in ,

திருமணம் அன்றும்-இன்றும் (கட்டுரை) – தி. வள்ளி, திருநெல்வேலி

எழுத்தாளர் வள்ளி எழுதியவற்றை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

அன்றைக்கு ஒரு கல்யாணம் என்றால் சபை நிறைய சொந்த பந்தங்கள் கூடி இருந்து சந்தோஷமாக கொண்டாடுவார்கள்.

வீட்டிலேயே பெரிய பந்தல் போட்டு …மணவறை அமைத்து.

திருமணம் நடக்கும் வளைவு வீடுகள் அதிகம். வீடுகளுக்கு நடுவே குறுக்குச் சுவர் கிடையாது. சாப்பாட்டு பந்தியும் வீட்டிலேயே ஜோராக நடக்கும். பந்திப்பாய் விரிக்கப்பட்டு, தலை வாழை இலை போட்டு, தரையில் சமணமிட்டு, அமர்ந்து சாப்பிடுவார்கள்.

வீட்டு ஆட்களே பந்தி பரிமாறுவார்கள், பந்தி விசாரிப்பார்கள், சாப்பிட்ட பிறகு பெரியவர்கள் வட்டமாக உட்கார்ந்து பேசிக் கொண்டே வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ..சேர்த்து தாம்பூலம் தரிப்பார்கள். இளசுகள் சீட்டு கச்சேரியில் ஈடுபடுவர். திருமணத்திற்கு தேவையான சாமான்கள் எல்லாம் வாடகைக்கு எடுக்கும் பழக்கம் எல்லாம் கிடையாது ..

பந்திப்பாய், ஜமுக்காளம், பெரிய ஜமுக்காளம் ,தலகாணி எல்லாமே யாராவது ஒருவர் வீட்டில் இருந்து வாங்கிக் கொள்வார்கள்.

பூக்களை பக்கத்து வீட்டு திண்ணையில் கொட்டி மாலையாக கட்டுவார்கள் …புறவாசலில் அடுப்பு வைத்து பட்சணங்கள் தயாராகும்.சுத்தமான நெய்யும் எண்ணெயும் நாசியை துளைக்கும். 

முக்கியமாக மாப்பிள்ளை அழைப்புக்கு அந்த காலத்தில் குதிரை பூட்டிய சாரட் வண்டியும் அதற்குப்பிறகு டாப் இறக்கிய காரும் உபயோகப்படுத்தப்பட்டது . கல்யாண பெண் புகுந்த வீடு போகும்போது பெண் வீட்டு உறவினர் யாராவது ஒருவர் கூட போய் 15 நாட்கள் தங்குவர் . பெண் தயக்கமின்றி என் மாப்பிள்ளை வீட்டாருடன் பழகும் வரை யாராவது கூட இருப்பார்கள் ..

ஆனால் காலம் மாற்றத்தில் இப்போது கல்யாணத்தின் எல்லா வேலைகளுக்கும் ஒரே வார்த்தை தான் ..” மேரேஜ் பிளானர் ” சொந்த பந்தங்கள் முன்னாலேயே வந்து எடுத்து செய்வது என்பது மெதுவாக குறைந்து விட்டது அதை எதிர்பார்ப்பதும் தவறு. இனி அவரவர் வீட்டு கல்யாணம் அவரவர் மட்டுமே பொறுப்பு என்றாகிவிட்டது ..

இப்போது உள்ள கல்யாணங்களில் ஆடம்பரம் அதிகமாகிவிட்டது …கல்யாண மண்டப டெக்கரேஷன்க்கு லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கிறார்கள் …அதுபோக வீடியோ ..போட்டோகிராப் ஆல்பம் ..போட்டோ சூட் எல்லாம் சேர்ந்து பல லட்சங்கள் செலவாகிறது ..சில கல்யாணங்களில் சாப்பிட முடியாத அளவிற்கு மெனு …வெளியே விதவிதமான ஸ்டால்கள் ஐஸ்கிரீம் பழங்கள் நட்ஸ் என்று வகை வகையாக.

இது ஒரு பக்கம் என்றால் முகூர்த்த சேலையில் இருந்து ஆரம்பித்து மணமக்கள் உடைகளே ஆடம்பரமாக அதிக செலவில் ..அத்துடன் பியூட்டி பார்லர் ..உடைக்கேற்ற விதவிதமான மாலைகள் ..என செலவு பட்டியல் நீளுகிறது.

இதுபோக இல்லாத பழக்கமாக வட இந்திய கல்யாணத்தில் பார்க்கும் மெஹந்தி ..கேக் வெட்டுவது எல்லோரும் சேர்ந்து நடனம் ஆடுவது ..என்ன பல புதிய பழக்கங்களும் தொத்திக் கொண்டுள்ளன. 

சொந்த பந்தங்கள் முன்னின்று வரவேற்பது என்பதெல்லாம் வழக்கொழிந்து போய்விட்டது.ரெடிமேட் புன்னகையுடன் யூனிபார்ம் சேலையயில் நிற்கும் கேட்டரிங் பெண்கள் தான் வரவேற்கிறார்கள். சாப்பிட்டீர்களா? என்று கேட்க கூட ஆட்கள் கிடையாது. நாமும் நாம் வந்ததை கேமராவில் பதிவு செய்துவிட்டு …மணமக்களை கை குலுக்கி பரிசளித்து விட்டு வந்து விடுகிறோம் .

இன்றைய கல்யாணம் மிக அதிகப்படியாக செலவில் உறவுகளின் பங்களிப்பின்றி நடத்தப்படுகிறது..ஆனால் அன்றைக்கும் இன்றைக்கும் கல்யாணங்களில் காணும் ஒரே ஒரு வித்தியாசம்.அன்றைய திருமணங்களில் இருந்த ஆத்மார்த்தம்.. உறவுகளின் பிணைப்பு இன்றைய திருமணங்களில் இல்லை. இது ஆடம்பர திருவிழா அவ்வளவுதான்.

எழுத்தாளர் வள்ளி எழுதியவற்றை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வழக்கு…நடக்கட்டும் (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்

    அலமரல் (அச்சம்) – விடியல் மா.சக்தி