in ,

தீவிரவாதம் தேவையா? (கட்டுரை) – இரஜகை நிலவன்

தீவிரவாதம் தேவையா?

‘’ஒரு மங்கையை 

விரட்டி விரட்டி 

தன் வலையில் 

விழவைப்பதும் கூட

தீவிரவாதமே”       

                           . ஒரு அறிஞர்.

இப்போதைய சூழ்நிலையில் உலகின் எந்த மூலையிலும் தலை தூக்கி நிற்கும் தீவிரவாதிகள், நக்சலைட்டுகள், சின்னச் சின்ன கூட்டமான ரவுடிகள், அரசை எதிர்த்து காடுகளில் ஒளிந்து வாழும் கூட்டங்கள், தாதா குழுக்கள் என அமைதி வாழ்வினை சீர்குலைக்க, மக்களின் அன்றாட அலுவல்களில் இருந்து சித்றடிக்க புறப்பட்டிருக்கும் இந்த அமைப்புகளால் (யாருடைய ஆதரவும் இல்லாமல்) எத்தனை சீர்குலவுகள், எத்தனை பொருளாதார சேதங்கள் என்பதை முதலில் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அமெரிக்காவில் இரண்டு இடங்களில் சேதப்படுத்தியதால் எத்தனை அப்பாவி மக்கள் உயிரிழந்தனர் என்பதை எண்ணிப்பார்க்கும் வேளையில், நாளைய கனவுகள் எத்தனை அவர்கள் சுமந்திருப்பார்கள்? ஒவ்வொருவருடைய இழப்பினால் எத்தனைக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும்.

பட்டுக்கோட்டை பிரபாகர் அழகாகச் “சிறகடித்துப் பறக்கும் அழகிய வண்ணப் பறவையை வாகாய் சுட்டு வீழ்த்தும் மனிதனே, எங்கே ஒருகணம் பூமியிலிருந்து ஓரடி மேலே பறந்து காட்டு” என தன் கதையில் குறிப்பிட்டுள்ளார்.

அதுபோல சுட்டு வீழ்த்தும் மனிதர்களை எங்கே திரும்ப உயிர்ப்பித்துக் காட்டுங்கள் பார்க்கலாம்? எந்தப் பாவமும் அறியாத எந்தவிதக் குற்றமும் செய்யாத அப்பாவி உயிர்களை அழிப்பதுதான் தீவிரவதம் எனில், அந்தத் தீவிரவாதம் இந்த உலகிற்கு தேவைதானா?

இப்படிப்பட்ட தீவிரவாதத்தை அழிக்க முற்படும் போது, மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் மக்களை திசை திருப்புவது இன்னொரு பெரிய துரதிருஷ்டம்.

இதிலே மக்களும் சிந்தித்து சீர்தூக்கிப் பார்க்காமல், ஆட்டு மந்தைபோல ஒரு தலைவன் சொல்லி விட்டான் என்பதற்காக தயங்காமல் போரிடுவது கூட சில வேளைகளில் ஆச்சரியமாகவே தெரிகிறது.

        “ஒரு தவறு செய்தால்

        அதைத் தெரிந்து செய்தால்

        அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்”

என்ற கவிஞனின் கூற்றுக்கொப்ப, தவறு செய்கிற குற்றவாளிகளை விட்டு விட்டு சாதாரண மக்களை பலிகடா ஆக்கும் இந்தத் தீவிரவாதம் நமக்குத் தேவையா? அதைக் கூண்டோடு அழித்து விட்டுத்தானே நாம் மற்றக் காரியங்களைல் இறங்க வேண்டும்.

எந்த ஒரு காரியத்திற்கும் நியாயங்கள் கற்பிக்க முடியும். ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி கவலைப்படாமல் தங்களிடைய சிந்தனைகளை செயல்படுத்த நினைக்கும் போது அந்தச் சிந்தனையை நிறைவேற்ற ஒன்றும் அறியாதவர்களை ஈடுபடுத்தி தீவிரவாதிகளை, எதிர்ப்பு சக்திகளை ஏற்படுத்திக் கொள்ள முனையும் போது அதை முளையிலே கிள்ளி எறிய வேண்டும்.

இதிலே வல்லரசு நாடுகள் தனக்கு வேண்டும் போது வளர்த்து விட்டு, தன்னுடைய மாரிலே பாயும் போது அதை அழித்து விட நினைப்பது, உலக மகா முட்டாள் தனமான காரியம்.

தன்னுடைய தேவைகளுக்கு, தன்னுடைய எதிரிகளை அழிப்பதற்கு தீவிரவாதிகளை வளர்த்து, அவர்களுக்கு தேவையான ஆயுதங்களும் பொருளுதவியும் தந்து அவர்கள் தங்களை ஒரு அளவிற்கு தயார் செய்து கொள்ளும் வரைக்கும் உதவிவிட்டு, தங்களைத் தாக்கியவுடன் அவர்களை அழித்தே தீருவோம் என்று பிரகடனம் செய்யும் போது, “தீவிரவாதம் கண்டிப்பாக ஒழிக்கப்பட வேண்டும்” என்று  ஆர்வம் எழுந்தாலும் இவர்களின் செயல் சிரிப்பாகக் கூட இருக்கிறது.

தீவிரவாதம் இந்த உலகத்திற்கு கண்டிப்பாக தேவை. அந்தத் தீவிரவாதம் எப்படி இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

உலகின் மூலை குடுக்கெல்லாம் அமைதியும் சாந்தமும் பரப்பும் தீவிரவாதம் நமக்குள் எழ வேண்டும். நோயுற்றோரின் பிணிகளைத் தீர்க்கும் மருந்துகளை தயாரிப்பதிலும் அவர்களை நோயிலிருந்து விடுவித்து கொண்டு வருவதிலும் தீவிரவாதம் வேண்டும்.

உலகெங்கும் பசி, பட்டினியால் துடிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு கொண்டு செல்வதில் தீவிரவாதன் வேண்டும்.

எங்கெல்லாம் சீர்கேடான அமைப்புகள் சிதறிக்கிடக்கின்றனவோ, அவைகளை சீரமைப்பதில் தீவிரவாதம் வேண்டும்.

நதி நீர்களை வழிப்படுத்தி, உலகெங்கும், நாடெங்கும், ஊரெங்கும், வீதியெங்கும், வீடெங்கும் கட்டிடங்கள் திரும்ப வானம் தொட்டிட அமைப்பதில் தீவிரவாதம் வேண்டு.

இவ்வுலகில் தீவிரவாதம் எங்கே எதில் வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டு செயல்படின் உலகம் என்ன? வானமும் ஏழுலகும் அமைதியின் மடியில்தான்…

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    புத்தாண்டு பரிசு (சிறுகதை) – இரஜகை நிலவன்

    வாழும் வரை போராடு (கட்டுரை) – இரஜகை நிலவன்