எழுத்தாளர் சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அம்மா நான் பெரிய புள்ளையா ஆயிட்டேன், நானே இனிமேல் பள்ளிக்கூடத்துக்கு தனியா போய் விடுவேன். நீங்கள் என்னுடன் வர வேண்டாம் என்றாள் 12 வயது காயத்ரி.
நீ பொம்பள பிள்ளை மா, தனியாக உன்னைய அனுப்ப முடியாது என்றாள் தாய்.
அப்புறம் எதற்காக என்னிடம் நாங்க எல்லாம் பள்ளிக்கூடம் போகும் போது எங்களை எல்லாம் யாரும் கூட்டிட்டு போக மாட்டாங்க, நாங்களா தான் போவோம் வருவோம் என அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பீங்க. அப்ப அது மட்டும் சரியா? எனக் கேட்டாள் காயத்ரி.
அந்த காலம் வேற, இந்த காலம் வேற. அந்த காலத்தில் கோடைகால வந்துவிட்டால் தெருவில் உள்ள அனைவரும் கட்டிலே வெளியே போட்டு அனைவரும் தூங்குவார்கள். பெண்களும் வெளியே திண்ணையில் பயமில்லாமல் படுத்து தூங்குவார்கள். இன்று அது போல தூங்க முடியுமா என்றாள் தாய்.
அம்மா பழைய கதை எல்லாம் விடுங்க, என்னைய நீங்க ஸ்கூலுக்கு தனியாக அனுப்ப முடியுமா முடியாதா என காயத்ரி கேட்க
நீ பத்தாம் வகுப்பு படிக்கும் போது தனியாக பள்ளிக்கூடத்துக்கு போகலாம் அதுவரை நான் அல்லது உங்க அப்பா தான் உன்னை அழைத்துப் போவார்கள் என்றாள் தாய்.
எனக்கு தான் சைக்கிள் ஓட்ட தெரியுமே நான் ஒரு நாள் சைக்கிளில் போய்விட்டு வருகிறேன் என்று காயத்ரி கெஞ்ச
சரி அடுத்த வாரத்தில் போகலாம் என்றாள் தாய். உங்க அப்பா கிட்ட வேற அனுமதி வாங்க வேண்டும் என்று அம்மா சொல்ல
அப்பாவை நான் ஓகே சொல்ல வைத்து விடுவேன் என்றாள் காயத்ரி.
இருவரிடமும் சம்மதம் வாங்கிக் கொண்டு பள்ளிக்கு சைக்கிளில் செல்ல தயாராக இருந்தாள். இருந்தாலும் மனதுக்குள் ஒரு பயம் ஓடிக்கொண்டே இருந்தது காயத்ரிக்கு. வெளியே காட்டிக் கொள்ளாமல் அம்மா அப்பாவுக்கு டாட்டா சொல்லிவிட்டு கிளம்பினாள்.
காயத்ரியின் அம்மா தன் கணவரிடம் ஏங்க நம்ம புள்ள தனியா போகுது, நீங்க கொஞ்சம் பின்னாடியே போய் பாத்துட்டு வாங்க என சொல்ல
எனக்கு தெரியாதா இதோ பின்னாடி போய் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார் கணவர்.
சிறிது தூரம் காயத்ரி சென்றவுடன் அவள் பின்னாடியே வாலிப வயதில் உள்ள பையன்கள் இரண்டு பேர் வந்து கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்த அவளுக்கு பயம் வந்துவிட்டது. சைக்கிளை விட்டு கீழே இறங்காமல் வேகமாக பள்ளியை நோக்கி சென்றாள் காயத்ரி.
காயத்ரியின் அப்பா பின்னாடி சென்றார். பள்ளி வந்தவுடன் காயத்ரி சைக்கிளிலிருந்து கீழே இறங்கவும் காயத்ரியின் அப்பா வந்து சேரவும் சரியாக இருந்தது.
அப்பாவை பார்த்தவுடன் அவளுக்கு அழுகை வந்து விட்டது. இனிமேல் நான் பள்ளிக்கு தனியாக வரமாட்டேன் நீங்களே என்னை தினமும் அழைத்து வாருங்கள் என சொன்னாள்.
ஏம்மா? என்று அப்பா கேட்க சிறிது தூரத்தில் இருக்கும் பையன்களை காண்பித்து இவர்கள் என் பின்னாடியே என்னை துரத்திக் கொண்டு வந்தார்கள் என்றாள் காயத்ரி.
முதலாளியை பார்த்த பையன்கள் இருவரும் அவரை நோக்கி வந்தார்கள். அப்பா, வராங்க பாருங்கப்பா அவங்க தான் என்று சொல்ல
பையன்கள் இருவரும் முதலாளியிடம் வணக்கம் சொல்லிவிட்டு பாப்பா சைக்கிளில் தனியா போனதை பார்த்தவுடன் நாங்கள் பாப்பாவின் பின்னாடியே வந்தோம். பள்ளி வந்தவுடன் நாங்கள் டீ சாப்பிட சென்றோம் என்று சொல்ல
காயத்ரியிடம் நம்முடைய கடையில் வேலை செய்யும் பையன்கள் தான் என்று அப்பா சொல்ல
அச்சச்சோ நம்ம தான் பையங்களா தவறா புரிஞ்சுகிட்டோமோ என்று வருத்தப்பட்டாள் காயத்ரி.
இனிமே தனியா வரமாட்டேன். நீங்களே கொண்டு வந்து விடுங்கள் என அப்பாவிடம் சொல்லிவிட்டு பள்ளிக்குள் சென்றாள் காயத்ரி.
எழுத்தாளர் சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings