2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அம்மா, எந்திரிங்க அம்மா, உங்கள முதியோர் இல்லத்தில் சேர்த்தது தப்புதான். எனக்கு வேற வழி தெரியலையே, நீங்க பார்த்து கட்டி வைத்த பொண்ணு தானே, சொந்தத்திலே கட்ட வேண்டாம் என்று தானே நான் சொன்னேன்.
சொந்தம் விட்டுப் போக கூடாதுடா, கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாம் சரியா போயிடும் அப்படின்னு சொல்லித்தானே உங்க அண்ணன் பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தீங்க.நானும் மறுபேச்சு பேசாம ஒத்துக்கிட்டேன்.
திருமணம் ஆனதிலிருந்து நான் பட்ட கஷ்டங்கள் ஏராளம் அம்மா. உங்களுடைய மனது கஷ்டப்படக்கூடாது என்று நிறைய விஷயங்களை மறைத்து வைத்தேன் அம்மா என்று இறந்து போன தன்னுடைய அம்மாவே கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதான் குமார்.
என்ன இங்க வந்து சீன் போடுறீங்களா, என்னை பிடிக்கலைன்னா உதறிட்டு உங்க அம்மா கிட்ட போய் இருக்க வேண்டியதுதானே, அப்புறம் எதுக்காக என் கூட இருந்தீங்க என்று குமாரின் மனைவி சங்கீதா இறந்த வீடு எனக் கூட பாராமல் தன் கணவனை சத்தம் போட்டுக் கொண்டிருந்தாள்.
தன் மனைவி பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டே காதில் வாங்காதது போல சிறுவயதில் அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டு நம்மை வளர்த்தார்கள். கூட பிறந்த அண்ணன் வீட்டிலேயே வேலை செய்து சம்பளம் வாங்கிக் கொண்டு வெளி உலகத்திற்கு கணவன் இழந்த தங்கையை அண்ணன் எவ்வளவு நன்றாக பார்த்துக் கொள்கிறான் என்று சங்கீதாவின் அப்பாவை புகழ்ந்து கொண்டிருந்தார்கள்.
சங்கீதா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது சக தோழனிடம் நெருங்கி பழகி ஊரை விட்டு ஓடி சென்று விட்டாள். நான்கு நாட்கள் தேடியும் கிடைக்காமல் போகவே பிறகு போலீசில் புகார் அளித்தார்கள்.
ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்து சங்கீதாவை அவளுடைய அப்பாவிடம் சேர்த்தார்கள். சங்கீதா தன்னுடைய அப்பாவிடம் நான் என்னுடைய நண்பனை நம்பி மோசம் போய் விட்டேன் அப்பா என்னை மன்னித்து விடுங்கள் என கதறினாள்.
அண்ணனுக்காக தங்கையும், அம்மாவுக்காக மகனும் சங்கீதாவை மனநிறைவு இல்லாமல் திருமணம் செய்து கொண்டான் குமார்.
திருமணத்தன்று மட்டும் வீட்டில் வந்து பாலும் பழமும் சாப்பிட்டு விட்டு போனதோடு சரி, அதன் பிறகு உங்க வீட்டில் எந்த வசதியும் இல்லை, என்னால் அங்கு வந்து வாழ முடியாது. நீ இருப்பதாய் இருந்தால் இங்கே இரு என்று சொல்ல உனக்கு எப்ப என்னுடைய வீட்டிற்கு வருவதற்கு இஷ்டப்படுகிறயோ அப்பொழுது வா என சொல்லிவிட்டு தன்னுடைய வீட்டுக்கு சென்று விட்டான் குமார்.
தன் மகனின் நிலைமையை அறிந்து எனக்கு வயதாகி விட்டதடா, நீ மாமா வீட்டில் இருப்பதில் தவறு இல்லையே, உன் மனைவி எங்கே இருக்கிறாளோ அங்கேயே நீ இருப்பது தான் சிறப்பு, நானும் என்னுடைய அண்ணன் வீட்டிலேயே கடைசி வரைக்கும் இருக்கிறேன் என்று சொல்லி இரு குடும்பத்தாரும் சமாதானம் செய்து வாழ்ந்து வந்தார்கள்.
உன்னுடைய அம்மாவை எங்கேயாவது முதியோர் இல்லத்தில் சேர்த்து விடு, முதலில் செஞ்ச மாதிரி வீட்ல எல்லாம் வேலை செய்ய முடியவில்லை, அவங்கள தண்டமா வச்சு சோறு போடுறதுக்கு முதியோர் இல்லத்தில் சேர்த்து விடு என சங்கீதா தன் கணவனுக் குமாரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
எங்க அம்மாவ முதியோர் இல்லத்தில் சேர்ப்பதாக இருந்தால் நானும் இந்த வீட்டை விட்டு சென்று விடுவேன் உன்னுடைய மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்படுகிற ஆள் கிடையாது என்றான் குமார்.
நான் என்னுடைய அப்பாவிடம் சொல்லி விட்டேன். அதனால் நாளை காலை உங்க அம்மா வீட்டை விட்டு கிளம்பிடுவாங்க, உங்க அம்மா இருக்காங்களான்னு கேட்டு பாரு அவங்க இருக்க மாட்டாங்க என சொன்னாள் சங்கீதா.
எங்க அம்மாவை என்னடி சொன்ன, இதோ இப்போதே என்னுடைய அம்மாவிடம் கேட்கிறேன் என வேகமாக அம்மாவை பார்க்க சென்றான் குமார்.
ஏன்டா? என்னடா விஷயம் என்று அம்மா கேட்க, நீங்க இந்த வீட்டை விட்டு போனீங்கன்னா நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என்றான் குமார்.
நான் முதியோர் இல்லத்துக்கு போகல, அங்க இருக்கிறவனுக்கு சமையல் செய்து போடறதுக்காக போறேன். மூணு வேலையும் சாப்பாடு போட்டு நல்லா சம்பளம் தரதா சொல்லி இருக்காங்க. அதற்காகத்தான் நான் போகிறேன். நீ எப்ப வேணாலும் வந்து பார்க்கலாம், நானும் உங்களை பார்க்க அடிக்கடி வருவேன் என்றாள் குமாரின் அம்மா.
நீ வேலைக்கு எல்லாம் போக வேண்டாம் அம்மா. நான் வேலைக்கு போகிறேன் தானே, நான் உங்களை வைத்து காப்பாற்றுகிறேன் என்று குமார் சொல்ல, இல்லடா, நீ உங்க மாமா வீட்ல இரு, நான் அங்க இருக்கிறேன் என்னை பற்றி கவலைப்பட வேண்டாம் என்றாள் குமாரின் தாய்.
அம்மாவின் பேச்சை மீறினால் வேற ஏதாவது அம்மா முடிவு எடுத்து விட்டால் என்ன செய்வது என்று குமார் சரி என ஒப்புக்கொண்டான்.
குமாரின் அம்மா முதியோர் இல்லத்தில் சேர்ந்ததிலிருந்து தன்னுடைய மகன் குமார் மாமா பெண்ணை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என சொல்லியும் நான் எடுத்து சொன்னவுடன் மறு பேச்சு பேசாமல் அண்ணன் மகளை திருமண செய்து கொண்டான்.
ஒருவனுடன் ஓடி நான்கு நாட்கள் இருந்த பிறகு இவளுக்கு யார் வாழ்வு கொடுக்கப் போகிறார்கள் என்று நினைத்து தானே தன்னுடைய மகனை திருமணம் செய்து கொள்ளச் சொன்னது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான காரியத்தை செய்து விட்டேன் என தினமும் மனம் தளர்ந்து சோகத்தில் இருந்து மீள முடியாமல் படுத்த படுக்கையாகி தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது.
அம்மா நல்லா இருக்க வேண்டும் என்று நினைத்து தானே நான் பிரிந்து வாழவே சம்மதித்தேன் என வாய் விட்டு கதறி அழுது அம்மாவின் உடலில் மேல் விழுந்தவன் எழுந்து கொள்ளாமலேயே உயிர் பிரிந்து அம்மாவுடன் இணைந்து விட்டான் குமார்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings