2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
என்னால இந்த வீட்ல இருக்க முடியாது, உங்க அப்பா ஞாபகம் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும், எனக்கு பயமாக இருக்கிறது என்று சமீபத்தில் தன் கணவனை இழந்த தர்ஷினி தன்னுடைய மகன் வாசுவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
நான் என் வீட்டுக்கு உன்னை அழைத்துக் கொண்டு போகலாம், ஆனால் எனக்கு உன்ன கட்டி வச்சிருக்கீங்களே அவ ராட்சசி மா, அப்பா இறந்த அன்றே உங்க அம்மாவை இங்கே அழைத்துக் கொண்டு வராதீர்கள் என்று சொல்லிவிட்டாள் உங்க மருமகள் என்றான் மகன் வாசு.
சரிடா பரவாயில்ல, நான் என்னுடைய பொண்ணுங்க வீட்டுக்கு போறேன். மூத்தவ வீட்டுக்கு போறேன், இல்லாட்டி இளையவ வீட்டுக்கு போறேன், அவர்களும் என்னை வா, அங்கு வந்து இரு என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எதற்கும் உன்னிடம் கேட்டு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டேன் என்றாள் தாய்.
நீங்கள் யார் வீட்டுக்கு வேண்டுமானாலும் போங்கள் அது உங்களுடைய விருப்பம் ரெண்டு பேரையும் செல்போன்ல கூப்பிட்டு விவரத்தை சொல்லுங்க, அவங்க என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம், ஒரு இரண்டு மூன்று மாதத்திற்கு இருங்கள். கொஞ்சம் உடல்நிலை சரியான உடன் இங்கே வந்துவிடலாம் என்றான் வாசு.
சரிப்பா என்று சொல்லிக் கொண்டே தன்னுடைய இரண்டு மகள்களுக்கும் செல்போனில் அழைத்தாள்.
மூத்தவ என்னுடைய மாமியார் இதற்கெல்லாம் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் மா, நீங்க சின்னவ வீட்டுக்கு வேண்டுமானால் போங்கள். தயவுசெய்து எங்க வீட்டுக்கு வந்து விடாதீர்கள் என சொல்லிவிட்டு கைபேசியை வைத்து விட்டாள் மூத்தவள்.
இளையவளுக்கு கைபேசியில் போட்ட உடனே எடுத்தாள். என்னம்மா விசேஷம் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று விசாரித்தாள். நன்றாக இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு உங்க வீட்டுக்கு வரலாம் என்று இருக்கிறேன் என்றாள் தாய்.
தாராளமா வாங்கமா, நானும் என் கணவரும் உங்களை பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்ல மிகவும் மகிழ்ச்சியுடன் தன் மகனிடம் சொல்லிவிட்டு என்னை கொண்டு அங்க விட்டு விடு என்று சொன்னாள் தாய்.
சரிம்மா நீங்க ரெடியா கிளம்பி இருங்க. உள்ளூர் தானே நான் கொண்டு போய் உங்களை அங்கே விடுகிறேன். வீட்டு சாவியை பூட்டி கீழே இருப்பவரிடம் கொடுத்து விடலாம். இந்த மாசம் வாடகை வேற தரவில்லை அதை வேற வாங்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே தன்னுடைய வீட்டிற்கு கிளம்பினான் வாசு.
சரி, போயிட்டு சீக்கிரம் வா. நான் கிளம்பி தயாராக இருக்கிறேன் என்று சொன்னாள் தாய்.
சிறிது நேரத்தில் கிளம்பி வந்த வாசு தன் தாயை அழைத்துக் கொண்டு உள்ளூரில் இருக்கும் தன்னுடைய தங்கையின் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அம்மாவை பார்த்ததும் மகளுக்கும், மருமகனுக்கும் ஒரே சந்தோசமாக இருந்தது.
சிறிது நேரம் அனைவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள். தங்கையின் கணவர் வாங்க கடைக்கு போகலாம் என்று வாசுவை அழைத்துக் கொண்டு சென்றார்.
பேசிக்கொண்டே நடந்து செல்லும் போது நான் உங்க அம்மாவை பார்த்துக் கொள்கிறேன். ஆனால் எனக்கு நீங்கள் மாதம் பத்தாயிரம் தர வேண்டும் என்று சொல்ல மறுத்துப் பேச முடியாமல் சரி தருகிறேன் என்று சொன்னான் வாசு.
சிறிது நேரம் இருந்துவிட்டு தன்னுடைய வேலையை பார்க்க சென்று விட்டான் வாசு. ஒரு வாரம் சென்ற பிறகு அடிக்கடி வாசு வந்து தாயைப் பார்த்துக் கொண்டு வந்தான்.
ஒரு மாதம் சென்ற பிறகு மகளும் மருமகனும் சொத்தைப் பற்றி தாயிடம் பேசினார்கள். உங்க இருவருக்கும் செய்ய வேண்டிய செய்முறை சீரனைத்தும் உங்க அப்பா இருக்கும்போது செய்து முடித்து விட்டார். இன்னும் உங்க அண்ணனுக்கு தான் எதுவும் செய்யவில்லை. இருக்கும் சொத்தை அவனுக்கு தான் கொடுக்கப் போகிறேன் என்றாள் தாய்.
உடனே மகளும், மருமகனும் அவங்க வீட்டுக்காரம்மா வீட்டிலிருந்து உங்க பையனுக்கு சொத்தைக் கொடுப்பாங்க. உங்க சொத்து எங்களுக்கு தான் சேர வேண்டும். இருக்கின்ற நகைகளை எங்க ரெண்டு பேருக்கும் பிரித்துக் கொடுங்கள் என்று சொன்னார்கள்.
நான் இருக்கும் வரை எதையும் பிரித்துக் கொடுக்க மாட்டேன். எனக்கு எப்ப தோன்றுகிறதோ அப்போது கொடுப்பேன் என்று சொல்ல பயங்கர கோபம் வந்து சோறு மட்டும் திங்குறது இங்க, சொத்தைக் கொடுப்பது அங்கேயா என்று கேட்டார்கள்.
அதன் பிறகு அந்த தாய் எதுவும் பேசாமல் இரண்டு நாள் சென்று தன்னுடைய மகனை கூப்பிட்டு என்னை அழைத்துச் சென்று நம்முடைய வீட்டிலேயே விட்டுவிடு. நான் யார் வீட்டிலும் இருக்க விரும்பவில்லை என்று சொல்ல மகன் வாசு காரணம் கேட்டான்.
அதெல்லாம் ஒரு காரணமும் இல்லை, என்று சொல்ல அடுத்த நாளே மகன் தன்னுடைய தாயை அழைத்துச் சென்று சொந்த வீட்டில் விட்டுவிட்டான்.
மூன்று வேலை உணவும் கடையில் மகன் வாசு வாங்கி வந்து கொடுக்க சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக தன் வீட்டில் மீதி காலத்தை கழித்தால் தாய் தர்ஷினி.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings