2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
திங்கக்கிழமை எப்பவும் போல ஆபீசுக்கு புறப்பட்டாச்சு. வசந்தி, “ஏங்க ஏன் லேட்டா எழுந்திருக்கணும் இப்படி பறக்கணும், ஒரு அரை மணி நேரம் முன்னால எந்திருந்தா நிதானமா போலாமே.”
“சரி,சரி உன் தினசரி ராமாயணம் ஆரம்பிக்காதே, இதுதான் கடைசி வாரம் சனிக்கிழமை ஒரு சால்வையைப் போத்தி போயிட்டு வானு அனுப்பிடுவான். அப்பறம் எப்ப எந்திருச்சா என்ன”
“அச்சோ, அதுக்குள்ளே 60 வயசு முடி்ஞ்சிடுத்தா? நேத்துதான் அலையா அலைஞ்சு இந்த வேலைக்கு நீங்க சேந்த மாதிரி இருக்கு, என் ஒரு சம்பளத்துல எத்தனை மாசம் சிக்கனமா ஓட்டி இருக்கோம் குடும்பத்தை”
“ஆமாம் நான் வெட்டிப் பயலா உன்னை கல்யாணம் பண்ணிண்டேன், நீதான் என்னை காப்பாத்தினே அதானே?”
“ஏன்னா தப்பு தப்பா பேசறேள். நீங்க சொன்னவுடனே வேலையை விட்டுட்டேனே அதான்., காலங்காத்தாலை விதண்டாவாதம் பண்ணாம வேலைக்கு போயிட்டு வாங்கோ”
என் பன்னிரண்டு வருஷ பழைய யமாஹா பைக்கை எடுத்துண்டு சோத்துப்பையை முன்னால வச்சிண்டு, கிண்டில உள்ள ஃபேக்டரிக்கு போனேன். நான் க்வாலிடி கண்ட்ரோல் ஆபிசர். முன்னே எல்லாம் பத்து பசங்க என் கீழே வேலை பாப்பாங்க, என்னை சார், சார்னு மரியாதையா சுத்தி வருவாங்க.முதலாளியோட பையன் MBA ஃபாரின்ல படிச்சிட்டு சிக்கனம்னு ஆளை குறைச்சிட்டான். இப்ப என் டிபார்ட்மெண்ட்ல என்னையும் சேத்து 3 பேர்தான்.அதுல ஒருத்தன் MBA, நான் எப்படா போவேன்னு காத்துண்டிருக்கான். இப்ப சும்மா ரிபோர்ட்ல கையெழுத்து போட்டுண்டு உக்காந்திருக்கேன்.
இந்த வாரம் வேகமா போச்சு சனிக்கிழமையை ஆபீஸ்ல என்னைத் தவிர எல்லாரும் ஆவலா எதிர்பாக்கற மாதிரி உணர்ந்தேன். 3 மணிக்கெல்லாம், காண்டீன்ல டேபிள் சேர் அரேன்ஜ் பண்ணி, ஆளாளுக்கு பொய் புகழ்ச்சி பண்ணி, பொன்னாடை போத்தி, ஒரு மோதிரம் போட்டு, சூடா நாயர் கடை சமோசா,டீ கொடுத்து சந்தோஷமா கை குலுக்கி அனுப்பிட்டாங்க.
கோயம்பேடு மார்கெட்ல காத்தாலை 5 மணிக்கு லாரில இருந்து எல்லா காய்கறி மூட்டைகளையும் இறக்கினப்பறம் துண்டால முகத்தை துடைச்சிண்டு அந்த கல் மேலே ‘உஸ்’னு உக்காறர தொழிலாளி மாதிரி உணர்ந்தேன். வீட்டுக்கு போகலை மெரினா பீச்ல போய் கண்ணகி சிலைக்கு பின்னால உக்காந்தேன்.
ஏதேதோ நினைவலைகள், இனிமே மாசம் பொறந்தா சம்பளம் வராதே. பையன் பிரகாஷ் யு.எஸ்ல செட்டிலாயிட்டான். அவனையா இனிமே வெக்கமில்லாம பணம் அனுப்புனு கேக்கறது. பி.எஃப் பணம் கிராச்சுவிடி பணம்னு கொஞ்சம் வரும் அது எத்தனை வருஷத்துக்கு போறும். என் பரம்பரை ஆவரேஜ் வயசு 72. இன்னும் 12 வருஷம் உயிரோட இருக்கறதா வச்சிப்போம் இது போறுமா. வேற வேலை இந்த வயசுல எவனாவது கொடுப்பானா தெரியலையே. இன்னில இருந்து வசந்தியையும் கன்சல்ட் பண்ணி பட்ஜெட் போட்டு செலவு பண்ணணும்.
9 மணி வாக்குல வீட்டுக்குப் போனேன். வசந்தி உள்ளுக்கும் வாசலுக்குமா நடக்கறா, அவ முகமெல்லாம் இருண்டு கிடக்கு. என்னை பாத்தவுடனே ஓடி வந்து கையை பிடிச்சிண்டா.
ஒண்ணும் பேசலை பைக்கை நிறுத்திட்டு உள்ளே போனோம்.
கைகால் அலம்பிண்டு சோபால உக்காந்தேன். வசந்தி ஹார்லிக்ஸ் திக்கா கலந்து கொண்டு வந்து நீட்டினா.
நான், “ வசந்தி செத்த உக்காரு”
“ம், சொல்லுங்கோ.”
ஹார்லிக்ஸ் டம்ளரை சப்பிண்டே, “அனேகமா இந்த ஹார்லிக்ஸ் பாட்டில் தீந்தவுடனே இதை நிப்பாட்டறோம்”
“ஏன் மாசம் ஒரு பாட்டில் பெரிய செலவா என்ன”
“ஆமாம், பட்ஜெட் போடறோம் இன்னிக்கே. மாசம் 40 ஆயிரம் டாண்ணு வந்துண்டிருந்தது இனி வராது”
“ஏன்னா நமக்கு சேவிங் ஒண்ணும் இல்லையா, பென்ஷன் வராதா”
“என்து பிரைவேட் கம்பெனி பென்ஷன்லாம் வராது, பையனை அமெரிகால படிக்க வைக்க எல்லாத்தையும் வித்து அனுப்பியாச்சு. 8 லட்சம் வரை ரிடயர்மெண்ட் பெனிபிட் வரும். அது 12 வருஷம் வருமா என்ன?”
“12 வருஷமா? அது என்ன கணக்கு”
“அது வந்து ஒரு கணக்கு உத்தேசமா இன்னொரு 12 வருஷம் இருப்பேனானு கணிப்புல”
“ஏன்னா இப்படி உளறிக் கொட்டறேள் இன்னிக்கு, சரி இனிமே சிக்கனமா செலவு பண்ணுவோம் ஒரு நாளைக்கு 5 காபி வேண்டியிருக்கு அதை ரெண்டாக்குவோம்.”
“முதல்ல என் காபி தலைல கையா, சரி பரவாயில்லை. வாரம் ஒரு தடவை ஹோட்டல் போறதை நிப்பாட்டலாம். இனி வருஷம் ஒரு தடவை யு.எஸ் போறதை நிப்பாட்டி அந்த பணத்தை அனுப்ப சொல்லி பிரகாஷ்கிட்ட கேக்கலாம். சினிமா தியேட்டர்லாம் இனி வேண்டாம், வேலைக்காரியை நிப்பாட்டலாம் நான் வேலையை ஷேர் பண்ணிக்கறேன் 5000 மிச்சமாகும். கல்யாணம், இதர விசேஷங்களுக்கு மாசம் ஒரு 200 ரூபா தனியா வைப்போம். நுணுக்கமா பாத்தா, கணிசமா செலவை குறைக்கலாம்.மொத்த செலவு 15, 20 ஆயிரத்துக்குள்ளே வர மாதிரி. “
“உங்களால காபியை குறைக்க முடியுமா, லீவு நாள்ல வசந்தி காபினு அடிக்கொரு தடவை கேப்பேளே”
“என்ன பண்றது வருமானம் இல்லைன்னா எல்லாத்தையும் குறைச்சிக்கணுமே, சமையல் கூட ஒரே டைம்ல பண்ணலாம், லன்ச் தனியா, டின்னர் தனியா வேண்டாம்.”
எப்படியெல்லாம் செலவை குறைக்கலாம்னு திட்டம் போட்டுண்டு படுத்தோம்.
கார்த்தாலை 6 மணிக்கு காலிங் பெல் சத்தம் கேட்டு எழுந்தா, வாசல்ல அக்கா, அத்திம்பேர் அவா பையன் சந்துரு.
“டேய் தம்பி நன்னா இருக்கயா, மதுரைல இருந்து உன்னை நம்பிதாண்டா வந்திருக்கோம். சந்துருக்கு இங்கே ஏதோ கம்பெனில 1 வருஷம் டிரெயினிங், ஸ்டைபண்ட் ரொம்ப கம்மியாம் முத வருஷம், என் தம்பி சென்னைல இருக்கறப்ப உனக்கென்னடானு கூட்டிண்டு வந்துட்டோம். அவனை மட்டும் கூட வச்சிக்கோ, நாங்க 15 நாள் இருந்துட்டு மதுரை திரும்ப போயிடுவோம், சரியா”
“அட வாக்கா பாத்துப்போம், வசந்தி… அக்கா அத்திம்பேர் வந்திருக்கா பாரு காபி போடு”
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings