in ,

பெண்ணின் பேராற்றல் (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்

எழுத்தாளர்  மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

‘கண்மணி’ காணாமல் போய் பத்து வருடங்கள் இருக்கும் . அவளின் பெற்றோர்கள் தேடி அலைந்ததற்கு எந்த பயனுமில்லை. உயர்மட்ட காவல்துறை ,அரசு அதிகாரிகள் வரை சென்றும் ஒரு தடயமும் இல்லை.

போகாத கோவிலும் இல்லை வேண்டாத தெய்வமுமில்லை. நடைபிணமாய் நடந்துக் கொண்டிருந்த கண்மணியின் பெற்றோருக்கு ஒரு நாள்  தொலைக்காட்சியில் வந்த செய்தி ஆனந்த கண்ணீரை வரவழைத்தது .

உலகளாவிய உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியில் சிறந்த பங்காற்றியமைக்கான சர்வதேச விருது ‘கண்மணி’க்கு அமெரிக்காவில் வழங்கப்படும் நிகழ்வு அது .

கண்மணியின் பெற்றோருக்கு  நினைவுகள் பத்து ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றன .

பொதுவாக பெண் குழந்தைகளைப் படிக்க வைக்கும் ஆர்வமும் அக்கறையும் இக்காலத்தில் அதிகரித்திருக்கும் காலத்தில், கண்மணியும் நல்ல மதிப்பெண் எடுத்து பட்டப்படிப்பு முடித்து விட்டாள் . அவளுக்கு  ஆராய்ச்சியாளர் ஆகவேண்டும் என்று கனவு .அவளுடைய பெற்றோர் இருவரும் பட்டப்படிப்பு முடித்திருந்தாலும் காலா காலத்தில் கண்மணியை ஒருத்தன் கையில் பிடித்துக் கொடுப்பதாக இருந்தது.

போதாத குறைக்கு ஒரு ஜோசியன் வரும் தைக்குள் அவளுக்கு மணமுடிக்க விட்டால், வேற்று ஜாதி அல்லது வேற்று மதத்து பையனுடன் காதல் வந்திடும் என்று கொளுத்திப் போட …இன்னும் அவர்களுக்கு மனதிதுள் பீதியானது 

கண்மணி தன்னுடைய கனவினை எடுத்துச் சொன்னாள் ,ஆனால் பெற்றோர்களின் பிடிவாதமோ உடும்புப்பிடியாக இருந்தது .சில வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகளில் தேர்வாகி இருத்தாள். தன்னுடைய படிப்பிற்காக பெற்றோரிடம் மன்றாடினாள், போராடினாள் … அவர்களோ எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் இறங்கிவிட்டனர் 

என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்த கண்மணிக்கு முன் இரண்டு விடைகள் தெரிந்தன ..ஒன்று பெற்றோர் சொல்படி கல்யாணம் செய்துகொண்டு புருஷன் புள்ளைங்க என்று இல்லற வாழ்க்கையில் புதைந்துப் போகிறது…இல்ல மாட்டேன்னு தற்கொலை பண்ணிருக்கிறது …

இரவு முழுதும் யோசித்தவள் ..விடியும் முன் காணாமல் போய்விட்டாள் …எங்கே போனாள் ? என்ன ஆனாள் ? யாருக்கும் இதுவரை தெரியவில்லை …

இதோ…இப்போ அமெரிக்காவில்  விருது வாங்கியபின் அவளே பேட்டியளிக்கிறாள் ..கேட்போம் வாருங்கள் …

“உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த உயரிய விருது மற்றும் உங்கள் ஆய்வுப் பயணம் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா ?

“நிச்சயமா …நான் இந்தியாவில் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவள்…என் பெற்றோர் எனது கனவுக்கு தடையாக இருந்தனர் ..அதை தாண்டி இங்கே வந்தேன் “

 “அப்படியா …? மிகவும் சுவாரசியமா இருக்கே …மேலும் சொல்லுங்க “

“ஆமா …நான் வீட்டை விட்டு வெளியேறி வந்தவள் …எனக்கு அமெரிக்க பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி செய்ய ஊக்கத்தொகையுடன் ,தாங்கும் வசதி மற்றும் விமான பயணச்சீட்டு என்னால் வந்திருப்பதாக என்னுடைய கல்லூரி பேராசிரியை கூறினார் …அவரிடம் இருந்து அவற்றையெல்லாம் பெற்றுக்கொண்டு பறந்து விட்டேன் “

 “உங்கள் பெற்றோர்கள் வருத்தப்படுவார்கள் என்று எண்ணிப் பார்க்கலையா ?”

“என் கனவு சிதைந்து போய் நான் வருந்தியதை அவர்கள் எண்ணிப் பார்க்கவில்லையே !”

 “இது பழிக்குப்பழி வாங்குவது போல் உள்ளதே “

 “அப்படி என்று ஏன் இன்னும் பழமையிலேயே ஊறி இருக்கீங்க …பெண்ணின் பேராற்றல் பெரிதென கொள்ளுங்கள் “

 “உங்க பெற்றோர் இப்போ மகிழ்ச்சியடைவாங்க என்று நினைக்கிறீங்களா ?”

“கண்டிப்பா வருத்தப்பட மாட்டாங்க என்று  நினைக்கிறேன் ” என்று முடித்துக் கொண்டும் வணக்கம் சொல்லி விடைபெற்றாள் கண்மணி.

எழுத்தாளர்  மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சட்டத்தில் இடமில்லை (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்

    அக்கரைப் பச்சை (ஒருபக்க கதை) – ஸ்ரீவித்யா பசுபதி