இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
காஞ்சிபுரத்தில் பெயர் புகழ் பெற்ற பல பட்டுப்புவை அங்காடிகளும்…. தங்க வைர வியாபாரமும்….. அதனுடனே உணவகம் என்று எங்கு திரும்பினாலும் ஜோதிமணியின் குடும்பம் தான் தொழிலில் கொடி கட்டி பறந்தது…..
ஜோதிமணியின் வயது 25. மாநிறம்.
பார்த்ததும் உடற்பயிற்சி மேற்கொண்டு உடம்பை நல்ல முறையில் தேத்தி வைத்துள்ளான் என்று தெரிந்து கொள்ளும் அளவுக்கு இருக்கும் ஆண்மகனின் அழகுக்கும் ஒழுக்கத்துக்கும் பஞ்சம் இல்லை தான்.
ஜோதிமணிக்கு இன்று பெண் பார்க்கும் விஷேஷம் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அவனின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பெண்ணனின் வீட்டை நோக்கி பயணம் செய்தனர்….
“அம்மா…… இன்னும் எந்த காலத்துல இருக்கீங்க? இப்போவும் கூட பெண்ணை பார்த்து அவளுக்கு பாட தெரியுமா?, ஆட தெரியுமா?. சமைக்க தெரியுமா?ன்னு கேட்டு வேலைக்கு ஆள் எடுப்பது போல தான் வீட்டுக்கு மருமகளை தேட போறிங்களா? ஏம்மா இப்படி பண்ணுறீங்க? “..என்ற ஜோதியின் ஆசை, அவனுக்கு காதல் திருமணம் செய்து கொள்ள விருப்பம் என்று அவனின் அம்மா அறிந்து இருந்தார்கள் தான்…
ஆனால் ஜோதிமணியின் அப்பா அவருக்கென சில கட்டுக்கோப்புகளை வழி வகுத்து வாழ்க்கையை நடத்தும் மாமனிதன்… கடன் அன்பை முறிக்கும் என்ற தங்க நிற பெயர் பலகை அவரின் எல்லா கடைகளிலும் தொங்கினாலும்…. இல்லாத பட்ட பலர்,கடன் என்று கேட்டு வருபவர்களுக்கு அதை மனதார அன்பளிப்பாக வழங்கும் பலாப்பழத்தை போல தோற்றமுடைய, குத்தும் முள்ளுக்கும் இனிமையான சொல்லுக்கும் சொந்தக்காரர்……..
ஜோதிமணியின் திருமணத்தை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்று அவனின் தந்தைக்கு நீண்ட நாள் கனவு…. ஏனெனில்.. ஜோதியின் உருவத்தில் அவன் தந்தை… அவரின் தகப்பனை கண்டு மகிழிந்தார்…
ஜோதிமணியின் அப்பா… தன் மனைவி பிள்ளைகளிடம் சகஜமாக பேசியது இல்லை எனினும் துணைவிக்காகவும் பிள்ளைகளுக்காகவும் மட்டுமே வாழும் மனிதன்…
ஜோதிமணிக்கு வரப்போகும் மனைவிக்கு பணம் அந்தஸ்து என எந்த பின்பலமும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை… பெண்ணை ஜோதிமணிக்கு பிடித்தால் மட்டும் போதுமானது… அதைவிட முக்கியம் ஜோதியின் குடும்பத்துக்கே உரிய ஒரே ஒரு நிபந்தனையை தெரியப்படுத்திய பிறகு பெண் வீட்டாரின் சம்மதத்தோடு இன்று ஜோதியின் குடும்பமே சென்னையில் வசிக்கும் பெண் வீட்டுக்கு வேனில் சென்று கொண்டு இருக்கிறார்கள்…
வேனில் செல்லும் அளவுக்கு ஜோதிமணியின் குடும்பம் பெரிதா? என்று கேட்டால், ஆம் பெரிய குடும்பம் தான். ஜோதியின் பெரிய அண்ணனுக்கும் அக்காவுக்கும் சொந்த அத்தை பிள்ளைகளை பெண் கொடுத்து பெண்ணை எடுத்து கொள்ள காரணம்… ஜோதிமணியின் அத்தை மறைவு தான்….
அனாதையாக நின்று இருந்த தன் அக்காவின் பிள்ளைகளை தன் வீட்டோடு மாப்பிளை மருமகளாக ஆக்கி கொண்டார் ஜோதிமணியின் தந்தை…. வீட்டோடு இருந்தாலும் மாப்பிளைக்கு மரியாதையில் எந்த வித குறையும் இருக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு அங்கே எல்லா நல்லது கெட்டதும் ஜோதிமணியின் அக்கா கணவனின் கண்காணிப்பில் தான் நடைபெறும்…
ஜோதிமணியின் அக்கா கணவன் குறை சொல்ல முடியாத நல்லவர் தான்… ஆனால் அளந்து பேசும் பேச்சுக்கு சொந்தக்காரர்… ஜோதிமணியின் அக்காவும் அன்பான பெண்மணி தான்…இவர்கள் இருவருக்கும் ஆண் பிள்ளை ஒன்று உள்ளது…..
ஜோதிமணியின் அண்ணனும் நல்ல மனிதன்…அப்பா என்றால் அவனுக்கு உயிர்…. அப்பா சொன்ன வார்த்தையை மட்டும் இல்லை… அவர் சொல்ல போகும் வார்த்தை என்னவாக இருக்கும் என்று யோசித்து செயல்படுத்தும் திறமைசாலி… அப்பாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு தன் அத்தை மகளை திருமணம் செய்து கொண்டாலும் அவளிடம் கூட அளவாக பேசும் தன் கணவனின் குணம் அறிந்து நடந்து கொள்ளும் மனைவியாக தான் ஜோதிமணியின் அண்ணியும் திகழ்ந்தார்…
இவர்கள் இருவரின் இன்பமான இல்லற வாழ்க்கைக்கு ஏனோ இன்னும் புத்திர பாக்யம் கிட்டவில்லை என்பது ஜோதிமணியின் குடும்பத்தில் உள்ள அனைவரின் கவலையாக அமைந்தது……
ஜோதிமணியின் தம்பி தங்கை இருவரும் இரட்டை பிள்ளைகள்… இருவருமே பனிரெண்டாம் வகுப்பை முடித்தவர்கள்..பரீட்சை முடிவுக்காக காத்து இருக்கிறார்கள்….
ஜோதிமணி வீட்டின் முக்கிய குடும்ப உறுப்பினர் அழகம்மாள்….. இவர் தான் ஜோதிமணியின் தாத்தாவை பெற்ற புண்ணியவதி…. அடுத்தடுத்து தலைமுறைகளை பார்த்து ரசித்து.. அவர்களுக்கு நல்லது கெட்டது எடுத்து சொல்லும் நல்ல மனசுக்கு சொந்தக்காரி…
இவர்கள் குடும்பத்தில் அனைவரும் நல்லவர்கள் தான்….ஆனால் காலம் எல்லா நேரங்களிலும் நல்லவர்களை அவர்கள் போக்கில் வாழ விடுமா என்ற கேள்விக்கு பதில் நம் எதிர் நிற்பபர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்…
இப்படிபட்ட குடும்பம் தன் வீட்டுக்கு வர போகும் புதுபெண்ணை பார்க்க சென்னையில் இவர்களுக்கு சமமான அந்தஸ்துடைய பெண் வீட்டாரை காண காலை 10 மணி அளவில் அவர்களின் இல்லத்தை சென்றடைந்தார்கள்…..
ஜோதிமணிக்காக இவர்கள் நேரில் சென்று பார்க்க போகும் முதல் பெண் இவள் தான்… காரணம் பெண்ணை ஜவுளிக்கடை பொம்மையை போல அலங்காரம் செய்து சபைக்கு நடுவில் நிற்க்க வைத்து அவளை ஆயிரம் கேள்வி கேக்கும் சம்பிரதாயம் எல்லாம் இவனுக்கு பிடிக்காது என்று அவன் தந்தை அறிந்து இருந்தார்…..
வியாபார ரீதியாக அறிமுகமான பெண்ணினின் குடும்பத்தோடு ஜோதிமணியின் தந்தைக்கு நல்ல நட்பு ஏற்பட ஆரம்பித்த நிலையில்…. “என் மகளுக்கும் நான் வரன் பார்க்கிறேன்” என்று பெண்ணின் அப்பா சொன்னதை கேட்டு… “என் மகனுக்கும் நான் பெண் பார்க்கிறேன்..ஆனால் என் பையன்னுக்கு பெண்ணை பிடித்து இருந்தாலும்… பெண்ணுக்கு பையனை பிடித்து இருந்தாலும் மட்டுமே நேரில் வந்து பார்த்து பேசி தாம்பலம் மாற்றி கொள்ளலாம்” என்று ஜோதிமணியின் அப்பா சொன்ன வார்த்தை, பெண்ணுக்கு பிடித்து போன காரணத்தால் மாப்பிளை ஜோதியை நேரில் பார்க்க பெண்ணும் ஆசைகொண்ட பட்சத்தில் இன்று ஜோதிமணியின் குடும்பம் பெண் வீட்டிற்கு வருகை தந்து இருந்தனர்…
புகைப்படத்தில் பெண்ணை பார்த்ததும் ஜோதிமணிக்கு பிடித்து போனாலும் கூட்டு குடும்பத்தில் வாழ இன்று எத்தனை பெண்களுக்கு விருப்பமாக இருக்கும்? என்ற கேள்விக்கு உண்டான பதிலை தெரிந்து கொள்ளும் வரை பெண்ணை நினைத்து எந்த கற்பனையையும் வளர்த்து கொள்ள கூடாது என்று எண்ணிய ஜோதிமணி முதலில் பெண்ணிடம் வெளிப்படையாக பேசிவிட வேண்டும் என்று எண்ணி சபைக்கு நடுவில் அமர்ந்து இருந்தான்….
“வாங்க வாங்க… எல்லோரும் எப்படி இருக்கீங்க?” என்று கேட்டுக்கொண்டே கையில் தண்ணீர் கோப்பையுடன் வந்து நின்ற பெண்ணின் அம்மா பார்க்க சாந்தமாக தான் தெரிந்தார்…
“நாங்க நல்லா இருக்கோம்… நீங்க நலமா?” என்று பதிலுக்கு விசாரிப்பு தொடர்ந்த நிலையில், பெண்ணின் அம்மாவுக்கு ஜோதிமணியை இரண்டு மூன்று முறை இவர்களின் ஜவுளிக்கடையில் தொழில் ரீதியாக பார்த்த நினைவு ஏற்பட்ட காரணத்தால்… இருவருமே பரஸ்பரமாக சிறியதாக சிரித்து கொண்டார்கள்…
“எங்க… உங்களோட பையனை காணோம்?” என்று ஜோதிமணியின் அக்கா கணவன் கேக்க காரணம்…பெண்ணுக்கு ஒரே தம்பியான ஆண் மகன் அவன் வாய் ஜாலத்தில் கெட்டிக்காரன்…பெண் வீட்டாரின் ஜவுளிக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் கையில் ஒரு கைக்குட்டையையாவது விற்கமால் அவர்களை கடையை தாண்ட விட அனுமதிக்காத வாலிபன்… காலேஜ் 2nd இயர் படிக்கும் இளைஞன்…
“அவங்க அக்கா கூட இருக்கான் தம்பி..எங்களுக்கு ஒரு பெண் பிள்ளை, ஆண் பிள்ளை தானே.. அதான் இன்னைக்கு அக்காவை பெண் பார்க்க வராங்கன்னு தெரிந்ததும் அவன் எப்படி அவளை பிரிந்து இருக்க போறோம்ன்னு ஒரே கவலையா இருக்கான்”..என்ற பெண்ணின் அப்பாவுக்கு சென்னையில் புகழ் பெற்ற ஜவுளிக்கடை ஏராளம்….
தொழில் ரீதியில் நண்பர்களான இருவருமே இன்று சம்மந்தியாக மாற வாய்ப்பு உள்ளதா என்று ஜோதிமணிக்கும் பெண்ணுக்கும் நடக்க போகும் பேச்சு வார்த்தையை கொண்டு தான் முடிவு எடுக்க படும் என்று எண்ணிய பெண்ணின் அப்பா…
“பொண்ணை வர சொல்லட்டுமா?” என்று கேட்டதும்….
“இயல்பா வர சொல்லுங்க… எதுக்கு இந்த போர்மளிட்டிஸ் எல்லாம்” என்ற ஜோதிமணியின் பேச்சை கேட்டு அவனின் தந்தை தன் மனைவியை பார்க்க…
“போ மா…. போய் அம்மாவை வர சொல்லு” என்ற பெண்ணின் தந்தைக்கு, தன் மகள் தன் தாயின் மருஉருவம் என்ற எண்ணம் அவளை முதன்முதலில் கையில் ஏந்திய தருணமே தோன்றியதால் இன்று வரை அவர் தன் மகளை அம்மா என்ற சொல்லுக்கு மாற்று சொல்லை கொண்டு அழைத்தது இல்லை என்பதே உண்மை….
சில நொடிகளில்.. கையில் பழரசத்துடன் பெண்ணை கண்ட அனைவரும் அவளின் அழகில் ஒருக்கனம் இமைக்க மறந்த நிலையில்….பெண்ணின் அருகில் வந்து கொண்டு இருந்த அவளின் தம்பி மட்டும் ஜோதிமணியை முறைத்து பார்த்து இருக்க… ஜோதிமணிக்கோ முதல் பார்வையிலேயே பிடித்து போன பெண்ணின் பெயர் யாமினி……
தேவதையை நேரில் பார்க்க எவரேனும் ஆசைகொண்டால் யாமினியை பார்த்தாலே போதுமானது…… முழு மதியை போன்று வட்ட முகம், பிறை நெற்றி, செயற்கை அலங்காரம் தேவைப்படாத அடர்த்தியான புருவம், அன்பை மட்டுமே பிரதிபலிக்கும் அழகிய இரு விழிகள், வைர மூக்குத்தியை தாங்கி பிடித்து இருக்கும் கூர்நாசி, சிரித்த முகத்துக்கு எடுப்பாய் கன்னம், சாயம் பூசிடாத இதழ்கள், ஜோதிமணிக்கு ஏற்ற உயரம், பின்னிய கூந்தலில் சூடி இருந்த மலர்கள் அவளின் இருப்பக்க தோள்களை ஒட்டி உறவாடியப்படி இருக்க……
மாப்பிளை வீட்டாருக்கு பெண்ணை பார்த்ததுமே பிடித்து போக…. யாமினிக்கு ஜோதிமணியை பிடிக்குமா?
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings