எழுத்தாளர் சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
என்னம்மா ரொம்ப நேரமா இங்கே உட்கார்ந்து இருக்கிறீர்கள்? இடம் தெரியாம வந்துட்டீங்களா, எங்க இருந்து வரீங்க என போக்குவரத்தை சரி செய்யும் காவல் அதிகாரி தன்னுடைய டியூட்டி முடிந்தது டவுன் பேருந்து நிற்கும் நிலையத்தில் ரொம்ப நேரமாக அமர்ந்திருக்கும் பெண்ணை பார்த்து கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆமாங்கய்யா, ஊருக்கு வந்த போது என்னுடைய மகன் ஒரு முகவரி எழுதிக் கொடுத்தான். எப்ப வேணாலும் நீங்கள் இங்கே வரலாம் என்று சொல்லிக் கொடுத்தான். இந்த முகவரி எங்கே இருக்கு என்று சொல்லுங்கள் நான் போய் கொள்கிறேன் என்றாள் பொன்னம்மா என்ற பெண்மணி.
போன் நம்பர் ஏதாவது இருக்கா மா
போன் நம்பர் எனக்கு தெரியாதுப்பா. எங்கிட்ட போனும் கிடையாது. என் மகனுக்கு ஊர்ல ஒரு நண்பன் இருக்கிறான், அவனுடைய போனுக்கு போன் செய்து பேசுவான். என் பையனுடைய நண்பன் ஊரில் இல்லை. எனக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லை. ஆனால் தான் கிளம்பி அவன் கொடுத்த முகவரியை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன் என்று சொன்னார்கள் பொன்னம்மா.
இந்த முகவரி முதியோர் இல்லம், இதைத் தான் உங்க பையன் எழுதி கொடுத்திருக்கிறான். நீங்கள் கவலைப்படாதீர்கள். எனக்கு அம்மா இல்லை. சிறுவயதிலேயே இறந்து விட்டார்கள். எனக்கு அம்மாவாக இருந்து என் வீட்டில் நீங்கள் தங்கிக் கொள்ளலாம் என்றார் காவல் அதிகாரி.
பொன்னம்மா கண் கலங்கி கொண்டே, என் பையனை கூலி வேலை செய்து படிக்க வைத்தேன். வேலைக்கு சென்ற இடத்தில் ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு வந்து நின்றான். சரி அவனுடைய இஷ்டம் என்று நான் எதுவும் பேசாமல் விட்டுவிட்டேன்.
ஒரே ஒரு முறை மருமகளை அழைத்து வைத்து காண்பித்தான். அதன் பிறகு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. ஐந்து வருடம் ஆகி பேரக் குழந்தையை கண்ணில் வந்து காட்டவில்லை. பலமுறை சொல்லிப் பார்த்தும் ஏதாவது காரணம் சொல்லிக் கொண்டிருப்பான். மகன் மட்டும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வந்து பார்த்துவிட்டு 500, 1000 பணம் கொடுப்பான் என்றாள் பொன்னம்மா.
நீங்கள் கவலைப்படாதீர்கள் மா, நான் உங்களைப் பார்த்துக் கொள்கிறேன் என தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றார் காவல் அதிகாரி.
போகும் வழியில் பொன்னம்மாள் அவர்களை மருத்துவமனையில் பரிசோதனை செய்துவிட்டு மருந்து மாத்திரை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினார்.
இரண்டு நாட்களில் பொன்னம்மாள் மருந்து மாத்திரை சாப்பிட்டு நன்றாக வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தார்கள்.
தன்னுடைய மகனாக காவல் அதிகாரியை ஏற்றுக்கொண்டு மனதளவில் சந்தோஷமாக இருந்தார். பொன்னம்மாள்.
காவல் அதிகாரிக்கு பிறந்தநாள் வந்தது. தன்னுடைய அம்மாவை அதாவது பொன்னம்மாளை வண்டியில் அழைத்துக்கொண்டு ஒரு பெரிய ஹோட்டலுக்கு சென்றார்.
ஹோட்டலில் அமர்ந்து இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது பொன்னம்மாள் அவர்களின் மகன் மருமகள் பேரன் என அவர்களுக்கு எதிரில் இருந்த டேபிளில் அமர்ந்தார்கள்.
தன்னுடைய மகன் எதிரில் அமர்ந்திருப்பதை பார்த்த பொன்னம்மாள் கண்ணில் இருந்து கண்ணீர் வருவதை கவனித்த காவல் அதிகாரி எதற்கு மா கண் கலங்குகிறீர்கள் என கேட்டார்.
கையை காண்பித்து தன்னுடைய மகன் என்பதை சுட்டி காண்பித்தார் பொன்னம்மாள்.
இதை கவனித்த பொன்னம்மாவின் மகன் தன்னுடைய அம்மா போல இருக்கிறது எப்படி இங்க? என யோசித்துக் கொண்டு பொன்னம்மாளின் அருகே வந்து அம்மா என கூப்பிட்டான்.
நீ யாருப்பா என பொன்னம்மாள் கேட்க
நான் தாம்மா உங்க மகன் என சொல்ல
எனக்கு உன்னை தெரியாதுப்பா என சொல்லிவிட்டு காவல் அதிகாரியை பின் தொடர்ந்து சென்றார் பொன்னம்மாள்.
எழுத்தாளர் சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings