2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பெரிய ஹால், சுதந்தர தினத்தப்ப ஸ்கூல்ல வரிசை கட்டி நிக்குமே குழந்தைகள் அந்த மாதிரி, வெள்ளை யூனிபார்ம் போட்ட இருக்கைகள். சுற்றி ஓரத்தில் சிற்றுண்டி ஸ்டால்கள். நல்ல சவுகரியமான இடத்தில் அமர்ந்தனர். ஆண்கள், பெண்கள்னு இவர்களிடம் புன்னகையுடன் வந்து வரவேற்று சென்றனர். இது வரை தெரிந்த முகம் எதையும் பார்க்கவில்லை.
“ஏண்டி பாரு நம்ம வீட்டு திண்ணைல மூக்குப் பொடிக்காக தவம் கிடந்த மூங்கிக் காடு முருகேசன் இத்தனை பணக்கார குடும்பத்தை சேந்தவரா? இவ்வளவு பெரிய ஆள் எப்படி வேஷம் போட்டிருக்கான் பாரேன்.. ஆனா பீளமேட்ல வந்து வாடகைக்கு ஏன் இருந்தார், அதுதான் ஆச்சரியமா இருக்கு”
“சரி, மாங்கல்ய தாரணம் முடிஞ்சவுடனே, தேடிப் பாருங்கோ இருக்காரானு, நாம அவரை மதிச்சு வந்தது தெரிஞ்சா சந்தோஷப்படுவார்”
கொட்டுமேளம் முழங்க மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.அட்சதைத் தூவல், மலர்த் தூவல் முதுகில் சுள்னு விழ அந்த சாஸ்திரிகள் நெளிந்து ஆடினார்.
அடுத்து மணமக்களை வாழ்த்த பாய்ந்த கும்பலை, மடக்கி திருப்பி அனுப்பவே பெரும் பாடாகிப் போனது. பஞ்சு தாத்தாவும்,பாரு பாட்டியும் தேடிய அந்த கச்சல் மூங்கில்காடு முருகேசன் மட்டும் கண்ணில் படவே இல்லை.
யாரோ கண்ணில் பட்ட ஒரு பெரியவரிடம் மூங்கில்காடுனு ஆரம்பிக்கறதுக்கு முன்னாலயே, “முங்கிலிகா? வெனபக்க ரெஸ்ட்ரூம் உன்னதினு” சொல்லிட்டு போயிட்டார்.
வேற என்ன பண்ண பரிசுகளை சேகரித்துக் கொண்டிருந்தவர்களிடம் போய் தங்கள் குத்துவிளக்கு பரிசை கொடுத்து விட்டு, போஜனானிகி போய் அந்த அதீத கார போஜனம் சேசி, கண்ட்ல நீளு பெட்டுகுனி (அட தெலுங்கு ஈசிதான், பாதி பேச வந்துடுச்சே) வெளியே வந்தார்கள் ஆளுக்கொரு தெலுங்கு பையை (அச்சோ தாம்பூலப் பை) வாங்கிக் கொண்டு, வெளியே கண்கலங்க வந்த போது சாப்பிட்டு திருப்தியுடன் தாம்பூலம் போட்டுக் கொண்டிருந்த பழனியப்பன் இவர்களை பார்த்தவுடன், “ரொம்ப ஹைகிளாஸ் போஜனம் சால தினத்துக்கப்பறம்” என திருப்தியாக புன்னகைத்தார்.
திரும்ப ஹோட்டல். டிரஸ் மாத்தி நிம்மதியா ஒரு தூக்கம் போட தீர்மானித்தனர்
“ஏண்டி பாரு தெரியாத ஊர்ல, தெரியாத ஒத்தர் கல்யாணத்துக்கு வந்து, இதுவரை யார் கல்யாணம்னு தெரியாம, தெரிஞ்சே இவ்வளவு செலவு பண்ணிருக்கோமே, இது தெரிஞ்சா ஊர்க்கார வழிச்சிண்டு சிரிக்க மாட்டாளோ.”
பாரு, “உங்க அவசர புத்தி, ஏதோ ஒரு கொத்த ஊரு சூஸ்திமி காதா, இந்த சாக்குல வராக லட்சுமி நரசிம்மரை பாத்தோமே அது பத்தாதா? (பாருவுக்கும் தெலுங்கு வந்துடுத்து) அவரோட திருவிளையாடல்தான் இது. மூணு வருஷத்துக்கு முன்னால, கோயம்பேடு மார்க்கெட் பக்கம் மாட்டுச்சாணில கால் வச்சு சர்ர்ர்னு வழுக்கி விழுந்து காலை உடைச்சிண்டேளே. ஸ்கூல் பசங்கள்ளாம் என்ஜாய் பண்ணி சிரிச்சானு சொல்வேளே, அப்ப நரசிம்மரை வேண்டிண்டது, இப்பதான் கூப்பிட்டிருக்கார்”
சாயந்தரம் ரிஷிகொண்டா பீச், ராமகிருஷ்ணா பீச் அடுத்து பர்சேஸ். ‘ரெண்டு பாட்டில் ஆவகாய ,கொங்கூரா சட்ணி.அவ்வளவுதான் திரும்ப சென்னை
மறுநாள் காலை சென்னைச் சூரியன் கொழுத்தும் பணியில் இறங்கினப்போ, பாட்டி, பாட்டினு சடகோபன் வந்தான்..டிகாஷன் பில்டர்ல இறங்கிண்டிருந்தது.
”பாட்டி நீங்க புறப்பட்டுப் போனதுமே தாத்தாவோட வாக்கிங் போவாரே இங்கே முன்னால குடியிருந்தாராமே, ஒரு சின்னவாடு மாமா அவருக்கு ஏதோ இன்விடேஷன் இங்கே போஸ்ட்மேன் தவறுதலா போட்டானானு கேட்டுண்டு வந்தார்.
பஞ்சு தாத்தா, “என்னடா சொல்றே, பாரு அந்த பத்திரிகை எடு ,சின்னவாடுகிட்ட இப்பவே காட்டிட்டு வரேன்.”
“இருங்கோ அவசரப் படாம, வாக்கிங் போறேளோன்னோ அப்ப அவரும் வருவார்தானே, பதறாம நிதானமா அவர் கிட்ட கேளுங்கோ.”
அந்த ஜாகிங் பார்க்குக்கு அவர்கள் அஞ்சாறு பேர் தினம் காலை 9 மணிக்கு கூடுவது வழக்கம். ஒரு அரை மணி நேரம் நடை, ஒரு அரை மணி நேர அரசியல் அரட்டை, ஒரு 15 நிமிஷம் அங்கேயே கெட்டிலில் விற்கும் கிரீன் டீ , பேப்பர் கப்பில் வாங்கி உறிஞ்சிட்டு வீடு, இது தினசரி ரொடீன்.
இன்னிக்கு கொஞ்சம் டென்ஷனோட போனார் பஞ்சு தாத்தா. பார்க்ல ஏற்கனவே சின்னவாடு மாமா செமெண்ட் பெஞ்சில் அமர்ந்து தினச்சரடு பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார்.
இவரை பாத்தவுடன், ”என்ன வைசாக்ல இருந்து வந்தாச்சா, கல்யாணம் நன்னா நடந்ததா, ஒரு விஷயம் தெரியுமோ என் சித்தப்பா பேத்திக்கும் அதே வைசாக்ல, அதே தேதில கல்யாணம். பத்திரிகை டயத்துக்கு கிடைச்சிருந்தா, நாங்களும் உம்ம கூட வந்திருப்போம்.”
பஞ்சு தாத்தா தன் ஜிப்பா பைல இருந்து அந்த பத்திரிகையை எடுத்து நீட்டினார்.
இது எனக்கு எதுக்குனு அசுவாரசியமா அந்த பத்திரிக்கையை புரட்டினவர், “அட சீதாராமுலு மனமராலு, ஜெகநாதகாரு கூத்துரு விஜயா….. ஓய் இதுதான்யா என் சித்தப்பா வீட்டு கல்யாணப் பத்திரிகை… இதுக்கா நீர் போயிட்டு வந்தீர்? உங்களுக்கு என் சித்தப்பாவை தெரியுமா”
பஞ்சு, “இல்லை உமக்கு வந்த பத்திரிகைனு தெரியாது உள்ளே தெலுங்கு, வெளியே கவர்ல அட்ரஸ் மழைத் தண்ணில அழிஞ்சிடுத்து. ஒரு வேளை நமக்கு தெரிஞ்சவரோனு புறப்பட்டு போயிட்டு வந்துட்டோம்”
விழுந்து விழுந்து சிரித்த சின்னவாடு மாமா, கண்ணீரை துடைத்துக் கொண்டு, ”எனக்கு ஒரு பத்து, பதினஞ்சாயிரம் ரூபாய் மிச்சம் பண்ணிட்டீர்னு” திரும்ப சிரிக்கறார்.
“இதுல வெள்ளிக் குத்து விளக்கு கிப்ட் வேறே எல்லாம் இந்த சடையால வந்த வினை, இதைக் கேட்டா பாரு என்ன சொல்லுவாளோ” நொந்து கொண்டார் பஞ்சு தாத்தா.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings