in ,

தீம் தரிகிட பாரதி மகள்கள் (அத்தியாயம் 3) – பாரதியின் பைத்தியம்

    இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்               

அவள் முகத்தை பார்த்து விட வேண்டும் என்ற உந்துதலோடு முன் சென்றாள் ஆதவி….யார் அவள்? தனக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்? தனக்கு இடர் வரும் நேரத்தில் அவள் ஏன் உதவ வேண்டும்? தனக்கு இடர் வருவதை அவள் எப்படி தெரிந்து கொள்கிறாள்? அப்படியெனில் அவள் நம்மை பின் தொடர்கிறாளா? என்ற எண்ணற்ற கேள்விகளுடன் அவள் முகத்தை காண வேகமாக முன்னேறினாள் ஆதவி…. 

      வேகமாக முன்னேறிய ஆதவியின் வேகத்தை தடை செய்ய ஆதவியின் முன்னே ஒரு ஸ்கூட்டி வந்து நின்றது. 

    “ஏய் லூசு… நடு ரோட்டுல என்ன பண்ணிட்டு இருக்க? உனக்கு காலேஜ் க்கு டைம் ஆகலயா? “என்றபடி ஸ்கூட்டியில் இருந்து தனது ஹெல்மெட்டை கழட்டினாள் ஸ்வேதா. 

      “நீயாடி… நான் யாரோ னு நினைச்சேன்” என்று புன்னகைத்தாள் ஆதவி. 

      “ப்பா… என்ன ஒரு க்யூட் ஸ்மைல்… சரி.. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடி முதல்ல… ” ஸ்வேதா.

       “ஆங்… அது…. அதோ அந்த பொண்ண பாக்க போய்ட்டு இருக்கேன்… ” என்று கூறியபடி தொலைவில் அந்த ஸ்பிரிங் முடி பெண்ணை கை காட்டினாள் ஆதவி. 

     “எந்த பொண்ண…?”  என்று திரும்பி பார்த்தாள் ஸ்வேதா. அங்கு அந்த ஸ்பிரிங் முடி பெண் அந்த ரோட் சைட் ரோமியோக்களை ஒற்றை ஆளாக தூக்கி போட்டு மிதித்து கொண்டிருந்தாள். 

     “ஆத்தி…. என்னடி… பொண்ணா இவ… இப்படி போட்டு மிதிக்கிறா… அங்க பாரு அவனுக அந்த பொண்ணு காலுல மாட்டி சட்னி ஆகுறாங்க… ” ஸ்வேதா. 

     “ஹே…. அவனுக என்னைய தான்டி கிண்டல் பண்ணுனானுக ..அதுக்குத்தான் அந்த பொண்ணு அந்த அடி அடிக்குது….வாடி அந்த பொண்ணு முகத்தயாச்சும் பாப்போம்….அப்பிடியே அவங்களுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு வரலாம்… ” என ஸ்வேதாவை இழுத்தாள் ஆதவி. 

      “லூசாடி நீ….இந்நேரம் அங்க காலேஜ் ல அந்த சொட்ட மண்டை உன்னைய தேடிட்டு இருக்கும்…. ஏற்கனவே நேரம் ஆச்சு….நமக்கேன் வம்பு ?வண்டியில ஏறு போகலாம் காலேஜ் க்கு…” என ஆதவியின் ஆர்வத்திற்கு தடை விதித்து அவளை அங்கிருந்து கிளப்ப முயன்றாள் ஸ்வேதா. 

       “என் புரபஸர சொட்ட மண்ட னு சொல்லாத னு எத்தனை தடவ சொல்லி இருக்கேன் ?அவரு எவ்ளோ பெரிய மனுஷன்…. “என்று ஸ்வேதா வை முறைத்தாள் ஆதவி.

    “ஆத்தா… மகமாயி… உன் புரபஸர சொட்ட மண்ட னு சொன்னது தப்பு தான்….வழுக்கை மண்டை னு சொல்லி இருக்கனும்… தப்பு தான்… நீ முதல்ல வண்டியில ஏறு…போகலாம்….உன்னால நானும் என் புரபஸர் கிட்ட திட்டு வாங்க போறேன்.. ” என சிரிப்புடன் ஆதவியை கை எடுத்து கும்பிட்டாள் ஸ்வேதா. 

     “அந்த பொண்ணு டி….. “என இழுத்தபடி ஸ்பிரிங் முடி பெண்ணை நோக்கி கை காட்டியபடி கேட்டாள் ஆதவி. 

      “இன்னொரு நாள் பாத்துக்கலாம்.. நேரம் ஆச்சு ஆது மா… இன்னக்கி உனக்கு ரெண்டு ப்ரஷன்டேஷன் இருக்கு ல…வா வா… ” என அவசரப்படுத்தினாள் ஸ்வேதா. 

      ப்ரஷன்டேஷன் என்றதும் மனமே இல்லாமல் ஸ்வேதா வின் வண்டியில் அமர்ந்து அங்கிருந்து சென்றார்கள் ஆதவியும் ஸ்வேதாவும். 

                 

அங்கு பஸ் ஸ்டாண்டில்… 

       “ஏன்டா… பொறம்போக்கு நாயே…பொண்ணுங்க தனியா பஸ் ஸ்டாண்ட் ல நின்னுற கூடாதே உங்களுக்கு…. அவங்க நின்னா உங்களுக்கு எங்கடா வலிக்குது? “என்று  கூறியபடி அந்த ரோட் சைட் ரோமியோக்களின் மூக்கையும் வாயையும் உடைத்தாள் அவள்.

     “ஐயோ அக்கா…வலிக்குது க்கா….இனிமே இப்பிடி பண்ண மாட்டோம்… விட்டுருங்க க்கா…” என வலி தாங்க முடியாமல் கதறியது அக்கூட்டம். 

     அடிப்பதை நிறுத்தி விட்டு அவர்களை பார்த்தாள் அவள். அனைவருக்கும் மூக்கு மற்றும் வாயிலிருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. அங்கிருந்தபடியே தொலைவில் செல்லும் ஆதவியை பார்த்தாள் அவள். வண்டியில் சென்றாலும் ஆதவி இங்கேயே திரும்பி திரும்பி பார்த்து சென்று கொண்டிருப்பது தெரிந்தது. 

      “வேர் எவர் யூ கோ, ஐ வில் கம் ஃபார் யூ பேபி …”என்று ஆதவியை பார்த்து மெலிதாய் முனுமுனுத்து தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள் அவள.

     ” இப்ப இதோட விடுறேன்… இன்னொரு தடவ நான் உங்கள எங்கயாச்சும் பாத்தேன்…. அறுத்துருவேன்…. சங்க…. “என்று மிரட்டி விட்டு தனது கூலரை எடுத்து போட்டுக் கொண்டு தனது ராயல் என்ஃபீல்டில் ஸ்டைலாக ஆதவியை தொடர்ந்து பறந்தாள் அவள். 

      இவையனைத்தையும் தனது காரினுள் அமர்ந்து பொறுமையாக கவனித்துக் கொண்டிருந்தான் அவன். “ஒன்னு வாங்குனா ஒன்னு ப்ரீ போல …”என்று தனக்குள் சிரிப்புடன் கூறிக்கொண்டே தனது வேலையை தொடர்ந்தான் அவன். 

             

    கல்லூரியில் தனது புரபஸரின் வகுப்பை கவனித்துக்கொண்டிருந்த ஆதவியை ப்யூன் வந்து ,”ஆதவி மேடம்… உங்கள பாக்க ஒரு விசிட்டர் வந்து இருக்காங்க மேடம்…” என்றார். 

        “விசிட்டரா… நம்மள பாக்க சித்தி சித்தப்பா லாம் இங்க வர மாட்டாங்களே… ஒருவேளை மதி யா இருக்குமோ..” என நினைத்துக் கொண்டே யாரென பார்க்க வெளியில் சென்றாள் ஆதவி. 

         அங்கு ஃபுல் ஹேண்ட் சர்ட் ஜீன்ஸ் பேண்ட் கண்ணில் கூலர் சகிதமாய் நின்று கொண்டிருந்தாள் அவள். 

         “ஹே… நீங்க அவங்க தான ?”என்று முகம் முழுதும் பிரகாசமாய் அப்பெண்ணை நெருங்கினாள் ஆதவி. 

    ஆதவியின் சந்தோச குரலைக் கேட்டு திரும்பி பார்த்தாள் அவள். 

     குட்டி குட்டியான ஸ்பிரிங் முடி… காதை ஒட்டிய தோடு.. கண்ணில் கூலர்… சற்று பெரிதான மையிட்ட விழிகள்.. சற்று சின்ன நாசி… குட்டியான இதழ்கள்… கழுத்தில் மெல்லிய செயின்… வலக்கையில் சற்று பெரிதான வாட்ச்… ஃபுல் ஹேண்ட் ப்ளாக் கலர் சர்ட்… ஃபுளு கலர் ஜீன்ஸ்.. வொயிட் கலர் ஸ்போர்ட்ஸ் ஷூ.. என கண்ணை உறுத்தாத நவ நாகரீக பெண்ணாக நின்றாள் அவள். 

        “என்ன? என்னைய அளவெடுத்து முடிச்சாச்சா? “எனக் கூறி கொண்டே தனது கூலரை கலட்டி தனது கூர் விழிகளால் ஆதவியை கூரிட்டாள் அவள்.

        “சே.. சே ..அப்பிடிலாம் ஒன்னும் இல்லை…. நீங்க தான இன்னக்கி பஸ் ஸ்டாண்ட் ல அந்த பசங்கள அடிச்சது? நீங்க ரொம்ப ஃபோல்ட்… அண்ட் அழகா இருக்கீங்க…” என்று கூறி குழந்தையாக புன்னகைத்தாள் ஆதவி. 

      அந்த புன்னகையில் ஆழமாய் தொலைந்தாள் அவள்.இருந்தும் வெளியில் எதுவும் காட்டிக்கொள்ளாமல், சிறிதாக இதழை வளைத்து ,”தேங்க்ஸ்… ஹாய்… ஐயாம் ஆர்ணவி… நீங்க சைக்காலஜி ஸ்டூண்ட் தான? நீங்க சின்ன சின்னதா பார்ட் டைம் ல கன்சல்டேஷன் பண்றதா கேள்வி பட்டேன்… நான் உங்க கிட்ட கன்சல்டேஷன் க்கு வரலாமா ..மிஸ்…? “என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி நிமிர்வுடன் கேட்டாள் அவள் என்னும் ஆர்ணவி.

     தொழில் முறையில் தன்னை சந்திக்க வந்திருக்கிறாள் என புரிந்து ,”யா.. கண்டிப்பா.. ஆனா… என்னைய எப்பிடி உங்களுக்கு தெரியும் மேடம்? “என தன் சந்தேகத்தை கேட்டாள் ஆதவி. 

      “நீங்க என்னைய ஆர்ணவி னே கூப்பிடலாம்… நானும் கிட்ட தட்ட உங்க வயசு தான்… உங்கள பத்தி உங்க கிட்ட கன்சல்ட் பண்ணி க்யூர் ஆனவங்க ஒருத்தவங்க மூலமா உங்கள பத்தி தெரிஞ்சுக்கிட்டேன்…. “என்று வாய்க்கு வந்தபடி பொய் கூறி வைத்தாள் ஆர்ணவி. 

      “ஐ வாண்ட் யூ ஆது பேபி.. அதுக்காக தான் நான் உன் பின்னாடி வந்துட்டு இருக்கேன் பேபி… “என மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டாள் ஆர்ணவி. 

      “ஓகே ஓகே ஆர்ணவி… நாளைக்கி ஈவ்னிங் இந்த அட்ரஸ் க்கு வந்துருங்க… உங்க கிட்ட நான் பர்ஸ்னலா நிறைய பேசனும்.. அப்பிடியே ட்ரீட்மென்டும் ஸ்டார்ட் பண்ணலாம்.. இப்போ எனக்கு கொஞ்சம் தீஸீஸ் வொர்க் இருக்கு… பை ஆர்ணவி… டுமாரோ மீட் பண்ணலாம்…. “என தனது விசிட்டிங் கார்டை குடுத்து விட்டு தனது அக்மார்க் குழந்தை புன்னகையுடனே விடைபெற்றாள் ஆதவி. 

    கார்டை வாங்கி கொண்டே… “கண்டிப்பா மிஸ் ஆதவி…. நாம மீட் பண்ணி பேசியே ஆகனும் ….”என இரு பொருள் படக் கூறி விடை கொடுத்தாள் ஆர்ணவி. 

     ஆதவி செல்வதை பார்த்துக் கொண்டே திரும்பி ஓரிடத்தில் தனது கூரிய விழிகளை பாய்ச்ச… ஆர்ணவியின் கூர் விழிகளில் சிக்கி கொண்டான் அவன். 

    ஆர்ணவியின் விழிகளில் தான் சிக்கி கொண்டதை அறியாமல்,” இவளுக ரெண்டு பேரும் ஏற்கனவே தெரிஞ்சவங்களா? அப்பிடி என்ன பேசி இருப்பாளுக? சிரிச்சு சிரிச்சு பேசுனாளுகளே… எப்படி இருந்தா நமக்கு என்ன… ரெண்டு பேரையும் ப்ளான் பண்ணி கொத்தா தூக்கிற வேண்டியது தான்…” என தீர்மானித்துக் கொண்டு அங்கிருந்து அகன்றான் அவன். 

      அவன் அங்கிருந்து புறப்பட்டு சென்றதை பார்த்துக் கொண்டிருந்த ஆர்ணவி, “உன்னை நான் அறிவேன் முட்டாளே…உனக்குத் தான்டா பெரிய வலை விரிச்சு இருக்கேன்… என் கிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது…” என அவனையும், திரும்பி செல்லும் ஆதவியையும் பார்த்து சிரித்துக் கொண்டாள்…..

        யார் வலையில் யார் சிக்குவாரோ…. யார் அறிவாரோ…… 

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

                              (பாரதி மகள் வருவாள்..)

                     -பாரதியின் பைத்தியம்

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கலை (சிறுகதை) – விடியல் மா.சக்தி

    அட… நீயும் சராசரிதானா? (சிறுகதை) – முகில் தினகரன்