in ,

வாழ்க்கைத் துணை (சிறுகதை) – பானுமதி பார்த்தசாரதி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

அன்று பிப்ரவரி மாதம் 14ம் தேதி. அன்று என்ன நாள் என்று எல்லோருக்கும் தெரியும். காந்தி பிறந்த நாள், காமராஜர் பிறந்த நாள் கூட மறந்திருக்கும். காதலர் தினம் என்பது மறக்காது.

தொலைக்காட்சியில் அதற்கான பட்டிமன்றம் வேறு நடந்து கொண்டிருந்தது. வாழ்க்கை துணை தேவையா, தேவையில்லாத ஒன்றா என்பது தான் தலைப்பு. பார்லிமென்டில் வாதிடுவதைப் போல் காரசாரமான விவாதம் ஓடிக்கொண்டிருந்தது.

டிவி நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டே சியாமளா வேலைகளை முடிப்பது வழக்கம். வாழ்க்கைத் துணை என்ற வார்த்தையைக் கேட்டு அவள் உள்ளம் கேலியாக சிரித்தது.

பட்டிமன்றத்தில் கணவனுக்கு மனைவியும், மனைவிக்குக் கணவனும் வாழ்க்கைத் துணை என்று கூறியதோடு, கணவன் என்றால் அவனுக்கு சில விதிமுறைகளும் மனைவி என்றால் அவளுக்கும் சில விதிமுறைகள் உண்டு என்று டெபனிஷன் கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் அப்படியா இருக்கிறார்கள்?

சியாமளா மனதில் தோன்றும் எண்ணங்களை உடனுக்குடன் அப்படியே தன் டைரியில் எழுதி அதற்கு ஒரு உயிர் கொடுத்து விடுவாள். அப்படி எழுதி வெளிப்படுத்திய பல எண்ணங்கள், அழகிய கட்டுரைகளாகி பலர் நெஞ்சை நெகிழ வைத்துள்ளன.

பட்டிமன்ற வாக்கு வாதங்கள் முழுவதும் கேட்க வேண்டும் என்ற ஆவலுடன், சியாமளா தன் வேலைகளை முழுவதும் ஒதுக்கி விட்டு டிவி எதிரில் இருந்த ஈசிசேரில் சௌகரியமாக படுத்துக் கொண்டாள்.

ஒரு பேச்சாளர், “கணவனுக்கு மனைவியும், மனைவிக்குக் கணவனும் தான் இறுதி வரை வாழ்க்கைத் துணையாக இருக்க முடியும்” என்று வாதாடினார்.

மற்றொரு பேச்சாளர் “பிறந்து வளரும் போது பெற்றோரும், திருமணத்திற்கு பின் கணவரும், அவருக்குப் பின் இறுதி வரை பெற்ற பிள்ளைகள் தான் வாழ்க்கைத் துணையாக இருக்க முடியும்” என்று வாதிட்டார்.

அனுபவம் மிகுந்த ஒரு வயதான பெண் பேச்சாளரோ “இந்த காலத்தில் ஏறக்குறைய எல்லா ஆண்களும் கோவலன்களே!  ஆதலால் எந்த கணவனும் நல்லவன் என்று நம்பி ஏமாறக் கூடாது. பிள்ளைகளும் இந்த காலத்தில் வயதான பெற்றோரை காப்பாற்றுவார்கள் என்று நம்ப முடியாது. ஆதலால் வயதான காலத்தில் முதியோர் இல்லங்களே சரியான வாழ்க்கைத் துணை” என்று முடித்தார்.

பட்டிமன்றத் தலைவர் என்ன முடிவு சொல்லப் போகிறார் என்று சியாமளா ஆவலுடன் காத்திருந்தாள். ஆனால் அந்த நேரம் பார்த்து கரண்ட் போய் விட்டது. இன்வெர்டர் இருந்ததால் விளக்குகள் எரிந்தன, டிவி வேலை செய்யவில்லை. டிவி தான் வேலை செய்யவில்லையே தவிர சியாமளாவின் மனம் வேகமாக வேலை செய்தது.

முதலில் பேசிய பேச்சாளரின் பேச்சை அவள் மனம் அசைபோட்டது. சியாமளாவின் திருமணம் காதல் திருமணம் தான். ராகவனை ஆறு வருடங்கள் ஆழமாகக் காதலித்துத் தான் பெற்றோர்களின் பலத்த எதிர்ப்புகளோடு திருமணம் கொண்டாள்.

இரண்டு வருடங்கள் யாவரும் பொறாமைப்படும்படி தான் வாழ்ந்தார்கள். அதன் பின்னர் யார் கண் பட்டதோ, நிஷா என்ற பெங்காலிப் பெண்ணுடன் சேர்ந்து இவளை விவாகரத்து செய்து விட்டான்.

பிறந்த வீட்டிற்கு போவதற்கு இவளுக்கே ஈகோ தடுத்தது. அண்ணன்களோ, அண்ணிகளோ எங்காவது பார்த்தாலும் விரோதிகள் போல் முகத்தை கடுப்பாக வைத்துக்கொண்டு போவார்கள். இரண்டு வருட வாழ்க்கையில் குழந்தையும் இல்லை. நம்பிச் சென்ற கணவனும் கைவிட்டான். வாழ்க்கையும் எந்த வித ரசனையும் இல்லாமல் உப்பு சப்பு இல்லாமல் ரோபோ போல் தான் ஓடியது.

இவள் வாழ்க்கை தான் இப்படி ஆனது என்றால், அவளுடைய ஒன்று விட்ட சகோதரன் ரவி, மிகவும் சாது. ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை வலியச் சென்று காட்டுவான். அவன் மனைவி கீதா பார்க்க சுமாராகத்தான் இருப்பாள். ஆனால்அவளோ தன்னை பேரழகி என்று நினைத்துக்கொண்டு நம்பக் கூடாதவனை நம்பி சினிமாவில் நடிக்க ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு எங்கோ ஓடி விட்டாள்.

ஆதலால் முதலில் பேசிய பேச்சாளரின் பேச்சு சியாமளாவின் மனதிற்கு அபத்தமாகத் தெரிந்தது.

அடுத்ததாகப் பேசியவரின் பேச்சைக் கேட்டு சியாமளாவிற்கு சிரிப்புத் தான் வந்தது. இன்னும் அவர் இராமயண காலத்தில் தான் இருக்கிறார் போலும். எந்த பிள்ளை பெற்றோரை வைத்து காப்பாற்றுகிறான்? எந்த பிள்ளையும் ராமனும் இல்லை. எந்த மருமகளும் சீதா தேவியும் இல்லை.

நிறைய படித்தவர்களே, “முதியோர்கள் தனித்து வாழ்வது தான் நல்லது. பிள்ளைகளை நம்பி சொத்துக்களை இழந்து விடாதீர்கள்” என்று அறிவுரை கூறுகிறார்கள்.

எத்தனை பிள்ளைகள் வருமானம் இல்லாத பெற்றோரை அனாதை ஆஸ்ரமத்தில் சேர்த்து விட்டு மறைந்து விடுகிறார்கள். பெற்றோரிடம் நிறைய சொத்துக்கள் இருந்தாலும் அவற்றையும் நைஸாகப் பேசி எழுதி வாங்கிக்கொண்டு அவர்களை ஆதரவில்லாமல் விட்டு செல்பவர்கள் எத்தனை பேர்? ஆதலால், இரண்டாவது பேச்சாளரின் பேச்சும் தவறு தான் என்று சியாமளா முடிவு செய்தாள்.

மூன்றாவதாப் பேசியவரோ “முதியோர் இல்லமே சிறந்தது” என்று பேசினார். ஆனால் அதுவே பணத்திற்காக செயல்படும் ஒரு நிறுவனம் தானே, ஆதலால் இதுவும் வாழ்க்கைத்துணை ஆகாது.

சியாமளா தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள். ஆனால் அவள் வாழும் வாழ்க்கை தான் சிறந்தது என்று முடிவு செய்தாள்.

கற்ற கல்வியும், பார்க்கும் வேலையும் பணம் சம்பாதிக்க நல்ல வாழ்க்கைத் துணை ஆகும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் உள்ள அளவான நல்ல உறவு, அதுவும் ஒரு சிறந்த வாழ்க்கைத்துணயே. பணிபுரியும் நிறுவனமும் ஒரு சமூகப் பாதுகாப்பு.

எல்லாவற்றையும் விட, மனோ தைரியமும், தன்னம்பிக்கையும் தான் சிறந்த வாழ்க்கைத் துணை என்று பட்டிமன்றப் பேச்சிற்கு ஒரு ஜட்ஜ்மென்ட் கொடுத்துக் கொண்டாள் சியாமளா.

(முற்றும்) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வடக்கிருந்த சோழன் (சிறுகதை) – நாகராஜன் பெரியசாமி 

    உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 19) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை