இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
இருளும் இல்லாத வெளிச்சமும் இல்லாத மங்கிய இருளில் அப்பெரிய கட்டிடம் குளித்துக் கொண்டிருந்தது. கட்டிடத்தின் கீழ் தளமான அந்த இடத்தில் வேலை பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. பெரிய பெட்டிகளை தூக்குவது அதை எங்கோ கொண்டு சேர்ப்பதும் வருவதுமாக ஆட்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.
யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை. இயங்கும் எந்திர மனிதர்கள் போல் சுற்றும் முற்றும் பார்க்காமல் அச்சு பிசகாமல் தங்கள் வேலையை செய்து கொண்டிருந்தனர். மெல்லிய கருப்புத் துணியால் மூக்கையும் வாயையும் மூடிக் கொண்டு முகமூடி கொள்ளையர்கள் போல் திடகாத்திரமாய் பல தடியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர் அக் கட்டிடத்தில்.
ஏற்கனவே அமைதியாக நடந்து கொண்டிந்த வேலைகள் ஒருவனின் காலடி சத்தம் கேட்டதும் இன்னும் அமைதியாக நடைபெற ஆரம்பித்தது. மெல்லிய காற்று வீசும் சத்தமும் அங்கு பெரும் புயலாய் கேட்டது.
ப்ளூ கலர் கோட் சூட்டில் கண்ணில் கூலருடன் முகத்திலும் நடையிலும் அதிக திமிருடன் இதழ்களில் இறுக்கத்துடன் நடந்து வந்து கொண்டிருந்தான் அவன். வெளித் தோற்றத்தில் கண கம்பீரமாய் திகழ்ந்தாலும் அவனது பார்வையும் முகமும் எவ்வித கொடூரத்திற்கும் அஞ்சாத நெஞ்சனாய் அவனை எடுத்துக் காட்டியது.
வேலையெல்லாம் சரியாக நடைபெறுகிறதா என தன் கூரிய கண்களால் அளவெடுத்துக்கொண்டே உள்ளே வந்தவன், உள்ளே வந்து அமர்ந்ததும் ,”கண்ணப்பா …”என இரும்பை உருக்கிய குரலில் கத்தினான் அவன்.
கண்ணப்பா என்ற பெயருக்குரியவன் ,”ஸார்….”என்று பவ்யமாக அவன் முன்னே வந்து நின்றான்.
கண்ணப்பனும் அவனிற்கு சற்றும் குறைவில்லாத கொடூர எண்ணத்தை கொண்டிருப்பதை கண்ணப்பனின் முகமே எடுத்துக் காட்டியது. பேயே கண்டு பயப்படுமாறு இருந்தது கண்ணப்பனின் உருவம். இதை விட அவன் கண்களில் தெரியும் குரூரம், எப்பேர்ப்பட்ட தைரியசாலியையும் நடுநடுங்க வைத்து விடும்.
“சரக்கெல்லாம் அனுப்பியாச்சா? ” அவன்.
” அதெல்லாம் கரெக்ட்டா அனுப்பியாச்சு ஸார். ” கண்ணப்பன்.
” ஏதாவது பிரச்னை? “அவன்.
” நம்ம கிட்ட எவன் ஸார் பிரச்சினை பண்ணுவான்? அந்த தைரியம் எவனுக்கு இருக்கு? அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல ஸார்…” கண்ணப்பன்.
“அது சரி… இருந்தாலும் கவனக் குறைவா இருந்துறக் கூடாது கண்ணப்பா.. இந்த தொழில்ல நமக்கு உடம்பு முழுக்க கண்ணா இருக்கனும்.. போலீஸ் எப்ப நம்மள மோப்பம் புடிக்கும் னு தெரியாது.. அதே நேரத்துல நம்ம மேல உள்ள பயத்த நாம அதிகப்படுத்திக்கிட்டே இருக்கனும். எல்லார் மேலயும் சந்தேகம் இருந்துட்டே இருக்கனும். அத விட டார்க்கெட்ட கரக்ட்டா முடிச்சுறனும் அப்பத்தான் தொழில் பெருகும்… “எனக் கூறி மீசையை முறுக்கி கொண்டே கண்ணப்பனை ஒரு அழுத்தமான பார்வை பார்த்தவாறு ஒரு பேய் சிரிப்பு சிரித்தான் அவன்.
கண்ணப்பனும் ஒரு சைத்தானிய சிரிப்பு சிரித்து கொண்டு, “ஸார்….அதெல்லாம் கரக்ட்டா இருப்பேன் ஸார். நம்ம டார்க்கெட் என்னைக்கும் மிஸ் ஆகாது. எப்போதும் கவனத்தோட தான் ஸார் இருக்கோம்… ” என கூறியவாறு உடல்மொழியில் பணிவைக் காட்டினான்.
“ஓகே குட்… வேற ஏதாவது? “என கேள்வியாக கண்ணப்பனைப் பார்த்தான் அவன்.
“ஒரு ஆர்டர் வந்து இருக்கு ஸார் “என பவ்யமாக அவனை ஏறிட்டான் கண்ணப்பன்.
டேபிள் வெயிட்டை ஒரு கையால் உருட்டி கொண்டே….மறு கையால் தன் தாடையை தடவி கொண்டே… “பெருசா? “எனக் கேட்டான் அவன்.
“பக்கா வெயிட் பார்ட்டி ஸார்… ” கண்ணப்பன்.
“தென் ஓகே …உள்ள கூட்டி வா…” என்று கூறி கொண்டே ஒரு இருட்டு அறையினுள் புகுந்து கொண்டான் அவன்.
சிறிது நேரம் கழித்து, கண்ணப்பன் ஒரு ஆளை அந்த இருட்டு அறையினுள் கூட்டி வந்தான். உள்ளே அவன் தன் முகத்தை மறைத்துக் கொண்டிருந்தான்.
கண்ணப்பன் கூட்டி வந்த ஆள், “ஸார் எங்களுக்கு ஒரு பொருள் வேணும் …”என நேரடியாக விசயத்திற்கு வந்தான்.
“ஃபோட்டோ? ” என இருளைக் கிழித்துக் கொண்டு கடுமையான குரலில் வினவினான் அவன்.
“இதான் ஸார்.. எங்க தலைவர் ரொம்ப எதிர் பாக்குறாரு. கொஞ்சம் சீக்கிரமா தர பாருங்க…” என்றான் புதிதாக வந்தவன் .
“அதெல்லாம் பக்காவா வேலை முடியும். அமௌண்ட் எவ்ளோ? ” அவன்.
“நீங்க எவ்ளோ கேட்டாலும் தருவோம் ஸார். பொருள் மட்டும் எங்க கைக்கு வந்தா போதும். ” புதிதாக வந்தவன் .
” ஓகே… இன்னும் ரெண்டு வாரத்துல பொருள் உங்க கையில இருக்கும். உங்க தலைவர நாங்க விசாரிச்சதா சொல்லுங்க…தொடர்நது நம்ம கிட்டயே பிஸினஸ் வச்சுக்க சொல்லுங்க… ” அவன்.
“கண்டிப்பா ஸார்… இது அட்வான்ஸ் தான்.. “என்று ஒரு பெரிய பையை குடுத்து விட்டு சென்றான் புதிதாக வந்தவன்.
அவன் சென்றதும், அந்த ஃபோட்டோவை கண்ணப்பன் எடுத்து பார்த்து விட்டு, “ஸார் பக்கா வொர்த்தான ப்ராபர்டி ஸார். தரமா இதுக்காக எவ்ளோ வேணாலும் குடுக்கலாம் …”என ஒரு சிரிப்பு சிரித்தான் கண்ணப்பன்.
“அப்பிடியா?” என்ற ரீதியில் கண்ணப்பனை பார்த்து விட்டு அந்த ஃபோட்டோவை பார்த்தான் அவன்.
“இதை நானே தூக்கனும் னு நினைச்சுட்டு இருந்தேன், இப்ப வேலையாவே வந்துருச்சு …”என மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டான் அவன்.
“கண்ணப்பா….நாளைக்கி இந்த ப்ராப்பர்டி ய பத்தி ஃபுல் டீடைல்ஸ் என் கிட்ட வந்து இருக்கனும்.. காட் இட்?” என கண்ணப்பனுக்கு ஆணையிட்டான் அவன்.
“சரிங்க ஸார்…” என பவ்யமாக தலை ஆட்டிக் கொண்டே அங்கிருந்து சென்றான் கண்ணப்பன்.
அந்த ஃபோட்டோவை பார்த்து சிரித்துக் கொண்டே அதை டேபிளில் வீசி எறிந்தான் அவன். “நான் வச்ச குறி தப்பாது …”எனக் கூறி கொண்டே அந்த ரூம் அதிர பேய் சிரிப்பு சிரித்தான் அவன்.
அவன் வீசி எறிந்த ஃபோட்டோ அங்கு உள்ள டேபிளில் போய் விழுந்தது. அதில் அழகாக சிரித்துக் கொண்டிருந்தாள் ஆதவி.
(வருவாள் பாரதி மகள்..)
-பாரதியின் பைத்தியம்
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings