பாவேந்தர் பாரதி தாசன்
தொடக்க வாழ்க்கை
தென்னிந்தியாவிலுள்ள புதுவையில் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி 1891 ஆம் ஆண்டு கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
இவரது தந்தை கனகசபை அவ்வூரின் மிகப்பெரிய வணிகர் ஆவார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சுப்புரத்தினம். இவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை தன்னுடைய பெயரில் இணைத்து கனகசுப்புரத்தினம் என்று அழைக்கப்பட்டார்.
கல்வி
இவர் சிறு வயதிலிருந்தே தமிழ் மொழி மீது மிகுந்த பற்று கொண்டவராக இருந்தார். இருப்பினும் அக்காலப்பகுதியில் புதுவையில் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கம் காணப்பட்டதால் அவர் ஒரு பிரெஞ்சுப் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார்.
இல்லற வாழ்க்கை
பாரதிதாசன் அவர்கள் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய அடுத்த ஆண்டிலேயே அதாவது 1920 ஆம் ஆண்டு பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இத்தம்பதியினரின் இல்லற வாழ்க்கைப் பயனாக இருவருக்கும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி 1928ஆம் ஆண்டில் மன்னர்மன்னன் என்ற மகன் பிறந்தார். அதன் பின்னர் சரஸ்வதி, வசந்தா மற்றும் ரமணி என்ற மகள்களும் பிறந்தனர்
சுரதா
வாழ்க்கைக் குறிப்பு
சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். தஞ்சை மாவட்டம் பழையனூர் (சிக்கல்) என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் திருவேங்கடம்-செண்பகம் அம்மையார் ஆவர். பள்ளி இறுதி வகுப்புவரை பயின்றார். சீர்காழி அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார்
திரைப்படத் துறையில்……
சுரதாவின் கலையுணர்வினைக் கண்ட கு.ச.கிருட்டிணமூர்த்தி என்பவர் இவரைத் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். 1944 ஆம் ஆண்டு மங்கையர்க்கரசி என்னும் திரைப்படத்திற்கு முதன்முதல் உரையாடல் எழுதினார். மிகக் குறைந்த அளவுக்கான பாடல்களையே அவர் எழுதியுள்ளார். சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் அவரது இரண்டு பாடல்கள், ‘அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே எனக்கு’, மற்றும் ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா,
ஆறடி நிலமே சொந்தமடா’ ஆகியவை. 100 இற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார்.
எழுத்துப்பணி…..
சுரதாவின் முதல் நூல் சாவின் முத்தம். இதனை வி.ஆர்.எம்.செட்டியார் என்பவர் 1946 மார்ச்சு மாதம் வெளியிட்டார். 1956 இல் பட்டத்தரசி என்ற சிறு காவிய நூலை வெளியிட்டார். 1954 இல் கலைஞர் கருணாநிதியின் முரசொலி இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தார்.
1955 இல் காவியம் என்ற வார இதழைத் தொடங்கினார். இவ்விதழைத் தொடர்ந்து இலக்கியம் (1958), ஊர்வலம் (1963), விண்மீன் (1964), சுரதா (1988) எனக் கவிதை வளர்ச்சிக்குப் பல இதழ்களை வெளியிட்டார்.
1971 ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் இதழில் சுரதா திரைப்பட நடிகைகளின் அகவாழ்க்கையைப் பற்றி எழுதிய கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. பின்னாளில் இக்கவிதைகள் தொகுக்கப்பட்டு சுவரும் சுண்ணாம்பும் என்னும் பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது (1974).
”ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓர் நொடிக்குள் ஓடப்பர் உடையப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ” என்பவை பாரதிதாசனின் புகழ்பெற்ற வரிகளைக் கேட்ட இராசகோபாலன் அவர் மீது கொண்ட பற்றின் காரணமாக ‘சுப்புரத்தினதாசன்’ ஆனார்
பாரதிதாசனின் தலை மாணாக்கராகக் கருதத் தகும் கவிஞர் சுரதா, பல நூல்களாக இருந்த பாவேந்தர் கவிதைகளை ஒரே தொகுப்பாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுத் திருவாசகன், கல்லாடன் பெயரில் அந்த நூல் வெளிவரக் காரணமானார். உலகின் அரிய செய்திகளைப் பட்டியலிட்டுக் காட்டும் சுரதா இல்லத்தில் அரிய நூல்கள் கொண்ட நூலகத்தை உருவாக்கினார்.
தமிழ், கவிதை, புகழ் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட புரவலர்கள், ஆர்வலர்கள் ஆகியோரை இணைத்துச் சில வினோதக் கவியரங்கங்களை நடத்துபவராக இருந்தார் சுரதா. படகுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம், விமானக் கவியரங்கம் முதலியவை அவை. கவியரங்குகளைக் கொண்டாட்ட நிகழ்வாக மாற்றியதில் அவருக்கு மிகுந்த பங்குண்டு.
பாவேந்தர் தலைமையில் இயங்கிய தமிழ்க்கவிஞர் பெருமன்றத்திற்கு 1966 இல் தலைவராகத் திகழ்ந்தார்.
சுரதா -இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.
பாரதிதாசனுடன் தொடர்பு
1941 சனவரி 14 இல் பாவேந்தர் பாரதிதாசனை முதன்முதல் கண்டு பழகிய சுரதா அவருடன் சிலகாலம் தங்கியிருந்து அவரது கவிதைப் பணிக்குத் துணை நின்றுள்ளார். பாவேந்தர் பாடல்களைப் படியெடுத்தல், அச்சுப் பணிகளைக் கவனித்தல், பாவேந்தரின் நூல் வெளியீட்டிற்குத் துணை நிற்றல் எனப் பல நிலைகளில் பாவேந்தருடன் சுரதாவுக்குத் தொடர்பு இருந்துள்ளது
பாரதிதாசனிடம் பணி
பாரதிதாசனின் இருப்பிடம், தமிழ், கவிதை, இலக்கியம் முதலான துறைகளில் ஆர்வமுடைய இளைஞர்களின் வேடந்தாங்கலாக விளங்கியது. புதிது புதிதாக இளைஞர்கள் வருவதும் தங்குவதும் போவதுமாக இருப்பார்கள். சுப்புரத்தினதாசனாகிய இராசகோபாலனும் பாரதிதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்துகொண்டார். இருபது ரூபாய் திங்களூதியம் பெற்றுக்கொண்டு பாவேந்தரிடம் இரண்டாண்டுகள் பணியாற்றினார்.
பெரும்பாலும் கவிஞர்கள் பிறரைப் பின்பற்றி எழுதும் வழக்கமுடையவர்கள். அதை சுரதா விரும்பாதவர். “தனக்கு அதில் உடன்பாடில்லை, “அந்த நிழல் வழி வாசலை’ விட்டு நீங்கி எழுதும் கவிஞன் நான். இவரையோ, அவரையோ பின்பற்றி எழுதப் பிரியப்படாதவன்” என்று மார்தட்டிக் கொள்வதில் தவறில்லை என்பதை நிரூபித்தவர்.
அரசியலில் பெரியாரையும், கவிதையில் பாரதிதாசனையுமே சுரதா வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டார். ஆனாலும், தனது எழுத்தியக்கத்தில் உள்ளடக்கம், வடிவம் என எதிலும் அந்தத் தாக்கம் வந்துவிடாதவாறு கவனமாகவும் இருந்தார்.
சுரதாவின் முதலாவது கவிதைத் தொகுப்பிற்கு ‘சாவின் முத்தம்’ என்று பெயரிட்டார். முதல் தொகுப்பிற்கே இப்படிப் பெயர் வைக்கலாமா என்று நண்பர்கள் வினவியுள்ளனர். இளமையிலேயே பகுத்தறிவுக் கொள்கைப் பற்றாளர் என்பதால் அது குறித்து அஞ்சியதேயில்லை. ”கவிதை என்பது வரப்பிரசாதமில்லை. கற்றுக்கொண்டு உழைத்தால் வருவது” என்பதில் உறுதியான கருத்துடையவர். தம்மை ‘மொழிப்பற்றாளர்’ என்று கூறுவதையும் அவர் ஏற்கவில்லை.
”இது மொழிப்பொறுப்பு. பற்று வைத்தல் இன்னொன்றைச் சிறப்பாகக் கண்டவுடன் மாறிவிடக்கூடியது” என்றார்.
தொட்ரும்……
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings