in ,

தீம் தரிகிட பாரதி மகள்கள் (அத்தியாயம் 4) – பாரதியின் பைத்தியம்

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்                        

காரை வேகமாக நிறுத்தி விட்டு தனது இடத்திற்குள் வேக நடை போட்டு உள் நுழைந்தான் அவன். தனது அறைக்குள் நுழைந்ததும், “கண்ணப்பா… ” என கர்ஜித்தான். 

    ” ஸார்…” என்றபடி பவ்வியமாக வந்து நின்றான் கண்ணப்பன். 

      “நான் கேட்ட டீட்டைல்ஸ் என்ன ஆச்சு? ” அவன். 

      “டீட்டைல்ஸ் கலக்ட் பண்ணியாச்சு ஸார்… ப்ராப்பர்டி பேரு ஆதவி… சைக்காலஜி ல பி.எச்.டி படிச்சுட்டு இருக்கு… அம்மா அப்பா அண்ணந்தம்பி யாரும் இல்ல… சித்தி வீட்டுல வளறுது …விசாரிச்ச வரைக்கும் ரொம்ப பயந்த சுபாவம் ஸார்… சித்தி சித்தப்பா அந்த அளவுக்கு ஒட்டுதல் இல்ல… சித்திக்கு ஒரு பொண்ணு… இப்ப தான் பத்தாவது படிச்சுட்டு இருக்கு… தூக்குனா, ஏன்னு கேக்க நாதி இல்லை ஸார்… செம வொர்த்தான ப்ராபர்டி ஸார்…” என கண்ணப்பன் கட கட என ஒப்புவித்தான்.

       ” பேரு என்ன…. ஆதவி…. ம்…. “என்று கூறியபடி தாடையை தடவி கொண்டே ,”ஆமா….. சித்தி பொண்ணு பேரு என்ன? எந்த ஸ்கூல்? “என்றான் அவன். 

      “இந்துமதி… ஸார்… நம்ம ***ஸ்கூல்ல தான் ஸார் படிக்குது…” கண்ணப்பன். 

       “சரி…. இன்னக்கி பத்து சரக்கு அனுப்பனுமே… ரெடியா இருக்கா? ” அவன்.

    ” அதெல்லாம் பக்காவா இருக்கு ஸார்… “கண்ணப்பன். 

     ” ப்ரஷ்  பீஸ் எத்தனை? ” அவன். 

      “மொத்தம் 12 ஸார்… நமக்கு ஆர்டர் பத்து தான ஸார்… அதான் பத்து ரெடியா இருக்கு… ” கண்ணப்பன். 

     ”  வழியில எதுவும் பிரச்சினை இல்ல ல? ” அவன். 

        “அதெல்லாம் ஒன்னும் இல்ல ஸார்… எல்லாருக்கும் குடுக்க வேண்டியது எல்லாம் குடுத்து செட்டில் பண்ணியாச்சு ஸார்.. ” கண்ணப்பன். 

      “ம்…. சரி… வா… சரக்கெல்லாம் ஒரு தடவ பாத்துறலாம்… “என்று கூறியபடி இருவரும் பூட்டி வைத்திருந்த ஒரு அறைக்கு சென்றனர். 

      உள்ளே ….பயந்து நடுங்கியபடி பன்னிரெண்டு பெண்கள் தனித்தனி கூண்டுக்குள் அழுது கொண்டிருந்தனர். ஒவ்வொரு பெண்ணையும் மேலிருந்து கீழாக தனது எக்ஸ் ரே கண்களால் அவர்கள் உடலில் மேய விட்டு, “கண்ணப்பா… சரக்கு அனுப்ப நேரம் ஆச்சு… சீக்கிரம் டெலிவரி பண்ணனும்… நமக்கு பன்ஞ்சுவாலிட்டி ரொம்ப முக்கியம்… சீக்கிரம் வேலைய கவனி… ” என்றான் அவன்.

     “இதோ ஸார்… “என்று கூறியபடி ,”டேய் பசங்களா…. “என்று கண்ணப்பன் கத்தியதும் எம தூதர்கள் போன்ற உருவம் கொண்ட ஐந்து பேர் வந்து அவர்களின் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டனர். 

        பன்னிரண்டு பெண்களின் கதறல்களும் கண்ணீரும் கூக்குரலும் கண்டும் காணாமல் அவனும் கண்ணப்பனும் வெளியில் வந்தனர். 

       சிறிது நேரத்தில் பெரிய பெரிய பெட்டிகளை தூக்கி கொண்டு வெளியில் வந்தனர் அந்த ஐந்து எம தூதர்கள். சீக்கிரம் டெலிவரி பண்ணிருங்க என்று உத்தரவிட்டான் அவன். 

         “கண்ணப்பா… எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு…. நான் அத முடிச்சுட்டு வர்றதுக்குள்ள நீ ஒரு வேலை செஞ்சு வை…. ” அவன். 

    ” சொல்லுங்க ஸார்… ” கண்ணப்பன். 

     கண்ணப்பனிடம் செய்ய வேண்டிய வேலையை பற்றி கூறி விட்டு அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பினான் அவன்… 

     கண்ணப்பனும் அவன் கூறிய வேலையை முடிக்க, தனது ஆட்களை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

     சிறிது நேரத்தில் கண்ணப்பனும் அவனது அடியாட்களும் ஒரு மூட்டையை கொண்டு வந்து போட்டு விட்டு ஹாய்யாக உட்கார்ந்து பிரியாணி சாப்பிட ஆரம்பித்தனர். 

      அந்த நேரத்தில் கண்கள் மட்டும் தெரிய, உடல் முழுவதும் மறைத்துக் கொண்டு , பதுங்கி பதுங்கி அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டே மெதுவாக உள்ளே நுழைந்தது ஒரு உருவம் ……. 

                 “டேய் செந்திலு…. நான் இந்த தடவ மேத்ஸ் டெஸ்ட் ல மார்க் ரொம்ப கம்மி டா…. அக்கா திட்ட போகுது டா… “என்று முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு செந்திலிடம் புலம்பி கொண்டே ஸ்கூல் முடிந்து ஸ்கூலை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தாள் இந்து மதி. 

      “மூஞ்ச இப்பிடி பாவமா வச்சுக்கிட்டா… ஆதவி அக்கா உன்னைய சும்மா விட்டுருமா? இனி உனக்கு டெய்லி ரெண்டு டெஸ்ட் வைக்கும் பாரு..” என்று கூறி நக்கலாக சிரித்தான் செந்தில். 

    ” டேய்… நானே அந்த பயத்துல தான் டா வந்துட்டு இருக்கேன்… நீ வேற பயமுருத்தாத….ஆமா… நீயும் என் கூட தான படிச்ச… அப்புறம் நீ மட்டும் எப்படி இவ்ளோ மார்க் வாங்குன? ” இந்துமதி.

      “ஆங்….அதுக்கு படிக்கனும்… புத்தகத்த விரிச்சு வச்சுக்கும் கனவு காண கூடாது… ” செந்தில்.

     “டேய்…..வர வர உனக்கு வாய் அதிகமாயிருச்சு டா…..செத்த நீ இன்னக்கி… ” என்றபடி செந்திலை துரத்தினாள் மதி.

      “ஆஆ…அஸ்கு புஸ்கு நான் சிக்க மாட்டேனே… வெவ்வவெவ்வே….”என்று பழிப்பு காட்டி விட்டு மதியிடம் சிக்காமல் ஓடினான் செந்தில். 

      “மவனே கையில மாட்டுன செத்த நீ …”என்று சிரித்துக் கொண்டே செந்திலை துரத்திய மதியின் முன் ஒரு ஆம்னி வேன் வந்து நின்று மதியை உள்ளே அள்ளி போட்டுக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்து மறைந்து சென்றது. 

      அதை பார்த்த செந்தில் செய்வதறியாது தவித்து நின்றான்….சுற்றி உள்ளவர்கள் பதறினாலும் யாரும் செந்திலுக்கு உதவ முன் வரவில்லை. திகைத்து நின்ற செந்தில் சிறிது நேரத்தில் திகைப்பில் இருந்து வெளி வந்து அழுது கொண்டே மதி வீட்டை நோக்கி ஓடினான். 

       ” அத்தை…..ஆதவி அக்கா… மாமா… யார் இருக்கீங்க… “என்று கதறியபடி புயலாக உள் நுழைந்தான் செந்தில். 

        “இப்ப எதுக்கு டா இப்பிடி அலருற? “என்று சலித்துக்கொண்டே உள்ளிருந்து வந்தாள் கோமளம். 

      “அத்தை… அத்தை… “என்று அழுதபடி நடந்ததை கூறினான் செந்தில். 

      “என்னடா சொல்லுற?” என்று பதறியபடி தனது கணவன் செல்வத்திற்கு ஃபோன் பண்ணி விசயத்தை கூறி கதறினாள் கோமளம். 

      “அத்தை… ஆதவி அக்கா இன்னும் வரலயா? “என்று தேம்பினான் செந்தில். 

      “அய்யோ… அவள மறந்துட்டேனே ..”என்று அழுது கொண்டே ஆதவிக்கு ஃபோன் பண்ணினாள் கோமளம்.

     ஆதவியின் ஃபோன் சுவிட்ச் ஆப் என வரவும் இன்னும் அதிகமாக பயந்து ஆதவியின் தோழி ஸ்வேதாவிற்கு ஃபோன் பண்ணினாள் கோமளம். 

      ஸ்வேதா, ஆதவி சீக்கிரமாகவே காலேஜ் விட்டு சென்று விட்டாள் எனக் கூறவும் மிகவும் பயந்து கதறினாள் கோமளம். 

      “சீக்கிரமா கிளம்புன ஆதவியும் இன்னும் ஆளக்காணோமே… அவ எங்கேயும் போக மாட்டாளே… ஃபோன் வேற சுவிட்ச் ஆப் னு வருதே… என் ரெண்டு பொண்ணுங்களுக்கும் என்ன ஆச்சு னு தெரியல யே…” என அழுது உருண்டு வந்தாள் கோமளம். 

   ” அத்தை… அழுவாத அத்தை …மாமா வரட்டும்… நானும் மாமாவும் போய் போலீஸ் ல கம்ளைண்ட் பண்ணி பாப்போம்… “என்று அழுதபடி கோமளத்தை தேற்றினான் செந்தில். 

      ” அய்யோ…. மதி…. ஆதவி… என் கண்ணுகளா… எங்க இருக்கீங்க…. “என்று கதறியபடி மயங்கி விழுந்தாள் கோமளம்…… 

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

                (பாரதி மகள்கள் வருவார்கள்…)

                         -பாரதியின் பைத்தியம்

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 24) – ரேவதி பாலாஜி

    விதிக்குள் விதி (சிறுகதை) – முகில் தினகரன்