in ,

தோழரென்றே தோளணைப்போம் (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத்தமிழாழன்

தெருவோரம்   குப்பைகளைத்

            தேங்கிடாமல்  நாள்தோறும்

அருவருப்பே   இல்லாமல்

            அள்ளுகின்ற  தொழிலாளர் !

சாக்கடைகள்  அடைக்காமல்

            சந்துபொந்து  உள்நுழைந்து

தூக்கிவீசிக்   கழிவுகளைத்

            தூய்மைசெய்யும்  தொழிலாளர் !

 

குழிநிறைந்து   துர்நாற்றம்

            குடல்பிடுங்க  நம்முடைய

கழிவுநிறைத்   தொட்டிகளைக்

            கழுவுகின்ற  தொழிலாளர் !

அடிபட்டுச்  சாலையிலே

            அழுகலான  நாயுடலைப்

பிடிப்புடனே  எடுத்தேகிப்

            புதைக்கின்ற   தொழிலாளர் !

 

நோய்தொற்றும்   எனத்தெரிந்தும்

            நோக்குவதில்   தாழ்வறிந்தும்

தாய்போல   ஊர்சுத்தம்

            தனைப்பேணும்  தொழிலாளர் !

எடுபிடியாய்  நினைக்காமல்

            ஏளனமாய்ப்   பார்க்காமல்

கொடுத்திடுவோம்   மரியாதை

            கொண்டணைப்போம்   தோழரென்றே !

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நிச்சயம் ஒருநாள் கிடைக்கும் (சிறுகதை) – ச. சத்தியபானு 

    தங்கமே தங்கம் (சிறுகதை) – அர்ஜுனன்.S