2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
குழந்தைகள் இருந்தா சளி பிடிக்க தான் செய்யும், காய்ச்சல் வரத்தான் செய்யும் கீழே விழுந்தால் அடிப்படத்தான் செய்யும். இதுக்காக நீ மூஞ்சிய தூக்கி வச்சிருந்தேனா என்ன அர்த்தம் என தன் மனைவி பிரியாவை சத்தம் போட்டுக் கொண்டிருந்தான் கணவன் வரதன்.
உங்க அம்மாவுக்கு சளி பிடித்து இருந்ததுனால தான் இவனுக்கு ஒட்டிக்கிச்சு. நான் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறேன். குழந்தையை தூக்காதீங்க, தூக்காதீங்க என்று எத்தனை தடவை சொல்வது. இப்ப பாருங்க கஷ்டப்படுறது யாரு, என் மகன் தான கஷ்டப்படுறான் என மனைவி பிரியா புலம்பினாள்.
நெக்ஸ்ட் தர்ஷன் என்ற பெயரை செவிலியர் கூப்பிட நான்தான் என சொல்லிக் கொண்டேன் பிரியாவும் வரதனும் தன் குழந்தை தர்ஷனை அழைத்துக் கொண்டு டாக்டரின் அறைக்கு சென்றார்கள்.
மருத்துவரிடம் சீக்கிரம் குணமாகி விட வேண்டும், அதற்குத் தகுந்தார் போல மருந்து மாத்திரை கொடுங்கள் என்றாள் பிரியா.
சளி பிடிச்சா ஒரு வாரம், பத்து நாள் இருந்துட்டு தான் போகும். உடனே சளி போகாது. எந்த நோய் யாருக்கு வந்தாலும் மூணு நாள்ல இருந்து அஞ்சு நாள் வரைக்கும் இருக்கத் தான் செய்யும். மருந்து மாத்திரை மட்டும் தவறாமல் கொடுங்கள், அது போதும் . குழந்தைக்கு ரசம் சாதம் கொடுங்கள்.
மூணு நாள் இந்த மாத்திரை கொடுங்கள் அதற்குள் சரியாகிவிடும் சரியாகவில்லை என்றால் குழந்தையை எடுத்து வாருங்கள் என்றார் மருத்துவர்.
சரிங்க டாக்டர் என்று சொல்லிவிட்டு குழந்தை அழைத்துக் கொண்டு மருந்து கடையில் மருந்தை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள் பிரியாவும், வரதனும்.
எப்படி சளி பிடித்தது என்று பிரியாவின் மாமியார் கேட்க ஒன்றும் தெரியாதது போல நடிக்காதீங்க என்றாள் பிரியா.
நேத்து ராத்திரி தும்மல் போட்டுகிட்டே இருந்தீங்க என்று பிரிய சொல்ல அதற்கு பிரியாவின் மாமியார் ஓ…..நேத்திக்கு ராத்திரி தும்மல் போட்டதை சொல்றியா என கேட்க ஆமாம் என்று முகத்தை சுழித்துக் கொண்டே வீட்டு வேலையை பார்த்தாள்.
நான் கட்டிலில் அமர்ந்து இருந்த போது கொசு மூக்குக்குள் போய்விட்டது. அதற்காக துண்டில் உள்ள நூலை திரியாக திரித்து மூக்கில் விட்டு தும்மினேன் என்றால் பிரியாவின் மாமியார்.
அப்போ உங்களுக்கு சளி பிடிக்கலையா என்று கேட்க, எனக்கு சளியும் பிடிக்கல புலியும் பிடிக்கல என்று சொல்லியவாறு மனதில் வருத்தத்தோடு தன்னுடைய அறைக்குச் சென்று படுத்துவிட்டாள் பிரியாவின் மாமியார்.
அடுத்த நாள் மதியம் பிரியாவின் அம்மா ஊரிலிருந்து வந்தார்கள். அம்மாவைப் பார்த்ததும் பிரியாவிற்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.
என்னம்மா விசேஷம் திடீரென்று வந்திருக்கிற என்று கேட்க இரண்டு நாட்களாக எனக்கு முடியவில்லை காய்ச்சல் பயங்கரமாக இருந்தது இப்போது கொஞ்சம் பரவாயில்லை.
உங்க அண்ணனும் அண்ணியும் எங்கேயோ வெளியூர் போகிறார்களாம். அதனால் என்னை உங்க வீட்டில் ஒரு பத்து நாள் ஓய்வு எடுத்து வரச் சொன்னார்கள் என்று சொன்னாள் பிரியாவின் அம்மா.
இப்ப எப்படிம்மா இருக்கு என்று கேட்டுக் கொண்டே நெற்றியில் கை வைத்து பார்த்தாள் பிரியா. என்னம்மா ஜுரம் அடிக்குது இன்னும், மருந்து மாத்திரை சாப்பிட்டீர்களா என கேட்கும் போது குழந்தை அழுதது.
தொட்டியில் இருந்து அழுத குழந்தையை தூக்கிக்கொண்டு வந்து அம்மாவிடம் கொடுத்தாள். ஏய் அம்மாச்சி வந்திருக்காங்க கண்ணை திறந்து பாருடா என குழந்தையிடம் சொல்லிக் கொண்டிருக்க பிரியாவின் கணவன் வரதன் வேகமாக வந்து குழந்தை தர்ஷனை வாங்கிக் கொண்டு அவங்களுக்கு காய்ச்சல் தானே குழந்தையை கொண்டு போய் அவர்களிடம் கொடுக்கிறாய் என சொல்லிக் கொண்டே குழந்தையை வாங்கிக் கொண்டு அம்மாவின் அறைக்குச் சென்றான் வரதன்.
பிரியாவுக்கு கணவன் கேட்ட வார்த்தை சவுக்கால் அடித்தது போல இருந்தது. எதுவும் பேசாமல் அம்மாவிற்கு காபி கொடுப்பதற்காக சமையலறைக்குச் சென்றாள்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings