வாழ்க்கை
வாழ்க்கை என்பது வியாபாரம் – அதில்
வரவு என்பது ஜனனமாகும்
செலவு என்பது மரணாமாகும்
- கவியரசு கண்ணதாசன்
வாழும் வாழ்க்கையை நிம்மதியோடும் மகிழ்ச்சியோடும் கொண்டு போக நமக்குள் எத்தனை போராட்டங்கள்! வாழும் ஒவ்வொரு பருவத்திலும் வித்தியாசமான எதிர்ப்புகளை சமளித்து வெளியேறும் நாம் தான் எத்தனை விதங்களில் போராட வேண்டியுள்ளது.
ஒவ்வொரு பருவத்திலும் வாழ்க்கையில் போராடிக் கொண்டே இருக்கிறோம். மழலையாய் இருக்கும் போது பசியை தெரியப்படுத்த அழுகையால், தாயைத் தவிர வேறு யாராவது தூக்கி விட்டால் பயத்தில் கூட அழுது நம்மைக் காப்பாற்றிக் கொள்ள போராடத் துவங்குகிறோம்.
தவழ்ந்து எழுந்து குழந்தையாய் மாறும் போது சாக்லேட்டிலிருந்து நாம் விரும்பும் பொருட்களை பெற்றோர் வாங்கித் தந்திட அடம் பிடித்து அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொள்கிறோம்.
மாணவப் பருவத்தில் படிப்பில் விளையாட்டில், கலையார்வத்தில் வித்தியாசமாய் போட்டிப் போட முயல்கிறது வாழ்க்கை.
வாலிபப் பருவத்தில் காதல் போராட்டம். தொடர்ந்து குழந்தைகள் வந்த பிறகு பணத்திற்கும் அந்தஸ்திற்கும் போராட்டம். கொஞ்சம் முதிர்ந்த பிறகு கனவுகளோடு கார், பங்களா வாங்க விரையும் போராட்டம்.
வயதான பின்பு குழந்தைகளுக்கு கல்லூரிக்கு இடம் பிடிக்கும் போராட்டம். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு திருமணம், சொத்து சேர்த்து தருவது என இறுதியில் எமனுடன் போராடுவது வரை வாழ்க்கையே ஒரு போராட்டம் தான்.
இருப்பினும் ஒவ்வொருவரும் தங்களுடைய தகுதிக்கேற்ப, கொடுத்திருக்கும் திறமைக்கு ஏற்ப நாம் வாழ்க்கையோடு போராடி வாழ்க்கையை ஜெயித்துக் கொண்டே இறுதியில் எமனோடு போராட முடியாமல் போய் விட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.
இதையே தான் ஒரு மூதறிஞர் ‘’வாழ்க்கை என்பது ஒரு நாடக மேடை. நாமெல்லாம் அதிலே நடிக்கும் கதாபாத்திரங்கள். கொடுத்திருக்கும் கதாப் பாத்திரத்தை செய்து கொண்டிருக்கிறோம்.” என்று குறிப்பிடுகின்றார். நாமும் வாழ்க்கையில் நமக்கு கொடுத்திருக்கும் கதாபாத்திரத்தை செவ்வனே செய்து முடித்து வாழ்க்கையில் வெற்றி காண்போமாக.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings