ன குமாரு நீ” என்றார்.
“நான் ஒரு யோசனை சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே என்றேன்”.
“என்ன?” என்றார் ரகுமான் பாய்.
“நீங்கள் மூலதனத்திற்கு மட்டும் ஏற்பாடு செஞ்சி கொடுங்க, மத்த எல்லா வேலைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன், வர இலாபத்திலே உங்களுக்கு 60% எனக்கு 40% “ என்றேன்.
பாய் சிரித்துக்கொண்டே, “என்ன குமாரு பிழைக்க தெரியாத ஆளாயிருக்கியே..!? இதுக்கு எதுக்கு மூலதனம்? கொட்டேஷன் கொடுக்கும் போது மொத்த மதிப்பீட்டு தொகையில் 50% அட்வான்ஸ் என்றும் சப்ளை செய்யும் ஒவ்வொரு முறையும் 10% தர வேண்டும் என்று எழுத்து மூலமாக குறிப்பிடு. அதேபோல் நீ கொள் முதல் செய்யும் இடத்தில் முதல் 20% கொடுத்து தயாரிப்பை ஆரம்பிக்க சொல்லு. 20% ஆர்டர் ஷூ வந்தவுடன், பள்ளியில் கொடுத்து விட்டு உன் கண்டிஷன்படி 10% வாங்கி கொள். இதே போல ஒவ்வொரு முறையும் செய்தால் பிரச்சினை முடிந்தது. இதை விட்டுவிட்டு 60% 40% என கணக்கு போடுகிறாயே வேற யார் கிட்டேயும் இது போல சொல்லிடாதே..! நாட்டில நல்லவங்க ரொம்ப குறைவு குமார், அடுத்த முறை இந்த ஆர்டரை அவங்களே நேரா பார்த்து விலை குறைவாக கொடுத்து பேசி முடிச்சிப்பாங்க” என்றார் ரகுமான் பாய்
“இது சாத்தியமா?, முடியுமா?” என்றேன்.
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை , முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார், “எனக்கு இது போல ஒரு ஆர்டர் கிடைச்சா, இது போல தான் செய்வேன்” என்று கூறினார் பாய் .
சரி பாய், நீங்க சொன்ன மாதிரியே செய்யறேன்.. என்று கூறிவிட்டு கடைக்கு வந்து கொட்டேஷன் தயார் செய்தேன்”.
மறுநாள் பள்ளியிலிருந்து வந்தனர். அவர்களிடம் மாதிரி ஷூ ஒன்றும் கொட்டேஷனும் கொடுத்தேன். படித்து பார்த்த இருவரும், சிரித்துக் கொண்டே ஷூவை பார்த்து. ‘இதே போன்ற தரம் இருக்குமா?’ என்று கேட்டார்கள்’ .
கட்டாயம் இதே போன்று தரம் இருக்கும் என்று கொட்டேஷனில் கூட குறிப்பிட்டுள்ளேன் . ஆமாம் அதை பார்த்து தான் கேட்டேன் என்றார்.
போன வருஷம் சப்ளை செய்தவரின் தரம் சரியில்லை என்றும், மிகவும் தாமதமாக சப்ளை செய்த காரணத்தினால் தான் இந்த முறை உங்களிடம் வந்துள்ளோம் தவிர யூனிபார்ம் கூட சப்ளை செய்தார் , அதுவும் சரியில்லை அதையும் இந்த முறை மாற்றி தர போகிறோம் என்றனர்.
உடனே, நான் அவர்களிடம் என் கடையின் பக்கத்தில் உள்ள ரகுமான் பாய் மிகவும் நல்லவர் என்றும், அவருக்கு மூன்று கடைகள் இருப்பதையும் கூறினேன். அவரை கேட்டு பாருங்கள் என்று கூறி, வாங்களேன் அவரிடம் போய் பேசலாம் என்றேன். மூவரும் பாய் கடைக்கு சென்றோம்.
வாங்க, வணக்கம் குமார். யார் இவர்கள்? என்று கேட்டார். நான் வந்த விஷயத்தை கூறி, அவர்களை அறிமுகம் செய்து வைத்தேன். ரகுமான் பாய் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே, அவர்களைப் பார்த்து சொல்லுங்க என்றார்.
அவர்கள் விவரங்களை கூற, பாய் செய்து தருவதாக கூறினார். விலை விவரங்களை மாதிரியுடன் அனுப்பி வைப்பதாக கூறினார்”
பின்னர் ஒரு வாரத்தில் மீண்டும் வருவதாக கூறி விட்டு சென்றனர். பத்து நாட்கள் கழித்து வந்து, எனக்கும் ரகுமான் பாய் அவர்களுக்கும் ஆர்டர் கொடுத்தனர். அவரவர்களின் order களை சரியான நேரத்தில், நல்ல தரத்தில், செய்து கொடுத்தோம். இருவருக்கும் நல்ல இலாபம் கிடைத்தது.
” முற்பகல் செய்யின் தமக்கிண்ணா பிற்பகல் தாமே வரும்” -திருக்குறள்
ரகுமான் பாய் எனக்கு சொன்ன யோசனையால் எனக்கும் ஆர்டர் கிடைத்தது. அதனால், நான் ரகுமான் பாயை சிபாரிசு செய்ததால் அவருக்கும் ஒரு ஆர்டர் கிடைத்தது.
“நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்”
எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings