in ,

உயிர் உள்ள வரை உஷா (அத்தியாயம் 2) மஞ்சள் சுடிதார் – பாலாஜி ராம்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

மயக்கம் தெளிந்த நிர்மல் கண்விழித்து பார்க்கிறான். இவனை, இந்தப் பெண் நடப்பாதையின் ஓரமாக உட்காரவைத்து, முகத்தில் தண்ணீர் தெளித்த பிறகு தான் இவனுக்கு மயக்கம் தெளிந்தது. பச்சை நிற புடவை அணிந்திருந்த பெண் இப்போது, மஞ்சள் நிற சுடிதார் அணிந்திருக்கிறாள். கழுத்தில் இருந்த மாங்கல்யம் இப்போது இல்லை. கால்விரலில் அணிந்திருந்த மெட்டியும் இல்லை.

“என்ன ஆச்சுங்க? அன்னிக்கும் இது போல தான் கீழே விழுந்தீங்க, இப்போ மயக்கம் போட்டு விழுந்துட்டீங்க, காலையில சாப்பிடலையா! இல்ல உங்க உடலுக்கு ஏதாவது பிரச்சனையா!” என்று அந்த பெண் கேட்டாள்.

“ஒன்னும் இல்லங்க. லேசா தலைவலி” என்று சொன்னான் நிர்மல்.

“தலைவலிக்கு கூட வா மயக்கம் போட்டு விழுவீங்க” என்று சொல்லி சிரித்தாள்.

நிர்மலின் கண்கள் இரண்டும்  அந்தப் பெண்ணின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தது. ஏனெனில், அவள் முகத்தைப் பார்த்த கண்கள், வேறு எதையும் பார்க்க நினைக்கவில்லை.

‘சரிங்க சார் பார்த்து போங்க’ என்று சொல்லிட்டு இந்த பெண் அந்த இடத்தை விட்டு நகர்கிறாள்.

ஒரு நிமிசம் நில்லுங்க.. அன்னிக்கும், நீங்க தான் என்ன தூக்கி விட்டீங்க. இன்னிக்கும், நான் மயக்கம் போட்ட பிறகு நீங்கதான் என்ன தூக்கி விட்டு, தண்ணிலாம் தெளிச்சு இருக்கீங்க. ரொம்ப நன்றிங்க உங்களுக்கு என்று சொன்னவன் தொடர்ந்து பேசலாயினான். எனக்கு ஒரு சந்தேகம், நான் மயக்கம் போடுவதற்கு முன் நீங்கள் பச்சை கலர் புடவையில் இருந்திங்க.  ஆனால் கண் விழித்து பார்த்ததும் மஞ்சள் கலர் சுடிதார் போட்டிருக்கிங்க.

அது ஒன்னும் இல்லங்க. “நீங்க மயக்கம் போடும் போது பார்த்தது என் அக்காவை, அவள் பச்சை கலர் புடவை கட்டிட்டு இருந்தாள். நீங்க  மயக்கம் தெளிஞ்சு  பார்த்தது “என்னை” நான் மஞ்சள் கலர் சுடிதார் போட்டு இருக்கேன்.

“அப்போ, உங்க அக்காக்கு தான் கல்யாணம் ஆயிச்சா. நான் வேற பயந்துட்டேன்”

‘என் அக்காக்கு கல்யாணமானால் நீங்க ஏன் பயப்படுறீங்க?’ என்று கேட்டாள்.

“நான் மயக்கம் போட்டதுக்கு பயந்து போனங்க, அதை விடுங்க அப்போ உங்க அக்கா இருந்தாங்க ஆனா உங்க அக்கா இப்ப இல்ல, அப்போ நீங்க இல்ல இப்போ நீங்க இருக்கீங்க” எனக்கு ஒன்னும் புரியல” என்று நிர்மல் கூறினான்.

என் அக்காக்கு பின்னாடி நான் நடந்து வந்துட்டு இருந்தேன். நீங்க மயக்கம் போட்டதை பார்த்த என் அக்கா என்னை கூப்பிட்டு, உங்களை தண்ணீர் தெளிச்சு எழுப்ப சொல்லிட்டு, நீங்க குடிக்கிறதுக்காக கூல்ட்ரிங்ஸ் வாங்குறதுக்கு கடைக்கு போய் இருக்காள், என்று சொல்லி முடிப்பதற்குள் அவள் அக்காவும் அந்த இடத்துக்கு கூல்ட்ரிங்க்ஸ் பாட்டிலோடு வந்தாள்.

‘இந்தாங்க தம்பி.. இந்த கூல்டிரிங்ஸ் குடிங்க களைப்பு போயிடும்’ என்று அவள் அக்கா கூறினாள்.

இதெல்லாம் வேண்டாம் என்று கூறியும், கட்டாயப்படுத்தி அவனுக்கு கூல்ட்ரிங்ஸ் கொடுத்தாள் அவள் அக்கா.

‘சரி, பார்த்து போங்க தம்பி..  வாடி, உஷா போகலாம் என்று சொல்லி உஷாவை அழைத்துக் கொண்டு செல்கிறாள் அவள் அக்கா.

“உஷா.. உஷா.. ஒரு நிமிசம் உங்களை நான் அன்னிக்கும் இங்கே தான் பார்த்தேன், இப்போதும் இங்கே தான் பார்க்கிறேன். நீங்க இங்க என்ன பண்றீங்க” என்று உஷாவிடம் கேட்டான் நிர்மல்.

நான் சனிக்கிழமை தோறும் செங்கல்பட்டு பஸ் ஸ்டாண்ட்க்கு பின்னாடி இருக்கிற  டைப்ரைட்டிங் கோச்சிங் கிளாஸ்க்கு  வருவேன் என்று சொன்னாள் உஷா.

உஷாவும், அவள் அக்காவும் அங்கிருந்து சென்றனர்.

இவனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ஏனெனில், தனது ஆசை நாயகியின் பெயரும் தெரிந்து விட்டது. அவள் வந்து போகும் இடமும் தெரிந்து விட்டது. இது போதாதா அவனுக்கு.

அன்று மறுநாளே செங்கல்பட்டு பஸ் ஸ்டாண்டுக்கு பின்னாடி உள்ள டைப்ரைட்டிங் கோச்சிங் கிளாசுக்கு சென்று, அட்மிஷன் போட்டுவிட்டான்.

தம்பி! கோச்சிங் கிளாஸ் வாரம் இரண்டு முறை இருக்கும். புதன்கிழமை ஒருநாள் நடக்கும், இன்னொரு நாள் சனிக்கிழமை நடக்கும். நீ சனிக்கிழமை கிளாசுக்கு வரியா? இல்ல புதன்கிழமை கிளாசுக்கு வரியா? என்று கோச்சிங் கிளாஸ் உரிமையாளர் பார்வதி கேட்டாள்.

“எனக்கு சனிக்கிழமை தான் வேணும் மேம்”

‘சரிப்பா, வர சனிக்கிழமை ஜாயின் பண்ணிக்கப்பா’

சனிக்கிழமை எப்போது வரும்? சனிக்கிழமை எப்போது வரும்? என்று அவன் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

புதன்.. வியாழன்.. வெள்ளி..

ஒரு வழியாக சனிக்கிழமையும் வந்தது.

கல்யாணத்துக்கு மாப்பிள்ளை எப்படி தயார் ஆவானோ, அதுபோல இவன் தயாராகிறான். கையில் ஒரு பையை எடுத்துக் கொண்டு, தன் வீட்டில் இருந்து செங்கல்பட்டு கோச்சிங் கிளாசுக்கு கிளம்பினான். இவன் கிளாசுக்குள் நுழையும் போது மணி பத்து ஆனது. அவனையும் சேர்த்து ஒரு பத்து பேர் கிளாசுக்கு இருந்தனர். ஆனால் அவன் நினைத்த ஆளு மட்டும் அங்கு வரவில்லை.

11 மணி ஆனது..

பன்னிரண்டு மணி ஆனது.. வகுப்பும் முடிந்தது. இவன் எந்த அளவுக்கு எதிர்பார்த்தானோ, அந்த அளவுக்கு தலைகீழாவே நடந்தேறியது.

“ஹாய், நீங்கதான் புதுசா ஜாய்ன் பண்ண ஸ்டூடண்டா? உங்க பெயர் என்ன?”

‘என் பெயர் நிர்மல். உங்க பெயர்?’

“என் பேரு காயத்ரி, இன்னைக்கு சொல்லி தந்தது புரிஞ்சுதா? உங்களுக்கு புரியலனா  சொல்லுங்க நான் சொல்லி தரேன்” என்று காயத்ரி சொன்னாள்.

‘ரொம்ப நன்றிங்க.  எனக்கு ஒரு சந்தேகம்’

“சொல்லுங்க எதுவாக இருந்தாலும் கேளுங்க நிர்மல்”

‘இங்க உஷானு யாராவது இருக்காங்களா?’

“இதுதான் உங்க சந்தேகமா நிர்மல்” என்று கேட்டு புருவத்தை தூக்கி பார்த்தாள் காயத்ரி.

‘இல்லங்க, அவங்க இங்கதான் படிக்கிறாங்கன்னு கேள்விப்பட்டேன்’

“ஆமா!  ஆமா! அது இங்க தான் படிக்குது, அவள் கூடயெல்லாம் பேசாதீங்க நிர்மல்” என்று முகத்தை சுழித்து கொண்டே சொன்னாள்.

அவளுக்கு இரக்க குணமே இல்ல, ஆபத்து நேரத்தில் கூட ஒரு உதவி செய்ய மாட்டாள். அவள் மனசு கல்லு என்று அவளை பற்றி இல்லாததும் பொல்லாதது  சொல்கிறாள் காயத்ரி.

ஆனால் நிர்மல் தான் உஷாவை நேரடியாகவே பார்த்திருக்கிறானே, அவளைப் பற்றி இவனுக்கு தெரியாதா என்ன? ஏதோ இவர்கள் இருவருக்கும் சண்டை போல அதனால, உஷாவை பற்றி இவள் இப்படி  தப்பா சொல்கிறாள் என்று நினைத்து கொண்டான் நிர்மல்.

ஆனால் உஷாவை பற்றி அவனுக்கு எந்த தகவலும், காயத்ரி வாயிலிருந்து வரவில்லை. எதற்கு இன்னிக்கு அவள் வரவில்லை? அவள் எப்போது வருவாள்? அவளுக்கு என்ன ஆச்சுன்னு ஏதும் தெரியாமல் அந்த நாளை கழித்தான் நிர்மல்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விழு, எழு, ஓடு… வெற்றி (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    மகா மார்பிள்ஸ் (நாவல் – அத்தியாயம் 21) – தி.வள்ளி, திருநெல்வேலி