in ,

அந்திசாயும் நேரம் (கவிதை) – ராஜேஸ்வரி

மொட்டு விரிந்த மலர்களில்

வெப்பம்  தாங்கியஇதழ்கள் 

தன் வண்ணம் இழந்து 

களையிழந்து சாயும் நேரம் !

இரை தேடித்தேடி 

வேனலில் பறந்தோடிய 

தாய் பறவை தன் குஞ்சுகளுடன் 

கூட்டிற்குள் 

குலாவும் நேரம் !

பகல் முழுதும் பகலவனின் 

வெப்பத்தில் கலந்து பின்

கடலில் நீராடி  குளிர்ந்த

காற்று நம் மேனி தழுவும்

நேரம் !

வெண்ணிற மேகங்கள்

பல வண்ண

பொடிகளை 

கலந்து வானில்

மீது தூவி 

ஹோலி கொண்டாடும்

நேரம் !

ஒளி குறையும் மாலைப்

பொழுதும் ஒளியேற்றும்

இரவுப் பொழுதும் இணையும்

அந்தி சாயும் நேரம் !!

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உயிர்த்தெழுந்தேன் (கவிதை) – ராஜேஸ்வரி

    இரகசியம் ஒன்றே! (கவிதை) – ராஜேஸ்வரி