in

திப்புவின் வாள் (புத்தக விமர்சனம்) – ச. பூங்குழலி, வடசேரி, தஞ்சாவூர் மாவட்டம்.

 நூலின் பெயர் : *திப்புவின்* *வாள்*

 நூலின் ஆசிரியர்: *டாக்டர்* *ஜீவானந்தம்*

 திப்புவின்( *Win* ) வாள் பற்றி பார்ப்போம்

** திப்புன்னா புலி

இவரின் தந்தை ஹைதர் அலி

எதிரிகள்  இவருக்கு சுண்டெலி

இவரால் ஆங்கிலேயர் பலர் பலி வெள்ளையரை செய்தார் காலி

இவரை எதிர்த்தால் பிறந்திடும் பயவலி விடுதலைக்கு ஏற்படுத்தினார் வழி தந்திரத்தால் பறித்தனர் இவருக்கு குழி இளைஞனே மதுவை விட்டொழி

திட்டம் தீட்டுவதில் புத்திசாலி

 பெண்களின் சுயமரியாதைக்கு பொறுப்பாளி

விவசாயிகளுக்கு கொடுத்தார் 10 குழி காவிரி நீர் வர செய்தார் வழி

வேலை செய்வோர் பெற செய்தார் நியாயமான கூலி

அனைத்து மதத்தினரையும் நினைப்பார் பங்காளி

லாபத்தில் ஏழைக்கு பங்களி யுத்தத்தில் கையாளுவார் தனி வழி

மக்கள் விரோத சட்டங்களை அழி

பறவை விலங்குக்கு வாழ்வளி போர்க்களத்தில் சவாலை சமாளி

இப்படி எழுத தூண்டுது தித்திக்கும் என் தமிழ் மொழி **

தன் தாயை மதிக்கத் தெரிந்தவன் பிறர் தாயையும் மதிப்பான் தன் மதத்தை மதிக்க தெரிந்தவன் பிற மதத்தையும் மதிப்பான் பெண்ணை மதிக்க தெரிந்தவர் பிற பெண்ணையும்   மதிப்பான்.

 * *திப்புவின்** *பிறப்பும்* *இளமையும்*

 1750 ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி பிறந்தார் மதகுருவாக வேண்டும் என்பது அவரின் குறிக்கோள் ஆனால் பின்னாளில் அவர் மன்னர் ஆனார்

 தந்தை ஹைதர் அலி

 படிப்பறிவு இல்லாமல் சாதாரண குடும்பத்தை சேர்ந்த வீரர் பின்னாளில் மன்னரானார்.

 

தந்தை ஹைதர் அலி ஹைதர்அலியின் இறப்பிற்குப்பின் மனிதனின் கடமை இந்த பூமியில் வாழ்வதும் அதை காப்பது மே வாழ்க்கை என்பதே செயல். கடமைகளை புறக்கணிப்பதே யாரும் செய்யக்கூடாது

 இல்லை அவன் மரணம் வீண் அல்ல அவன் மரணத்தால் விழுந்த வாளை எவனாவது ஒருவன் ஏதாவது ஒரு காலத்தில் எடுத்து அவன் விட்ட பணியை தொடர்வான் ஏற்றிய தீபம் அணையாது அது ஒளி கொடுத்தே தீரும்

 மகுடம் தாங்கினான் கிபி 1782 இல்

 திப்புவை வீழ்த்தி விட்டால் இந்திய பெரு நாட்டில் தம்மை எதிர்த்து எவரும் இருக்க மாட்டார்கள் மற்ற அரசர்கள் மணல்வீடு போல பிரிட்டிஷ் அலையில் கரைந்து போய் விடுவார்கள்.

 இக்ராமுல்லா யாஸ்மின் வேதனை கேட்டு  ஊர் பழி ஏற்ற உத்தமனார்.

 தன் திருமண பரிசாக ஹைதர் அலியிடம் நூலகம் அமைத்து தர வேண்டினார்

 நான்காண்டினில் திப்பு

 1788 அமில்தாரர்களுக்கு  திப்புவின் அறிக்கை வருவாய் சட்டம் 127 உடனே நடைமுறைப்படுத்துங்கள் நிதி உதவிகளை செய்யவேண்டும் கலப்பை வாங்குதல் தரிசுநிலம் சீர்படுத்துதல்  பயிர் பாதுகாப்பு குடும்ப பாதுகாப்பு.

 1790ல் காவிரியின் குறுக்கே இன்றைய கிருஷ்ணராஜ சாகர் அணை உள்ள இடத்தில் அணை கட்டிய திப்பு நாட்டிய துவக்க கல் இன்றும் இருக்கிறது.

1787 பிற மதத்தவரையும் மதிக்க வேண்டும் என்றார்.

 இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் சிரத்தை எடுத்து நடத்திய திப்பு வெள்ளையர்களின் சிம்ம சொப்பனமாக இருந்தார் . இரண்டாம் மைசூர் போர் முடிவில் தன் மகன்களை அடகு வைக்கும் நிலைக்கு வந்தார். அதிலிருந்து மீண்டு வந்தவர். எதிரிகள் துரோகிகள் சூழ்ச்சியால் 1799 ஆம் ஆண்டு மே மாதம் நான்காம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 திப்பு( **win* )வின் வீரம் மறைக்கப்பட்டால் அது தப்பு

நிறை

 டாக்டர் பி ஜீவானந்தம் அவர்களின் வார்த்தை ஜாலம் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது. அவரின் வார்த்தைகள் மேலும் அழகூட்டுகின்றன

குறை

 மாணவர்கள் படிக்கும் பொழுது சில இடங்களில்  வயதுக்கு மீறிய வார்த்தையை படிக்க வேண்டிய சூழல் உள்ளது.

 *நன்றி*

 வாசிப்பை நேசிக்கும்…..

 ச. பூங்குழலி

 வடசேரி  -614905

 தஞ்சாவூர் மாவட்டம்

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வீரமங்கை வேலுநாச்சியார் (புத்தக விமர்சனம்) – ச. பூங்குழலி, வடசேரி, தஞ்சாவூர் மாவட்டம்.

    ஒரு புறம் வேடன்!… மறு புறம் நாகம்! (சிறுகதை) – முகில் தினகரன், கோவை