in ,

ரகு (எ) ரகுநாத் (சிறுகதை) – வேலூர். D. சீனிவாசன்

ழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

பார்வதி என்ற பாட்டியும் ரகு (எ) ரகுநாத் என்னும் பேரனும் ஒருவர் மீது ஒருவர் மிகவும் பாசம் கொண்டவர்கள்.

ரகுவின் அப்பா சிதம்பரம் அவன் இரண்டு வயது சிறுவனாக இருந்த போதே ரகுவின் அம்மா கமலாவிற்கு ஒரு விபத்தில் கால் ஊனமாதால் கமலா, ரகு இருவருரையும் ரகுவின் பாட்டி வீட்டிற்கு அனுப்பி விட்டு வேறு திருமணம் செய்து கொண்டார்.

ரகுவின் அம்மாவிற்கு ஏற்பட்ட இந்த கால் ஊனம், ரகுவின் அப்பா கவன குறைவாக கார் ஓட்டியது தான் என அவருக்கு தெரிந்திருந்தும், கமலாவின் கால் ஊனத்தை காரணம் காட்டி வேறு திருமணம் செய்து கொண்டார். இதனால் மனம் உடைந்து இறந்து விட்டாள். அன்று முதல் அவன் பாட்டி தான் அவனை கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தாள்.

ரகு நன்கு படித்து பிளஸ் 2 – வில் மாநிலத்தில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றான். பின்னர் IAS தேர்வு எழுதி அதிலும் முதல் ரேங்க்கில் தேர்ச்சி பெற்றான்.

பாட்டியின் வயது, உடல்நிலையை மனதில் வைத்து அம்மா, அப்பா இல்லாத என்னை இந்த உயர்ந்த நிலைக்கு வளர்த்து படிக்க வைத்தது அவன் பாட்டி தான் என்று விளக்கமாக அரசாங்கத்திற்கு கடிதம் வாயிலாக தெரிவித்தும், மற்றும் பாட்டியை வயதான காலத்தில் அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டியும், அந்த ஊர் மக்களுக்கு பார்வதி பாட்டியின் வளர்ப்பின் காரணமாக தான் பேரன் ரகுநாத் பிறந்து, வளர்ந்த ஊரின் மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றுகிறான் என அந்த ஊர் மக்கள் என் பாட்டியை பற்றி பெருமையாக பேச வேண்டும்.  எனவே எனக்கு எனது சொந்த ஊரில் பணி ஆணை வழங்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான்.

ரகுவின்  விளக்கத்தை புரிந்து கொண்ட அரசாங்கம் அவனது நல்ல படிப்பு திறமையையும், பாட்டியின் மேல் உள்ள பாசத்தையும் கருதி அவன் கேட்ட படியே அவனது சொந்த ஊரில் மாவட்ட ஆட்சியராக பணி நியமன ஆணையினை அவனுக்கு அனுப்பி வைத்தனர்.

பணி நியமன ஆணை கிடைத்தவுடன் தன் பாட்டியிடம் கொடுத்து விவரம் கூறி அவர்களின் ஆசீர்வாதம் பெற்றான். தன் சொந்த ஊரிலேயே பேரனுக்கு வேலை கிடைத்ததை எண்ணி பாட்டி மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்

ரகுநாத்துக்கு அரசாங்கத்தின் மாளிகை வழங்கப்பட்டது. ரகுநாத் தன் பாட்டியை தன்னுடன் அழைத்துச் சென்று அந்த மாளிகையை சுற்றி காண்பித்தான். அதைப் பார்த்து பிரமிப்பு அடைந்து, பேரனை பாட்டி இவையெல்லாம் உன் உழைப்பால் தான் என்று பாட்டியை பாராட்டினான் ரகு.

மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கார் ஓட்டுநராக சிதம்பரம் என்பவர் நியமிக்கப்பட்டார். கார் ஓட்டுநர் மாவட்ட ஆட்சியர் வீட்டுக்கு வந்து அவருடைய காரை சுத்தம் செய்து கிளம்புவதற்கு தயார் நிலையில் நின்றார். வெளியே வந்த மாவட்ட ஆட்சியர்க்கு Good morning sir, என்று கூறி தன் கையை உயர்த்தி சல்யூட் அடித்தார் கார் ஓட்டுநர் சிதம்பரம். அலுவலகத்திற்கு செல்ல வெளியே வந்த பேரனை, வழியனுப்ப அவனுடன் வந்த பாட்டி கார் ஓட்டுநர் சிதம்பரத்தை பார்த்து அடையாளம் கண்டு கொண்டு விட்டாள்.!

ரகு யார் இவர்? இங்கே ஏன் வந்துள்ளார்? என்று கேட்டாள்.

பாட்டி இவர் தான் எனக்கு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கார் ஓட்டுநர் என்றான் ரகு .

பாட்டியை கார் ஓட்டுநர் சிதம்பரத்திற்கும் மாவட்ட ஆட்சியரின் பாட்டி தான் தன் மாமியார் என்று புரிந்து விட்டது….? அப்போ மாவட்ட ஆட்சியர்….?

போகலாமா? என்றார் ரகுநாத் ஓட்டுனரை பார்த்து

ஓட்டுநர் சுதாரித்து கொண்டு போகலாம் சார் என்றார்.

உடனே பாட்டி, ரகு இன்னிக்கு மட்டும் நான் உன் கூட ஆபீஸ் வரைக்கும் வரட்டுமா? என்றாள்.

ரகு சற்று யோசித்து அதுக்கு என்ன பாட்டி இன்னிக்கு மட்டும் தானே? தாராளமாக வாங்க என்று சந்தோஷமாக கூற காரில் ஒரு வித மனஇறுக்கத்துடன் பாட்டி  அமர்ந்தாள்.  மறுபக்க காரின் கதவை ஓட்டுநர், ரகுநாத்துக்கு திறந்து விட்டார்.

கார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தது. கார் ஓட்டுநர் சிதம்பரம் காரை நிறுத்தி விட்டு ஓடி வந்து மாவட்ட ஆட்சியர் அமர்ந்துள்ள பக்க கதவை திறந்தார்.

ரகுநாத் கீழே இறங்கியவுடன் அங்கிருந்த காவல் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியருக்கு சல்யூட் அடித்தனர் . இதை பார்த்த பாட்டி மிகவும் பூரிப்படைந்தாள். தன் பாட்டியை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் ரகுநாத். அவர்கள் அனைவரும் பாட்டிக்கு வணக்கம் கூறினார்கள். பாட்டியும் அவர்களுக்கு கண்ணில் நீர் ததும்ப வணக்கம் கூறினாள்.

ரகுநாத் தன் கார் ஓட்டுநரைப் பார்த்து என் பாட்டியை பத்திரமா வீட்டில் இறக்கி விட்டுட்டு வந்திருங்க என்று கூற

சரிங்க அய்யா என்றார் கார் ஓட்டுநர் சிதம்பரம்.

கார் வீட்டை நோக்கி கிளம்பியது. ஓட்டுநர் சிறிது நேரம் கழித்து பாட்டியை காரை ஓட்டிக் கொண்டே சற்று திரும்பி பார்த்தார். ஆனால் பாட்டி அவரை கண்டு கொள்ளவில்லை. மீண்டும் ஓட்டுநர் பாட்டியை பார்த்து,  அம்மா உங்க பேரன்…..?  என்று கேட்டார்.

ரோடை பார்த்து காரை ஓட்டு என்று அதட்டலுடன் கூறினாள் பாட்டி.  வீடு வந்தவுடன் கார் கதவை ஓட்டுநர் திறந்து விட கீழே இறங்கி வீட்டினுள் வேகமாக சென்று வீட்டின் கதவை டமார் என்று மூடினாள்.

இதை நின்று கவனித்த ஓட்டுநர் சிதம்பரத்திற்கு எல்லாம் புரிந்து விட்டது. இது உன் மகன் இருக்கும் வீடு தான்., ஆனால் நீ உள்ளே வராதே என்ற அர்த்தம், பாட்டி கதவை சாத்திய வேகத்தில் நன்கு புரிந்தது.

தன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தன் ஓட்டுநர் வேலையை ராஜினாமா செய்வதாக அன்று மாலையே மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கடிதம் அனுப்பி வைத்தார் சிதம்பரம்.

மறுநாள் கார் ஓட்டுநர் வேலைக்கு சிதம்பரம் வரவில்லை. வேறு ஒரு ஓட்டுநர் வந்தார்.

அவரைப் பார்த்த பாட்டி நீ யாருப்பா என்றாள். நான் தான் மாவட்ட ஆட்சியரின் கார் ஓட்டுநர் என்றார்.

அப்போ நேற்று வந்தவர் எங்கே? அவர்க்கு உடல்நிலை சரியில்லாததால் தன் ஓட்டுநர் வேலையை ராஜினாமா செய்துவிட்டார் என்று கூறினார் புதிய ஓட்டுநர்.

பாட்டி புதிய ஓட்டுநரைப் சந்தோஷமாக பார்த்து, தம்பி கொஞ்சம் இரு வர்றேன் என்று கூறி உள்ளே சென்று இனிப்பு கொண்டு வந்து கொடுத்தாள் மாவட்ட ஆட்சியரின் புதிய கார் ஓட்டுனருக்கு…!..?.

கார் ஓட்டுநர் சிதம்பரம் தான் ரகுவின் தந்தை என்று என் பேரன் ரகு இனி யார் கூற போகிறார்கள்? என தான் நினைத்தபடியே நடந்ததை எண்ணி மகிழ்ச்சியுடன் வீட்டினுள் சென்றாள் பார்வதி பாட்டி .

ழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உன் கண்ணில் நீர் வழிந்தால் ❤ (பகுதி 12) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    தீபாவளி (சிறுகதை) – வேலூர். D. சீனிவாசன்