எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
வாசலில் நிழலாடியதைக் கவனித்த ஐ.ஜி.அருள் எஸ்,கம் இன் என்றார்.
உள்ளே வந்த டி.எஸ்.பி.அழகேசன், வணக்கம் சார் என்று சல்யூட் அடிக்க வணக்கம் உட்காருங்க என்ன விஷயமாக வந்தீங்க என்று கேட்டார்.
சார், நான் ஏற்கனவே உங்களிடம் சொன்ன விஷயம் தான். நேற்றுக் கொஞ்சம் அத்து மீறி போய்விட்டது என்றார் டி.எஸ்.பி.அழகேசன்.
எது? அந்தக கட்சி பிரமுகர் – கணேசன் விஷயம் தானே?
ஆமாம் சார். லேடீஸ் பார் என்கிற பெயர் போட்டுக் கெண்டு வேறு தொழில் பண்ணிக் கொண்டிருக்கிறார். ராத்திரி 12 மணிக்கு மேலே கடையை அடைக்கச் சொல்லப்போனால் கான்ஸ்டபிள்களை அடித்து விரட்டுகிறார்.
ஒரு கல்லூரிப் பெண்ணைக் கற்பழித்த கேஸை பைல் பண்ணியதற்கு போலீஸ் ஸ்டேஷன் வந்து பேப்பர்கள், பைல்கள் எல்லாவற்றையும் கிழித்து எறிந்து விட்டுப் போயிருக்கிறார். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்ட எஸ்.ஐ.யைப் பிடித்து இழுத்துப் போட்டு அடித்திருக்கிறார். பொதுமக்கள் கொதித்துப்போயிருக்கின்றனர். இன்னும் அவரை கைது செய்யவில்லை என்றால் நம் காவல் துறைக்கே கெட்டபேர் ஏற்படும் சார் என்றார் அழகேசன்.
ஆளுங்கட்சியிலே கணேசன் கொஞ்சம் செல்வாக்கு உள்ளவர். நீங்கள் நினைக்கற மாதிரி அவ்வளவு எளிதாக கைது செய்ய முடியாது. நான் இன்றைக்கே முதல்வரிடம் பேசி ஒரு முடிவு சொல்கிறேன் என்றார் ஐ.ஜி.அருள்.
சரி சார், சல்யூட் அடித்துவிட்டுக் கிளம்பினார் அழகேசன்.
முதல்வரோடு கட்சித் தலைவரும், கணேசனும் உணவருந்திக் கொண்டிருந்தனர்.
என்ன கணேசன், இப்படித் திரும்ப திரும்ப ஏதாவது வேண்டாத வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள். இனி கண்டிப்பாக உங்களைப் பிடிக்க கைது வாரண்ட் கொடுக்கச் சொல்ல வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளிவிட்டு வீட்டீர்களே என்றார் முதல்வர்.
அட..என்ன சார் சொல்றீங்க. நடக்க வேண்டிய வேலையைப் பாருங்க. என்னைப் போலீஸ் வந்து பிடிக்கிறதாக இருந்தால் அப்புறம் நீங்க இந்த சீட்டிலே இருக்க வேண்டாமா? ஆமாம் தலைவர் ஏன் மௌனமாக இருக்கிறார். தலைவரே! நீங்களும் அவருக்கு சப்போர்ட் பண்ற மாதிரியில்லே தோணுது என்றார் கணேசன்
நான் கட்சித் தலைவரிடம் ஏற்கனவே பேசி முடிவெடுத்தாகி விட்டது என்றார் முதல்வர்.
என்ன தலைவரே, உங்களுக்கு நான் செய்யாத உதவிகளா? அந்த சினிமா நடிகை கற்பழிப்புக் கேஸிலே கூட உங்கள் பெயர் வராமல் என் பேரிலே தப்பை போட்டு ஒத்துக் கொண்டேன். என்னை போலீஸ் வந்து கைது பண்ண அனுமதி கொடுத்து விட்டர்களாமே? இது நிஜமா? கணேசன் கோபத்தோடு சாப்பாட்டு மேஜையிலிருந்து எழுந்தார்.
கோபப்படாதே கணேசா, உன்னிடம் எத்தனை முறை போன் பண்ணிச் சொன்னேன். நீ என் பேச்சைக் கேட்கல்லே. நாம் ஆட்சியை பிடித்தாகிவிட்டது. இனி கொஞ்சம் அடக்கி வாசிப்போம் என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறேன். உன்னைக் கைது செய்ய வேண்டாமென்று ஏற்கனவே முதல்வரிடம் ஆயிரம் முறை ஏற்கனவே செய்த தவறுகளுக்கு சொல்லியாகிவிட்டது.
இந்த முறை நீ சப்-இன்ஸ்பெக்டரை பிடித்து அடித்திருக்கிறாய். காவல்துறை உன் மீது கோபத்தில் இருக்கிறது. இன்னும் உன்னைக் கைது செய்து வேண்டாம் என்றால் போலீஸ் படையும் பொதுமக்களும் கொந்தளித்து எழ ஆரம்பித்து விடுவார்கள் என்றார் கட்சியின் தலைவர்.
தலைவரே! இந்த ஒரு முறையையும் என்னை மன்னித்து விட சொல்லுங்கள். இனி கொஞ்சநாட்களுக்கு எந்தப்பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்கிறேன். என்னைக் கைது செய்ய வேண்டாமென்று இந்த ஒரு முறையும் சொல்லுங்கள் என்றார் கணேசன். தலைவரின் கையைப் பிடித்துக் கொண்டு.
சரி முதலில் முதல்வரிடம் மன்னிப்பு கேள்,
ஸாரி அண்ணே! என்றார் கணேசன் முதல்வரைப் பார்த்து.
முதல்வர் நீ அடித்த அந்த சப்-இன்ஸ்பெக்டரை கூப்பிட்டு பணத்தைக் கொடுத்து அவனைப் பேச விடாமல் பண்ணாயிடு என்றார்.
சரி தலைவரே என்றார் கணேசன்.
எல்லாவற்றுக்கும் பொறுத்துக் கொண்டிருந்த டி.எஸ்.பி.அழகசேனுக்கு, கணேசனை கைது செய்ய வேண்டாம் என்று ஐ.ஜி.சொன்னதிலிருந்து கோபம் தலைக்கேரி போய் விட்டது.
இந்த கட்சி பிரமுகர் கணேசன் இந்த முறையும் தப்பி விட்டான். அடிபட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு பணத்தைக் கொடுத்து வாயை மூடிவிட்டார். இவனுடைய கொட்டம் தாங்க முடியவில்லையே. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தவர் திடீரென்று ஏதோ ஐடியா உதிக்க, போனை எடுத்து டயல் பண்ணி ஹலோ கணேசன இருக்கிறார்களா? என்று கேட்டார்.
கணேசன் வெளியூருக்குப் போயிருக்கிறார். நீங்கள் யார்? என்றது எதிர்முனை.
ம்…உங்க தாத்தா என்று கோபத்துடன் ரிசீவரைவைத்து விட்டு உடைமாற்றிக் கொண்டு ஸ்டேஷனுக்கு வந்த அழகசேன், தன்னுடன் ஒரு இன்ஸ்பெக்டரையும் நான்கைந்து கான்ஸ்டபிள்க ளையும் அழைத்துக்கொண்டு கணேசன் பீர் பாருக்கு கிளம்பினார்.
எல்லோரும் வந்து கணேசனின் பீர் பாரை சூழ்ந்து கொள்ள உள்ளே நுழைந்த அழகேசன், கணேசனின் மகன் குமாரை அடித்து இழுத்து வந்து ஜீப்பில் ஏற்றினர்.
குமார், கையிலிருந்த மொபைல் போனில் டயல் செய்ய முற்பட அதை வாங்கித் தூர எறிந்து விட்டு அவனை ஜீப்பில் கொண்டுபோய் ஏற்றிவிட்டுப் புறப்பட வயர்லெஸ் அலறியது. அழகேசன் வயர்லெலை எடுத்துப் பேசினார்.
ஹலோ நான் டி.எஸ்.பி.அழகேசன் பேசுகிறேன். ஓவர்.
நான் ஐஜி.பேசுகிறேன். நீங்கள் பிடித்து வைத்திருக்கும் கணேசளின் மகன் குமாரை விட்டு விடுங்கள் ஓவர் என்றது எதிர்முனை.
கோபத்தில் வயர்லெஸை ஸீட்டில் எறிந்துவிட்டு ஜீப்பிலிருந்து இறங்கி தன்னுடைய பைக்கில் ஏறி வீட்டிற்கு கிளம்பினார் அழகேசன்.
எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings