in ,

வடக்கிருந்த சோழன் (சிறுகதை) – நாகராஜன் பெரியசாமி 

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

கோப்பெருஞ்சோழனின் தலைநகரான  உறையூர் மாநகரைப் பார்த்தபடி , காவிரியன்னை  ஓடிக்

கொண்டிருந்தாள் .

           நாளை  நடக்கப் போகும் துயர நிகழ்ச்சியை தன்னால்  தடுக்க முடியவில்லையே என்று கவலையுடன்  காவிரியன்னை  ஓடுவதைப் பார்த்தபடி , கரைகளில்  பெரிய மரங்களும்  தலையை     ஆட்டிக் கொண்டிருந்தன. 

           உறையூர் மாநகரில் கோப்பெருஞ்சோழனின்  அரண்மனையின் உள்ளே என்ன நடக்கிறது என்று      எட்டிப் பார்க்க ஆரம்பித்தது பௌர்ணமி நிலவு .

           நிலவைப் பார்த்தபடியே , அமைதியாக நின்றிருந்தான் கோப்பெருஞ சோழன்.

           கையில் விளக்குடன்  மன்னனை நோக்கி நடந்து வந்தாள்  பட்டத்து அரசி.

            ‘ அரசே, இருளில்  நிற்கின்றீர்களே ? ‘

             ‘ ஆம் தேவி , என்ன செய்வது என்று வழித் தெரியாமல் , இருளில் நிற்கின்றேன் ‘

             ‘ சோழ நாட்டிற்கே நல்ல ஆட்சியைக் கொடுத்து ,நாட்டு மக்களை மகிழ்ச்சியுடன் வாழ வைத்துக்  கொண்டு இருக்கும் தங்கள்  வாழ்விலும்  தீர்க்க முடியாத  பிரச்னை வந்துள்ளது .மனம் தளர வேண்டாம் அய்யனே ! யோசிப்போம் ,நல்ல வழி கிடைக்கும் ! ‘

          ‘ தேவி ! நாளை என்னை எதிர்த்துப் போர் செய்ய ,நமது மைந்தர்கள் நலங்கிள்ளி ,நெடுங்கிள்ளி இருவரும் வருகின்றார்கள். எனக்கு எதிராக என் மைந்தர்கள் ? விதியை என்ன சொல்வது ? ‘

          ‘ அய்யனே , நாம் நம மைந்தர்களை நல்ல முறையில் தான் வளர்த்தோம் . ஆனால் அலர்கள் வளர்ந்த பின்பு தான் ,தீயவழியில் சென்று , இன்று தங்களையே  எதிர்க்க துணிந்து விட்டனர் ‘

         ‘ ஆம் தேவி,  நாளை நானும் போருக்கு போய் தான் ஆகவேண்டும் .மனம் தடுக்கிறது தேவி !சரி,வா இப்போது உறங்க செல்வோம் ! ‘ என்றபடி அமைதியாக படுக்கையை நோக்கி நடந்தான் மன்னன். ///

         மறுநாள் காலை ,

        தந்தைக்கும் ,மைந்தர்களுக்கும் நடக்கப் போகும்  போரினைப் பார்த்து , ரசிப்பதற்காக  கிழக்குத் திசையில் சூரியன்  எழ ஆரம்பித்தான் .

          கோப்பெருஞ்சோழன்  முழுப் போர் உடை அணிந்து சிம்மாசனத்தில் அமர்ந்து இருந்தான்.. அருகில் அவரது நண்பரும் , அவைக் களப் புலவரும் ஆன புல்லாற்றூர் எயிற்றியனார்  நின்றிருந்தார்.                             ‘          ‘மன்னரே ,தாங்கள் இன்று போருக்குப் போவது யாருடன் ? தங்கள் மைந்தர்களுடன் அல்லவா ?’         ‘          ‘ ஆம் நண்பா , அது தான் தயங்கி நிற்கின்றேன் !’

          ‘ மன்னரே, போரில் நீங்கள் வென்று , உங்கள்  மைந்தர்கள் இறந்து விட்டால் என்ன ஆகும் ? இந்த சோழநாட்டை , உங்களுக்குப் பிறகு ஆட்சி செய்யப் போவது யார் ? ‘

          ‘ அவர்கள் இறப்பதா ? அப்படி சொல்லாதே நண்பா ! ‘

           ‘ உண்மை கசக்கத் தான் செய்யும் மன்னா ! சரி, உங்களை அவர்கள் வென்று , கைது செய்து விட்டா்ல் , நீங்கள்  சிறையில  தான் இருக்க வேண்டும் . அது உங்களால் ஏற்க முடிகிறதா ? ‘

          ‘ நண்பா, நீ சொல்வது மறுக்க முடியாத உண்மை ! கொஞ்சம் யோசிக்க வேண்டும் .உட்கார் !’              

          கண்களை மூடியபடி , யோசனையில் இருந்தான் சோழ மன்னன்.

           அறையில் அமைதி நிலவியது. 

           மெதுவாக கண்களைத் திறந்தான் மன்னன் .

          ‘ நண்பா ! நல்ல வழி ஒன்று கண்டுப்பிடித்து விட்டேன் . ஆட்சியை என் மைந்தர்களிடம்  ஒப்படைத்து விட்டு , நான் வடக்கிருந்து உயிர் விடப் போகின்றேன். ‘

          ‘ அய்யோ மன்னா ! இது என்ன முடிவு ? வேண்டவே வேண்டாம் .வேறு வழி ஏதாவது  உள்ளதா என்று சிந்திப்போம் .!’

          ‘ இல்லை நண்பா, என் இரண்டு மைந்தர்களையும்  நான் ஒழுங்காக வளர்க்க வில்லை .அவர்கள் தடம் மாறியதை தடுத்து நிறுத்தவில்லை. . எனவே எனக்கு  நானே கொடுத்துக் கொள்ளும் தண்டனை தான் இது ! ‘

        ‘ இல்லை மன்னா , இந்த முடிவை மாற்றிக்  கொள்ளுங்கள் ! ‘

         ‘ என்னுடைய மரணம் எதிர் கால சந்ததியினர்க்கு ஒரு நல்ல பாடமாக அமையட்டும் ! தங்கள் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் , இந்த சோழ நாடு முழுவதும் பரவட்டும் .! நான் வடக்கிருந்து  உயிரை விட, காவிரியாற்றின் கரையில் ஏற்பாடு செய் நண்பா !’

         போரைப்  பார்க்க  கிழக்கே உதித்த சூரியன் , சோழ மன்னனின் முடிவைப் பார்த்து திகைத்து
நின்றான் ! ///

           பாண்டிய நாடு !
           பசுமையான வயல்வெளியும் , அடர்ந்த  மரங்களும் சூழ்ந்த பிசிர் என்ற அழகிய ஊரின்  நடுவே அமைந்திருந்தது  புலவர் ஆந்தையாரின்  இல்லம் ,

          வீட்டின் முற்றத்தில்  கம்பீரமாக அமர்ந்து இருந்தார் புலவர் ஆந்தையார் . 

          புலவரின் மனைவியும் ,மகன்களும் ,பணியாட்களும  சுற்றிலும் அமர்ந்து இருந்தனர்.

         அமைதி சூழ்ந்து இருந்த அந்த இடத்தில் , காற்று வீசும் சத்தம் மட்டும் கேட்டது.

           புலவர் மெதுவாகப் பேச ஆரம்பித்தார்.

           ‘ அனைவரும் என்னைப் புரிந்து கொள்ளுங்கள் . நான் எடுத்த இந்த முடிவு  அவசர முடிவு அல்ல ..நன்கு யோசித்து எடுத்த முடிவு ! பாண்டிய நாட்டில  வாழும்  இந்த ஆந்தையார் என்ற எளிய புலவனுக்கு,, சோழநாட்டை ஆளும் பேரரசன் நண்பன் ஆக இருக்க முடியுமா ? நமது பரம்பரைக்கே பெருமை சேர்க்கும் நடபு அல்லவா இது ?’

          ‘ தந்தையே ! நட்புக்காக  அந்த சோழ நாட்டு மன்னருடன் அமர்ந்து , நீங்களும் உயிர் விட  நினைப்பது  சரியா ? இந்த குடும்பத்தை , இந்த ஊரை , இந்த பாண்டிய நாட்டை விடுத்து , சோழ நாட்டிற்கு சென்று உயிர் விடுவது முறையா தந்தையே ! ‘

           புலவர் மெல்ல புன்னகைப் புரிந்தார் .

           ‘மகனே ! நல்ல மனையாள் , நல்ல குழந்தைகள் , நல்ல நண்பர்கள்  என்று நிறைவான  வாழ்க்கை வாழ்ந்து விட்டேன். நமது ஊரில் போரில் இறந்தவர்கள் பலர் உண்டு.   நோயால் இறந்தவர்கள் பலர் உண்டு.. மிருகங்கள் தாக்கி , இறந்தவர்கள் பலர் உண்டு. .இதை எல்லாவற்றையும் விட , உயர்ந்தது நான் எடுத்த முடிவு. இறப்பு எப்போது வேண்டுமானாலும் வரும் .ஆனால் நான் என் உயிர் நண்பனுக்காக , என் உயிரைக் கொடுக்கப் போகின்றேன் . சோழ மன்னன் பெயர் இருக்கும் வரை  என் பெயரும் இருக்கும். நம் பரம்பரைக்கே ,இந்த உயிர் தியாகம் பெருமையைப் பெற்றுத் தரப் போகிறது. .நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன்  என்னை வழி அனுப்பி வையுங்கள் ,’ என்று  கூறியபடி எழுந்தார் புலவர் .

         வெளியே காத்திருந்த குதிரைகளில் ஒன்றின்  மீது ஏறி, வேகமாக செலுத்தத் தொடங்கினார் புலவர்.மற்றொரு குதிரையில் அவரைப் பின் தொடர்ந்தார் பணியாட்களில் ஒருவர். ///

          சோழ நாட்டின் தலைநகர் உறையூரின் கடைத் தெருவில் மக்கள் அங்கும் இங்கும் அலைந்து பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தனர் 

         நீண்ட தூரம் ஓடி வந்த புலவரின் இரண்டு குதிரைகளும் மெதுவாக நின்றன..ஒரு குதிரையில் இருந்து புலவர் இறங்கினார் . அவரது பணியாளும் இறங்கினார் .

         ‘ ஐயா, தாங்கள் இந்த ஊருக்குப் புதியவரா ?’ என்றுக் கேட்டபடி , அருகில் வந்தான் சோழநாட்டின் படைத்தலைவன் செழியன் .

         ‘ஆம்  வீரரே ,நான் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவன் .இந்த ஊருக்கு புதியவன்  தான் !’

         ‘ஐயா, தங்கள் பெயர் என்ன் ? ‘

         மெல்ல சிரித்தபடி  பதில் அளித்தார்  புலவர்

         ‘ வீரரே, என் பெயர் கோப்பெருஞ்சோழன் ‘

         ‘ புலவரே ! வாருங்கள் எங்கள் மன்னர் சார்பாக உங்களை வரவேற்கிறேன். என் பெயர் செழியன்.படைத்தலைவன் ஆக உள்ளேன் நான் தங்களைப் பற்றி முன்பே அறிந்து உள்ளேன்..புதியவர் யாராவது உங்கள் பெயர் என்ன்வென்றுக் கேட்டால் , உங்களுடைய உண்மையான பெயரைக்  கூறாமல் ,எங்கள் சோழமன்னரின் பெயரைக் கூறுவீர்களாம் .. நீங்கள் பிசிர் என்ற ஊரில் வாழும் புலவர் ஆந்தையார் அவர்கள் தானே ? ‘

          மெல்ல புன்னகைத்தார் புலவர் ,

          ‘ படைத்தலைவரே ! நீங்கள் உண்மையில் திறமைசாலி தான் .நான் சொன்ன ஒரே வார்த்தையில் என்னைக் கண்டுப் பிடித்து விட்டீர்கள் . ஆம் படைத்தலைவரே ! நான் அதே பிசிராந்தையார் தான் .’

          ‘ புலவர்  பெருமானே ! எங்கள் மன்னர் காவிரியாற்றின் கரையில் உள்ளார் .தனக்கு அருகே உங்களுக்கும் ஒரு இடம் ஒதுக்கி உள்ளார் .எங்கள் புலவர்கள் பலர் இதை எதிர்த்தார்கள் .ஆனால் என் நண்பன் பிசிராந்தையார்  கண்டிப்பாக வருவார், என்னுடன் இருப்பார் என்று எங்கள் மன்னர்  உறுதியாக இருந்தார் புலவரே ! எனவே காவலர்கள் பலர் உங்கள் வருகையை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தோம்  புலவரே ! ‘

         ‘ மிக்க மகிழ்ச்சி படைத்தலைவரே ! தங்கள் மன்னர் என் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு !’

        ‘ புலவரே ,வாருங்கள் ! காவிரி ஆற்றின் கரைக்குச் சென்று , வடக்கிருக்கும் எங்கள்  மன்னர் பெருமானைக் காண்போம் ! ‘///

          காவிரியாற்றின் கரையோரம் அமைக்கப்பட்டு இருந்த  மேடைகளில் , சோழ மன்னரும் , மற்ற புலவர்களும் அமர்ந்து இருந்தனர் .

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உடற்பயிற்சி பாடல் (சிறுவர் பக்கம்) – ச. பூங்குழலி, வடசேரி, தஞ்சாவூர்

    வாழ்க்கைத் துணை (சிறுகதை) – பானுமதி பார்த்தசாரதி