in ,

தமாசு… தமாசு… (ஒரு பக்க கதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

எழுத்தாளர் சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

இறுதி ஊர்வலம் வண்டி வாங்காதீர்கள் என்று சொல்லியும் வண்டிய  வாங்கி இருக்கீங்க, என மீனா  கணவன் முரளியிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.

மத்த வண்டி போல தானே இந்த வண்டியும் வாடகைக்கு  விடப்போகிறேன் என கணவர் சொல்லிக் கொண்டிருக்கையில் கைபேசி  அடித்தது.

எதிர்முனையில் இருந்து மாமனார்,  எனக்கு உடல்நிலை முடியவில்லை இரண்டு பேரும் கிளம்பி வாருங்கள் என சொல்ல பக்கத்து கிராமத்தில் இருக்கும்  மீனாவின் அப்பா வீட்டிற்கு இருவரும் சென்றார்கள்.

என்னப்பா செய்கிறது?  என  மீனா கேட்க நேற்று விருந்துக்கு போய் சாப்பிட்டதில் ஏதோ ஒத்துக்கலை, வயிறு வலிக்கிறது  என சொன்னார்.

உடனே மருமகன் முரளி தன்னுடைய மாமனாரிடம் நான் வாங்கிய புது வண்டிக்கு நீங்கள் தான் முதல் போணியா எனக் கேட்க அவர் திரு திரு என முழிக்க,  மீனா அருகில் இருந்த தண்ணீர் சொம்பை தூக்கி கணவர் மேல் போட தலை தெறிக்க ஓடினான் முரளி.

எழுத்தாளர் சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தொடுவானம் மிக அருகில் ❤ (பகுதி 13) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    சட்டத்தில் இடமில்லை (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்