2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பஸ் ஃபிளைட் பக்கம் போய் நின்னது. அங்கே தலைப்பக்கம் ஒரு நகரும் ஏணிப்படி, வால் பக்கம் ஒரு ஏணிப்படி அதன் அருகில் நின்றிருந்த விமானப் பணியாள் போர்டிங் பாசைப் பார்த்து உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார்.
அதே மாதிரி ரெடிமேட் புன்னகை பணிப்பெண்கள் இருக்கைகளுக்கு வழி காட்டினர்..பாரு பாட்டிக்கு ஜன்னல் ஓரம், பஞ்சு தாத்தாவுக்கு நடு சீட், அவருக்கு வலது பக்கம் ஒருத்தர் புஷ்டியான உடம்புடன் சீட் பிதுங்க. அவரது கை ஒரு பக்கம், பாருவின் வளையல் குத்த ,நடுவுல பரிதாபமாக சேஃப்டி பெல்ட்டுக்குள் கட்டுண்டு கிடந்தார் பஞ்சு தாத்தா, அந்த ஒண்ணேகால் மணி நேரமும்.
வைசாக் ஏர்போர்ட் வெளியே வந்து அவர்கள் போக வேண்டிய ரேகா ரெசிடன்சிக்கு டாக்சி பிடித்தார்கள். டிரைவர் பட்டையா வீபூதி அணிந்தவர் “வாங்க ஐயா, முத தடவையா வச்சேரா வைசாக்னு* மரியாதையா டாக்சி கதவை திறந்து உக்கார வைத்தார் பழனியப்பன.
பழனியப்பன் 24 வருஷமா இங்கே டாக்சி ஓட்டுகிறார். ஹோட்டல் போகும் வரை விடாமல் தெலுங்கில் தமிழ் பேசினார். பஞ்சு தாத்தாவுக்கு பழனியப்பனை பிடித்து விட்டது. 3 நாளைக்கும் புக் பண்ணிக் கொண்டார்..
ரேகா ரெசிடன்சியில் இறக்கி விட்டு, பழனியப்பன்,“மீரு கொஞ்சம் ரெஸ்ட் எஸ்துகுனி ரெடி ஆவுங்க, அப்பறம் நாம வைசாக் சிடி சூஸ்தாம்.”
பஞ்சு தாத்தா அவன் ஸ்டைலில் தெலுங்கினார், “சால நல்லதண்டி,சீக்கிரம் பந்து பிட பேகு, உங்க மொபைல் நம்பர் ஈயண்டி”
பாரு, “என்னன்னா இது, ஏதாவது ஒரு பாஷைல பேசுங்கோ, தமிழ், கன்னடம், தெலுகுனு கலந்து புது பாஷை பேசறேளே”
“அது புரியறவா புரிஞ்சிப்பா, பிற்காலத்துல நானும் ஒரு பாஷை கண்டுபிடிச்சேன்னு பேர் வஸ்ததி காதா, கியா சம்ஜா?”
ரேகா ரெசிடன்சியில் ரூம் நன்றாகவே இருந்தது. ரெண்டு பேருக்கும் பிடித்திருந்தது.
சொன்னபடி பழனியப்பன் ஒரு மணி நேரத்தில் திரும்ப வந்தார்.அன்றைய தினம் முதலில் சிம்மாசலம் கோவில் போவதென முடிவானது.
ஹோட்டலில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரம், இந்த சிம்மாசலம் குன்று, அழகான கோவில், இதில் வீற்றிருந்து பரிபாலிக்கும் வராகலட்சுமிநரசிம்மர் அழகை பார்த்தால்தான் புரியும்.வராகம், சிம்மம், மனித ரூபம் மூன்றும் கலந்த பெருமாள்.
கீழே பக்கத்துலயே ‘பாரத் கேஃப்’ அங்கே காரை நிப்பாட்டிய பழனியப்பன், “லன்ச் இக்கட எடுத்துக்கங்க சால பாக இருக்குது,”
கோட்,சூட் போட்ட ஆண் உள்ளே கூட்டிச் சென்று இருவரையும் அமர வைத்தார். அடுத்து பெரிய வாழை இலைகள் வைக்கப்பட்டது. ரெண்டு சர்வர்கள் மடமடவென பறிமாறினார்கள். காய், கூட்டு, தயிர் பச்சடி, வெள்ளைவெளேர் சாதம், அப்பளம்னு பாத்தாலே வயிறு நிறைஞ்சிடும் போல இருந்தது.
பெரிய பெரிய கிண்ணமாக கொண்டு வந்து முன்னால வச்சார் ஒருவர். சீயக்கா பொடி மாதிரி நைசா பவுடர், எண்ணை பளபளக்க ரத்த சிவப்புல , வெள்ளையா பூண்டு சுளைகள் தலை தூக்க கொஞ்சம் பயமான ஆவகாய, இன்னொரு கிண்ணம் நெய். கோங்கூர சட்னி, வெங்காய பஜ்ஜி ஆவி பறக்க .
ஒரு வழியா உஸ்,உஸ்னு லன்ச் முடிந்தது, ஐஸ்கிரீம் சாப்பிட்டப்பறமும் நாக்கு சமாதானப் படவில்லை.
பழனியப்பன் இப்ப அவர்களை ஒரு சின்ன குன்றின் மேலிருந்த கைலாசகிரி பார்க் கூட்டிச் சென்றான். ரோப் காரில் மலையில் ஏறுவதே ஒரு தனி அனுபவம்., அங்கே இருந்து கீழே பார்ப்பதும் ஒரு சிலிர்க்க வைக்கும் அனுபவம்தான். கீழே ஆர்ப்பரிக்கும் அலைகளுடன் வங்கக்கடல். இருட்டறதுக்குள்ளே திரும்ப ஹோட்டல், தூக்கம். காத்தாலை 5.30 மணிக்கு புறப்படணுமே.
தெலுங்குல ஜொலித்த ஒரு பெரிய கல்யாண மண்டபம் ஹோட்டல்ல இருந்து 5 கி.மீ. தூரத்துல. அவர்களை இறக்கி விட்ட பழனியப்பன், “உத்தேசமா ஒரு ஒண்ணரை மணிக்கு வச்சேஸ்தானு”னு சொல்லிட்டு போயிட்டான்.
கிஃப்ட் எடுத்துண்டு பஞ்சு தாத்தாவும், நகைகள் ஜொலிக்க பட்டுப் புடவையில் பாருப் பாட்டியும் மண்டபத்தில் நுழைந்தனர். மூணு இளம் பெண்கள் ஒரே மாதிரி பாவாடை தாவணியில் நின்று கொண்டு, வரவேற்றனர்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings