எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
காட்சி-6
இடம் -மருத்துவமனை
பாத்திரங்கள்: எழிலரசி, சகாய நாதன், மெர்லின், எமல்டா
எழிலரசி : எங்கே எமல்டாவைக் காணோம்? ரோட்ரிக்ஸ் எப்படி இருக்கிறாரோ?
சகாய நாதன் : உள்ளே போய் நர்சிடம் கேட்டுப் பார்க்கலாம். (எமல்டா உள்ளே வந்து) வாருங்கள்
எழிலரசி : எமல்டா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் சிரித்த முகத்தைப் பார்ப்பதற்கு ரோட்ரிக்ஸ் எப்படி இருக்கிறார்.
எமல்டா : ஓரளவு குணமடைந்து முக்கிய கட்டத்தை தாண்டி விட்டார். இன்னும் ஒரு மணி நேரத்தில் ஐசியுவிலிருந்து மாற்றி விடலாமென்று சொல்லி இருக்கிறார்கள்.
(உள்ளேயிருந்து இங்கே எமல்டா யார்? என்று குரல் வர)
இருங்கள் இப்போது வருகிறேன் அவருக்கு என்னவாயிற்றோ?
சகாய நாதன்: பாவம் எமல்டா எவ்வளவு தத்தளிக்கிறார் பார். தன் கணவனை இழந்து விடுவோமோ என்று பரிதவிக்கிறதைப் பார்த்து பாவமாக இருக்கிறது.
எழிலரசி : இந்த ஆண்களை குடிக்காதீர்கள் என்று சொன்னால் கேட்க வேண்டியது தானே பாருங்கள். அவர் குடித்தே இப்படி ஆகி விட்டார். இன்னும் எத்தனை குடும்பங்களில் இந்த நிலைமை.
சகாய நாதன் : ஆமாம். தேன்மலர் குடும்பத்தைப் பார்… குமார் இறந்து போன பிறகு என்ன செய்வது என்று அவன் குடும்பம் ஆடிப் போய் நிற்கிறது. திரும்பவும் இந்த எமல்டா பதை பதைப்பாக வருகிறாளே என்ன விஷயம்.
(எமல்டா உள்ளே வர)
எழிலரசி :வாங்க எமல்டா என்னவாயிற்று.
எமல்டா : தீவிரக் கட்டத்தை தாண்டி விட்டார் ஒரு முறை விழிப்பு வந்து என்னை தேடியவர் திரும்பவும் தூங்கி விட்டார். வாருங்கள். உள்ளே போய் பார்க்கலாம்.
எழிலரசி : ஏதோ தேவனுடைய கிருபை வாருங்கள் ரோட்ரிக்ஸை பார்த்து விட்டு வரலாம்.
சகாய நாதன் : ஐசியு உள்ளே நம்மையெல்லாம் அனுமதிப்பார்களா?
எமல்டா : அவரை ஆர்டினரி பெட்டுக்கு மாற்றியாகி விட்டது.வந்து பாருங்கள்.
(மூவரும் உள்ளே வர ரோட்ரிக்ஸ் இப்போது எப்படி இருக்கிறார்)
சகாய நாதன் : ரோட்ரிக்ஸ் இப்போது எப்படி இருக்கிறீர்கள்?
ரோட்ரிக்ஸ் : இப்போது உடல்நலமாக இருக்கிறது. டாக்டர் ரெஸ்ட் எடுத்துக் கொள்ள சொல்லியிருக்கிறார்.
எழிலரசி : எப்படியோ கடவுள் உங்களைக் காப்பாற்றி விட்டார். எமல்டா உங்களுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் தெரியுமா?
ரோட்ரிக்ஸ் : பாவம்………அவளுடைய ஜெபம் தான் என்னைக் குணமாக்கிற்று
சகாய நாதன் : உண்மையிலே வல்ல தேவன் உங்களைக் குணமாக்கி திரும்ப ஒரு மறு உயிர்ப்பு தந்திருக்கிறார்.
எமல்டா : கண்டிப்பாக கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.என் கணவர் வீடு திரும்பியதும் கண்டிப்பாக ஒரு நன்றி திருப்பலி ஒப்புக் கொடுக்க வேண்டும்.
எழிலரசி : நாமெல்லாம் இப்போது சேர்ந்து இறைவனுக்கு நன்றி கீதம் பாடலாம்.
எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings