எழுத்தாளர் சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
வாப்பா முருகேசா, ரெண்டு நாளில் துணி தைத்து கொடுக்கிறேன் என்று சொன்ன நீ, ஆளையே காணோமே, என கல்யாணி கேட்டாள்.
ஆமா மா, எனக்கு பொண்ணு பார்க்க தஞ்சாவூர் போனோம், பொண்ண பார்த்துட்டு பக்கத்துல இருக்கிற மாமா வீட்டுக்கு போயிட்டு வந்தோம்.
என்ன உனக்கு பொண்ணு பிடிச்சிருக்கா, பேசி முடிச்சிட்டீங்களா?
நாங்கள் தான் போய் பார்த்துவிட்டு வந்திருக்கிறோம், அவர்கள் வந்து இன்னும் பார்க்கவில்லை, அவர்கள் வந்து பார்த்த பிறகு அப்புறம் தான் முடிவு என்னன்னு தெரியும்.
சரி பார்த்து எப்படியாவது கல்யாணத்த முடிச்சுடுங்க, அம்மாவுக்கும் வயசாயிடுச்சு, அதிகமாக வேலை செய்ய முடியவில்லை என என்னிடம் புழம்பிக் கொண்டிருந்தார்கள்.
ஆமா மா, நான் கல்யாணம் செய்து கொள்கிறேன் என சொல்லிவிட்டேன். எங்க அம்மாவுக்கு அவங்க அண்ணன் வீட்டுல இருந்து பொண்ணை எடுக்கணும்னு ஆசை, அவங்க வசதி வாய்ப்புகளோட இருக்கும் போது பத்தாங்கிளாஸ் கூட தாண்டாத எனக்கு பொண்ணு கொடுப்பாங்களா? நானும் சொல்லிப் பார்த்துட்டேன் என்றான் முருகேசன்.
நீ என்னடா அப்படி சொல்லிட்ட, சொந்தம் விட்டுப் போகக் கூடாது அப்படின்னா உனக்கு தான் உங்க மாமா, பொண்ணு கொடுக்கணும் என்றாள் கல்யாணி.
அட நீங்க வேற மா, நம்ம என்ன தொழில் பார்க்கிறோம், நான் பார்க்கிற டெய்லர் தொழிலுக்கு பணக்கார வீட்டு பொண்ண எனக்கு கொடுப்பாங்களா? நீங்களும் எங்க அம்மா மாதிரி விவரம் இல்லாம பேசுறீங்க.
அட போடா, சொந்தத்தில் கட்டிட்டோம்னா உறவுகள் உடைந்து போகாமல் இருக்கும், அதற்காகத்தான் சொந்தத்தில் பொண்ணு எடுப்பதும் பொண்ணு கொடுப்பதும் என்றாள் கல்யாணி.
அதெல்லாம் உங்க காலம், இந்த காலத்தில் பணம் முதலில், பிறகு தான் உறவுகள் எல்லாம் அவர்களுக்கு என்றான் முருகேசன்.
சரிடா, மாமா வீட்டுக்கு போன தானே? மாமா பொண்ண பாத்தியா, உன்கிட்ட பேசினார்களா, உன் மீது பாசமாக இருக்கிறாளா என கல்யாணி கேட்க முருகேசன் எதுவும் பேசாமல் மௌனமாய் யோசனையில் இருந்துக் கொண்டிருந்தான்.
என்னடா மாமா பொண்ணை கேட்டவுடனே உனக்கு வெட்கமா?
மாமா பொண்ணு காலேஜ் எல்லாம் படிச்சு முடிச்சுட்டாங்க, பார்க்கவே அழகா இருக்காங்க, அவங்க பேரு ரம்யா. என்னிடம் பேசினார்கள், எனக்கு தான் பேசுவதற்கு கூச்சமாக இருந்தது என்றான் முருகேசன்.
உங்க அம்மா அவங்க அண்ணனிடம் பொண்ணை கேட்க வேண்டியது தானே, எனக் கேட்டாள் கல்யாணி.
மாமாவுக்கு பொண்ணு பொறந்த உடனே எங்க அம்மாகிட்ட சொன்னார்களாம், என் பொண்ணு உன் பையனுக்கு தான். அதனால எதைப் பற்றியும் கவலைப்படாதே என்று சொன்னார்களாம். 23 வருஷத்துக்கு முன்னாடி எங்க மாமா சொன்னதை நம்பி எங்க அம்மா இன்னும் நம்பிக்கையோடு தான் இருக்கிறாங்க என வருத்தத்தோடு சொன்னான் முருகேசன்.
பொண்ணு பார்க்க உங்க மாமாவையும் கூட்டிட்டு போனீங்களா என கல்யாணி கேட்க,
ஆமாமா மாமாவ கூட்டிக் கொண்டு போகாமல் இருக்க முடியுமா? என்றான் முருகேசன்.
அடேய், முருகேசா.. ஒரு துணியை கொடுத்துட்டு வர இவ்வளவு நேரமா என கேட்டு கொண்டே உள்ளே நுழைந்தாள் முருகேசன் அம்மா.
வாம்மா..நான் தான் அம்மா உங்க பையனிடம் பேச்சு கொடுத்தேன், பொண்ணு பார்க்க போன கதையை தான் சொல்லிக் கொண்டிருந்தான் என்றாள் கல்யாணி.
ஆமா மா, பொண்ணு பாக்க போயிருந்தோம், இப்பத்தான் இவங்க மாமா வீட்டில் இருந்து போன் வந்தது, நாளைக்கு பொண்ணு பார்க்க வருவதாக தகவல் வந்தது. அதை சொல்வதற்காக தான் மகனை தேடினேன். அப்போது தான் இங்கு இருப்பதாக ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதனால தான் அவனைத் தேடி வந்தேன் என்றார்கள் முருகேசனின் அம்மா.
சரி, நான் கிளம்புறேன் மா என சொல்லிவிட்டு முருகேசனும், அவர்கள் அம்மாவும் வீட்டிற்கு கிளம்பினார்கள்.
பெண் வீட்டார் நாளை வரும் போது மாமாவும் வருகிறார்களா என்ன முருகேசன் கேட்க
ஆமாம் அவர்களும் வருகிறார்கள் என்றார் முருகேசனின் அம்மா.
அடுத்த நாள் மாமா வீட்டிலிருந்து அனைவரும் வீட்டிற்கு வர, எங்க பெண் வீட்டாரை காணோம் என கல்யாணி தன்னுடைய அண்ணனிடம் கேட்க
அவர்கள் வரவில்லை. நான் தான் என்னுடைய பொண்ணுக்கு மாப்பிள்ளை கேட்டு வந்திருக்கிறேன் என்று சொல்ல அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
எனக்கு பொண்ணு பிறந்த போதே என்னுடைய பெண் உன் மகனுக்கு தான் என்று சொன்னேன். நீ மறந்து விட்டாய், என் பெண்ணை கட்டிக் கொள்ள உன் பையனுக்கு விருப்பமா என கேட்டு சொல் எனக் கேட்க
என்ன மாமா? இப்படி எல்லாம் பேசுகிறீர்கள், எனக்கு சம்மதம் மாமா என முருகேசன் சொல்ல அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணியின் கனவுப்படி அண்ணன் மகளை மருமகளாக ஏற்றுக் கொண்டாள் கல்யாணி.
எழுத்தாளர் சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings