எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சிங்கராஜாவிற்கு காலில் அடிபட்டு விட்டது. அதனால் முன்பு போல நடக்க ஓட முடியவில்லை. அதனால் காட்டின் நிர்வாகத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. காட்டின் நிலவரம் குறித்து அறிந்து வர மதியூக மந்திரி மந்தியனை அனுப்பியது. அவ்வாறு சென்று வந்த மந்தியன் சிங்கராஜா முன்னால் நின்றிருந்து.
“இனி யாரும் என்னை அதட்ட மாட்டார்கள்! என் இஷ்டத்துக்கு அலைந்து திரியலாம்னு முயலன் சொல்கிறான்!” – என்றது மந்தியன்; “கழுதைப்புலிகளும் நரிகளும் ராஜாவிற்கு அடிபட்டு விட்டதா கேள்விபட்டோம்! இனிமேல் ராஜாவினால் நடமாட முடியாதாமே! ரொம்ப வருத்தமா இருக்கு என்றன!” – என்ற மந்தியனே தொடர்ந்து “அவர்கள் கபடதாரிகள் வேஷம் போடுகிறார்கள்!” – என்றது. “கரடியன் திரும்ப கடைவீதில தண்டல் வசூல் செய்ய ஆரம்பிச்சிட்டான்! என்னை யாரும் எதுவும் செய்ய முடியாதுனு கொக்கரிக்கிறான் ராஜா!” – என்றது.
காட்டின் நிலமை குறித்து கவலையடைந்தது சிங்கராஜா; “புதரை விட்டு தள்ளி வந்துட்டா முயலனை கழுகுகள் தூக்கிட்டு போயிரும்! அவன் நன்மைக்குத்தான் அதட்டுனேன்! அது அவனுக்குப் பிடிக்கல போல! கழுதைப்புலிகளும் நரிகளும் அடுத்தவங்க உணவைப் பிடுங்கிச் சாப்பிடும்! நரன் நல்லா இருந்தா அதுகளை ஓடஓட விரட்டுவேன்! இப்ப முடியாதுல! முதல் தடவைத் தண்டல் வசூலிச்சப்பவே கரடியனைத் தண்டிச்சிருக்கனும்! விட்டாச்சு!” – என்றபடி பெருமூச்சு விட்டது.
சிங்கராஜா யோசனையில் ஆழ்ந்தது. “ஆள்வதற்கு முழு உடற்தகுதி வேணும்! நரன் வேணா பதவி விலகிக் கொள்ளவா! அடுத்த வாரிசைத் தேடலாம்!” – என்றது.
“வேண்டாம் ராஜா! ஒரு சிலர்தான் சுயநலமா நடந்துக்கிறாங்க! மத்தவங்க தானுன்டு தன் வேலையுண்டுதான் இருக்காங்க!” – என்றது மந்தியன். அதுவே தொடர்ந்;து “தாங்கள் வழக்கம் போல் நகர்வலம் போகலாம்! தர்பார் மண்டபத்துல அமர்ந்து பரிபாலனம் செய்யலாம்! ஆள்வதற்கு உடற்தகுதியைக் காட்டிலும் மனவலிமைதான் அவசியம்! தாங்கள் அறியாததல்ல!” – என்றது மந்தியன்.
மந்தியனின் வார்த்தைகள் சிங்கராஜாவிற்கு மிகுந்த ஆறுதல் தருவதாக இருந்தது. அது விந்தி விந்தி குகையிலிருந்து வெளியே வந்து தனது காட்டைப் பார்த்தது காடு மிகவும் அமைதியாய் காட்சி அளித்தது. அந்த அமைதி சிங்கராஜாவையும் தொற்றிக் கொள்ள ஒருமுறை தனது உடலை சிலிர்த்துக் கொண்டது.
எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings